Sunday, June 3, 2018

ஞாயிறு 180603 : காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்...

சில வகை மரங்கள் முன்னூறு அடிவரை வளரும்.  சிலவகை மரங்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் கூட உயிர்ப்புடன் இருக்கும்.  உதாரணமாக செம்மரம்.  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காணப்படும் மரவகையாம் அது.  (நன்றி இணையம்)

நிழல்தரும் மரத்தை நீங்கி உடல் சுடும் வெயிலையும் நாடுவாரோ....!சமீபத்திய போராட்டப்புகழ் தூத்துக்குடியில் கூட ஒரு மரம் ஆயிரம் ஆண்டுகளாய் இருக்கிறதாம்.  அதன் பெயர் பவோபாய் மரமாம்.  (நன்றி இணையம்)

மாநகராட்சி இங்கு இன்னும் "சாலை விரிவாக்கம்" செய்யவில்லை போலும்!!!

மரங்களின் வகைகளை இங்கு படிக்கலாம்.  ஆரம்பகால மரங்கள், பெரிய காடுகளில் வளரும் மரப் பன்னங்களாக இருக்கக்கூடும். பின்னர் ஊசியிலை மரங்கள், கிங்க்கோக்கள், சைக்காட்டுகள் மற்றும் எனைய வித்துமூடியிலிகள் (gymnosperm) போன்றவை தோன்றின. இன்று பெரும்பாலான மரங்கள் பூக்கும் தாவரங்களும், ஊசியிலைத் தாவரங்களுமாகும்.  (நன்றி இணையம்)

அலங்காரச் செடிகளை விட, பூமிக்கு ஆரோக்யம் தரும் மரங்கள் மேல்!நாட்டு மரங்களில் குறிப்பிடத்தக்கவை வேம்பு, புங்கன், பூவரசு, நாட்டு வாகை, புளிய மரம், அரசு, ஆலமரம் போன்ற மரங்களாகும். எண்ணற்ற மர வகைகள் இருக்க, இவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது ஏனென்றால், இதுபோன்ற மரங்கள் கோடை வெப்பத்தை தாங்கி, குறைந்த அளவு நீரை எடுத்துக்கொண்டு வளர்வதோடு, நல்ல நிழல் தந்து சுற்றுப்புறத்தைக் குளுமையாக்குகின்றன. இவை நல்ல டிம்பர் வேல்யூ உள்ள மரங்களாகவும் உள்ளன....  (நன்றி இணையம்)


"எங்கே அந்த தென்றல்...  வந்து தாலாட்டச் சொல்லுங்கள்...  நான் தூங்கணும்..."

வெந்தயம், கற்றாழை, லெமன் க்ராஸ், பாசில், புதினா, வல்லாரை, துளசி, அஸ்வகந்தா, வேப்பிலை, போன்ற செடிவகைகளை வீட்டிலேயே வளர்த்து பயன் பெறலாம்.  எந்த ஒரு மூலிகை வேண்டுமென்றாலும் நீங்கள் நாட்டு மருந்து கடை அல்லது எங்கேயாவது தேடி அலைய வேண்டியதில்லை.  (நன்றி இணையம்)

என்னால் என்ன பயன் என்று யோசிக்காதீர்கள்..  காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்...


சிவனை முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம் பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசாரங்களை உருவாக்கினார்களென்றும்,தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.  


நீராட வந்திருக்கிறாயா சிவனே சிவனே சிவனே...

பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான திருமாலையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார்.

"இந்த நீரை பக்கத்து மாநிலக் காரர்கள் திருடாவண்ணம்... 


இவரின் இடப்புறத்திலிருந்து திருமாலும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார்.  பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது.  (நன்றி விக்கி)

 ........காவல் நிற்கிறாயோ சிவனே........

கோ என்றால் அரசன்.  இங்கு கோ என்றால் கடவுள்.  இல் என்றால் இல்லம்.  கடவுள் வாழும் இல்லம் கோயில் / கோவில் என்று சொல்லலாம்.

