வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

குட்டிச் சுவரில் வெட்டி அரட்டை - 2

              
சன் டீவியில் வரும் 'அசத்தப் போவது யாரு' நிகழ்ச்சியில், வாய்ப்பு கிடைக்கும் போதும் ஞாபகம் வரும்போதும் மதுரை முத்துவின் பங்களிப்பைப் பார்க்கத் தவற மாட்டேன்! இன்று அவர் சொன்ன ஒரு ஜோக்: ஸாரி ஜோக்குகளில் ஒன்று..!
 
ஒரு அம்மாவும் பெண்ணும் ஏதோ காரணத்தால் திடீரென உயரமான இடத்திலிருந்து தவறி கீழே விழுகிறார்கள். வழியில் அம்மா ஒரு மரத்தைப் பிடித்துத் தொங்க, குழந்தையையும் ஒரு கையில் பிடித்துத் தொங்குகிறாள். உதவிக்கு ஆள் கூப்பிட்டு அலறுகிறாள். கீழே ஒரு ஃபுட்பால் கோல் கீப்பர் வர, 'கையை விடு, நான் பிடிச்சுக்கறேன் ' என்று தைரியம் சொல்ல, தாய் குழந்தையை விடுகிறாள். அவனும் சரியாய் குழந்தையை கீழே விழாமல் கேட்ச் பிடித்து விடுகிறான். கை தட்டியே பழகிப் போன நம்ம மக்கள் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவார்களா...தட்டுகிறார்கள். அதைக் கேட்ட உடனேயே மைதான நினைவு வந்து விட்ட அந்த ஃபுட்பால் கோல் கீப்பர் கையில் பிடித்த குழந்தையை கீழே வைத்து காலால் ஓங்கி ஒரு....

முதலில் சிரித்தாலும் பின்னர் சற்று கொடூரமாகத் தோன்றியது. கற்பனையை ரொம்ப ஓடவிடக் கூடாது. PKS இல் கமல் 'பழமொழி சொன்னால் அனுபவிக்கணும், ஆராயக் கூடாது' என்பாரே..அது போல ஜோக் சொன்னா சிரிக்கணும்...கற்பனை செய்யக் கூடாது!

என் நண்பர் ஒருவருக்கு இதே போல (?) தொழில் சார்ந்த சங்கடம் ஒன்று நேர்ந்ததாகச் சொன்னது நினைவு வந்தது. அவர் மருத்துவத் துறையில் பணி புரிபவர். பணியில் இருக்கும் போது உடன் வேலை செய்யும் பெண் ஒருத்தி வந்து தன் மகள் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறாள். கர்ப்ப காலத்தில் மருத்துவமனைகளில் சோதிக்கும்போது LMP, EDD என்று குறிப்பார்கள். முதலாவது Last menstrual period, இரண்டாவது Expected Delivery Date..

மருந்து, மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றின் Expiry Date பற்றியே எழுதி பேசிப் பழகிய இவர்கள் சில சமயம் ஜோக்காகவும் சில சமயம் மறந்து போயும் Retire ஆகும் சக ஊழியர்களை உங்களுக்கு எப்போ Expiry Date என்று கேட்பதுண்டு. அது போல இவரிடமும் உன் மகளுக்கு எப்போ EDD என்று கேட்பதற்கு பதிலாக, வேகமாக எப்போ Expiry Date என்று கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாராம்.

ரொம்பவும் சங்கடப் பட்டுப் போன இருவருமே அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆகும் வரை டென்ஷனாகவே இருந்ததைச் சொல்லியிருக்கிறார்...!

இது மாதிரி அவரவர்கள் தங்கள் வேலையில் உபயோகிக்கும் டெக்னிகல் வார்த்தைகளை நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பயன் படுத்துவது குறித்து சுவாரஸ்யமாக இருந்தால் நண்பர்களும் அதைப் பகிரலாமே!!

