Thursday, May 25, 2017

(காதலெனும்) பொன்வீதி(யில்).. எம் எஸ் வி யும் மோகன்ஜியும்
     ஜெயமோகன் உள்ளிட்டோருடன் சேர்ந்து
மோகன்ஜி எழுதிய வம்சி வெளியீடான சிறுகதைத் தொகுப்புக்குப் பின் இது இரண்டாவது புத்தகம் என்று நினைக்கிறேன்.       இன்னும் அடுத்தடுத்து வரப்போகும் புத்தகங்கள் பற்றியும் விவரம் சொல்கிறது புத்தகம்.


 

     தரமான காகிதத்தில் அச்சிடப்பட்டிருக்கும், பிசிறில்லாமல், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் புத்தகம்.  கண்களை உறுத்தாத எழுத்துகள்.

      பிளாக்கில் அடிக்கோடிட முடியாது. எடுத்துப்போட்டுப் பாராட்டலாம்தான்.  ஆனாலும் புத்தகத்தில் படிப்பது போல வருமா என்ன?  பல இடங்களில் சந்தோஷமாய் பென்சிலால் அடிகோடிட்டேன்!
 

     பெரும்பாலும் அவரது தளத்தில் வெளியான சிறுகதைகள்தான்.  சிலவற்றைத் தவிர பெரும்பாலும் நான் அங்கேயே படித்தவைதான்.  மனதை வருடிச் செல்லும் சிறுகதைகள்..  புத்தகத்தில் ஆற அமர படிக்கும்போது அங்கே வலைத்தளத்தில் நான் என்ன அவசரப் பின்னூட்டம் கொடுத்திருப்பேன் என்கிற ஆவல் வந்தது.


      பின்னூட்டம் என்று செல்லும்போதுதான் நினைவுக்கு வருகிறது.  தேர்ந்தெடுக்கப்பட்ட 19  பதிவர்களின் பின்னூட்டத்தை "சிரம் கண்ட அட்சதைகள்" என்கிற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்.  ரிஷபன் ஸார், காஷ்யபன் ஸார், அப்பாதுரை, ஜீவி ஸார், வைகோ ஸார் வரிசையில் என் பெயரையும் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது!  அச்சில் என் பெயர்!  ஹையா!


 
     புத்தகத்தலைப்பு பொன்வீதி.  உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறதோ அதுதான் கதையின் தலைப்புக்கான காரணமும்!  எம் எஸ் வி இசையில் அந்த அருமையான பாடல்.  நா பா நினைவும் வருகிறது!  பாடலைப்போலவே கதையும் இனிமை.  அருமையான ஒரு அறியாய் பருவத்துக் காதல் கதை.

     நாட்டி கார்னர் :  குழந்தைகளின் இயல்பே குறும்புதானே?  அதை நாகா அஸ்திரத்தில் அடக்கினால் குழந்தை எது?  குழந்தைத் தன்மை எது?  பிறரது தவறுகளைக் கண்டிக்கும் நாம் நம் தவறுகளைக் கணிக்கத் தவறுவதற்கு கண்ணம்மா உதாரணம்.   செஸ் விளையாட்டும் சிப்பாய்
உதாரணமும் அருமை.


     பச்ச மொழகா : "சேட்டு வீட்டுக் கல்யாணத்தில் தனித்துத் தெரியும் ஒரு மடிசார் சுமங்கலியைப் போல"  என்ன ஒரு உவமை குருஜி!  ராஜாமணியைப் போல உணர்வுத் தீவிரவாதிகளைச் சமாளிப்பது கஷ்டம்தான்!


     ப்யார் கி புல்புல்  :  லேஸா சுஜாதா வாசனை!


     கல்யாணியைக் கடித்த கதை  :  சிறு வயதின் பாதிப்பு, சிறிதாய் வயதான காலத்திலும் பாதிக்கும் கதை!


     தத்த்தி   :  [இரண்டு "த்" தை கவனிக்கவும்! ]  நகைச்சுவையா?  தத்துவமா?  கடைசி வரி பிரபலம்!  'சிரம் கண்ட அட்சதைகளி'ல் வந்திருக்கிறது!