"கோவிலுக்குச் செல்வோம்...  கோபங்கள் களைவோம்..."

கோலம் என்பது அலங்காரத்திற்காகப் போடப்படுவதில்லை. இது ஒருவிதமான வடிவம். படைப்புகள் அத்தனையும் ஒருவிதமான வடிவம்தான். அடிப்படையான வடிவம் முக்கோண வடிவம். இதை யந்திரம் என்றும் சொல்வோம். சரியான முறையில் உருவங்கள் ஒன்றிணைந்தால் அது யந்திரம். யந்திரம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்படும். ஆங்கிலத்தில் மெஷின் என்று சொல்லப்படும் இயந்திரமும் பலவிதமான உருவங்கள் முறைப்படி ஒன்றிணைந்ததுதான்.  இந்தப் பிரபஞ்சம் கூட சூரியன், சந்திரன், பூமி என்று பலவிதமான உருவங்கள் ஒன்றிணைந்து ஒரு மகத்தான, பிரம்மாண்டமான யந்திரமாக இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தை பார்த்துவிட்டுதான் நாம் பல சிறிய அளவிலான யந்திரங்களை உருவாக்கி உள்ளோம். இந்தச் சூரியன், சந்திரன், இந்தப் பூமி இவற்றைப் பார்த்துத்தான் நாம் கடிகாரங்களையே உருவாக்கினோம். (இணையத்திலிருந்து...)

கோலமே போடவில்லையே  கோவில் வாசலில்...?

108 சக்தி பீடங்களில் நாம் இன்று பார்க்கும் மானஸ தேவி பீடத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் மஹான் திரு ஷங்கர் பாரதி. (நன்றி இணையம்)

Trust Trust என்று நம்பச் சொல்கிறார்கள்...


மஹான் ஸ்ரீ ஷங்கர் பாரதி தனது கடைசி காலங்களை இங்குதான் கழித்தார் என்கிறார் திரு திகம்பர் பாரதி - அவருடன் அவருடைய கடைசி காலங்களில் கூட இருந்தவர். 

சிறு கதவும் உள்செல்ல உதவும்!

40 comments:

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…

கீதா
.

துரை செல்வராஜூ said...

வாழ்க...

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் எல்லாம் கண்ணை பறிக்குது

இதோ வரேன்...

போட்டியே இல்லை போர்!!

கீதா

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் , கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா! ஸ்ரீராம் என்ன தத்துவம்!!!

சிறு கதவும் உள் செல்ல உதவும்!!!! இதில் பெரிய தத்துவமே இருக்கு! ஸ்ரீராம் ஞானியாகிவிட்டார்!!! ஏற்கனவே தேம்ஸ் ல ஒரு ஞானி இருக்கார். ஒரு வேளை அவர் தான் குருவோ!! ஹா ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

Trust Trust என்று நம்பச் சொல்கிறார்கள்...//

ஹையோ ஸ்ரீராம் இதிலும் நிறைய அர்த்தங்கள் இருக்கே!! வெளில சொல்ல முடியாதே!!! ஸ்ரீராம் பின்னி பெடலெடுக்கறீங்க போங்க!! செமை தலைப்பு!!!

ரசிக்கிறேன் உங்கள் தலைப்புகளை!!!

கீதா

துரை செல்வராஜூ said...

// இவை நல்ல டிம்பர் வேல்யூ உள்ள மரங்கள்..//

அதனால தானே கோடாலியத் தூக்கிக்கினு வந்துடறானுங்க....

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் இன்று உங்களுக்குக் காவி உடை போட்டு தாடி வைச்சு, நெற்றி நிறைய விபூதிப் பட்டை போட்டு கையில் கமண்டலம் எல்லாம் கொடுத்து கண்ணை மூடி உட்கார்ந்திருப்பது போல்!!!!...

