வியாழன், 28 ஜூன், 2012

என்ன தவம் செய்தோமோ!

                       
எங்கள் ப்ளாக் வலைப்பதிவு, இன்று மூன்று (வயது) ஆண்டுகள் முடித்து, நான்காவது ஆண்டில் (வயதில்) நுழைகிறது.

    
நர்சரி வகுப்பில் சேர்த்துவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டோம். ஆசிரியர் குழுவில் உள்ள kg எல்லோரும், LKG, UKG, Junior KG, Senior KG, என்று வசதிக்குத் தகுந்தாற்போல், பக்கத்தில் உள்ள பள்ளிகளில் அப்ளிகேஷன் போட்டு, இண்டர்வியூ, ரிட்டன் டெஸ்ட் எல்லாம் செய்து அட்மிசன் கிடைத்ததும், அந்த நல்ல செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுவார்கள்! 
            
தமாஷ்கள் இருக்கட்டும், சீரியசாகவே யோசனை செய்யும் நேரத்தில், 'என்ன தவம் செய்தேனோ, என்னவென்று சொல்வேனோ' என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. நாங்க ஒரு வலைப்பதிவு ஆரம்பித்ததும், அதில் நாங்கள் போட்ட பதிவுகள் வாசகர்களை ஈர்த்ததும், எங்கள் ரசிகர் மன்றத்தில், சற்றேறக் குறைய மூன்று நாட்களுக்கு ஒரு ரசிகர் சேருவதும், ஒவ்வொரு பதிவுக்கும், வாசகர்கள் தங்கள் கருத்துகளை கூறுவதும், எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான, பிடித்த சமாச்சாரம். உங்கள் ஆதரவைத் தொடருங்கள் நண்பர்களே!
               
இன்றளவில், எங்கள் சொத்து மதிப்பு விவரம்:

இது எங்களுடைய ஆயிரத்துப் பதினான்காவதுப் பதிவு! 
              
ரசிகர் மன்றத்தில் முன்னூற்று அறுபது கோடிகள்! (கேடிகள் இல்லைங்கோ!)
                
கருத்துரைகள் பதின்மூன்றாயிரத்து இருநூறு லட்சம் (சாரி லட்சணமான கருத்துரைகள்!!) 
               
ட்விட்டரில் எங்களை பொறுமையுடன் பின் தொடர்பவர்கள் நூற்று முப்பத்து ஆறு பேர்! 
              
மூஞ்சிப் புத்தகத்தில் எங்கள் நண்பர்களின் எண்ணிக்கை ஆயிரத்து எண்ணூறுக்கும் மேல்! 
  
               
இன்னும் சில புள்ளி விவரங்கள் - படங்களாக! 


    
எங்களிடம் ஏதேனும் கேள்வி கேட்க நினைப்பவர்கள், பின்னூட்டமாகப் பதியுங்கள். பதில் தெரிந்தால், உடனே பதிலுகிறோம். இல்லையேல் கடன் வாங்கி, சொல்கிறோம். பெரிய, நீளமான பதிலாக இருந்தால், தனிப் பதிவாக வெளியிடுகிறோம். கஷ்டமான கேள்விகளை சாய்சில் விட்டுவிடுகிறோம்! 
              
வாழ்த்தப் போகும் அனைவருக்கும் எங்கள் நன்றி. 
             

33 கருத்துகள்:

  1. எங்கள் எங்கள் எங்கள்
    மனமார்ந்த வாழ்த்துகள்:)!

    பதிலளிநீக்கு
  2. கூட்டு முயற்சியின் வெற்றி. புள்ளி விவரங்கள் தந்திருக்கும் மகிழ்ச்சி.
    வாசகரின் அன்பு. இவை மூன்றையும் அந்த தீபங்களில் காண்கிறேன்! தொடருங்கள். தொடருகிறோம்.

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமே '' எங்கள் ப்ளாக்கின் '' தாரக மந்திரம் ... சாதனைக்கு பாராட்டுக்கள் ... வளர்ச்சிக்கு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. // எங்களிடம் ஏதேனும் கேள்வி கேட்க நினைப்பவர்கள், பின்னூட்டமாகப் பதியுங்கள். //

    என்ன கேள்வி வேணாலும் கேக்கலாம்னா.....

    .ராஜாவுக்கு ____ ___ ?

    பதிலளிநீக்கு
  5. எங்கள் ப்ளாக்28 ஜூன், 2012 அன்று 10:44 AM

    மாதவன் வராது !

    பதிலளிநீக்கு
  6. //எங்கள் ப்ளாக் said...
    மாதவன் வராது !//

    நீங்களும் 'அந்த' விவேக் ஜோக்க பாத்ருக்கீங்களா ?

    :-)

    பதிலளிநீக்கு
  7. எங்கள் ப்ளாக் வலைப்பதிவு, இன்று மூன்று (வயது) ஆண்டுகள் முடித்து, நான்காவது ஆண்டில் (வயதில்) நுழைகிறது.

