Friday, February 25, 2011

டாப் ட்வெண்டி ++

    
முழுப் பெயர்களும் பெரும்பாலும் எங்கள் ப்ளாக் இடப் பக்க வரிசையில் கருத்துரைத்தவர்கள் பகுதியில் உள்ளன. 

முதலில் எல்லா கட்டங்களையும் நிரப்புபவர் யார் என்று பார்ப்போம்.
     
இடமிருந்து வலம்:


C1 - C2, A1-A4, B1-B4 : நாங்களும் கொத்திப் போட்டுட்டோம். மன்னிக்கவும்.

C4-C10 : பாடுவாரோ இல்லையோ தெரியவில்லை. பதிவுகள் சுவையாக இருக்கும். முதல் அஞ்செழுத்துக்கள் கொண்டு தமிழ்ப் படங்கள் நிறைய வந்துள்ளன.

D2-D5: அமெரிக்க சாமியே சரணம்.

D9-D10: இப்போ 'எல்'லாம் இவருக்'கே' அடிக்கடி வடை.

E1-E3: இவரு இதுவரை எங்கள் ப்ளாகில் கமெண்ட் போட்டதில்லை. D2-D5 ஜொள்ளருக்காக இங்கே வந்திருக்காரு போலிருக்கு!

E4-E5: பதிவுகளிலும் கமெண்டுகளிலும் கவிதை எழுதும் குழந்தை நிலா

G8-G10: லேட்டாக வந்து சேர்ந்துகொண்டவராயினும் நிறைய கருதுரைப்பவர்.

H1-H5: கவிஞர், மென்பொருள் ஆளர். புதுமை விரும்பி.

 

மேலிருந்து கீழ்:

A5-E5 : மோர்ஸ் கோட் மற்றும் பேப்பர் அளவு பற்றிய புதிருக்கு பதில் கூறி அதிக பாயிண்டுகள் பெற்றவர்.

A6-E6: ஊர் பெயரைக் காணோமே! ! இங்கே குறும்பு ஏதும் செய்யவில்லையே?
                  

A7 - I7 சுவையானப் பதிவுகள் போடுபவர்; இட்லிக்குப் பெயர் போனவர்.

D1-G1: எ பி,  இ ந ஏ, முகநூல், ட்விட்டர் - எல்லாவற்றிலும் எங்களைப்

பின் தொடர்பவர். அந்தக் காலத்தில் இது நம்ம ஏரியா வில் நிறைய படங்கள் போட்டவர். 
                  
E2-H2: எங்கள் பதிவில் எஸ் பி எஸ் பட்டம் பெற்றவர்களில் ஒருவர். எங்கள் ப்ளாக் பதிவுகளில் இவர் கருத்து இல்லாத பதிவு மிகவும் குறைவு.
             
E5-H5 : இந்த மன்னை மைந்தர்களில் ஒருவர், தன வலைப்பூ பெயர், தன் ப்ரோஃபைல்  பெயர் ஆகியவற்றை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்.
        
F3-J3: அப்பாD - இதை முதலிலேயே இங்கே போட மறந்துவிட்டோம் - மூன்று முறைகள் தலையில் குட்டிக் கொள்கிறோம்!
    
F6-I6 : இயற்பெயர் மூன்றெழுத்து, , இந்த வலை ஆசிரியர் பெயர் ஏழு எழுத்து, ஆனால் அவருடைய பெயரை அவர் எப்பொழுதும் இந்த நான்கெழுத்தால் குறிப்பிடுவார்; ஐந்து வலைகள் இவர் ஆளுகையில் !
     
H2-J2: சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்குதோ இல்லையோ - இவர் கருத்துகள் எங்கள் ப்ளாகில் உங்கள் கண்களில் அதிகம் படும்.
    
F4-J4: ஏழு எழுத்து வலைப்பூ, எழுதும் ஐந்தெழுத்து ஆசிரியர். கட்டுரை, கவிதை காமிரா போட்டிகள் இவர் பங்கேற்றால், நமக்குப் பரிசு கிடையாது. , எல்லாப் பரிசுகளும் இவருக்கே!

கீழிருந்து மேல்:
  
G9-E9: இவர் பெயரில் ஒரு முன்னணி தமிழ் நடிகர் உண்டு. செடி, கொடி, மரம் பற்றி நிறைய விவரங்கள் தெரிந்தவர்.

 

எல் ஷேப்:

A9-C9.C10 : இவங்களைப் பற்றி நாங்க சொல்லமாட்டோம். நீங்கதான் சொல்லணும்.

F9, F8-D8: நகைச்சுவையையும், , நல்ல சுவையான தகவல்களையும் , இதய பூர்வமாகப் பதிவே(பே)த்துபவர்.

I6, J6-J10: 'இது நம்ம ஏரியா' பதிவில் நிறைய படங்கள் போட்டுக் கலக்குபவர். சமீபத்திய எங்கள் ப்ளாக் பதிவில், இவர் பதிந்த கருத்து ஒன்றுக்கு, ஆசிரியர் குழு 'ஆஹா' சொன்னது!

 

பிட்டு பிட்டாக:

H8-H10, I8-I10, J10: நம் தாய் மொழி தோன்றிவிட்டது! !
      