இன்று தேம்ஸ் ஞானியார் வந்தால் ...அதிரா ஸ்ரீராமைப் பாருங்கள் இன்று...உங்கள் சீடராக்கிட்டீங்களே!!

கீதா

துரை செல்வராஜூ said...

கண்கவரும் படங்கள்...
அழகு... அருமை...

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீ ஸ்ரீராமானந்தாவின் பிரசங்கம் சூப்பரோ சூப்பர்!!!

ரசித்தேன் ஸ்ரீராம்...ரொம்ப நல்லாருக்கு சதாசிவன் விளக்கம் எல்லாம்...எனக்கும் என் மகனுக்கும் மிகவும் பிடிக்கும் சிவன் குடும்பம்...!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

// இவை நல்ல டிம்பர் வேல்யூ உள்ள மரங்கள்..//

அதனால தானே கோடாலியத் தூக்கிக்கினு வந்துடறானுங்க....//

ஆமாம் துரை அண்ணா அதானே வேதனை இங்கு. எவ்வளவு அழிவுகள்....

கீதா

துரை செல்வராஜூ said...

/// காவி உடை போட்டு தாடி வெச்சி.....
கையில் கமண்டலம் எல்லாம்......///

மேனகா, ரம்பா, ஊர்வசி - ...ந்னு
தேடி வந்துடப் போறாங்க!...

நான் தேவதைகளைச் சொன்னேன்!...

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்.

Thulasidharan V Thillaiakathu said...

கோலம் தத்துவம் செம!!! ரியலி!!

ஸ்ரீராம் ரிஷிகேஷ் சென்றுவிட்டார். அதான் இன்று இயற்கையுடன் கூடிய தத்துவங்கள்!!! கதா பிரசங்கம்...

அதானே கோயில் வாசலில் கோலத்தைக் காணோமே...கோயிலே கோலம் என்பதாலோ..

ஞானி ஸ்ரீராம் அவர்களே!!! ஹைஃபைவ் கோயில் இதற்கு நான் அடிக்கடி சொல்லும் அர்த்தம் கோ அரசன் ..இவ்வுலக அரசன் வாழும் இல் எனவே கோயில்!! என்றுதான் நான் எழுதுவதும்....என் ஒரு கதையில் கூட இதைப் பயன்படுத்தியிருக்கேன்...இயந்திரன் கதையில்...ஹிஹிஹிஹிஹி..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மேனகா, ரம்பா, ஊர்வசி - ...ந்னு
தேடி வந்துடப் போறாங்க!...

நான் தேவதைகளைச் சொன்னேன்!...//

ஹா ஹா ஹா ஹா ஹா துரை அண்ணா....நான் என்னடானா இனி அனுக்கா தமனா எல்லாம் வரமாட்டாங்க இவங்கதான் இனி இங்கு நடமாடுவார்கள்னு சொல்ல வந்தா நீங்க கமென்ட் கொடுத்துட்டீங்க....ஹா ஹா ஹா ஹா ஹா

ஹைஃபைவ் அண்ணா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

துரை அண்ணா நான் ஸ்ரீ ஸ்ரீ ராமானந்தாவின் சிஷ்யையாய் சேரலாமானு யோசிச்சுட்டுருக்கேன்...ஹா ஹா ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆமாம் வெந்தயம், கற்றாழை பேசில் எல்லாம் வீட்டிலேயே வளர்கக்லாம்...இயற்கையையே காதலிக்கும் போது அதில் நீங்களும் இருக்கிறீர்களே உங்களையும் காதலிக்கிறோம் பூக்களே செடிகளே...

தலைப்பு செம ஸ்வாமி!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மரங்களைப் பற்றிய விவரங்களும் சூப்பர்!!! சுவாமிஜி!

