செவ்வாய், 12 ஜூன், 2012

அண்ணன் பெருமாள் கோவில்



தஞ்சை மாவட்டம் - சோழ நாடு- சீர்காழியிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சீர்காழி-ஆக்கூர், சீர்காழி-நாகப்பட்டினம் சாலையில் அமைந்துள்ளது.


சோழ நாட்டில் அமைந்துள்ள நாற்பது திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. மொத்தத்தில் முப்பத்தெட்டாவது திவ்யதேசம்.  




இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள அண்ணன் பெருமாள் திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு அண்ணன் என்று அறியப் படுவதால் அண்ணன் பெருமாள் என்றே அழைக்கப் படுகிறார்.  




கோவிலின் முன்புறம் திருவெள்ளக்குளம் என்ற திருக்குளம் அமைந்துள்ளது. இது சுவேத புஷ்கரணி என்றழைக்கப் படுகிறது. இக்குளத்தில் மலரும் குமுதமலர்களைக் கொய்து நீராட வரும் தேவமாதர்களில் ஒருவர் ஒருமுறை மானிடர் ஒருவர் கண்ணில் தென்பட்டு விட்டதால் தேவலோகம் திரும்ப முடியாமல் போக, அங்கேயே தங்கும் அந்த தேவமங்கையைத் திருமங்கை மன்னன் வந்து மணம் புரிய, அரங்கர் அருளில் அவர் திருமங்கை ஆழ்வாராக மாறியது வரலாறு.
நாகபுரி தேசத்தின் தலைவாசலாக அறியப்படும் இங்குதான் மருத்த முனிவரின் ஆசிரமம் இருந்ததாகவும் வரலாறு. சூரியகுல அரசன் துந்துமாரன் என்ற அரசனின் மகன் சுவேதனுக்கு ஒன்பதாவது வயதில் அகால மரணம் ஏற்படும் என்றறிந்த அரசன், வசிஷ்ட முனிவர் அறிவுரைப்படி திருநாங்கூர்ப் பொய்கையில் தினமும் நீராடி வசிஷ்டரால் உபதேசிக்கப் பட்ட நரசிம்ம ம்ருத்யுஞ்சய மந்திரத்தை சங்கல்பம் செய்ய ஸ்ரீநிவாசப் பெருமாள் அவன்முன் தோன்றி அவனை சிரஞ்சீவியாக்கியதாக வரலாறு.  



திருக்கடையூர் செல்லும் வழியில் மத்திய உணவு இங்குதான் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றனர். போகும் வழியிலேயே திருபார்த்தன்பள்ளி, திருச்சித்திரக் கூடம் என்று சிதம்பரம் தாண்டும் வழியில் இன்னுமிரண்டு திவ்யதேசங்களைத் தாண்டிச் சென்றாலும் அங்கெல்லாம் செல்லவில்லை. மயிலாடுதுறையை அடைந்த போதே சற்றே வழி மாறி விட்டதால் கொஞ்சம் சுற்றிதான் இந்தக் கோவிலை அடைந்தோம். போகும் வழியில் யாரைக் கேட்டாலும் வழி சொல்கிறார்கள். ஒற்றையடிப் பாதை போன்று வசதிக் குறைவான குறுகிய வழி!  கோவில் பழமையைச் சொல்கிறது.  





திருக்குளம் என்று சொல்லப்படும் திருவெள்ளக்குளமாம் சுவேத புஷ்கரணி சுத்தம் செய்யப் படாமல், தூர்வாரப்படாமல் பாசி படர்ந்து காணப் படுகிறது. கோவில் காரியங்களில் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர் ஸ்வாமிகளின்  கைங்கர்யம் காணப்படுகிறது.

உள்ளிருந்து வெளியே...


பெருமாள் இரண்டு உப நாச்சியார்களுடன் காட்சியளிக்கிறார். வலதுபுறம் தாயார் சன்னதி. திருமலையில் தாயார் இல்லாத குறை நீங்க இங்கு அலர்மேல்வள்ளித்  தாயாருக்குத் தனிச் சன்னதி. உள்ளேயே வலதுபுறத்தில் குமுதவல்லி நாச்சியார் சன்னதி. இவர்தான் திருமங்கை மன்னனை திருமங்கை ஆழ்வாராகத் திருத்திய நாச்சியார்.

