செவ்வாய், 7 டிசம்பர், 2010

* அ தீ ம க


அமுதசுரபி தீபாவளிமலர்  எங்கள் டிசம்பர் ஒன்றாம் தேதி பதிவை மறந்திருக்கமாட்டீர்கள்.

அமுதசுரபி - தீபாவளி மலருக்கு அடுத்த இதழில், திரு அறந்தை மணியன் அவர்கள் எழுதியுள்ள ('ஆசிரியருக்குக் கடிதங்கள்' பகுதி) கடிதத்திலிருந்து ....

கே பி சுந்தராம்பாள் நடித்த 'பக்த நந்தனார்' படத்தின் பிரதிகளும், 'நெகட்டிவ்'வும் தீவிபத்தில் எரிந்து விட்டதாகவும், படம் வெளிவரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். உண்மை என்னவெனில், "அசன்தாஸ் கிளாசிக்கல் டாக்கீஸ்" தயாரிக்க, கே பி எஸ் ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு நடித்த, அப்படம், 1935 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியும் பெற்றிருக்கிறது. பேராசிரியர் கல்கி, ஆனந்தவிகடனில் விமரிசனமும் எழுதியிருக்கிறார். "நந்தனார்" வேடத்தில் ஒரு பெண்மணி (கே பி எஸ்) நடித்ததை அப்போது ஏற்றுக்கொள்ளாத கல்கி, "நந்தனார் படத்தில் பனைமரம், எருமைக்கடா, வெள்ளாடு ஆகியவை சிறப்பாக நடித்திருக்கின்றன" என்று நக்கலாகக் குறிப்பிட்டிருக்கிறார். படம் எரிந்து போய் வெளிவராதிருந்தால், கல்கி எவ்வாறு விமரிசனம் எழுதியிருக்க முடியும்? உண்மையில், எரிந்து போனதால், வெளிவராமல் போன படம்: "இன்பசாகரன்"! 

''ஜெமினியின் "நந்தனார்" படத்தில் தோன்றிய வி.கே.ராமசாமி...' என்று குறிப்பிட்டிருப்பது சரியல்ல. அப்படத்தில் வி.கே.ஆர் நடிக்கவில்லை. அவர் அறிமுகமானது ஏவி.எம். தயாரித்த 'நாம் இருவர்' படத்தில்தான்! 

நம் பதிவைப் படிப்பவர்களுக்கு, தவறான தகவல்களை கொடுத்து விடக்கூடாதே என்ற (நல்ல?) எண்ணத்தில்தான் இந்தப் பதிவு.

(*அ தீ ம க = அமுதசுரபி தீபாவளி மலர் கரெக்சன்ஸ்)
அமுதசுரபிக்கும், திரு அறந்தை மணியன் அவர்களுக்கும் எங்கள் நன்றி. 

13 கருத்துகள்:

  1. மேலும் ஒரு திருத்தம் வேண்டி:

    கடைசிக் குறிப்பில் அறந்தை நாராயணன் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டு விட்டது.
    அது நீங்கள் முன்னால் குறித்த பெயரான அறந்தை மணியன் என்று இருக்க வேண்டும்.

    அறந்தை நாராயணனும் 'சினிமா' பற்றி ஒரு பெரும் தொகுப்பு தயாரித்து பாராட்டும், விருதும் பெற்றிருக்கிறார்.
    இவர் இப்பொழுது இல்லை.

    'ஜனசக்தி' பத்திரிகையில் பணியாற்றியவர். ஜெயகாந்தன் ஆசிரியராய் இருந்த 'கல்பனா' பத்திரிகையின் வெளியீட்டாராய் இருந்தவர். இவர் குறித்து இப்பொழுதிய 'அமுதசுரபி'யின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் எழுதியுள்ள ஒரு இரங்கல் கட்டுரை நெஞ்சை நெகிழச் செய்யும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜீவி
    தவற்றைத் திருத்திவிட்டோம்.

    பதிலளிநீக்கு
  3. //அ தீ ம க = அமுதசுரபி தீபாவளி மலர் கரெக்சன்ஸ்)//

    இதை முதலில் சொல்ல வேண்டாமா ??? எதோ நீங்க புது கட்சி ஆரமிக்க போறீங்க, நானும் சேர்ந்த ஒரு அமைச்சர் பதவி வாங்கி ஒரே ஒரு கோடி அடிக்கலாம்னு பார்த்தா ....

    பதிலளிநீக்கு
  4. //நம் பதிவைப் படிப்பவர்களுக்கு, தவறான தகவல்களை கொடுத்து விடக்கூடாதே என்ற (நல்ல?) எண்ணத்தில்தான் இந்தப் பதிவு.//

    பாராட்டுகளும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  5. Very good information. Nice to know that such old things are still remembered by our people.

    பதிலளிநீக்கு
  6. நம் பதிவைப் படிப்பவர்களுக்கு, தவறான தகவல்களை கொடுத்து விடக்கூடாதே என்ற (நல்ல?) '///

    உண்மையிலேயே உங்களுக்கு ரெம்ப நல்ல மனசு.

    பதிலளிநீக்கு
  7. கல்கி விமரிசனம் பற்றி முன்பே படித்திருக்கிறேன். இந்தப் படத்திற்குத் தானா? சுவையான விவரங்களை வெளியிட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஹாஹாஹா கார்த்திக் சொன்னது ரிப்பீட்டே.. நானும் ஏதோ கட்சின்னுதான் நினைச்சேன்..:))

    பதிலளிநீக்கு
  9. வித்தியாசமா ஒரு தலையங்கம்....!

    பதிலளிநீக்கு
  10. LK மற்றும் தேனம்மை சொன்னதுபோல் அ. தி. மு. க விற்கு போட்டியோ என்று நினைத்தேன். உங்கள் நல்ல மனம் படித்த பிறகு புரிந்தது. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. சே, ரொம்ப ஆவலாப் படிக்க வந்தேன்.புதுக்கட்சி,நமக்கு பிஎம் போஸ்ட் ரெடின்னு நினைச்சேன்.

    வெகு நேர்த்தியாக தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. //நம் பதிவைப் படிப்பவர்களுக்கு, தவறான தகவல்களை கொடுத்து விடக்கூடாதே என்ற (நல்ல?) எண்ணத்தில்தான் இந்தப் பதிவு//

    Great...thanks for your concern

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!