கூடவே இப்படி ஓர் அழைப்பையும் வைச்சீங்க பாருங்க....//"எங்கே அந்த தென்றல்... வந்து தாலாட்டச் சொல்லுங்கள்... நான் தூங்கணும்..."//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.... எந்தத் தென்றல் வரப் போகுதோ...!! இதை அதிராவுக்குக் கொடுத்துடறேன்...அதிரா புகுந்து கலக்குங்க..!!! அதிரா இன்னிக்குக் கண்டிப்பா வந்துருங்க..ஏஞ்சல் நீங்களும் தான்...எபி சண்டே கலக்கல்!!

அப்பால வரேன்..

கீதா

துரை செல்வராஜூ said...

//!?.....//

எப்படியோ,
ஸ்வாமிஜியின் தாடிக்கு வந்தது ஆபத்து!..

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

மனித உடலில் கோபம் வந்தால்
13 நரம்புகள் தானாம் இயங்கும்
மனித உடலில் நகைச்சுவை வந்தால்
65 நரம்புகள் தானாம் இயங்கும்
இதை வைச்சுத் தான்
கோபம் வந்தால் மூளை இயங்காது
என்றார்களோ - அவ்வாறே
அவசரக் குடுக்கைக்கு புத்தி மத்திமம்
என்றார்களோ - எதற்கும்
"கோவிலுக்குச் செல்வோம்...
கோபங்கள் களைவோம்..." என்பது
எல்லோரும் பின்பற்றுவோம்!

middleclassmadhavi said...

அழகான பக்தி ப்ரசங்கம் கேட்டாற்போல் இருக்கிறது!!
நடுவில் ஏன் மனம் ஆழ்வார்க்கடியான் நம்பி இருந்தால் சமயச் சண்டை வந்திருக்குமமோ என நினைக்கிறது??!! :)
ரசித்த பதிவு!!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான பதிவு. இயற்கையையும், இறைவனையும் இணைத்துக் கூறியது மிகவும் நன்றாக இருக்கிறது.

மரங்களைப் பற்றி தெளிவான விளக்கங்கள் கூறியமைக்கு நன்றிகள்.

படங்களும், அதற்கேற்ற வர்ணனை வார்த்தைகளும் எப்போதும் போல் ரசிக்க வைத்தன.

மரங்களுக்கு பதிலாக செடிகளின் பேச்சுக்கள் அமைந்தது போல் அமைத்திருப்பது சிறப்பு.

கோலத்தைப் பற்றிய விளக்கம் அருமை. கோவில் தரிசனம் கண்ணுக்கும, மனதிற்கும் குளிர்ச்சியாக இருந்தது.
ஆன்மிகம் எப்போதுமே மனிதினில் கவலைகளை அகற்றி நிம்மதியை தரும். இறைவனைப் பற்றி பேசும் போதும், நினைக்கும் போதும் மனத்தெளிவு உண்டாகி அமைதி பெறும். காலையில் சிவபுராணம் பற்றி பதிவாக போட்டு படிக்க வைத்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

தங்கள் இணையப் பிரச்சனை விரைவில் சரியாக ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

மனம் கவர் படங்கள். ஒட்டி வரும் கட்டியங்கள்,
மரங்கள் ,செடிகள் ,சிவனார், கீதாரங்கன் பின்னூட்டங்கள்
எல்லாமே சூப்பர்.
கீதா சாம்பசிவம் பார்க்க முடியவில்லையே.
கணினியும் அவரும் நலம் என்று நினைக்கிறேன்.

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

ஸ்ரீராம். said...

அனைவருக்கும் இனிய காலை வணக்கமும், நன்றிகளும்...

ஏகாந்தன் Aekaanthan ! said...

இந்த இருபகுதிகளை இப்படிப் பார்க்கிறேன்:

ரம்யமான காலையில், மரங்களைப்பற்றி ஆனந்தமாக சிந்தித்து எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள், காபி வரும் என்கிற நம்பிக்கையில். காலைக்கிச்சனில் ஏதோ தாண்டவம் நிகழ்ந்துவிட, மிரண்டுபோய், நீயே எல்லாக் காபியையும் குடித்துவிட்டாயா சிவனே..சிவனே.. என ஆரம்பித்துவிட்டீர்கள். விபரம் புரியாத ஒருவர், அப்படியே பரவசமாகி ஸ்வாமிஜி! என்று அழைத்தேவிட்டார்.

