எ சா : "ஆக மொத்தம், கோக்க கோலாவைக் குடித்த பிங்கி இறந்து போனாள் என்றும், அதில் கொடிய விஷம் இருந்தது என்றும், அந்த விஷத்தை ஓ ஏ கலந்திருக்கலாம் என்று சந்தர்ப்ப சாட்சியங்கள் அமைந்துவிட்டதால், இந்தூர் சிறையில், ஓ ஏ இருகின்றார். அவரை கோவிந்தராஜன் அன்றாடம் சென்று சந்தித்து, ஓ ஏ பெயருக்கு வந்த கடிதங்களைக் கொடுத்து, அவர் சொல்லுகின்ற பணிகளை செய்து வருகிறார் என்றும் நேற்று (நண்பருடன் போனில் பேசியதால்) உங்களுக்குத் தெரிய வந்தது. சரியா?"
கே வி: "ஆமாம்."
எ சா: "என்னை வந்து பார்க்கத் தூண்டியது எது?"
கே வி: "என்னுடைய பையன் அரவிந்துக்கு, நேற்று மாலை லேசான ஜுரம் அடிக்க ஆரம்பித்தது. வீட்டுப் பக்கத்தில் இருக்கின்ற டாக்டரிடம் அவனை அழைத்துச் சென்றேன். அவர் கொடுத்த மாத்திரைகளை இரவு உணவுக்குப் பிறகு அவனுக்குக் கொடுத்தேன். ஜுரம் குறையாமலே இருந்தது. இரவு பத்து மணி சுமாருக்கு அர்விந்த் கண் விழித்து எழுந்து, என்னிடம், "அப்பா, லைட் ஏன் மங்கலா எரியுது?" என்று கேட்டான்.
நான் அவனிடம், "மங்கலாக எரியவில்லையே! எப்பொழுதும்போல நல்லாதானே எரியுது!" என்றேன்.
அதற்கு அவன், "அப்பா பொய் சொல்லாதே. காவி கலர் மாத்திரையை நீ எனக்குக் கொடுத்தியா இல்லை பல்புக்குக் கொடுத்தியா?" என்று கேட்டான்.
நான் கொஞ்சம் குழம்பிப் போனேன். பிறகு அவனிடம், "நான் உனக்குக் கொடுத்தது வெள்ளைக் கலர் மாத்திரைதானே! பல்பு எல்லாம் மாத்திரை சாப்பிடாதடா" என்றேன்.
சற்று நேரம் கண்களை மூடியிருந்த அவன், மீண்டும் கண்களைத் திறந்து, என் கண்களை வெறித்துப் பார்த்தபடி, " அந்தக் காவி கலர் மாத்திரையை கொண்டுபோய் பல்பு சாமியாரிடம் கொடுத்துடு" என்றான்.
அதைக் கேட்டவுடன், எனக்கு மாயா (ஆவி) கூறிய ஜோதிட வைத்தியர், அவருடைய சிஷ்யர் எலெக்டிரானிக் சாமியார் ஞாபகமும், மீதியுள்ள ஒரு காவி கலர் மாத்திரையை என்னிடமே வைத்துக் கொள்ளும்படியும், அதை என்ன செய்வது என்று சந்தர்ப்பம் வாய்த்தால் பிறகு சொல்கின்றேன் என்று சொல்லியிருந்ததும் ஞாபகம் வந்தது.
"சரி அர்விந்த் - நான் காவி கலர் மாத்திரையை, பல்பு சாமியாரிடம், நாளை கொடுத்துவிடுகின்றேன்" என்றேன். என்ன ஆச்சரியம்! அடுத்த அரைமணி நேரத்திற்குள், ஜுரம் இறங்கி, அவனுடைய டெம்பரேச்சர் நார்மலுக்கு வந்து விட்டது."
எ சா: "என்னது? பல்பு சாமியாரா! எனக்கு வேண்டியதுதான்! ஏற்கெனவே அப்பாஜி என்று ஒருவர் என்னை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காரு. இப்போ இதுவும் சேர்ந்துகிட்டா நான் எங்கே போவேன்!"