F4,G4,A10,J1,I2,I1: மெல்லிசை மன்னர்களில் ஒருவர். பெயர். ஆனால் இசை உலகை விட இணைய உலகில் அதிகம் பெயர் பெற்று வருகிறார். முதல் இரண்டெழுத்துகள் இங்கே இல்லை. அதனால் 'கோபி' க்க மாட்டார் என்று நம்புகிறோம். .
     
C3, A8,B8, B10,E10,F10 = வண்ணப் பெட்டிகள் : உங்கள் பெயர் ஆறு எழுத்துகளுக்குள் இருந்தால், எங்கள் வாசகராக இருந்தால், அதிகம் கருத்துரைத்தவர் என்றால், உங்கள் பெயரை இங்கே நிரப்பி எங்களுக்கும் சொல்லுங்கள். ஆறு எழுத்துகளுக்கு மேலே என்றால், மற்ற கட்டங்களிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளுங்கள்.  
                               

19 comments:

meenakshi said...

Wow! வித்யாசமா, ரொம்ப சுவாரசியமா இருக்கே! புதிருக்கான கேள்விகளை படித்த போதே almost எல்லா பெர்யர்களும் தெரிந்து விட்டது. இருந்தாலும் முழுவதையும் போட்டு விடுகிறேன்.

Gopi Ramamoorthy said...

இதன் பின்னால் இருக்கும் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துகள்

geetha santhanam said...

எப்படி இப்படியெல்லாம் வித்தியாசமாக யோசிக்கிறீர்கள். சபாஷ்

எல் கே said...

நான் அதிகம் கமென்ட் போடறது இல்லையே ??

தமிழ் உதயம் said...

பல வித்தியாசமான உங்கள் பதிவுகளை பார்க்கும் போது ஆச்சர்யமாய் இருக்கும். இன்று மேலும் ஒரு ஆச்சர்யம். அருமை.

Chitra said...

முதலில், உங்களை பாராட்டியே ஆக வேண்டும்.. இந்த அளவுக்கு effort எடுத்து பின்னூட்டம் இடுபவர்களை- acknowledge செய்து, ஊக்கப்படுத்துவதற்கு நன்றிங்க...

வானம்பாடிகள் said...

awesome:)

விஜய் said...

G9-E9 யாருங்க இவரு ?

HVL said...

nice

அப்பாதுரை said...

அட்டகாசம் போங்க!

meenakshi said...

இவ்வளவு அழகாக எங்கள் பெயர்கள் வருமாறு புதிர் போடும் எண்ணம் வந்ததற்கே உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். விட்டு போன இரண்டு பெயர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. மீண்டும் முயன்று பார்க்கிறேன். கண்டுபிடித்தால் எழுதுகிறேன்.

இடமிருந்து வலம்: சைவ கொத்து பரோட்டா, வானம்பாடிகள், சாய்ராம், LK, நமீதா, ஹேமா, ஆர்.வி.எஸ், மோசிபாலன்,
மேலிருந்து கீழ்: ஹூசைனம்மா, குறும்பன், , அநன்யா, மீனாட்சி, மாதவன், அப்பாதுரை, வல்லி, சித்ரா, ராமலஷ்மி
கீழிருந்துமேல்: விஜய்
எல் ஷேப்: எங்கள், ஜவஹர்,
பிட்டு பிட்டாக: தமிழ் உதயம், ராமமூர்த்தி

meenakshi said...

A7-I7
மேலிருந்து கீழ்: அப்பாவி தங்கமணி

Madhavan Srinivasagopalan said...

nice thoughts.. I appreciate.

But, I think 'madhavan' got more points on paper size.. (Qustion under A5 to E5)

ஹுஸைனம்மா said...

ஹை, சூப்பர்!! ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடசில மனுசனைக் கடிச்ச மாதிரி, எங்களை வச்சே புதிரா?

என் பேரை உங்க பதிவுல பயன்படுத்தினதுக்கு ராயல்டி கிடைக்குமா? ;-))))))

பத்மநாபன் said...

இவ்வளவு எளிதான புதிரா ...பார்க்காம விட்டுட்டேனே...பதிவர்களுக்கு மரியாதை கொடுத்தது சிறப்பு..20க்குள் இடம் பிடிக்கும் உத்வேகம் வரவைக்கிறது..

பத்மநாபன் said...
This comment has been removed by the author.
பத்மநாபன் said...

இடம் பிடிப்பதற்காக பின்னூட்டங்களை இருமுறை அனுப்புவதாக நினைக்கவேண்டாம்..தவறுதலாக டபுள் கிளிக் ஆகிவிட்டது ( அப்பாடா மூனு ஆச்சு )

எங்கள் said...

மீனாக்ஷி எல்லாவற்றையும் கண்டுபிடித்து, எழுதி, அவர் எஸ் பி எஸ் பட்டம் பெற்றது சரிதான் என்று நிரூபித்துவிட்டார்.
வல்லிமா என்று நாங்கள் நினைத்துப் போட்டிருந்ததை மட்டும் வல்லி என்று எழுதியிருக்கின்றார். கருத்து பதிவு செய்த வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி. பத்மநாபன் அடுத்த குறுக்கெழுத்துப் புதிரில் நிச்சயம் இடம்பெறுவார் என்று எங்களுக்கும் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

பதிவுலகில் பாபு said...

ஓ.. இப்படியெல்லாம் கூட யோசிக்கலாமா!!!..

ரொம்ப வித்தியாசமா இருக்கு..

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!