####################################

எம் ஜி ஆர் ஆசைப் பட்டு ஆனால் நடக்காத, அப்புறம் கமலஹாசன் ஆசைப் பட்டு நடக்காத ஒரு விஷயம் நடிகர் விக்ரமுக்கு கிடைத்திருக்கிறதாம். அதாவது வந்தியத் தேவனாக நடிக்கும் வாய்ப்பு. மணிரத்னம் இயக்கமாம். இவ்வளவுதான் செய்தி. கல்கியில் பார்த்தது.  
   
ஏற்கெனவே படித்து ரசித்த ஒரு கதையை படமாக்கும்போது சில் சிக்கல்கள் உண்டு...நாம் ரசித்த கேரக்டர்களின் உருவம் நம் கற்பனையை ஒட்டி ஒரு விதமாக நம் மனதில் இருக்கும். ஏதோ ஒரு நடிகர்அந்தப் பாத்திரங்களை ஏற்கும்போது நம் மனம அவரை அந்த கேரக்டராக ஏற்பது கடினம். ரசிக்குமோ...?

அதே கல்கியில் நம் சக பதிவர்கள் ராமலக்ஷ்மி கவிதையும், உழவன் கவிதையும் வந்திருக்கிறது. நீங்கள் கூட கவிதைகள் எழுதி kalki@kalkiweekly.com க்கு அனுப்பலாம் என்கிறது கல்கி. 
   
வந்தியத் தேவனைப் பற்றிச் சொல்லும்போது இன்னொரு செய்தியும் சொல்ல வேண்டும். மக்கள் தொலைக்காட்சியில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தொடர் எடுக்கப் போவதாகவும், அதில் நீங்களும் நடிக்கலாம் என்று சொல்லி புகைப் படத்துடன் அப்ளை, மன்னிக்கவும் விண்ணப்பிக்கச் சொல்கிறது மக்கள் டிவி.. மறுபடி மன்னிக்கவும், மக்கள் தொலைகாட்சி.

#####################################௩

சல்மான் இனிமேல் ஹிந்தித் திரையுலகை பாலிவுட் என்று சொல்லாதீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். Hindi Filmi என்ற வார்த்தையிலிருந்து HI-Fi என்று சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்!
(அப்போ தமிழ்த் திரையுலகை, TA-FI என்றும், கன்னடத் திரையுலகை, KA-FI என்றும் சொல்லலாமோ?)
##########################################
உலகக் கோப்பை கிரிக்கெட் பக்கத்தில் வந்து விட்டது. சச்சின் அடுத்த உலகக் கோப்பை விளையாடுவாரா என்று மக்கள் இப்போதே கவலைப் பட ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் இந்த ஆட்டமே ஆரம்பிக்கவில்லை. இந்திய டீமே அவரை நம்பி இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அவரே அடுத்த உலகக் கோப்பை பற்றி ஒன்றும் சொல்லாத நிலையில் தோனி "Frankly speakking, and practically speaking this will be Sachin's last world cup..." என்கிறார். இவர் யார் அதைச் சொல்வதற்கு என்று தெரியவில்லை. ஒரு அலெக்ஸ் ஸ்டுவர்ட் 44 வயது வரை விளையாடலாம் என்றால் why not Sachin? கிட்டிப்புள் ஆடுவது போல தோனி அடிக்கும் ஷாட் ஒன்றைப் போட்டு அவரை விட்டே "ஹெலிகாப்டர் ஷாட்" என்று சொல்ல வைத்திருக்கிறார்கள்!! நகைச்சுவை? விளம்பரங்களுக்கு கோடிகளில் ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!

எல்லா ஆங்கிலச் சேனல்களும் உலகக் கோப்பை ஒளிபரப்பு என்று தொடங்கி விட்டார்கள்! ஒரு நாள் முழுக்க ஒரே செய்திகளை ஒட்ட இவர்களுக்கும் ஏதாவது கிடைத்து விடுகிறது..! முன்னாள் அமைச்சர் கைது...எகிப்து....
                 