கே வி: "ஆமாம் சார். சின்னப் பையன் இல்லியா - எலெக்டிரானிக் என்கிற வார்த்தை அவன் வாயில நுழையல போலிருக்கு அதனால பல்பு சாமியார்னு சொல்லியிருக்கான். போனாப் போகுது மன்னிச்சுடுங்க. இன்று காலையில் எழுந்தவுடன், நம்ம ஊரு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து, 'எலெக்டிரானிக் சாமியார் என்று யாரையாவது தெரியுமா?' என்று கேட்டேன். இப்போ எல்லாம் ஊரில் உள்ள சாமியார்கள் எல்லோரையும் போலீசுக்கு நன்கு தெரிந்திருக்கு! அதனால். அவங்க கிட்ட கேட்டேன். இன்ஸ்பெக்டர் ரங்கன் என்பவர், உங்கள் விலாசம் எனக்குக் கொடுத்தார்."
எ சா: "ஆமாம் அவர் என் நண்பர்தான்! அந்த நீல நிற மாத்திரை பாட்டிலையும், காவிக் கலர் மாத்திரையையும் கொண்டுவந்திருக்கீங்களா?"
கே வி: "ஆமாம்."
எ சா: "அதை என்னிடம் கொடுங்க."
கே வி நீலநிற பாட்டிலை, எடுத்துக் கொடுத்தார்.
எ சா: "இதுல இருக்கற மாத்திரை கொடிய விஷம் கொண்ட மாத்திரை என்று உங்களுக்கு சந்தேகமா இருக்கா?"
கே வி: "ஆமாம்"
எ சா பாட்டிலைத் திறந்து, அதில் இருக்கும் காவி நிற மாத்திரையை, ஒரு காகிதத்தில் வைத்தார். அதை டீப்பாயின் மேலே வைத்தபடி, கே வியிடம், "உங்கள் நாற்காலிக்கு அருகேயுள்ள அந்த மேஜையின் இழுப்பறைக்குள் ஒரு பிளாஸ்டிக் டப்பா இருக்கும் அதை எடுங்கள்" என்றார்.
கே வி திரும்பி,அந்த மேஜை இழுப்பறையைத் திறந்து .....
கே வி திரும்பி,அந்த மேஜை இழுப்பறையைத் திறந்து .....
(தொடரும்)
அதுக்குள்ளே சாமியார் மாத்திரையைச் சாப்பிட்டுட்டு கேவியை மாட்டி விடாமல் இருக்கட்டும்னு மாயா ஆவியையும், அவங்க அம்மா, தாத்தா, பாட்டி, பிங்கி எல்லோருடைய ஆவியையும் கேட்டுக்கறேன்.:)))))
பதிலளிநீக்குஅந்த மாத்திரையில் விஷம் இல்லை, என்னுடைய குருநாதர் கொடுத்த மாத்திரையில் வில்லங்கம் ஏதும் இல்லை என்பதை நிரூபிக்க, அந்த மாத்திரையை, அடுத்த பதிவில், நான் சாப்பிட்டு கே வி யின் சந்தேகத்தை, குற்ற உணர்வை நீக்குவதாக இருக்கின்றேன்.
பதிலளிநீக்குஆஹா, சாமியார் உடனே வந்துட்டாரே? பார்க்கலாம், அடுத்த பதிவு எப்படிப் போகுதுனு, சாமியார் சொல்றது சரியா, இல்லாட்டி ஆ"சிரி"யர் முடிவானு. :))))
பதிலளிநீக்குபதிவுலே வேறே வந்து பேசறார்;
பதிலளிநீக்குபின்னூட்டத்திலே வேறு வந்து பதில் சொல்றார்.
மாத்திரையை வேறு (வெள்ளையையோ, நீல பாட்டில் காவியையோ) சாப்பிட்டு நிரூபிப்பேன் என்று முழங்குகிறார்!
இந்த பல்பு சாமியாராகிய எலெக்ட்ரானிக் சாமியார் என்ன போடு போடுகிறார்! சிஷ்யரே இப்படின்னா அவரோட குருநாதர்?..
சாமியார் பின்னூட்டத்திலா....
