Wednesday, June 20, 2018

எங்கள் பதிவின் கேள்விக்கு பதில் என்ன சொல்லுவோம் வாரீர்! பு த ன் 180620கீதா சாம்பசிவம் : 

க்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் பார்க்கறச்சே யாருமே இல்லை. ஆனால் துரை சாரோட கருத்து என்னோடதுக்கு 2 நிமிஷம் முன்னாடி காட்டுது! முதல்லேயே ஏன் காட்டலை? கேஜிஜி சார், பதில் சொல்லுங்க! 

ப: பதில். 


உங்க கருத்தை ரசிச்சுப் படிச்சு அப்புறம் வலை அனுப்பியிருக்கும்.

நல்லா சுவாரசியமா பதில் சொல்லி இருக்கீங்க! அடுத்த வாரமும் இரண்டு பேரும் பதில் சொல்வீங்களா?

ப: இந்த வாரம் மூன்று பேர் பதில் சொல்கிறோம் ; என் பதில்கள் + மஞ்சள் வண்ணம்  நீல வண்ணக் கண்ணன் (இவர் எந்தக் கே ஜி யும் இல்லை! ) 

மாறுபட்ட பதில் இருந்தால் இரண்டென்ன மூன்று நான்கு கூட வரலாமே.

வல்லி சிம்ஹன் : 

ஆஹ்ம் தலைக்கு டை போடலாமா கூடாதா.?

ப : இதுக்கு பதில்  யார்  சொல்றாங்கன்னு கண்டுபிடியுங்க! 

தலய்க்கு மய் போடுவது என்பது மய்யமாக இருக்கவேண்டும். ஆங்காங்கே சர்வாதிகார இருள் முடிக்குள் சில ஜனநாயக வெண்மை ஒளிக்கீற்றுகளும் தெரியவேண்டும். 

தலைக்கு டையா!  ஹா ஹா ஹா .... காலா என்றால் கருப்பு! ஆன்மிகம் ஆனால் என்றும் வெளுப்பு! 


தலை இப்பலாம் பெப்பர் சால்ட் லுக்கைதான் விரும்புகிறார் !

அதிரா :

ஒரு திருமணத்துக்குப் போனால் அதில் நாமே மணப்பெண்ணாக மணமகனாக.. அப்படியே இறப்பு வீடு போனால் அதில் நாமே இறந்திருப்பவராக.. பேச்சுப் பார்க்கப் போனால் அங்கு நாமே மேடையில் பேசுபவராக.. இப்படியும்கூட மனம் கற்பனை பண்ணுமெல்லோ:))).. இதிலிருந்து உங்களுக்கு என்ன புரியுது கெள அண்ணன்?.... மனதுக்கு வேறு வேலையே கிடையாது எனப் புரியுதோ?

ப: கல்யாண வீடுகளில், சந்தோஷமாக ஓடியாடித் திரிகின்ற சிறுவர்களில் ஒருவனாகத்தான் கற்பனை செய்துகொள்வேன். 
இறப்பு வீடு போனால், யார் போலியாக அழுகிறார்கள், யார் உண்மையான வருத்தத்தை, எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்று ஆராய்வேன். இறந்தவராக கற்பனை செய்தது இல்லை. 

மேடைப் பேச்சுக்கள் கேட்கும்பொழுது, தெரிந்த விஷயமாக இருந்தாலும், பேச்சாளர் அதை எப்படிக் கூறுகிறார், எந்த வார்த்தையில் அழுத்தம் கொடுக்கிறார் என்பது போன்ற விவரங்களை ஆராய்ச்சி செய்வேன்.


எனக்கு அப்படித் தோன்றியதில்லை.  மொய் கொடுத்து விட்டு எப்போது சாப்பிடப் போவது, துக்கம் கேட்டு விட்டு எப்படி கிளம்புவது, மேடைப்பேச்சிலிருந்து எப்படி நழுவுவது என்றே என் சிந்தனை ஓடும்.

கெள அண்ணன் இந்தப் பூஸோ கொக்கோ?:) எப்படி வந்ததெனத் தெரியுமோ உங்களுக்கு?

ப: எப்படி வந்ததெனவா? ஓ, தெரியுமே! பூசார் நடந்து வந்திருப்பார், கொக்கு பறந்து வந்திருக்கும். 


கொங்கணவர் செய்த ஸ்டண்ட் தான் ஆதிகாரணம்.