     வெளையாட்டு :  எந்த எந்த மனிதனுக்குள் என்ன என்ன உணர்வுகளோ!  தருமு மாதிரி கேரக்டரிடமிருந்து எதிர்பாராத அனுபவ வாழ்க்கை வரிகள்.  முத்துவுக்கும் முதல் பாடம்.


     கூளம்  :  எங்கள் பிளாக்கில் வெளியான "கேட்டு வாங்கிப் போட்ட கதை". இன்னொரு மகிழ்ச்சி, புத்தகத்தில் மறுபடியும் என் பெயர்!  


    

     ஆஹா..  தன்யனானேன்.  குப்பைகளைக் கழிப்பதில் நான் கூட மோசம்தான்!  அங்கும், மறுபடியும் நான் ரசித்த வரிகள் :     வாக்கிங்  :  கூடவே நடைபோடும் கடந்த கால வாழ்க்கை.


     அங்கிங்கெனாதபடி :  காலம் சொல்லும் வரிகள் "தேரு பாக்க வந்திருக்கும் சித்திரைப் பெண்ணே.. புதுப்பாடல்!"  கதை?  இயல்பாய் ஒரு பொறாமை.  இயல்பாய் ஒரு சம்பவம்!


     ஒரு பயணம்  :  சமீப காலமாய் என் மன ஓட்டங்கள் கூட இதே பாதையில்!

     விட்டகுறை தொட்டகுறை  :  கதாநாயகன் பெயர் ஸ்ரீராம்!  மறுபடியும் என் பெயர்!!!  (ஹிஹிஹிஹி)  ரசித்த வரிகள் "என்னிலிருந்து நானே பெற்றுக்கொண்ட விடுதலை".  கதை?  காதலின் மறுபக்கம்.


     வீட்டைத்துறந்தேன்   :  சிறுபிள்ளைக் கதை(யில்) கண்கலங்க வைத்து விட்டீர்கள் ஸ்வாமி..  நான் கூட இதே போல வீட்டைத் துறந்திருக்கிறேன்!  தேடி வருபவர்களைக் கண்களால் தேடியபடியே!


     எப்படி  மனம் துணிந்தீரோ :  குருவே..  சஸ்பென்ஸ் வரவில்லையோ!


     நிழல் யுத்தம்  :  என்ன சொல்ல?  என் புரிதல் சரியோ, தவறோ?  அது என் புரிதல்.  உங்கள் புரிதல் உங்கள் அனுபவங்களை பொறுத்து வேறாய் இருக்கலாம்.


     பாண்டு :  "தாளிப்புலேருந்து தப்பி விழுந்த உளுந்தாட்டம் வெளுப்பு "  ரசித்த வரிகள்.  கரப்புக்கதை!


     வடு  :  சோகம்.  சுஜாதா வாசனை.  வெளிநாட்டிலிருந்து ஓடிவரும், மொட்டை மாடியில் இருக்கும் இரண்டே வாச்கர்களுக்கான ஒரு ஒற்றை வரிக் காவியம் படிக்க வரும் பெண் பற்றி 'சு' எழுதியிருப்பார்.


     தமிழே என் தமிழே  :  "எல்லாம் இருக்கு ஸார்.  ஆனா ஒண்ணுமே இல்லை".  இவன் டிரைவரா?  பட்டினத்தாரா?  -  ரசித்த வரிகள்.       மதுரைக்காரன் "நிமிட்டு" என்கிற வார்த்தையை உபயோகிப்பானா ஜி?  தமிழ் பேசச்சொன்னால் வாழ்க்கைத் தத்துவம் பேசுகிறான்!  ஸூப்பர்.


     ஒரு ஊதாப்பூ நிறம் மாறுகிறது  :  12 பைசாவுக்கு டீ!  மறுபடியும் காலம் சொல்லும் வரிகள்.  காதலா?  நட்பா?  எது புனிதம்?


     காமச்சேறு  :  பக்தி.


     காட்டிக்கொடுத்த மணி :  அழகு.
 

     குறை என்று சொன்னால் உரையாடல்களில் சில சமயம் எதைப் பேசுவது யார் என்கிற குழப்பம் வருவதைச் சொல்லலாம்.   குதுகுலம் கணனி என்று ஓரிரு பிழைகளைத் தவிர வேறில்லை!