பதிலளிநீக்குஐ...ஜாலி... சாமியார் அவர்களே...
உங்களுக்கு எதுனா சிஷ்ய நடிகைகள் இருகாங்களா... நீங்க தந்திரா பயிற்சி பண்ணுறீங்களா....
மாயா ஆவி.. அம்மா ஆவி.. பிங்கி ஆவி...எல்லாம் பிண்ணூடத்தில் வருவாங்களா ?
I am waiting for re-birth
பதிலளிநீக்குவினோத்! ரொம்ப ஜொள்ளு விடாதீங்க! எனக்கு நடிகைகள் யாரும் சிஷ்யைகள் இல்லை. எனக்கு சிஷ்யர் / சிஷ்யை என்று சிலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி யாரையாவது பார்த்தால் ஏமாந்து போய்விடாதீர்கள்! ஓம் குருதேவா!
பதிலளிநீக்கு//... பருகத் தொடங்கியிருந்தாள் பிங்கி."
பதிலளிநீக்கு(தொடரும்) .... "மாயாவின் அம்மா ஆவி"
(தொடரும்) ..... "பதிவாசிரியர்" (வேறு வழி இல்லை!) //
20ம் பகுதியின் முடிவு இது....
//..எ சா : "ஆக மொத்தம், கோக்க கோலாவைக் குடித்த பிங்கி இறந்து போனாள் என்றும், அதில் கொடிய விஷம் இருந்தது என்றும்,..//
21ன் தொடக்கம் இது....
மாயா அம்மாவின் உரையாடல் பாதியில் நிறுத்தபாட்டு உள்ளது ...
தொடர்ச்சி இல்லை...
மேலும் சாமியார் கே.வி யின் உரையாடல் ஆரம்பமும் இல்லை..
//..என்னுடைய குருநாதர் கொடுத்த மாத்திரையில் வில்லங்கம் ஏதும் இல்லை என்பதை நிரூபிக்க, அந்த மாத்திரையை, அடுத்த பதிவில், ..//
அப்படியானால் விஷம் எங்கிருந்து வந்தது..?
பேசாம விநோத் குமாரைத் துப்பறியச் சொல்லி இருக்கலாமோ? இந்தக் கேள்விகளுக்கு யாருப்பா பதில் சொல்லப் போறீங்க? சாமியாரா? மாயாவோட ஆவியா? பிங்கியோட ஆவியா? மாயா அம்மா ஆவியா? ஆவி வரதுக்கு முன்னே சொல்லிடுங்க. எனக்குப் பார்க்கணும். ஆசையா இருக்கு. இட்லியிலே வர ஆவியைத் தான் பார்த்திருக்கேன்.
பதிலளிநீக்குஒருத்தரையும் காணோமே இங்கேயும்?? பிங்கி ஆவிதானே கே.விக்க்குப் பெண்ணாய்ப் பிறந்திருக்கு? கூடவே மாயா ஆவியும் சேர்ந்திருக்குமோ? அதிலே ரெண்டு பேரும் ஒத்துமையா இருப்பாங்க போல! :)))
பதிலளிநீக்குவிநோத்குமார் சார்பிலும் கேட்டிருக்கேனாக்கும். :D
எங்கள் கேள்விக்குப் பதில் என்ன?
எங்கள் கேள்விக்குப் பதில் என்ன?
பதிலளிநீக்குஉங்களுக்கான பதிலுக்காக எங்க குரு ஆவிகளுடன் மீட்டிங்கில் இருக்கார்... கொஞ்சம் பொருங்க வந்தவுடன் பதில் கிடைக்கும்...
பதிலளிநீக்குகேள்விகள் கேட்டிருக்கும் வாசகர்களுக்கு என் நன்றி. எட்டெட்டு ஒரு கதைப் பின்னல்.