ரொம்ப நாட்களுக்குப் பிறகு எங்களுக்கு ஃப்ரீ சேனலில் CNN IBN வருகிறது!
                                      

20 கருத்துகள்:

 1. // ரொம்பவும் சங்கடப் பட்டுப் போன இருவருமே அந்தப் பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆகும் வரை டென்ஷனாகவே இருந்ததைச் சொல்லியிருக்கிறார்...! //

  Sentimental..
  இது மாதிரி அவரவர்கள் தங்கள் வேலையில் உபயோகிக்கும் டெக்னிகல் வார்த்தைகளை நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பயன் படுத்துவது குறித்து சுவாரஸ்யமாக இருந்தால் நண்பர்களும் அதைப் பகிரலாமே!!//

  அஸ்கு புஸ்கு.. அப்படி ஏதாவது இருந்தா.. எங்க (எங்கள் அல்ல) பிலாகுலேயே பப்ளிஷ் பண்ணிடுவோமே..
  ----- எழுத சரக்கில்லாதோர் சங்கம்..

  //அப்ளை, மன்னிக்கவும் விண்ணப்பிக்கச் சொல்கிறது மக்கள் டிவி.. மறுபடி மன்னிக்கவும், மக்கள் தொலைகாட்சி.//
  ஹா. ஹா.. ஹா.. நிஜமாவே சிரிச்சிட்டேன்..


  //எல்லா ஆங்கிலச் சேனல்களும் உலகக் கோப்பை ஒளிபரப்பு என்று தொடங்கி விட்டார்கள்! //
  நாராயணா.. இந்தக் கொசுத்தொல்லை தாங்கலடா..!
  சீக்கிரம் மருந்தடிங்கடா..

  பதிலளிநீக்கு
 2. மதுரை முத்து சார், ஜோக்குகளின் நல்ல தொகுப்பாளர் மட்டுமே... யார் சொன்னது...அல்லது எந்த புத்தகங்களின் இருந்து சுட்டது என்று அவர் கூறாமல் இருப்பது தவறு என்றே நினைக்கிறேன். ( Because he earns money and fame from them) அவரின் சொந்த ஜோக்ஸ் போல சொல்வதை நான் என்றுமே ரசித்தது இல்லை.

  பதிலளிநீக்கு
 3. மதுரை முத்து சொன்ன இந்த ஜோக் ரசிக்கற மாதிரி இல்லைனு எனக்கும் தோணுது. There is a thin line between joke and annoyance... sometimes annoyance takes it place...

  //Expiry Date// அடப்பாவமே...

  //இது மாதிரி அவரவர்கள் தங்கள் வேலையில் உபயோகிக்கும் டெக்னிகல் வார்த்தைகளை நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பயன் படுத்துவது குறித்து சுவாரஸ்யமாக இருந்தால் நண்பர்களும் அதைப் பகிரலாமே!!//
  சொல்லலாம்னு நெனச்சேன்...என் விளக்கம் எல்லாம் கேட்டா கேக்கறவங்களுக்கு பிரஷர் தான் ஏறும்... வேண்டாம் விடுங்க... ஹா ஹா ஹ...:)

  //நடிகர் விக்ரமுக்கு கிடைத்திருக்கிறதாம். அதாவது வந்தியத் தேவனாக நடிக்கும் வாய்ப்பு//
  ஓ... கேட்காத தகவல்... நன்றி...

  //அப்போ தமிழ்த் திரையுலகை, TA-FI என்றும், கன்னடத் திரையுலகை, KA-FI என்றும் சொல்லலாமோ//
  ஹா ஹா ஹ

  //ஒரு அலெக்ஸ் ஸ்டுவர்ட் 44 வயது வரை விளையாடலாம் என்றால் why not Sachin? //
  அதானே... தோணி டௌன் டௌன்...

  பதிலளிநீக்கு
 4. விக்ரம் வந்தியத்தேவனா? எனக்கென்னமோ லேசா விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி இருக்கு.. மனசு கேட்கவில்லையே.. yeh dil hai ke maantaa naheen!

  பதிலளிநீக்கு
 5. இதுபோல்தான். காது கேளாதவர்களைப் பற்றி அடிக்கப்படும் ஜோக்குகள். கண்டிக்கத்தக்கவை.