    எங்கள் ப்ளாக்குக்கு
    மனமார்ந்த இனிய வாழ்த்துகள்:)!

    பதிலளிநீக்கு
  8. எங்கள் ஃபளாக்குக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. முளைச்சு மூணு இலை விடுமுன்னேயே இவ்வளவா?

    (இன்றுதானே “மூணு இலை” ஆச்சு)

    //கேடிகள் இல்லைங்கோ//
    தலைவன் எவ்வழி, தொண்டர்கள் அவ்வழி!! :-))))

    புள்ளிவிவரங்களை வச்சே ஒரு பதிவு தேத்திட்டீங்களே!

    வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  10. ஓராண்டு கடப்பதற்குள்ளேயே எனக்கு மூச்சு முட்டுகிறது. நான்காம் ஆண்டுத் துவக்கத்துக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள்.
    அசர வைக்கும் உழைப்புக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. சம்சாரம் அது மின்சாரம்னு சொல்றாங்கோ, ஆனா இது மட்டும் கட் ஆவ மாட்டேங்குதுங்களே ஏன்?

    (ஹிஹி.. ஏதோ கேள்வி கேட்கச் சொன்னீங்க.. அதான் தமிழ்லயே கேட்டு வச்சேன்)

    பதிலளிநீக்கு
  14. ரஷ்யா வாசகர்களில் 90% fake. உங்க பதிவுகளில் தங்கள் சொந்த communication வைத்துக் கொண்டிருக்கக் கூடும். கொஞ்சம் தோண்டிப் பார்த்தீங்கனு வையுங்க, dental சம்பந்தப்பட்ட தளத்திலிருந்து வரதையும் கவனிச்சீங்கனு வையுங்க.. வேணாம், எதுக்கு அனாவசியமா உங்களைப் பயமுறுத்துவானேன்..

    சைனாவிலிருந்து யாருமில்லையா? ஒரு தடவை சைனாவிலிருந்து பார்க்கப்படும் தமிழ் ப்லாக்குகள் என்ன என்று தேடியபோது, எங்கள் ப்ளாக் முதல் பக்கத்தில் இருந்தது நினைவுக்கு வருது. அதுவும் fake தான். எங்கள் ப்ளாக்கிலிருந்து சுட்டுப் பிரசுரிக்கும் கூட்டம்.

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. எங்கள் ப்ளாக்28 ஜூன், 2012 அன்று 6:54 PM

    //அப்பாதுரை said...
    சம்சாரம் அது மின்சாரம்னு சொல்றாங்கோ, ஆனா இது மட்டும் கட் ஆவ மாட்டேங்குதுங்களே ஏன்?//

    அப்பாதுரை சார்!
    சம்சாரம் அது மின்சாரம் என்று மைக்கேல் ஃபாரடே காலத்துக்கு முன்னால் யாரும் சொல்லியிருக்கமுடியாது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த பாதிக்கப்பட்ட ரங்கமணி ஒருவர் கூறியதாகத்தான் இருக்கும்.
    அவர் அப்படி கூறிய காரணம் இதுவாகத்தானிருக்கும்:
    பெண்களின் கண்களில் ஒரு 'காந்தக்' கவர்ச்சி இருக்கின்றது.
    கண்களில் அவர்கள் நீர்த்தேக்கம் போன்று கண்ணீரைத் தேக்கிவைக்கின்றார்கள்.
    மேலும் MADAM என்பதில் வேறுDAM இருக்கின்றது.
    முன் காலத்தில் வீட்டில் இருந்தபடி 'ஒயர்' கூடை போடாத பெண்களே இல்லை என்று சொல்லலாம்.
    காந்தம், நீர்த்தேக்கம், டேம், ஒயர் எல்லாவற்றையும் இணைத்து, சம்சாரம் அது மின்சாரம் என்று கூறியிருக்கவேண்டும்.
    பவர் கட் எல்லாம், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு சமாச்சாரங்கள்! அதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா என்று நான் ஆராய்ந்தால், என்னுடைய பவர் கட் ஆகிவிடும் என்கிற பயத்தில், நானும் சம்சாரம் அது மின்சாரம் என்று பாடி, சந்தோஷமாக விடை பெறுகின்றேன்!

    பதிலளிநீக்கு
  17. சாதனைகள் மலைப்பூட்டித்தான் போகிறது
    தொடர்ந்து சாதிக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. போட்டுப் பத்து மணி நேரம் ஆயிருக்கு, எனக்கு இப்போத் தான் சாவகாசமா ரீடர்லே வந்திருக்கு. என்ன அநியாயம்?? யார் கிட்டேக் கோவிச்சுக்கறதுனு புரியலை.

    சரி, எல்கேஜி அட்மிஷன் எல்லாம் அவ்வளவு சுலபமாக் கிடைக்குதா? எந்த ஸ்கூல் என்ன பாடம், ரைம்ஸ் எல்லாம் சரியாச் சொல்லணும், அப்போ அப்போ வந்து சோதனை பண்ணிப்பார்ப்பேன். நல்லாப் படிக்கணும் எல்லாரும்.