     உங்கள் முன்னுரையில் நீங்கள் அருமையாய்ச் சொல்லியிருக்கும் இந்தக் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு.   புத்தகம் விற்று வரும் காசு ஒரு நல்ல காரியத்துக்குப் பயன்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.  நல்ல விஷயம்.
      அவர் வரிசையில் அவர் வெளியிட்டிருக்கிறார்.  21 இல் என் வரிசை வேறு.  அவரவர் ரசனைப்படி அவரவருக்கு ஒரு வரிசை!


     கதைகள் மனதில் தேங்கி நிற்கின்றன மோகன் அண்ணா...  ரசித்துப் படித்த புத்தகம்.
 

பொன்வீதி (சிறுகதைகள்)
விலை : 125 /  (160 பக்கங்கள்)

மோகன்ஜி.
அக்ஷரா பிரசுரம்
G 1702, அபர்ணா சரோவர்,
நல்லகண்டலா, ஹைதராபாத் - 500 107.

மோகன்ஜியைத் தொடர்பு கொள்ள :
mohanji.ab@gmail.com

58 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, ஓர் நூல் அறிமுகத்தையே மிகப்புதுமையான முறையில் செய்து அசத்தியுள்ளீர்கள்.

அதற்கு முதற்கண் என் பாராட்டுகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

’பொன் வீதி’ என்ற தலைப்பே சும்மா மின்னுது .....

’பொன் மனச் செம்மல்’ போல நூல் ஆசிரியரின் புகைப்படமும்

’டாப்’பில் டாப்பாக சும்மா மின்னத்தான் செய்கிறது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

நூலாசிரியர் திரு. மோகன் ஜி அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

மிகச்சிறந்த எழுத்தாளரான திரு. மோகன்ஜி அவர்கள் அடுத்தடுத்து மேலும் பல நூல்கள் வெளியிட ப்ராப்தங்கள் அமைய பிரார்த்திக்கிறேன்.

அன்புடன் VGK

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான நூல்
படித்துக் கொண்டிருக்கிறேன்
நன்றி நண்பரே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி. நூலாசிரியருக்குப் பாராட்டுகள்.

Thulasidharan V Thillaiakathu said...

விமர்சனமே தூள் கிளப்புகிறது! மோஹன் ஜியின் அழகான நூல் பற்றி அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி. குறித்துக் கொண்டாயிற்று.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மோஹன் ஜிக்கு வாழ்த்துகள்!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓட்டுப் பெட்டி தெரியலியே அதன் ரகசிய இடத்தின் லிங்க்?! தயவாய் கொடுங்களேன்! மகுடம் சூடி பலரையும் சென்றடைய வேண்டியதல்லவா!!!

கீதா

ஹேமா (HVL) said...

நூல் அறிமுகத்திற்கு நன்றி! மோகன்ஜிக்கு வாழ்த்துகள்!

KILLERGEE Devakottai said...

திரு. மோகன்ஜி அவர்களுக்கு எமது வாழ்த்துகளும்...

நெல்லைத் தமிழன் said...

நூல் அறிமுகம் நல்லா பண்ணியிருக்கீங்க.

'என் அன்பு மகளே..நீ ஏன் பெரியவளானாய்.....' - மிக வித்தியாசமான சிந்தனை. கதைச் சூழல் தெரியலை. ஆனால் இது பல எண்ணங்களுக்கு இட்டுச் செல்கிறது. மரத்தை வளர்ப்பது, அது தனக்குப் பழம் தரும் என்றா? அது அடுத்த சந்ததிகளுக்கு இட்டுச் செல்லும் என்றல்லவா? ஆனாலும் மனதை உறுத்துகிறது.

மோகன்ஜிக்கு வாழ்த்துக்கள்.

asha bhosle athira said...

/// பின்னூட்டம் என்று செல்லும்போதுதான் நினைவுக்கு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 19 பதிவர்களின் பின்னூட்டத்தை "சிரம் கண்ட அட்சதைகள்" என்கிற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். ரிஷபன் ஸார், காஷ்யபன் ஸார், அப்பாதுரை, ஜீவி ஸார், வைகோ ஸார் வரிசையில் என் பெயரையும் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது! அச்சில் என் பெயர்! ஹையா!//

வாழ்த்துக்கள்...

