Tuesday, April 29, 2014

கல்யாணமகாதேவிதிருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் காட்டாற்றுப் பாலத்தைத் தாண்டிச் செல்லும்போது இடதுபுறம் ஒரு ஒற்றையடிப் பாதை திரும்பும். அந்தப் பாதைதான் கல்யாணமகாதேவி செல்லும் வழி.

பற்பல வருடங்களுக்கு முன்னர் எங்கள் குடும்பம் வாழ்ந்த ஊர்.  அவ்வப்போது என் மாமாக்கள் அங்கு சென்று வருவது வழக்கம்தான். சில வருடங்களுக்கு முன்னர் இங்குள்ள பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில் எப்படிச் சிதைந்துள்ளது என்பதை ஒரு படத்துடன் ஒரு சிறு பத்திரிகையில் வந்திருந்தது. அதைப் பார்த்த ஒரு பெரிய மனதுக்காரர் அங்குள்ள பெருமாள் கோவிலைப் புதுப்பிக்க முன்வந்தார்.  
    
திரு கௌதமன் சில வருடங்கள் முன்பு அந்தக் கோவில் கட்ட நிதியுதவி செய்யச் சொல்லி முகநூலில் பகிர்ந்திருந்தது சில நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

கல்யாண வரதராஜப் பெருமாள் கோவில் 

குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் பெற்ற சிறு தொகையையும் சேர்த்து அந்தப் பெரிய மனதுக்காரரிடம் அணிலின் சிறு உதவியாய் ஒப்படைக்க அவர் பெருமாள் கோவிலைப் புதுப்பித்து, சென்ற வருடம் அந்தக் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.   

கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அதை நடத்தி முடித்தவர்கள் வீட்டில் திருமணம் நடந்தது ஒரு விசேஷம். இங்கு வந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு உடனே திருமணம் கைகூடுவதாக நம்பப் படுகிறது. அங்கு நாதஸ்வரம் வாசித்த கார்த்திக் அருண் அவர்களுக்குக் கூட திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.
     
கும்பாபிஷேகம் நடந்து ஒருவருடம் பூர்த்தி ஆன நிலையில் அங்கு நடந்த ஹோமத்துக்கு அழைப்பு வந்தபோது கிளம்பிய மாமாக்களுடன் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.  
    
அடுத்து அங்கு குடிசையில் அமர்ந்து அருள்பாலிக்கும் சிவனுக்கும் ஆலயம் எழுப்பத் தீர்மானித்திருக்கிறார்கள்.

திருவாரூர் சாலையிலிருந்து கல்யாணமகாதேவி செல்லும் வழியில் ஓர் ஆறு காணப்படுகிறது. பாண்டவ ஆறு என்று சொல்கிறார்கள். வனவாசத்தின்போதோ எப்போதோ பாண்டவர்கள் இங்கு வந்ததாகச் சொல்கிறார்கள்.
               
ஊருக்குள் நுழைந்ததும் 1940, 1950 களில் இருப்பதுபோல உணர்வு ஏற்படுகிறது. கட்டிடங்கள் இல்லாத சாலைகள். காலில் மிதிபடும் மென்மணல் பாதைகள். ஓங்கி உயர்ந்த மரங்கள். பெரிய ஏரி. மூங்கில் புதர்கள். எங்கோ உயரத்தில் கேட்கும் பெயர் தெரியா ஒரு பறவையின் டுட்டூ ஒலி.
             
அங்கிருந்த ஐயனார் கோவில்.
   
அங்கு பார்த்ததுமே நட்பு பாராட்டிய திடீர் நண்பன்.
                 
மரத்திருட்டு! 

இந்த ஊர்ப் பயணத்துக்காகக் கிளம்பியதில்தான் மற்ற ஊர்ப் பயணங்களும் சாத்தியமாகின. இங்கு ஹோமம் முடிந்து சாப்பிட்டானதும் தஞ்சையை நோக்கிக் கிளம்பினோம்.

37 comments:

Vasu Balaji said...

இதானா அது http://www.hindu.com/thehindu/fr/2003/02/28/stories/2003022801240600.htm. பருதியூரா?

இராஜராஜேஸ்வரி said...