108 திவ்யதேச விவரப் படங்கள் அணிவகுப்பு....


தாயார் சன்னதிக்கு முன்புறம், உள்ளே நுழைந்ததும் இடப் பக்கம் மடைப்பள்ளி. அங்கிருந்து கோவில் பிரகாரத்தைச் சுற்றி நூற்றியெட்டு திவ்ய தேசம் பற்றிய விவரங்களுடன் படங்கள் பிரதட்சணமாக வைக்கப் பட்டுள்ளன.




அழுக்கான குளத்தைச் சுற்றி மேடான கரையில் சுற்றிலும் வீடுகள். எதிர்முனையில் பக்தர்கள் வசதிக்காக நான்கைந்து கழிப்பறைகள்.

எதிர்புறத்திலிருந்து கோவில்...


சாப்பாடு பரிமாறப்படும் நேரத்தில், சமைக்கப் பட்ட பிரசாதங்களை பட்டர் வெளியில் கொண்டுவந்து வைத்து, "எங்களிடம் பரிமாற ஆள் இல்லை" என்று அறிவித்து நகர, நாங்களே பரிமாறிக் கொண்டோம். இலை நூறு ரூபாய்க் கணக்கு. ஜவ்வரிசி கல்கண்டு சாதம் கூடுதல் இனிப்புடன் இருக்க,கதம்ப சாம்பார் சாதம், சாத்தமுது (ரசம்)  புளியோதரை ஆகியவை 'திவ்யமாய்' இருந்தன.



தாயார் சன்னதியிலிருந்து வெளிப் புறம் நோக்கி...  


கேமிரா ஒத்துழைக்காததால் செல்லில் எடுத்த (அரைகுறைப்) புகைப்படங்கள் மட்டும். என் உடன் வந்தவர் இந்த புகைப் படங்கள் எடுத்ததற்கு மிகக் கடுமையாக ஆட்ச்பித்தார். என் செல்போன்  பேட்டரி தீர்ந்ததற்கும், பஸ் ரிவர்ஸ் எடுக்கும்வரை வெயிலில் நடந்ததற்கும் (செருப்புகள் பஸ்ஸில் மாட்டிக் கொள்ள, வெறும் காலில்) இந்தக் குற்றத்தைக் காரணமாக்கினார் அவர்!  




பெரிய விசேஷ தினம் ஒன்றும் இல்லையென்றாலும் நாங்கள் கிளம்புமுன்னரே இன்னொரு பஸ் வந்து நின்றது. சித்திரை, வைகாசி,என்று எல்லா மாதங்களிலும் விசேஷ தினங்கள் இருக்கின்றன. அப்போது கூட்டம் நிறைய வருமென்று பட்டர் சொன்னார்.  




(படங்கள் தெளிவின்மைக்கு மன்னிக்கவும். அவசரத்துக்கு 'சாதா செல்'லில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள்!)  
                

31 கருத்துகள்:

  1. பெருமாள் தரிசனத்துக்கும், சென்ற ஸ்தலத்தை நாங்களும் காணத் தந்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பெருமாள் தரிசனத்துக்கும், சென்ற ஸ்தலத்தை நாங்களும் காணத் தந்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பெருமாள் தரிசனத்துக்கும், சென்ற ஸ்தலத்தை நாங்களும் காணத் தந்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பெருமாள் தரிசனத்துக்கும், சென்ற ஸ்தலத்தை நாங்களும் காணத் தந்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பெருமாள் தரிசனத்துக்கும், சென்ற ஸ்தலத்தை நாங்களும் காணத் தந்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஒரே நேரத்தில் ஐந்து முறை கமெண்டுகளைப் பதிப்பித்து விட்டார் அண்ணன் பெருமாள்:)!