Moral: காலைக் காபி இழந்தோர்க்கு கார்த்திகேயனின் அப்பனே கதி.. Trust !

Thulasidharan V Thillaiakathu said...

//!?.....//

எப்படியோ,
ஸ்வாமிஜியின் தாடிக்கு வந்தது ஆபத்து!../

ஹா ஹா ஹா ஹ ஹா ஹா துரை அண்ணா செம சிரிச்சு முடில.....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

விபரம் புரியாத ஒருவர், அப்படியே பரவசமாகி ஸ்வாமிஜி! என்று அழைத்தேவிட்டார். //

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மெய்யாலுமே ஏகாந்தன் அண்ணா ஸ்ரீராமானந்தா ஜியைப் பார்த்து பரவசமாகிட்டேன்!!! ஹா ஹா இதுக்கே இப்படி சொல்றீங்களே இன்னும் ஜல் ஜல் அதிரடி மோகினி வந்து ஆட்டம் இருக்கு...

கீதா

நெ.த. said...

இணையத் துணுக்குகள் அருமை.

"என்னால் என்ன பயன்...காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்"- இதன் அர்த்தம்தான் புரியலை. ஒவ்வொரு நிற ரோஜாவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா கீதாக்கா ரெண்டு நாள் காபி ஆத்தமாட்டேனு அன்னிக்குச் சொல்லிட்டுப் போயிருந்தாங்களே!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

"என்னால் என்ன பயன்...காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்"- /

நெல்லை அது வேறு ஒன்றுமில்லை அதற்கு முந்தைய தலைப்பு வேம்பு, துளசி, புதினா எல்லாம் தங்கள் பயன்களைச் சொல்லுது...ஸோ அடுத்த படத்தில் உள்ளவை பயனில்லை என்றாலும்.....அப்படினு எனக்குத் தோணிச்சு ஸ்ரீராம்ஜியின் கமென்ட் ....ஸ்ரீராம்ஜி சரியா...

கீதா

KILLERGEE Devakottai said...

தலைப்பை பார்த்து ஓடி வந்தேன்.
இது வேறு இரசிக்க வைத்தன... பதிவின் சாரம்.

வெங்கட் நாகராஜ் said...

அனைவருக்கும் காலை வணக்கம்.

அழகான படங்கள். தேர்ந்தெடுத்து தந்த தகவல்களும் மிகச் சிறப்பு. பாராட்டுகள்.

கோமதி அரசு said...

இயற்கையை காதலிக்க கற்றுக் கொள்ள சொல்கிறீர்கள்.
இயற்கையை நேசித்தால் இறைவனை நேசித்தல் போலதானே!

செடிகளுக்கு நிறைய தண்ணீர் தேவைபடும்.
இந்த கால கட்டத்திற்கு மரங்கள் தான்
நிறைய வேண்டும்.

ஒரு உறவினர் வீட்டில் மரங்கள் தான் நிறைய செடி, கொடிகள் இல்லை ஏன் என்று கேட்டதற்கு செடிகளை வீட்டில் இருந்தால் தான் கவனிக்க முடியும், அங்கும்இங்கும் போய்விட்டால் வாடி போய்விடும். அதனால் மரம் தான் நல்லது, காற்று, நிழல் மழை தருவதும் மரமே என்றார்.

செடி, கொடிகளின் மலர்கள் நமக்கு மகிழ்ச்சி தரும்.

பதிவு மிக அருமை.
G.M Balasubramaniam said...

இதுதான் சிவ புராணமா இறைக்கதைகளில் புகழ் பெற்றவரின் கருத்து தெரியவில்லையே என்ன இருந்தாலும் கற்பனைகள்பலவிதமென்று சொல்லத் தோன்றுகிறது

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
நன்றி நண்பரே

Bhanumathy Venkateswaran said...

