செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பேப்பர் கேள்விகள்


அ)  A4 சைஸ் - அளவுகள் என்ன? (மி.மீ X மி.மீ கணக்கில்)

ஆ)  ஒரு A4 SIZE ஜெராக்ஸ் 80 GSM தாளின் எடை எவ்வளவு கிராம்?

இ)  75 GSM தாளை விட அதிகமா அல்லது குறைவா?

ஈ)  80 GSM தாள், 75 GSM தாளை விட எவ்வளவு அதிகம் அல்லது குறைவு?

இந்த நான்கு  கேள்விகளில் எதற்கு சரியான பதில் பதிவு செய்தாலும், பாயிண்டுகள் உண்டு. (ஆனால் ஒவ்வொரு கேள்விக்கும் வெவ்வேறு பாயிண்டுகள்)

வாசகர்கள் இந்தப் பதிவின் கேள்விகளுக்கு, எவ்வளவு சீக்கிரமாக சரியான பதில் பதிவு செய்கின்றார்களோ அதைப் பொருத்தும்கொடுக்கப்படும் பாயிண்டுகள் மாறும்.  
                      

27 கருத்துகள்:

  1. 2. from 3.85 to 5 grams

    இதுக்கே தேடித்தேடி மூளை குழம்பிப் போற மாதிரி ஆகிடுச்சு. வேணாம், விட்டுடுங்க.

    பதிலளிநீக்கு
  2. ரெம்ப யோசிக்க வைக்கறிங்க. ரெம்ப யோசிச்சா என் மூளைக்கு ஆகாது.

    பதிலளிநீக்கு
  3. குரோம்பேட்டைக் குறும்பன்22 பிப்ரவரி, 2011 அன்று 4:01 PM

    GSM என்றால் என்ன? அதைச் சொல்லுங்க முதலில்.

    பதிலளிநீக்கு
  4. ஹுஸைனம்மாவுக்கு ஐநூறு பாயிண்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. கு கு அவர்களே! ஜி எஸ் எம் என்றால் என்ன என்று தெரிந்துகொண்டால் மீதி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிடலாம்

    பதிலளிநீக்கு
  6. ஆ..... பாயிண்டுகளா... பவுண்டுகள்னு தவறி வாசிச்சு, ஒரு நிமிஷம்.. :-)))

    GSM - gram per square meter (கு.கு. - தெரிஞ்சுதான் கேட்கறீங்களா இல்லையான்னு தெரியலை; இருந்தாலும் எனக்குத் தெரியும்னு காட்டிக்க...)

    இதுக்காகத் கூகிளில் தேடியதில் அறிந்துகொண்ட புதிய தகவல்கள் பல. நன்றி “எங்கள்”!!

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. கலந்துகிட்டவங்களுக்கும் மதிப்பெண் குடுங்க.......

    பதிலளிநீக்கு
  9. 1) A4 - 210 மி.மீ X 297 மி.மீ

    2) 4.9896 கிராம் (80 gsm)

    3) 4.67775 கிராம் (75 gsm)
    எனவே 75 GSM தாள் 80 GSM தாளை விட எடை குறைவு..

    4) 80 gsm A4 தாள் 75 GSM (A4) தாளை விட 0.31185 கிராம், எடை அதிகம்

    பதிலளிநீக்கு
  10. கலந்துகிட்டவங்களுக்கும் மதிப்பெண் 1) A4 - 210 மி.மீ X 297 மி.மீ

    2) 4.9896 கிராம் (80 gsm)

    3) 4.67775 கிராம் (75 gsm)
    எனவே 75 GSM தாள் 80 GSM தாளை விட எடை குறைவு..

    4) 80 gsm A4 தாள் 75 GSM (A4) தாளை விட 0.31185 கிராம், எடை அதிகம்குடுங்க.......

    பதிலளிநீக்கு
  11. கலந்துகிட்டவங்களுக்கும் மதிப்பெண் 1) A4 - 210 மி.மீ X 297 மி.மீ

    2) 4.9896 கிராம் (80 gsm)

    3) 4.67775 கிராம் (75 gsm)
    எனவே 75 GSM தாள் 80 GSM தாளை விட எடை குறைவு..

    4) 80 gsm A4 தாள் 75 GSM (A4) தாளை விட 0.31185 கிராம், எடை அதிகம்குடுங்க.......

    பதிலளிநீக்கு
  12. நான் திரு மாதவனின் பதிலை காப்பியடிக்கவில்லை....

    என்னை போலவே திரு மாதவனும் சிந்தித்திருக்கிறார் என கொள்க.