    பதிலளிநீக்கு
  7. நான் இங்கே இருமுறை சென்றிருக்கிறேன். இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 15 திவ்யதேசங்கள் அருகருகே இருக்கின்றன. இரண்டு நாள்களில் எல்லாவற்றையும் பார்த்துவிடலாம.

    பதிலளிநீக்கு
  8. எங்க எல்லாருக்கும் சேர்த்து கமெந்ட் போட்ட ராமலக்ஷ்மி வாழ்க!

    பதிலளிநீக்கு
  9. ஓகே.. திவ்யதேசம்னா என்னானு யாராவது சொல்லுங்க ப்லீஸ்

    பதிலளிநீக்கு
  10. @அப்பாதுரை, ஆழ்வார்கள் அந்த ஸ்தலத்திற்குச் சென்று அங்குள்ள இறைவன் குறித்துப் பாடி இருந்தால் அந்த இடம் திவ்யதேசம் என்று வழங்கப்பெறும்.

    இதுபோலப் பூவுலகில் 106 இடங்கள் உள்ளன. பூவுலகில் இல்லாத திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் பற்றியும் பாடி இருக்கிறார்கள். ஆக மொத்தம் 108.

    நான் இதுவரை 97 சேவித்திருக்கிறேன். # வெளம்பரம்:-)

    பதிலளிநீக்கு
  11. மேலும் தகவல்களுக்கு

    http://www.divyadesam.com/hindu-temples.shtml

    பதிலளிநீக்கு
  12. , வசிஷ்ட முனிவர் அறிவுரைப்படி திருநாங்கூர்ப் பொய்கையில் தினமும் நீராடி வசிஷ்டரால் உபதேசிக்கப் பட்ட நரசிம்ம ம்ருத்யுஞ்சய மந்திரத்தை சங்கல்பம் செய்ய ஸ்ரீநிவாசப் பெருமாள் அவன்முன் தோன்றி அவனை சிரஞ்சீவியாக்கியதாக வரலாறு.

    சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  13. 108வது திவ்யதேசம் மட்டும் பார்த்துட்டு வந்து யாரும் எழுதினது கிடையாதுன்னு நினைக்கிறேன். இந்த திவ்யதேச தரிசனம் அருமை. செல்லுல எடுத்த புகைப்படஙகள் நல்லாத்தேன் வந்திருக்கு.

    பதிலளிநீக்கு
  14. நடுநாட்டுத்திவ்ய தேசங்களில் இது வருகிறது. திருநாங்கூர் திவ்ய தேசத்தோட சேர்ந்தது. இங்கே நடக்கும் வேடுபறி உற்சவம்(திருவாலி, திருநகரி) மிகப் பிரபலமான ஒன்று. நாங்க இந்த திவ்ய தேசங்களுக்கு மட்டும் சிதம்பரத்தில் தங்கிக் கொண்டு போயிட்டு வந்தோம். ஒரு சில கசப்பான அனுபவங்கள். எனினும் மறக்க முடியாத பயணம். அருகே தான் ஸ்ரீமுஷ்ணம் இருக்கிறது அங்கேயும் போயிருக்கலாமே?

    ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்கு ஒரு இஸ்லாமியர் மண்டகப்படி உண்டு. அது குறித்து விபரம் எதிலேயோ எழுதி வைச்சேன்.

    பதிலளிநீக்கு
  15. எங்க ஊர் பக்கத்தில் தான் இருக்கு. ஆக்கூரில் என் நெருங்கிய நண்பன் உள்ளான். ஆக்கூர் வரை சென்றுள்ளேன் இங்கு சென்றதில்லை

    பதிலளிநீக்கு
  16. "திருவெள்ளக் குளத்து அண்ணா"
    என திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்துள்ளார்..

    திருநாங்கூர் பதினோரு கருட சேவையுள் (தை அமாவாசை) இப்பெருமாளும் உண்டு.

    திருநாங்கூர் ஆறு திருத் தளங்களை சேவித்த எனக்கு இதுவரை இப்பெருமாள் கோவில் சேவை கிட்டவில்லை.. நாராயணா.. காக்க வைத்துள்ளாயே..