ஊர்ப் ப்யணம் அருமை..

Bagawanjee KA said...

#இங்கு வந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு உடனே திருமணம் கைகூடுவதாக நம்பப் படுகிறது.#
எனக்கும் ஆசைதான் வரணும்னு ,எதுக்கும் ஒரு வார்த்தை என்னவளைக் கேட்டுக்கிறேன் !

rajalakshmi paramasivam said...

நிஜமாகவே ஒரு அழகிய கிராமமாகவே இருக்கிறது. இந்தப் பதிவு எழுதுவதற்கு அந்த ஊரில் பிராட்பேண்ட் வசதிகள் இருக்கிறதா?இல்லை உங்கள் செல் போன் உபயமா?

நல்ல படங்கள் .

kg gouthaman said...

வாசு பாலாஜி - பருத்தியூர் திருவாரூருக்கு வட மேற்கு திசையில் அமைந்துள்ளது. கல்யாணமஹாதேவி திருவாரூருக்கு மிக அருகே, தென் மேற்கு திசையில் அமைந்துள்ளது.

karthik sekar said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் பயணத்தை அறிந்தேன்...

Ranjani Narayanan said...

உங்கள் ஊரின் பெயரே மிகவும் அழகாக இருக்கிறது. சீக்கிரமே சிவனுக்கும் கோவில் எழும்பட்டும்.

நாம் பதிவர்கள் எல்லோருமாகப் போய்வரலாமே!

karthik sekar said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

karthik sekar said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

karthik sekar said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

karthik sekar said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

karthik sekar said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

karthik sekar said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

Paramasivam said...

கூடிய விரைவில் சிவன் கோவில் கும்பாபிஷேகம்
நடைபெறும் போது, அதன் பற்றியும் பதிவிட வேண்டுகிறேன்

அப்பாதுரை said...

Karthik Sekar இன்னொரு முறை கமெந்ட் போட மாட்டாரா என்று. ஏங்குகிறேன்..

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை, மிக அருமை ஸ்ரீராம். கிராமங்களின் சுவடுகள் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கும் அழகான ஒரு பெயர் கொண்ட கிராமத்திற்கு கூட்டிச் சென்றதற்கு முதலில் உங்களுக்கு மிக்க நன்றி.
இந்த கல்யாணமகாதேவிக்கு மிக அருகில் அமைந்துள்ள வடபாதிமங்கலம் என் தந்தை வேலை பார்த்த ஊர். என்னதான்
பல ஊர்களில் வசித்தாலும் நம் ஊரைப்பற்றியும், நம் ஊர் சார்ந்த
விஷயங்களைப் பற்றியும் படிக்கும்போது ஏற்படும் ஒரு இனம்புரியாத
ஆனந்தத்திற்கும், மன உணர்வுகளுக்கும் எந்த எல்லைக் கோடும் இல்லை. மன்னைப் பக்கம் செல்லும்போது உங்கள் ஊர் தெய்வங்களையும் தரிசித்து வர ஆவல் மேலிடுகிறது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம். வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

கல்யாண மஹாதேவி, பெயரே மிகப் பொருத்தம் . திருமணமாகவேண்டியவர்களுக்குச் சொல்கின்றேன். படங்கள் அனைத்தும் ஏதோ வேற்றுக் கிரகத்தைப் பார்க்கிறமாதிரி இருக்கிறது . அழகிய கிரகம். இப்படியே இருக்க மற்றவர்கள் விடவேண்டும்.

பழனி. கந்தசாமி said...

ஊர் நினைவுகள் எப்போதும் சந்தோஷம் தரக்கூடியவை.

Ramani S said...

நாங்களும் தரிசித்து மகிழ்ந்தோம்
பயணமும் பதிவுகளும் தொடர நல்வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

ஊர் இப்போ இருக்கிறாப்போலவே எப்போவும் இருக்க அந்தப்பெருமாளையும், ஈசனையும் வேண்டிக்கிறேன். நல்லா இருக்கு. ஒரு முறை போயிட்டு வந்துடுவோம். :) எனக்குத் தெரிஞ்ச திருமணம் ஆகாத முதிர்கன்னர்களையும் போகச் சொல்லிடறேன். :))))

Geetha Sambasivam said...