இப்போ எங்கள் புளொக்கில் அசோகன் குப்புசாமி அவர்களின் கொமெண்ட்டை மட்டும் வச்சு.. எங்கள் புளொக்கில் கொமெண்ட் போடுவோர் எல்லோருமே இப்படித்தான் எனும் முடிவுக்கு வரலாமோ?:

ப: ப்ளாக் படிப்போர் பெரும்பாலும் அ கு தான். பாருங்க போன வாரம் ஒரு பதிலில், எனக்குப் பிடித்த தமிழ் வருடம், "சுக்ருத" என்று எழுதியிருந்தேன். அப்படி ஒரு ஆண்டின் பெயர் உள்ளதா என்று யாராவது சோதித்து /யோசித்துப் பார்த்தார்களா! 

அவரவர் போடும் கமெண்ட்ஸ் வைத்து அவரவர் எப்படி என்று யோசிக்க முடியும்.

உங்களுக்கு நடப்பது ... ஜிம் போவது சைக்கிள் ஓடுவது பிடிக்குமோ இல்ல... வீட்டிலிருந்து அரட்டை அடித்து ரீவி பார்ப்பது பிடிக்குமோ?:) [ஒரு சொல் பதில்களுக்குத் தடா:)]

ப: நடப்பது மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது. ஜிம் போனதில்லை. சைக்கிள் ஓடுவது! புதுசா இருக்கே! எப்படி ஓடும்? இப்போ இருக்கின்ற இரத்தில் ரீவி கிரையாது. 


 வீட்டில் இருந்து கொண்டே டீவியில் சைக்கிள் ஓட்டுவதையும் ஜிம் செய்வதையும் பார்க்கப் பிடிக்கும்.

நடப்பதும் அரட்டையும்.


ஏஞ்சல் : 

1,உங்களுக்கு மிகவும் பிடித்த அட்வெர்டைஸ்மென்ட் தொலைக்காட்சியில் ? 

ப: ஸ்ரீகுமரன் தங்கமாளிகை செயின் திருவிழா விளம்பரம். இப்போவும் வருதா என்று தெரியவில்லை.       
முன்னர் கின்லே விளம்பரம்.  அப்புறம் ஹாவேல் 


2,இந்த வாரம் நீங்கள் பார்த்த அழகான ஒன்று ?

  ப: 

இந்த வாரம் என்பது நீங்கள் கேள்வி கேட்டப்போதா?  நான் பதில் சொல்லும்போதா?

அழகான அதன்  பேரைக் கேட்கத் தோன்றவில்லை !

3, சிலர் குழந்தைகளை கிள்ளி கொஞ்சுகிறார்களே அது பற்றி உங்கள் கருத்து ?

ப: குழந்தை பதிலுக்குக் கிள்ளினால் அல்லது கிள்ளுபவர் முகத்தில் புர்ரென்று எச்சில் துப்பினால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். 

அம்மாவைக் கிள்ள முடியவில்லையே என்கிற ஏக்கமோ என்னவோ...!


அவங்கள ஒரு அடி வச்சுப் பாராட்டணும்.

4,அடிக்கடி முணுமுணுக்கும் ஒரு பழைய பாடல்மற்றும் ஒரு புது பாடல் ?

ப: பழைய பாடல் சீசனுக்கு சீசன் மாறும். இந்த சீசனில் : "எல்லாம் இன்ப மயம் " 
புதுசு : பாடல் வரிகள் ஏதாவது புரிந்தால்தானே! 

அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும்.  அன்றாடம் காதில் விழும் வார்த்தைகளினால் அந்த வார்த்தை சம்பந்தப்பட்ட பாடல் நினைவுக்கு வந்து முணுமுணுத்துக்  கொண்டே...  சமயங்களில் ஏன் இந்தப் பாடலை முணுமுணுக்கிறோம் என்று அதன் காரணத்தை நினைவுகளில் பின்சென்று கண்டுபிடித்ததுண்டு.  அந்த அளவு அது அனிச்சைச் செயல்!5,விலங்குகள் பேசினால் ? :) அதில் எந்த விலங்கு பேசினால் நன்றாக இருக்கும் :?

  

எது பேசினாலும் பைரவர் பேசக்கூடாது.  நன்றி உள்ளவை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அவை, திடீரென நம்மை (மனிதர்களை திட்ட ஆரம்பித்து விட்டால் ஏமாற்றமாகி விடும்...