மரங்கள் பற்றிய தகவல்கள் சிறப்பு!. அது சரி, காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று என்ன தலைப்பு? மரம் வளர்த்தால்தான் அதனடியில் உட்கார்ந்து காதலியோடு கதைக்க உதவும் என்று மறைமுகமாக சொல்ல விரும்புகிறீர்களா?

ராமலக்ஷ்மி said...

பெங்களூர் மெட்ரோவுக்காகவும் சாலை விரிவாக்கத்திற்காகவும் ஆயிரக் கணக்கான மரங்களை இழந்தது :(.

தகவல்களுடன் படங்களுமாக நல்லதொரு பகிர்வு.

athira said...

இன்று வழமையான நியாயிற்றுக்:) கிழமைத் தொடர்தானே எனவும் + எட்டிப் பார்க்காமல் இருந்திட்டேன்ன்.. ஆனா..

/////ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.... எந்தத் தென்றல் வரப் போகுதோ...!! இதை அதிராவுக்குக் கொடுத்துடறேன்...அதிரா புகுந்து கலக்குங்க..!!! அதிரா இன்னிக்குக் கண்டிப்பா வந்துருங்க..ஏஞ்சல் நீங்களும் தான்...எபி சண்டே கலக்கல்!!

அப்பால வரேன்..

கீதா///

எங்கட நடுச்சாமல் நாலு மணிக்கு கீதா கூப்பிட்ட சத்தத்தால கட்டிலால விழுந்து கை விரல்ல காயம்ம்ம்ம்:)).. விடிய விடிய A(accident) & E (emergency) இல் போய் எக்ஸ்ரே எடுத்து எலும்பு உடையேல்லையாம் வெட்டுக் காயம் மட்டும்தானாம்:) பெரிய பண்டேஜ் போட்டு விட்டாங்க:)).. இப்போதான் வந்தோம்ம்.:).

எல்லோரும் ஓடி வாங்கோ அதிராவை.. கை சுகமோ எனக் கேளுங்கோ:)).. ச்ச்ச்சும்மா வராமல் நல்ல மாம்பழம் கொய்யாப்பழம் ட்ராகன் பழம், மலைவாழை.. கப்பல் வாழை.. இதரை வாழை ப்பழங்களா வாங்கி வாங்கோ.. அப்பிள் ஒரேஞ் உடன் வந்தால் கதவு திறக்க மாட்டென்ன் ஜொள்ளிட்டேன்ன்ன்ன்:)). ஹையோ ஏன் எல்லோரும் ஒரு மாஆஆஆஆஆஆஆஆஆஆஆறிப் பார்க்கினம்ம்ம்ம்ம்:))..

ஊசிக்குறிப்பு:
இன்று எங்கள் வீட்டில் ஒடியல் கூழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்:)) எல்லோரும் வாண்டோஓஓ:))

athira said...

////கோ என்றால் அரசன். இங்கு கோ என்றால் கடவுள். இல் என்றால் இல்லம். கடவுள் வாழும் இல்லம் கோயில் / கோவில் என்று சொல்லலாம்.///

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஐயா சாமீஈஈஈஈஈஈஈ முடியல்ல என்னால...:)) பேசாமல் ஞானிப்பதவியை ராஜினாமாச் செய்திடலாமோ என ஓசிக்கிறேன்ன்ன்ன்:)).

//இன்று தேம்ஸ் ஞானியார் வந்தால் ...அதிரா ஸ்ரீராமைப் பாருங்கள் இன்று...உங்கள் சீடராக்கிட்டீங்களே!!

கீதா///

யூ மீன்ன் “பன்றியோடு சேர்ந்த பசுவின் நிலையாச்சோ ஸ்ரீராமின் நிலைமை?:)”.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான படங்களும், உங்களுக்கே உரிய கருத்து தகவல்களும் அருமை... ரசித்தேன்...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!