Sunday, June 24, 2012

ஞாயிறு 155 :: வேலி ஏன்?காட்சிக்குக் கவிதை எழுதுவோர் எழுதலாம். 

12 comments:

ஸாதிகா said...

வண்ண மலர்களின்
வர்ண ஜாலங்கள்

கண்ணுக்கெட்டிய தூரமெலாம்
கவர்ச்சி முத்திரைகள்

நோக்கும் விழிகளுக்கு
கண்கவர் கோலங்கள்

ரசிக்கும் மனங்களுக்கு
ரகம் ரகமாய் மகிழ்ச்சிகள்

படம் பிடித்த கரங்களுக்கு
என்னுடைய வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

அள்ளி வழங்கும்
அற்புத அழகை
ஆராதிக்காவிட்டாலும்
அழிப்பதும்
அலட்சியம் செய்வதுமாய்
இருக்கிற மனிதனிடமிருந்து
தன்னைக் காத்துக் கொள்ள..
வேண்டியிருக்கிறது இயற்கைக்கு
வேலி.

வெங்கட் நாகராஜ் said...

பூக்களே கவிதை....
கவிதைக்கே கவிதை
எழுதச் சொன்னால்.... :)))

மேலே இருப்பது சத்தியமாய் கவிதை அல்ல.

அழகான படப் பகிர்வுக்கு நன்றி.

pudukai selva said...

அழகை ரசிப்பதும்
அழகை ஆராதிப்பதும்
அற்புதமான ஒன்று
அதை மதிக்க தவறும்
அற்பர்களும் உண்டு
அதனால் தான் வேண்டும்
வேலி இங்கு.......

வல்லிசிம்ஹன் said...

பொக்கே ஆவதற்குத் தயாராக இருக்கும் பூக்கள். மற்றவர்கள் பறித்துவிட்டால் வியாபாரம் பாழ். வேலி போட்டு காக்கிறார்கள்.
திருமணத்திற்குக் காத்திருக்கும்
கிராமத்துப் பெண்மலர்கள்.;)

ஹுஸைனம்மா said...

என்னைப் பாடச்சொல்லாதே
நான்
கண்டபடி பாடிப்போடுவேன்!!

எல் கே said...

வண்ணமலர்கள்
பல
அழிக்கப்பட தயாராய் ..
செடியில் ரசித்து
பார்க்கும்
மனம் அதை பறித்து
அழிப்பதேன்?

www.bhageerathi.in

Baskaran said...

வேலியாம் வேலி
இருக்குமிடத்தை விட
இல்லாத இடந்தான் அதிகம்
பறிப்பவர் என்னவோ பறித்துக்
கொண்டுதான் இருக்கின்றனர்
முதல் வரிசை செடிகளே சாட்சி

சே. குமார் said...

மலர்ந்த பூக்கள்
மரணத்தை நோக்கி...
இருந்த போதும்
இன்பமாய்...!

அப்பாதுரை said...

அடுத்த வருசம் வந்திங்கன்னா
வாசனைக்கு வேலி போட்டு
மூச்சுக்கு மூணு ரூவா
அஞ்சு மூச்சு அஞ்சே ரூவா டிகெட்டு.

Geetha Sambasivam said...

மதுரை எஸ்.எஸ்.காலனித் தனி வீடுகளில் தோட்டங்களில் பூத்திருந்த மலர்கள் அதிகம் பறிக்கப்படவில்லை. செடிகள் பூக்களோடேயே காணப்பட்டன. எங்க வீட்டில் நாங்க பறிப்போம். பறித்து சுவாமிக்குப் போடுவோம், மல்லி, முல்லை, பிச்சிப் பூக்களை சாமிக்குப் போட்டுத் தலைக்கும் வைத்துக்கொள்வதுண்டு.

அப்படியும் செடிக்கெனப் பூக்களை விட்டு வைப்பதும் உண்டு. காலை வேளையில் மல்லிகை மணமும், பவளமல்லிகை மணமும் கலந்து வீசுகையில் வீசும் குளிர்காற்றை அனுபவித்துக் கொண்டே பூக்களைப் பறிப்பது சுகமான அனுபவம்.

பாக்குப் பூக்கள் மணம் இன்னும் அதிகமாத் தனியாய்த் தெரியும்படி இருக்கும். வீட்டுக்குள்ளேயே இருக்க விடாது. வீட்டின் இரண்டு பக்கமும் வந்த ஃப்ளாட்காரங்க அள்ளி வீசிய சிமென்ட் கலவைகளால் மாமரம், பாக்குமரம், அரளி, சப்போட்டா எல்லாமும் போச்சு! :(((((((( வேப்பமரக் கிளையைக் கூட வெட்டி இருக்காங்க நாங்க இல்லாதப்போ! :(((((

Anonymous said...

Flats vandhu Unga thottam flat akkitanga..Sad

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!