நாயும் குரங்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் பற்றிப் பேசக் கூடும்.6,இது வரை இந்த விஷயத்துக்கு யாருமே app கண்டுபிடிக்கலையென்று நீங்கள் நினைப்பது ?


ப: Statistical Analysis. Forward interpolation using any accurate formula. I will enter x and y values 6 or 7 sets and ask for forward interpolation value next.  Example : I will give stock price of Reliance industries for the past 6 or 7 consecutive days and ask for the interpolation for tomorrows stock price. 

கேள்விகளுக்கு பதில் சொல்லும் app 


7,உங்களை மியூசியத்தில் ஓர் இரவு முழுதும் தனியே தங்க வைத்தால் என்ன செய்வீங்க ?


ப: கண்களை இறுக மூடிக்கொண்டு, ' ஹ என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் பீதி மறையட்டுமே! தன்னால ஒளி வரும் மயங்காதே ! தறி கெட்டு என்றும் புலம்பாதே ' என்று கர்ணகடூரமான குரலில் பாடிக்கொண்டிருப்பேன். 


முதலிலேயே தூக்க மாத்திரை டபுள் டோஸாக எடுத்துக்கொண்டு தூங்கி விடுவேன்!

அவதிப் பட்டவாறு தூங்க வேண்டி வரும். நானும் ஒரு எக்ஸிபிட் !


8,புதிதாய் கற்க விரும்பும் வெளி நாட்டு மொழி ?

ப: சலாமியா மொழி மற்றும் அதிரா தமிழ்.


9,சிறு வயதில் பப்ளிக் டெலிபோன் பூத்தில் காயின்ஸ் போட்டு தெரியாத நம்பருக்கு ராங் கால் செய்த அனுபவம் உண்டா ?
அதன் விளைவுகளையும் கூறவும் .

ப: தெரியாத நம்பருக்கு கால் செய்ததுண்டு; ஆனால் காசு போட்டதில்லை! 

போனை வச்சுட்டுப் போய்யா என ஏசப்பட்டிருக்கிறேன்.

10,எரிச்சலூட்டும் ஒலி ?
(எனக்கு செருப்பை தேச்சு பராக் பரக்னு நடந்தா பிடிக்காது )


ப: வாயில் மெல்லுகின்ற ஓசை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அப்படி யாராவது எதையாவது சாப்பிட்டால் அந்த இடத்தில் இல்லாமல் ஓடிவிடுவேன். அல்லது வானொலி / தொலைகாட்சி வால்யூம் அதிகப்படுத்தி வைப்பேன். 

தண்ணீரையோ, காபியையோ பாத்திரத்திலோ டம்ளரிலோ ஊற்றும் ஒலி.  அடுத்ததாய் பக்கத்திலிருப்பவர் பச்சக் பச்சக் என்று சப்தப்படுத்திக்கொண்டே சாப்பிடுவது!

இசை நிகழ்ச்சியில் பின் ஸீட் அரட்டை.

11,உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு நல்ல ஒரு கெட்ட பழக்கம் குணம் ?

ப: நல்ல பழக்கம் : நான் சொல்லும் ஜோக்குகளுக்கு சிரிப்பது.
கெட்ட பழக்கம்: அவர்கள் சொல்லும் அறுவை ஜோக்குகளுக்கு நான் சிரிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது!


என்னிடம் இருக்கும் குறைகளை பொருட்படுத்தாதது.

நல்ல பழக்கம் கடன் தருவது கெட்ட பழக்கம் கடன் கேட்பது

12, டிக்கெட் வாங்காம பஸ்ஸில் பிரயாணம் செய்த அனுபவம் உண்டா ?


ப: நிறைய உண்டு. புரசவாக்கத்தில் நான் அண்ணன் குடும்பத்தோடு தங்கியிருந்த நாட்களில், பக்கத்துப் போர்ஷனில் தங்கியிருந்தவர்கள்,  தாம்சன், ஜான் என்று இருவர். இருவரும் பல்லவன் நடத்துனர்கள். அநேகமாக ரூட் எண் 16 அல்லது 22 ல் அவர்கள் வேலை இருக்கும். அந்த பஸ்ஸில் நான் ஏறினால், என்னிடம் டிக்கெட் கொடுக்க வரவே மாட்டார்கள். காசு கொடுத்தால், என் கையைப் பிடித்து தள்ளிவிட்டுவிடுவார்கள். பல நாட்கள் ஓசிப்பயணம் புரசைவாக்கம் டு எக்மோர் அல்லது எக்மோர் டு புரசைவாக்கம். முதன்முறையாக (இண்டர்வியூவுக்காக) அசோக் லேலண்டு / எண்ணூர் எங்கே இருக்கு என்று கூடத் தெரியாத நாளில் ( September 1971 ) ஜான் என்னை அழைத்துக்கொண்டு, எண்ணூர் செல்வது எந்த வழியில், தங்கசாலையில் எங்கே பஸ் மாறவேண்டும் என்றெல்லாம் வழி காட்டுவதற்கு வந்தார். அவரிடமும், அவரோடு சென்றதால், என்னிடமும் நடத்துனர்கள் காசு கேட்கவில்லை.அந்த டிரிப் முழுவதும் ஓசிப்பயணம்தான்!