கதையின் கதாநாயகர் ஆக ப்ரமோஷன் கிடைத்தமைக்கும் வாழ்த்துக்கள்.

asha bhosle athira said...

படிக்கும் புத்தகத்தில் பிடித்த இடங்களில் பென்சிலால் அடையாளமிட்டிருக்கிறீங்க... நானும் இப்படித்தான், பென்சிலைக் கையில் வைத்துக்கொண்டே புத்தகங்கள் படிப்பேன்.. பிடித்தவற்றை அண்டலைன் பண்ணிவிட்டு பின்பு அவற்றைக் கொப்பியில் அழகாக எழுதி வைப்பேன்... இரவல் புத்தகமெனில் இப்படிப் பண்ண முடியாமல் போய் விடுகிறது:(.

உற்சாகமான விமர்சனத்துக்கு வாழ்த்துக்கள்..

asha bhosle athira said...

///வாக்கிங் :
கூடவே நடைபோடும்
கடந்த கால வாழ்க்கை.///

அழகான ஹைக்கூ

//மதுரைக்காரன் "நிமிட்டு" என்கிற வார்த்தையை உபயோகிப்பானா ஜி? //

கேட்டிடவேண்டியதுதான்:).

ஆஆஆஆஆஆஆ இங்கின கோபு அண்ணனோ இன்று 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ.. என் மூக்கையே நம்பமுடியவில்லை என்னால்ல்:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:).. மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்:).

Angelin said...

//ஆஆஆஆஆஆஆ இங்கின கோபு அண்ணனோ இன்று 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ.. என் மூக்கையே நம்பமுடியவில்லை என்னால்ல்:).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:).. மீ ரொம்ப நல்ல பொண்ணாக்கும்:).//
@ அதிரா தையல் மீர் :) தையலே இதில் மாபெரும் பிழை உள்ளது //என் மூக்கை என்பதற்கு பதில் என் வாலை என்றல்லவா வந்திருக்க வேண்டும் :)


Angelin said...

நான் முதலில் மோகன்ஜி பக்கம் போய் எல்லா கதைகளையும் வாசிக்கணும் ..
ஸ்ரீராமின் விமரிசனம் அருமை

Angelin said...

@ஸ்ரீராம் :))

//விட்டகுறை தொட்டகுறை : கதாநாயகன் பெயர் ஸ்ரீராம்! மறுபடியும் என் பெயர்!!! (ஹிஹிஹிஹி) //

அப்போ கதாநாயகி பெயர் :)))))))) ??

Angelin said...

// ஆனாலும் புத்தகத்தில் படிப்பது போல வருமா என்ன? //

உண்மை தான் எனக்கு புது புக்கை திறந்து வாசம் பார்த்து படிக்கிறதில் ஆனந்தம் :)

Asokan Kuppusamy said...

நூல் அறிமுகம் மிக நன்று பாராட்டுகள்

G.M Balasubramaniam said...

பதிவுக்கு எழுதும் பின்னூட்டம் ஏதோகடமைக்காக எழுதுவது புத்தகம்படிக்கும் போது தோன்றுவதை பின்னூட்டமிட முடியாதே மோகன் ஜியும்நூல் வெளியிட்டு விட்டார் சந்த்ர்ப்பம்கிடைக்கும் போதுபடிக்க வேண்டியதுதான் பதிவில் வந்த கதைகளா

சென்னை பித்தன் said...

அசத்தலான அறிமுகம்

middleclassmadhavi said...

Super vimarsanam! paarattudhalgal

Bagawanjee KA said...

அக்ஷரா பிரசுரமான 'பொன் வீதி' அக்ஷரசுத்தமான விமர்சனம் ,புத்தகத்தைப் படிக்கத் தூண்டுகிறது !

//மதுரைக்காரன் "நிமிட்டு" என்கிற வார்த்தையை உபயோகிப்பானா ஜி? //
கேட்டிடவேண்டியதுதான்:).
மதுரகாரன் யாரை உங்களுக்குத் தெரியும் அதிரா :)

Geetha Sambasivam said...