    பதிலளிநீக்கு
  13. ஒரு முறை அலுவலகத்தில், பேப்பர் shredder (தமிழில் தெரியவில்லை..),
    வாங்கியபோது, ஜி.எஸ்.எம், பற்றி ஒருவர் சொன்னார்.. அதனால் இதற்கு பதிலளிக்க முடிந்தது..

    //சி.கருணாகரசு said...
    "நான் திரு மாதவனின் பதிலை காப்பியடிக்கவில்லை...."\\

    இல்லை நண்பரே.. நீங்கள் (ஈயடிச்சான்) காப்பி அடிக்கவில்லை..
    நான் 'அதிகம்' என்று சொன்னேன்... நீங்களோ 'அதிகம்' என்று சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  14. GSM என்றால் ஏதோ செல்போன் சமாசாரம் என்றல்லவா நினைத்தேன்?

    பதிலளிநீக்கு
  15. A4 பேப்பரின் பரப்பளவு (210 மி.மீ x 297 மி.மீ) = 62370 (மி.மீ)(மி.மீ)
    = 62370/(10^6) (மீ)(மீ)
    = 0.062370 (மீ)(மீ)

    எனவே 80 ஜி.எஸ்.ம் A4 சைஸ் பேப்பரின் எடை
    = 80 {(கிராம்)/[(மீ)(மீ)]} * 0.062370 (மீ)(மீ)
    = 4.9896 கிராம்
    -------------
    எனவே 75 ஜி.எஸ்.எம் (A4) பேப்பரின் எடை = 4.67775 கிராம்

    பதிலளிநீக்கு
  16. weight of 1 sq meter is 80 gram

    Area of A4 sheet is 0.06237 square meter

    Weight of one A4 sheet is 80 X 0.06327 = 4.9896 grams

    பதிலளிநீக்கு
  17. இவ்வளவு சீக்கிரம் வியாபாரம் ஆகிருச்சே...பாயிண்டு பூரா காலி...

    பேப்பர்ல பாண்டு பாண்டு ன்னு சொல்றாங்களே அது என்ன...

    பதிலளிநீக்கு
  18. //பத்மநாபன் said... "பேப்பர்ல பாண்டு பாண்டு ன்னு சொல்றாங்களே அது என்ன...?"//

    பேப்பருல ஹாலிவுட் புகழ் 007, போட்டோ போட்ருந்தா... அதுதான் 'பாண்ட் பேப்பர்'.

    பதிலளிநீக்கு
  19. //அப்பாதுரை said... GSM என்றால் ஏதோ செல்போன் சமாசாரம் என்றல்லவா நினைத்தேன்? //

    அது என்ன ?? அதையாவது சொல்லுங்க, நாங்க தெரிஞ்சக்கலாம்ல ?

    பதிலளிநீக்கு
  20. //ஹாலிவுட் புகழ் 007, போட்டோ போட்ருந்தா... அதுதான் 'பாண்ட் பேப்பர்'.// நம்மஊர்ல இந்த பாண்ட் பேப்பர பார்க்கலியே ...என்னமோ எக்சிகுட்டிவ், ஜே.கே ன்னு பார்த்திருக்கேன் ....

    பதிலளிநீக்கு
  21. Bond paper is a high quality durable writing paper similar to bank paper but having a weight greater than 50 g/m2. The name comes from it having originally been made for documents such as government bonds. It is now used for letterheads, other stationery and as paper for electronic printers. Widely employed for graphic work involving pencil, pen and felt-tip marker, bond paper can sometimes contain rag fibre pulp, which produces a stronger, though rougher, sheet of paper. Nowadays, however, bond paper is currently known as being a smooth white sheet commonly made from normal eucalyptus pulp.

    UK Government specifies thickness of 115 µm

    பதிலளிநீக்கு
  22. // சி.கருணாகரசு said...
    கலந்துகிட்டவங்களுக்கும் மதிப்பெண் குடுங்க.......//

    சரி பின்னூட்டம் போட்ட நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பாயிண்டுகள் கொடுத்துட்டோம்.

    மாதவனுக்கு ஆயிரத்து ஐநூறு பாயிண்டுகள்.

    ஹுஸைனம்மாவுக்கு போனஸ் ஆக ஐநூறு பாயிண்டுகள்.

    கருணாகரசு அவர்களின் ஆர்வத்திற்கு எங்கள் பாராட்டுக்கள் ;-)

    பதிலளிநீக்கு
  23. நண்பர் எஸ்.கே க்கு பாயிண்டு கெடையாதா..?

    பதிலளிநீக்கு
  24. // Madhavan Srinivasagopalan said...
    நண்பர் எஸ்.கே க்கு பாயிண்டு கெடையாதா..?//

    எஸ் கேக்கு 200 + 300 பாயிண்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!