 வாங்கிய டிக்கெட் காற்றில் பறந்துபோய், கையில் வேறு காசு இல்லாததால் இறங்கும் வரை திக்திக்கென இருந்த அனுபவம் உண்டு.  (பள்ளிக்காலம்)

இறங்கியபின் நினைவுக்கு வந்து வெட்கப்பட்டதுண்டு.


13,அடிக்கடி misspell செய்யும் ஆங்கில /தமிழ் வார்த்தை ?

ப: நான் மிஸ்பெல் செய்வது எது என்று எனக்குத் தெரிந்தால் உடனேயே திருத்திக்கொண்டுவிடுவேன். அதனால் எனக்குத் தெரியாமலேயே மிஸ்பெல் ஆவது எது என்பதை மற்றவர்கள்தான் கூறவேண்டும். என் சீனியர் மேனேஜர் ஒருவர்  which என்பதை wich என்றுதான் எப்பொழுதுமே எழுதுவார்.  


என் மகன் முன்பு கேசரியை கேஸ்வரி என்பான்!  பிறந்த நாளுக்கு நமஸ்காரம் செய்ய வருபவன், "ஆசீர்வாதம் பண்ணு" என்பதற்கு பதில் எங்கள் எதிரே நின்று "நமஸ்காரம் பண்ணு" என்பான்!

ised  ஆ ized ஆ என பலமுறை குழம்புவதுண்டு

14,உங்களிடம் இருக்கும் மிகவும் வயதான பொருள் ?


ப: என் பள்ளிக்கூடநாட்களில், என் அப்பா, ஒரு ஆசாரியை வீட்டிற்கே வரவழைத்து, எங்கள் தோட்டத்து மரத்தின்  பலகைக் கொண்டு செய்த ஒரு டேபிள். ஐம்பதுக்கு மேலே ஆகிறது அதன் வயது.

என் மாமியார்!

நானேதான்


15,புத்தகம் அல்லது பொருட்கள் கடன் வாங்கி திருப்பி தர்லைன்னா எப்படி அதை மீண்டும் பெறுவீர்கள் ?


ப: ரொம்ப இக்கட்டான நிலைதான். அதனால நான் புத்தகம் மற்றும் எனக்குச் சொந்தமான எதையும் கடன் கொடுப்பதும் இல்லை, எதையும் கடனாக கேட்பதும் இல்லை.

மனசுக்குள் அது திரும்பி வந்து விட்டது என்று மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டு அப்புறம் அதை நானே நம்பி விடுவேன்.

புதுசா கடன் / இரவல் கேட்கிற மாதிரி நடித்ததுண்டு.

16,நீங்கள் சமீபத்தில் ஒட்டுக்கேட்ட வித்யாசமான சம்பாஷணை ?ஒட்டுக் கேட்கிற அளவு இங்கே காது ஸ்மார்ட் இல்லை !

என் பதிலும் டிட்டோ, டிட்டோ !

17,மணிக்கணக்காக நீங்கள் பேசக்கூடிய ஒரு topic ?


ப: மேடையில் பேசவேண்டும் என்றால், எந்த டாபிக் இருந்தாலும் கால்மணி நேரமாவது பேசுவேன். ஒரு குழுவில் அல்லது யாரையாவது சந்திக்கச் சென்றால், அவர்களைதான் அதிகம் பேசவிட்டு, கேட்டுக்கொண்டிருப்பேன். 

என் பெயர் மணி இல்லை என்பதால் கணக்காக நான் பேசும் topic பற்றி அவருக்காக நான் சொல்ல முடியாது.

மனித மனம். கர்நாடக சங்கீதம்

18,கே ஜி யக்ஞராமன் சார் :) இப்போ அந்த வில்லி சரோஜா உங்க முன் வந்தா என்ன செய்வீங்க ?


