Wednesday, February 23, 2011

ஆனந்த அதிர்ச்சி 02

                         
அந்த தாயத்து அணிந்த நாள் முதல் அனந்தராமனுக்கு நினைத்ததெல்லாம் நடக்கா விட்டாலும், வழக்கமாக அவர் செல்லும் கடை கண்ணிகள், கோவில் குளம், ஜோதிடர் இப்படி எங்கென்றாலும் - அரசாங்க அலுவலகங்கள் தவிர - கூடிய மட்டும் இவர் தேவைகளை அனுசரித்தோ அல்லது இவரின் எதிர்பார்ப்புகளை அனுசரித்தோ எல்லாம் நடந்தேறின. நம்ப முடியவில்லை; என்றாலும் நம்பாமலும் இருக்க முடியவில்லை.
           
 பையனின் கல்லூரி அனுமதி குறித்துத் தெரிந்து கொள்ள இரண்டு வெவ்வேறு ஜோதிடர்களை அணுகி ஆலோசித்த பொழுதுதான் இவருக்கு சந்தேகம் தட்டியது.
                   
தாயத்தின் சக்தி மீது அல்ல. ஜோதிடர்களின் திறமை பற்றி. ஒருவர் என்னடாவென்றால் தாம் இருக்கும் குடியிருப்பிலேயே ஒரு ஓரத்தில் இருந்து பார்த்தவர் போல அவ்வளவு விவரமாக சொல்கிறார். இன்னொருவர் கிரஹ சஞ்சாரங்களைப் பற்றி முன்னவர் போலவே பேசினாலும், தனிப்பட்ட விவரங்களில் கொஞ்சம் கூடத் தெளிவின்றி என்னென்னவோ சொல்லிக் கொண்டு போனார்.    
            
ஆகையால் முன்னவரிடமே மற்ற யோசனைகளையும் கேட்க வேண்டும் அன்று கைக்குட்டையில் முடி போட்டுக் கொண்டார்.    
        
அடுத்த இரண்டு வாரங்களில் அவருக்கு ஆச்சரியமான ஆச்சரியம் காத்திருந்தது. மின் கட்டணம் பற்றி தன் சந்தேகங்களைத் தெளிவு செய்து கொள்ள அருகிலிருந்த துணை மின்  பொறியாளர் அலுவலகத்துக்கு சென்றவர் மயக்கம் போட்டு விழாத குறை. இவர் பற்றியும் இவர் வீட்டில் இருக்கும் மின் சாதனங்கள் பற்றியும் அவர்களுக்கு நிறையவே தெரிந்திருந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நம்மைப் போல் தலையைப் பிய்த்துக் கொள்ளும் ரகமல்ல என்றாலும், "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது " என்று திருப்திப் பட்டுக் கொண்டார்.     
                         
அனந்த ராமனின் வாழ்க்கையில் வந்த வசந்த காலம் அடுத்த சில வாரங்களில் திடீரென முடிவுக்கு வந்தது. தாயத்து வந்து சேர்ந்த சனிக் கிழமைக்கு முன்பு இருந்த நிலைக்கு மாறியதன் காரணம் அவருக்கு விளங்கவில்லை. ஒருக்கால் அந்த தாயத்தை மீண்டும் ஒரு பூஜையில் வைத்து ரீ சார்ஜ் செய்ய முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஆதங்கப் பட்டுக் கொண்டார்.         
             
அந்த நாளும் வந்தது !    

(இன்னமும் ஆனந்த அதிர்ச்சி 01 பகுதியில் கேட்ட கேள்வி ஓபன் ஆக இருக்கின்றது. ஒருவர் மட்டும் சற்றேறக் குறைய சரியான யூகம் செய்துள்ளார்:: அவர் யார் என்று இப்போ சொல்ல மாட்டோம்! மாதவன் - உங்க யூகம் இருபத்து நான்காம் தேதிக்குள் பதிவாகுமா? )

ஆனந்த அதிர்ச்சி மூன்றாம் சுழியில் சாரி - மூன்றாம் பகுதியில் சரியான பதில் வரும் என்று நம்புவோம் - வலையாபதி ஆர் யு லிசனிங்?
               

9 comments:

Madhavan Srinivasagopalan said...

இதுவரைக்கும் கண்டு பிடிக்க முடியலை..
நீங்களே சொல்லுங்க..

பத்மநாபன் said...

சற்றேறக்குறைய சரியாக சொன்னவர் யார் என்பதை யூகிக்க முடிகிறது... பதில் சுத்தமாக முடியவில்லை ...

Chitra said...

நீங்களே பதில் சொல்லிடுங்க... :-)

அன்னு said...

ஆஹா இன்னும் ஒரு பார்ட் இருக்கா வெயிட்டிங் வெயிட்டிங்...

HVL said...

எவ்வளவு யோசிச்சும் ஊகிக்க முடியல.

தமிழ் உதயம் said...

தாயத்தை வைச்சு ஒரு சஸ்பென்ஸ் கதையா.

அப்பாதுரை said...

ஒண்ணும் புரியலே ரெண்டும் புரியலே..

அப்பாதுரை said...

gpsனா கூட விவரங்கள் உதைக்குதே?

geetha santhanam said...

தெஹல்கா விவகாரம்தானே

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!