"அன்பு மகளே, நீ ஏன் பெரியவளானாய்? நாடு விட்டு நாடு எவனுக்கோ சமைத்துப் போட்டுக்கொண்டு!" இந்தக் கதையின் உட்கரு என்ன என்று யோசிக்க வைக்கிறது, ஆனாலும் எனக்கு இந்தத் தந்தை/தாய் மனோநிலை பிடிக்கவில்லை! என்ன காரணம் என்றும் யோசிக்க வைக்கிறது. இப்போதைய பெண்கள் பெற்றோருக்கும், பிறந்த வீட்டுக்குமே முன்னுரிமை கொடுத்துக் கொண்டு கணவனைக் கூட அலட்சியம் செய்யும் மனப்போக்கைக் கவனித்து வருவதாலே என்னமோ தெரியலை. இந்த வரிகள் பிடிக்கவில்லை. :(

Geetha Sambasivam said...

என்றாலும் புத்தகம் கைக்கு வந்ததும் அந்தக் கதையைத் தேடிப் படிச்சுட்டுச் சொல்லணும். :))))

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான விமர்சனம்... மனதின் மகிழ்ச்சி ஒவ்வொரு பத்தியிலும் தெரிகிறது... வாழ்த்துகள்...

காமாட்சி said...

புதியவிதமான விமர்சனம். அழகாயிருக்கு. புத்தகம் கிடைத்தால் படிக்கணும். அன்புடன்

asha bhosle athira said...

///@ஸ்ரீராம் :))

//விட்டகுறை தொட்டகுறை : கதாநாயகன் பெயர் ஸ்ரீராம்! மறுபடியும் என் பெயர்!!! (ஹிஹிஹிஹி) //

அப்போ கதாநாயகி பெயர் :)))))))) ??//////

ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ் குட் கொஸ்ஷன்:)... எனக்கிது தோணாமல் போச்சே:)...

அஞ்சூஊஊஊஊஉ எங்கட ஸ்ரீராமையும் றுத் ஐயும் கடந்த 5 மணி நேரமாக எங்கினயும் காணவில்லை... உங்களுக்குத்தான் தேடுவது புய்க்குமே:) கொஞ்சம் தேடிப் புய்ச்சு வாங்கோ.. கொஸ்ஷனுக்கு ஆன்ஷர் கேட்டிடலாம்ம்ம்:).

asha bhosle athira said...

////Bagawanjee KAMay 25, 2017 at 4:18 PM
கேட்டிடவேண்டியதுதான்:).
மதுரகாரன் யாரை உங்களுக்குத் தெரியும் அதிரா :)
////

enna bakavan ji ippudi keddiddinka... peyaril mathuraiyudan oruvar ulaa vaaraare inkina....

ohhh ninkalum mathuraiyaa???? athu pokaddum enkada makuda:) oppantham maranthidathinka?:)... ithu namakkul irukkaddum:)

புலவர் இராமாநுசம் said...

விமர்சனம் மிக மிக நன்று!

asha bhosle athira said...

///AngelinMay 25, 2017 at 1:31 PM
நான் முதலில் மோகன்ஜி பக்கம் போய் எல்லா கதைகளையும் வாசிக்கணும் ..
ஸ்ரீராமின் விமரிசனம் அருமை

Reply////
கர்ர்ர்ர்ர்ர்ர் அது விமர்சனம் ஆக்கும்:) எனக்கு ஆரும் ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டால் கெட்ட கெட்ட கோபமா வருமாக்கும்:) ஏனெனில் நேக்கு டமில்ல டி ஆக்கும்.. எங்கிட்டயேவா? விடமாட்டேன் தமிழைப் பிழையா எழுத:)...ஸ்ஸ்ஸ்ஸ் ...

ராஜி said...

விமர்சனம் அருமை..

மோகன் சாருக்கு வாழ்த்துகள்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான நூல் அறிமுகம்
நூலாசிரியருக்கு
எனது பாராட்டுகள்

Angelin said...

//கர்ர்ர்ர்ர்ர்ர் அது விமர்சனம் ஆக்கும்:) // GARRRR

மோகன்ஜி said...

பிரிய ஶ்ரீராம். உங்கள் விமரிசனத்துக்கு என் நன்றி. பல கதைகள் ' வானவில் மனிதன்' வலைப்பூவில் வந்தவை. எத்தனை கருத்துப்பரிமாற்றங்கள் அப்போது நிகழ்ந்தன? வலையுலகின் பொற்காலம் அது.