பதிலளிநீக்குரொம்ப கடந்த காலம், கடந்த காலம், நிகழ் காலம் - ஆகிய மூன்று காலம்(கள்) - எடுத்துக் கொண்டு, வாரி, சிக்கு எடுத்து, எண்ணெய் பூசி,
பின்னி, அலங்காரம் செய்ய வேண்டும். மாயாவின் அம்மா தொடரும் போட்டது சரிதான். அது அடுத்த பதிவில் தொடரவில்லை. அதற்குள், நிகழ் கால சிக்கல் எடுக்க வேண்டி வந்துவிட்டது. ஆனால், எப்படியும் அந்த காலம் மீண்டும் கையாளப் படும்பொழுது, இரண்டாம் முறை சிக்கல் எடுத்து விடுகின்றேன். அதுவரை பொறுமை காக்க!
பிங்கி / மாயா - இதுவரை மறுபிறவி எடுக்கவில்லை. பிங்கி மறுபிறவிக்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கின்றாள் என்பது அவளுடைய ஆவியின் பின்னூட்டத்திலிருந்து தெரிகின்றது.
மீதியை வெள்ளித்திரையில் - சாரி கணினி திரையில் காண்க!
//மீதியை வெள்ளித்திரையில் - சாரி கணினி திரையில் காண்க! //
பதிலளிநீக்கு:P:P:P:P
//கேள்விகள் கேட்டிருக்கும் வாசகர்களுக்கு என் நன்றி.//
வந்ததே நாங்க மூணே பேரு. போனாப்போகுதுனு நானும் விநோத்குமாரும் போணி பண்ணிட்டு இருக்கோம். இதிலே 'வாசகர்'"கள்" னு பில்ட் அப் வேறேயா? ஜீவி சார் சம்பிரதாயத்துக்கு வந்து கமெண்டிட்டுப் போயிட்டார். அப்புறமா அவரும் வரலை. ஆவிங்க தான் வந்திருக்குங்க. ஒண்ணு கூட பயமுறுத்தவே இல்லை. எல்லாம் சாதுவா பார்த்தாலே பாவமா இருக்கே!
மாயா ஆவி: அப்பப்பா நமக்கு இத்தினி வாசகர்களா? அடேங்கப்பா?
பதிலளிநீக்குபிங்கி ஆவி: அதானே.. நானே எதிர்பார்க்கல, உயிருடன் இருக்கும்போது எஒ தவிர யாரும் என்ன சைட்டடிக கூட இல்லை..
மாயா அம்மா ஆவி: அதாவது .. உயிருடன் இருக்கும்போது யாரும் கவனிக்க மாட்டாங்க.சோத்துக்கில்லாம இருந்தாலும் 10 ரூபாய் கூட கொடுக்க மாட்டங்க... செத்ததுக்கு அப்புரம் தான் எல்லருக்கும் நல்லவங்களா நாம தெரிவம். லட்ச கணக்கில் செலவு செய்து சிலை வைப்பங்க. சிலைக்கு மாலை அணிவிப்பாங்க. நாம செய்த தப்ப பற்றி தப்பி தவறி கூட பேச மாட்டங்க. அதனால் எல்லாராக்கும் நல்லங்களாகனும் ..எல்லாரும் பாரட்ட்டனும்னா சுலபமானவழி சாகுறது தான்...
ஆவிங்க எல்லாம் கொஞ்சம் அமைதியா இருங்க! ஆளுக்கு ஆளு இங்கே வந்து கமெண்டிகிட்டு இருந்தா எல்லோரையும் கொமட்டுல குத்திடுவேன். ஜா ஆ ஆ ஆ க்கிரதை!
பதிலளிநீக்கு////கேள்விகள் கேட்டிருக்கும் வாசகர்களுக்கு என் நன்றி.//
பதிலளிநீக்குவந்ததே நாங்க மூணே பேரு. போனாப்போகுதுனு நானும் விநோத்குமாரும் போணி பண்ணிட்டு இருக்கோம். இதிலே 'வாசகர்'"கள்" னு பில்ட் அப் வேறேயா? //
சொன்னால் நம்ப மாட்டீர்கள் - எங்கள் ப்ளாக் ஜி-மெயில் உள்-பெட்டி நிரம்பி வழிகின்றது வாசகர்கள் இந்தப் பதிவைப் பற்றி எழுப்பியுள்ள ஐயங்களும், கேள்விக் கணைகளும் .....