    பதிலளிநீக்கு
  17. அண்ணா திருவெள்ளக் குளத்தாய்
    அடியேன் இடரைக் களையாயே
    என்ற பாசுரம் மிகப் பிரசித்தமான உருகவைக்கும் படி இருக்கும்.சம்ப்ரதாயப் பாடல்களில் முக்கியமான ஒன்று. நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி கோபி. எல்லாரும் சொல்றாங்களேனு பாதி ஸ்லோகங்களை அர்த்தம் தெரியாம சொல்றமாதிரி 'திவ்யதேசம்'னு சொல்றோமோனு நெனச்சேன். ரொம்ப தேங்க்ஸ்.
    97/106 அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  19. 107, 108 தேசங்களைப் பாத்துட்டு வர ஒரு மூணெழுத்துக் கருவி இருக்கு கணேஷ்.
    முதலெழுத்து க.

    பதிலளிநீக்கு
  20. எங்கள் பிளாக்12 ஜூன், 2012 அன்று 7:39 PM

    வல்லிம்மா, மாதவன்....

    1)கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
    நண்ணார் முனைவென்றி கொள்வார்மன்னு நாங்கூர்
    தின்னார் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள்
    அண்ணா! அடியேனிடரைக் களையாயே.

    2) கொந்தார் துளவ மலர் கொண்டணிவானே
    நந்தாத பெரும்புகழ் வேதியர் நாங்கூர்
    செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள்
    எந்தாய், அடியேனிடரைக் களையாயே.

    பதிலளிநீக்கு
  21. ஒரு அருமையான திவ்யதேசத்தினை எங்களுக்கும் தரிசனம் செய்ததற்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  22. @கீதா சாம்பசிவம்

    \\நடுநாட்டுத்திவ்ய தேசங்களில் இது வருகிறது\\

    இது சோழநாட்டுப் பதி. நடுநாட்டில் இரண்டே திவ்ய தேசங்கள்தான் - திருக்கோவிலூர், திருவஹிந்திரபுரம்

    பதிலளிநீக்கு
  23. கோபி புண்ணியவான். 97 ஆ........... ன்னு திறந்த வாயை மூடமுடியலை!

    கோவில் விவரங்களுக்கும் தரிசனம் செஞ்சு வச்சதுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  24. படங்கள் தெளிவாகவே உள்ளன, ஆனாலும் கோவிலின் மூலவரை மட்டும் புகைப்படம் எடுப்பதற்கு பெரும்பாலான கோவில்களில் அனுமதிப்பது இல்லை என்று நினைக்கிறன்.

    திவ்யதேசத்தின் தரிசனம் திவ்யமாக இருந்தது.


    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    பதிலளிநீக்கு
  25. தெரியாதன தெரிந்து கொண்ட பொழுதே கண்ணார தரிசனம்.. நன்றி, ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  26. Ama kannamuchi sadha voda eppadi ungallukku pazakkam ?
    Sadha cell use panni edutha photo enru sonneergale..adhukku sonnen !

    பதிலளிநீக்கு
  27. //முதலெழுத்து க.//

    அந்தக் கருவியில் கூட கண்டதைத் தான் காண முடியும்ன்னு சொல்றாங்க, அப்பாஜி! ..

    அதுக்கு இன்னொரு நாலெழுத்துக் கருவி பரவாயில்லே. அதன் முதலெழுத்தும்
    'க' தான்.

    பதிலளிநீக்கு
  28. ஹிஹி.. மூணெழுத்து நாலெழுத்தை உந்துமே ஜீவி சார்?

    பதிலளிநீக்கு
  29. நாலுக்கும்- மூணுக்கும், இல்லே, மூணுக்கும்- நாலுக்கும் உந்தரதிலே பின்னாடி, முன்னாடி வித்தியாசம். அவ்வளவு தானே அப்பாஜி! எதை எது உந்தினா, என்ன? உந்தணும், அவ்வளவு தானே!

    பதிலளிநீக்கு
  30. அண்ணன் பெருமாளைத் தரிசிக்க வைத்ததற்கு மனமார்ந்த நன்றிகள்.

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!