இந்தப் புத்தகம் பரவலான வரவேற்பு பெற்றிருப்பது மனதுக்கு மகிழ்வாக இருக்கிறது. புத்தகம் வேண்டுவோர் என் மின்னஞ்சலுக்கு முகவரியை அனுப்புங்கள். mohanji.ab@gmail.com

எங்கள் ப்ளாகில் வாழ்த்திய அனைத்து நல்ல மனங்களுக்கும் என் அன்பும் நன்றியும்.
அடுத்த புத்தகத்துடன் சந்திக்கிறேன். நன்றி!

மோகன்ஜி said...

மிக்க நன்றி சார்! உங்களை அலைபேசியில் அழைத்தேன். நீங்கள் எடுக்கவில்லை. புத்தகம் கிடைத்ததல்லவா? உங்கள் கருத்தை அறிய ஆவல். நன்றிஜி!

மோகன்ஜி said...

மிக்க நன்றி சார்

மோகன்ஜி said...

மிக்க நன்றி சார்.

மோகன்ஜி said...

அன்புக்கு நன்றி மேடம்

மோகன்ஜி said...

நன்றி ஹேமா!

மோகன்ஜி said...

மிக்க நன்றி சார்

மோகன்ஜி said...

அது தனிமையில் தவித்தபடி மகளை நினைத்து வாடும் ஒரு வயதான தகப்பனின் அங்கலாய்ப்பு.
கதையைப் படித்தீர்களானால் context புரியும்.
நன்றி நெல்லைத்்தமிழன் சார்!

மோகன்ஜி said...

நல்லதோர் அலசலுக்கு நன்றி ஆதிரா!

மோகன்ஜி said...

ரசனையுடன் எழுதுகிறீர்கள் ஏஞ்சலின். நன்றி!

மோகன்ஜி said...

மிக்க நன்றி சார்

மோகன்ஜி said...

மிக்க நன்றி GMB சார்!
பெரும்பாலானவை வானவில் மனிதனில் வந்தவையே. உங்கள் கருத்தும் பதிவாகி உள்ளது. விலாசம் அனுப்புங்கள் ஜி

மோகன்ஜி said...

மிக்க நன்றி சென்னைப்பல்கலைக்கழகம் பித்தன் சார்

மோகன்ஜி said...

மிக்க நன்றி மி.கி.மாதவி!

மோகன்ஜி said...

மிக்க நன்றி பகவான்ஜி சார். ஆங்கில மினிட்டு 'நிமிட்டு' ஆகி ,தமிழ் கூறும் நல்லுலகு ஏற்றுக் கொண்ட வார்த்தை. மதுரைக்கார்ரகள் தான் சொல்ல வேணும்.

மோகன்ஜி said...

அக்கா! நீங்களும் முன்முடிபு கொண்டால் எப்படி. கதையைப் படித்தபின் கத்தியை எடுங்கள்!!
விலாஸம் பிளீஸ்!

மோகன்ஜி said...

மிக்க நன்றி தனபாலன் சார். உங்கள் அலைபேசி எண் மாறி விட்டதா என்ன?

மோகன்ஜி said...

மிக்க நன்றி மேடம்

மோகன்ஜி said...

மிக்க நன்றி புலவர் அய்யா!

மோகன்ஜி said...

ஆதிரா! கலக்குறீங்க!

மோகன்ஜி said...

மிக்க நன்றி ராஜி மேடம்!

மோகன்ஜி said...

மிக்க நன்றி சார்

கோமதி அரசு said...

அருமையான விமர்சனம்.
கூளம் படித்து இருக்கிறேன்.
மகள் குழந்தையாகவே இருக்க எண்ணம் உள்ள அப்பாக்கள் நிறைய இருக்கிறார்கள்.
நான் திருமணம் முடிந்த பின்னும் அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டு பேசி இருக்கிறேன்.அப்பாவை இழந்த சோகம் இன்னும் உண்டு.

மோகன்ஜிக்கு வாழ்த்துக்கள்.

Durai A said...

ஆகா.. புத்தகம் படித்து மறுபடி நினைவோட்டலாமே? வாழத்துக்கள் மோகன்ஜி.

இதைப்பற்றி முன்னமே நீங்கள் என்னிடம் சொல்லியிருந்தாலும் எனக்குத் தான் பதிலளிக்க முடியாது போனது.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!