    இந்த ஸ்ரீராமுக்கு இம்பொசிஷன் கொடுத்தேன், சரியாவே எழுதலை; அதை என்னனு முதல்லே வீட்டுப்பெரியவங்களைப் பார்க்கச் சொல்லுங்க.

    அப்புறமாப் புதுசாப் பள்ளியிலே சேர்த்தாப் பொரிகடலை, பொரி, நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுப்பாங்களே? அது கொடுக்கலையா?

    பதிலளிநீக்கு
  19. நாலு வயசானதுக்கு வாழ்த்துகள். எல்லாரும் விஷமம் பண்ணாம வாலைச் சுருட்டிக் கொண்டு சமர்த்தாக இருக்கணும். லீவு போடாம ஸ்கூல் போகணும்.

    பதிலளிநீக்கு
  20. நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்கள் குழுவுக்கு நானூறு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்துக்கள்.நாலே ஆண்டில் 1404 பதிவுகள்.சாதனைதான்,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. நீங்களும் தமிழ்லயே பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க.. உஸ்ஸ்ஸ்ஸ்.

    பதிலளிநீக்கு
  23. ஆயிரத்துப் பதினான்காவது பதிவுக்கு வாழ்த்துகள்

    சரி என்ற நம்பிக்கையில் மேலும் சில புள்ளிவிபரம்...
    2009 ஜுன் 28 ஞாயிறு அன்று பதிவான சுற்றமும் நட்பும்! என்ற அற்புதமான பதிவே இத்தளத்தின் முதல் பதிவாகும்

    2009 ஜுன் 29 திங்கள் அன்று மதிப்புக்குரிய kggouthaman இட்ட First ball sixer!!! என்ற மறுமொழியே இத்தளத்தின் பழமையானது.

    ஒரு மனோதத்துவ கேள்வி என்ற பதிவே அதிக பட்சமான 67 வாசக கருத்துக்களைக் கொண்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  24. எங்கள் ப்ளாக்-கிற்கு எங்களின் வாழ்த்துகள்....

    தொடர்ந்து அடிச்சு ஆடுங்க!!

    பதிலளிநீக்கு
  25. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    மூன்று வருடங்கள் போனது சரி.
    நான்கில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுங்கள். பதிவுகளில் கொஞ்சம் 'கனம்'(இலக்கிய பாஷை. உங்களுக்கும் தெரியும்)கூட்டுங்கள். வெவ்வேறு உச்சங்களை எட்டுங்கள்.

    உங்கள் குழு திறமையான குழு. மனம் வைத்தால் உங்களால் முடியும்.

    மீண்டும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. மூணு வருஷம் மூணு மாசமாச்சு,, இன்னும் மூணாம் சுழி முன்னூறு தொடலிங்க (அதுலயும் பாதி தொடர்கதைனு இழுத்தடிச்சுப் போட்ட பதிவுகள்).. உங்க மூணு வருஷம் >ஆயிரம் பிரமிக்க வைக்குது.

    பதிலளிநீக்கு
  27. எங்கள் ப்ளாக்29 ஜூன், 2012 அன்று 9:38 AM

    // ஜீவி said...
    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    மூன்று வருடங்கள் போனது சரி.
    நான்கில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுங்கள். பதிவுகளில் கொஞ்சம் 'கனம்'(இலக்கிய பாஷை. உங்களுக்கும் தெரியும்)கூட்டுங்கள். ..//

    ஜீவி சார்! முயற்சி செய்கிறோம். இப்போதானே எல் கே ஜி சேர்ந்திருக்கின்றோம்!
    இன்னும் ஒரு பதினைந்து வருடங்களுக்குள் இலக்கியமாக எழுத வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    பதிலளிநீக்கு
  28. எங்கள் ப்ளாக்29 ஜூன், 2012 அன்று 9:41 AM

    இங்கே வந்து வாழ்த்தியவர்களுக்கும், வராமலே வாழ்த்தியவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  29. எங்கள் ப்ளாக்29 ஜூன், 2012 அன்று 9:43 AM

    நீச்சல்காரன் நீச்சல் மட்டும் அடிக்காமல், மூழ்கி, மூன்று முத்துகளும் கொண்டுவந்து கொடுத்திட்டார்! நன்றி!

    பதிலளிநீக்கு
  30. // வராமலே வாழ்த்தியவர்களுக்கும் //

    பொழைக்கத் தெரிந்த ஆள் நீங்க..

    பதிலளிநீக்கு
  31. எங்களை பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்த இந்தச் சந்தர்ப்பத்தைப் பய்ன்படுத்திக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதுடன், எனது ரத்தினச்சுருக்கமான உரையை முடித்துக்கொண்டு அமைகிறேன் :-))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!