  பதிலளிநீக்கு
 6. oriyakkaarar oru thdavai ippadiththan, oruththarukku sugar irukkaannu diganosis pannanumnu solrathukku pathila dialysis pannanumnu sonnaar. naanum dialysis vera, diagnosis verannu sonna kekkave illai. appuram avanga amma theliva vilakki avaroda vocabularykku oru salute vechapuramthan oththukittaar. ippavum violet colornu solrathukku pathila eppavume velvet velvetnu solli kuzappitte iruppar.
  --------------
  salman khanukku arivukkozunthunnu yaaraavathu viruthu kudutha parava illai.
  ------
  sachin vilagalainnaalum izuthu vachu resign panna vechiruvaanga polave. naattukkunnu oru image irukkarathu yaarukkume pidikkalai. enna seyya??

  ippa naan ezuthinathu pathiva / commentaa? he he he :)

  பதிலளிநீக்கு
 7. கண்டிப்பா பொன்னியின் செல்வன் எடுக்க முடியாது. வேற ஒரு டைரெக்டர் சில பல பாகங்கள் எடுத்து கைவிட்டுட்டார். அந்த சூட்டிங் பார்த்து இருக்கேன். மணிரத்னமோ இல்லை சங்கரோ வாய்ப்பே இல்லை. அப்படி எடுத்தாலும் மூணு மணி நேரத்துக்காக பல த்யாகங்கள் இருக்கும் மூலக் கதையில் . எனவே தயவு செஞ்சு படம் எடுக்கறேன்னு சொல்லி கல்கிய அவமானப் படுத்த வேண்டாம் யாரும்.

  பதிலளிநீக்கு
 8. saami let sachin take rest after this wc. i am big fan of him but let him concentrate on tests alone not in ODIS

  பதிலளிநீக்கு
 9. மதுரை முத்து ஜோக் பற்றிச் சித்ரா, அப்பாவி தங்கமணி சொல்வதை வழிமொழிகிறேன்.

  பொன்னியின் செல்வன் பற்றிக் கார்த்திக் கூறியதுதான் நான் சொல்ல வருவதும்.

  இப்படி எல்லோரும் நாங்க சொல்ல வருவதை முன்னாடியே சொல்லிட்டீங்கன்னா எங்களுக்குச் சொல்ல ஒண்ணுமே இல்லாம போகுதே:-)

  இது என் சொந்தக் கருத்து. நல்ல நாவல்கள் திரைப்படங்களாக
  எடுக்கப்படும்போது நாவலின் பாதிப்பை அவை ஏற்படுத்துவதில்லை. உதாரணம் மோகமுள், சில நேரங்களில் சில மனிதர்கள். ஒரு காரணம் என்னவென்றால் நடிகர்களை நாம் ஏற்கனவே திரையில் பார்த்திருப்பதால் அந்தக் கதாபாத்திரமாக மட்டும் வைத்துப் பார்க்கத் தவறிவிடுவோம். நாவல் அளவிற்கு என்னைப் பாதித்த ஒரே திரைப்படம் சொல்ல மறந்த கதைதான் (தலைகீழ் விகிதங்கள்). நாயகன் நாயகி புதியவர்கள் என்பது கூட ஒரு காரணமாக இருக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 10. பொன்னியின் செல்வன் திரைப்படமாகும் போது, ருசிக்குமா என்கிற சந்தேக காரணத்தாலேயே எம்.ஜி.ஆர் எடுக்காமல் இருந்திருக்கலாம். வெற்றிக்கு உத்தரவாதமற்ற திரையுலக சூழலில் பொன்னியின் செல்வன் திரைப்படமாகும் வாய்ப்பு குறைவே. எம்.ஜி.ஆரின் கடைசிபடமான சரித்திர மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனின் ரிசல்ட் தான் வரும்.

  பதிலளிநீக்கு
 11. நாலைந்து குத்துப் பாட்டுடன் விக்ரம் வழங்கும் பொன்னியின் செல்வன் காணத் துடிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. துரை, ஏன்மா இந்த எண்ணம். வந்தியத் தேவன் ஒரு சூப்பர் ஹீரொ.
  வல்லவர் நல்லவர். அதற்குப் புதிதாக ஒருத்தரைப் போட்டு நடிக்கவைத்தால் நன்றாக இருக்கும். கோபி சொல்வதுபோல.