நண்பரின் நெற்றிப் பொட்டு நல்லா இருக்கு. இதை மூணு தரம் கொடுத்தேன். போகலை, இப்போப் போகுதானு பார்கக்ணும். :)

வெங்கட் நாகராஜ் said...

கிராமத்துக் கோவில்களுக்குச் செல்வதே அலாதியான விஷயம் தான். திருவாரூர் அருகிலேயே இருக்கிறதா.... முடிந்தால் அடுத்த பயணத்தில் செல்ல முயல்கிறேன்.

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

ஸ்கூல் பையன் said...

கல்யாணமகாதேவி என்பது ஊர் பெயர் என்று பல நாட்களாக தெரியாமல் இருந்தேன். கௌதமன் சாரைப் பார்த்த அன்று அறிந்துகொண்டேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களது பகிர்வினையும், படங்களையும் பார்த்தவுடன், எங்களது குலதெய்வம்கோவிலுக்கு சென்று வந்த ஓர் உணர்வு

ராமலக்ஷ்மி said...

அருமையான அமைதியான இடத்தில் அமைந்திருக்கிறது கோவில். ஐயனார் சிலை அழகு. படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

கீத மஞ்சரி said...

மரத்திருட்டு தவிர மற்ற அனைத்தும் மனத்துக்கு உவப்பான தகவல்கள். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

சீனு said...

அப்பா சார் :-)))))))))))

G.M Balasubramaniam said...

பயணங்கள் எப்போதும் மனசுக்கு நிறைவு தரும். பல புதுக் கோவில்கள் கட்டுவதற்குப்பதில் இருக்கும் பழமையான கோவில்களைப் புதுப்பிக்கலாம் முன்பு போல் இருந்தால் கேட்ட மாத்திரத்திலேயே பயண ஏற்பாடுகள் துவங்கி இருபேன். வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

கல்யாண மாதேவி என்றும் சொல்வார்கள். எங்கள் ஊரிலிருந்து [ மன்னார்குடி] சுற்று வட்டாரங்கள் முழுமையும் இன்னும் இதே மாதிரி கிராமங்கள் நிறைய இருக்கின்றன. இதே மூங்கில் புதர்கள், மதிய நேரங்களீல் இனம் புரியாத குருவிகளின் கீச் கீச் குரல்! நிறைய ரசிக்கலாம்! நானும் உங்களுடன் கல்யாண மகாதேவி வந்த மாதிரி இருக்கிறது!

‘தளிர்’ சுரேஷ் said...

அழகிய படங்களுடன் பயணக்குறிப்பு அருமை! வாழ்த்துக்கள்! கல்யாணமகாதேவி பரிச்சயமான பெயராக இருக்கிறது திருவாரூர் பக்கம் செல்லும்போது சென்று பார்க்கிறேன்!

ஹேமா (HVL) said...

போட்டோக்களோடு படிக்க நன்றாய் இருக்கிறது! எங்காவது சென்று வரவேண்டும் என்று தோன்றுகிறது!

Anonymous said...

வணக்கம்
ஐயா.

பதிவை படித்த போது.. அங்கு போக வேண்டும் என்ற உணர்வுதான்... ஐயா.
படங்கள் எல்லாம் அழகு.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு said...

கல்யாண மகாதேவி கோயில் போகும் பாதை மிக அழகு, ஐய்யனார் கோவில் குதிரை பக்கத்தில் இருப்பவர் பெண் தானே? அவர் கொடுத்து இருக்கும் போஸ் நன்றாக இருக்கிறது.

ஸ்ரீதேவி, பூதெவியுடன் பெருமாள் தெரிகிறார்.

இங்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு உடனே திருமணம் கைகூடுவது மகிழ்ச்சியான் விஷயம்.

படங்கள் எல்லாம் தெளிவாக அழகாய் இருக்கிறது.

Rathnavel Natarajan said...

படங்களுடன் அருமையான பதிவு.
நன்றி.

கோவை ஆவி said...

இந்த ஊர் யாரோ ஒரு நண்பரின் பெயரோடு சேர்த்திருப்பாரே யாரது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்..! :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!