  எனக்குத் தெரிந்த ஒருவர் ''எம்பாரசிங்கை'' எம்ப்ரேசிங்னே அடித்துச் சொல்லுவார்:)

  பதிலளிநீக்கு
 13. இது என் கருத்து: நகைச்சுவையை நகைச்சுவைகாகவே ரசிக்கும் பொழுது no sacred cows. நொண்டியை நாய் துரத்துவது நகைச்சுவைப் பார்வையில் ஓகே என்று நினைக்கிறேன். அதை விட்டு நாய் நொண்டி என்று சமூகப் பார்வை பார்த்தல் சிக்கல். நகைச்சுவை is a relief. சிரிப்பதனால் மட்டும் யாரும் கெடுவதில்லை.

  பதிலளிநீக்கு
 14. விக்ரம் வந்தியத்தேவனும் ஜோக் தான் வல்லிசிம்ஹன்! (ஒரே ஒரு விக்ரம் படம் தான் பார்த்தேன் - அலுத்துப் போச்சு!)

  பதிலளிநீக்கு
 15. அடுத்த இதழ் கல்கி பொன்னியின் செல்வன் படத்திற்கு இயக்கம் மணிரத்னம், வசனம் ஜெயமோகன் என்று தெரிவிக்கிறது!

  பதிலளிநீக்கு
 16. ஹீரோ? நந்தினி? வானதி, குந்தவை:)))
  யாரோ.

  பதிலளிநீக்கு
 17. // வல்லிசிம்ஹன் said...
  ஹீரோ? நந்தினி? வானதி, குந்தவை:)))
  யாரோ.//
  அநன்யா - முக நூலில் (face book) நிறைய நடிக நடிகைகளை, 'பொன்னியின் செல்வனு'க்காகப் பரிந்துரைத்துள்ளார். முடிந்தால் அதை காப்பி அண்ட் பேஸ்ட் செய்கிறோம்.

  பதிலளிநீக்கு
 18. (Copy and paste from facebook)
  Ananya Mahadevan (in facebook)
  Here is what my friend Mahesh has to say abt PS :
  My (revised) casting for 'PS'
  1. Vandhiyadevan - Karthi (he is born JUST for that role)
  2. Adhithya Karikalan - Vikram
  3. Kundhavai - Anushka Sh
  ...4. Nandhini - Meera Jasmine (Round face)
  ‎5. Vanathi - Thamannah
  6. Pazhuvettaraiyar - Naepolean (my old choice)
  7. Azhvarkadiyan - Y.G Mahendra (my old choice)
  8. Poonguzhali - Navya Nair ('T' to the role)
  9. Arunmozhi Varman - SURYA (dignified macho figure)

  nandhini casting rejected.. just because you are so obsessed with meera doesnt mean we all have to bear with her for that role! Ramya Krishnan would be a better choice.. but she is old! hmm..

  பதிலளிநீக்கு
 19. பூங்குழலிக்கு மீனா. நந்தினிக்கு ரம்யா க்ருஷ்ணன். குந்தவை, வானதிக்கு அநன்யாவின் தெரிவுகள் பொருந்தவில்லை என்றே நினைக்கிறேன். (குந்தவைக்கு ரேவதி என்று சொல்லலாம். ஆனால் எல்லாம் வயசான சாய்ஸ் ஆச்சே என்று யோசிக்கிறேன். எனக்கும் பொருத்தமான நடிகைகள் தெரியவில்லை). ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் (ஒய்.ஜி மிகச் சரியாகப் பொருந்துகிறார் என்றே தோன்றுகிறது), அருண்மொழிவர்மன் எல்லாம் சூப்பர் செலக்ஷன். பழுவேட்டரையர் மட்டும் கொஞ்சம் weight போடவேண்டும் (என் கற்பனை உருவத்திற்குப் பொருந்துவது போல்).

  பதிலளிநீக்கு
 20. பழுவேட்டரையருக்கு கமல் ஹாசன்?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!