பார்க்கிற சந்தோஷத்தைச் சொல்லி நிறைய பழங்கதை அவ அக்கா கஸ்தூரி பற்றி எல்லாம் விசாரிப்பேன்.

19,மந்தாரை இலையில் கட்டிய மிக்ஸர் /பிளாஸ்டிக் பாக்கெட் மிக்ஸர் ..குறைந்தது மூன்று வித்யாசம் கூறவும் ?


ப: ம மி : சுற்றுச்சூழல் பாதுகாப்பு. பி மி : சு சூ கேடு. 
ம மி : மணம் + சுவை. பி மி : பேட் ஸ்மெல் , சாதாரண சுவை.
ம மி : செலவில்லாதது. பி மி அனாவசிய பேக்கிங் செலவு. 

மணம் ருசி திருப்தி வயசு.

20, சின்ன சின்ன விஷயங்கள் சந்தோஷத்தை தரும் அப்படி இந்த வாரம் உங்களை ஹாப்பியாக்கிய குட்டி விஷயங்கள் ?


ப: ஓட்ஸ் தோசை என்று புதிய காலை உணவு ஒன்றைக் கண்டுபிடித்தேன். புதிய மார்பிள் நான் ஸ்டிக் தவாவில் வார்த்து சாப்பிட்டேன். பரம திருப்தி. 

சின்ன சந்தோஷம், நடைப்பயிற்சியின் போது, படுத்திருந்த தெருநாய் ஒன்று, நான் அருகில் சென்றும் பயமோ சினமோ காட்டாதது. (குட்டி விஷயங்கள் பரிச்சயம் இல்லை!)வாட்ஸ் அப் : 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

பிக் பாஸ் மீண்டும் வந்துவிட்டாரே! தொடர்வீர்களா? 

ப: ஊஹூம் மாட்டேன். நம் நேரம் + மின் செலவு,  விரயம். லாபம் அடைபவர்கள் விளம்பரர்களும், வியாபாரிகளும் மட்டுமே. அந்த நேரத்தில் கொஞ்சம் நிம்மதியாக தூங்கலாம்! 

=================

நன்றி நண்பர்களே! அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்!

101 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க வளமுடன்...

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

துரை செல்வராஜூ said...

அன்பின் Kgg ,கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு வணக்கம்...

துரை செல்வராஜூ said...

வாழ்க வளமுடன்..

துரை செல்வராஜூ said...

கீதா அவர்களின்
முதல் கேள்விக்கு
அப்புறமாக வருகிறேன்...

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா வந்துருச்சா...காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா (பயணத்தில் இருப்பாங்க) பானுக்கா எல்லாருக்கும்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வந்து வந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்...5 மணியிலிருந்து....இன்னிகு கௌதம் அண்ணா ஏமாத்திட்டார். உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அந்த நீலவண்ணக் கண்ணன் யாரென்று எமக்குத் தெரியுமே!!! ஹா ஹா ஹா ஹா

கீதா

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் கீதா ரெங்கன்.

ஸ்ரீராம். said...

// அந்த நீலவண்ணக் கண்ணன் யாரென்று எமக்குத் தெரியுமே!!! ஹா ஹா ஹா ஹா //

ஹா... ஹா... ஹா...

"ராமனும் நீயே... கிருஷ்ணனும் நீயே...!"

Thulasidharan V Thillaiakathu said...

அந்தக் கல்யாண வீட்டு பதிலில் நீலவண்ணக் கண்ணனின் பதில்தான் எனதும் கல்யாண வீட்டுக்குப் போனால் எப்படா பந்தினு யோசிப்பது வழக்கம். என்ன மெனு இருக்கும் என்றும் கூட...ஹா ஹா ஹா தீனிப்பண்டாரம் நான்....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

"ராமனும் நீயே... கிருஷ்ணனும் நீயே...!"//

ஹா ஹா ஹா ஹா...ஹைஃபைவ்..நான் அடுத்து சொல்ல வந்தேன்... பச்சையும் அவரே, நீலமும் அவரே அப்படினு....அதுக்குள்ள டைவெர்ஷன்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சரி அப்பால வாரேன்...இன்னிக்கு பாவம் துரை அண்ணாவுக்கு காபி கிடைக்கலை....கஞ்சி கூடக் கிடைக்கலை ஹா ஹா ஹா ஹா

கீதா

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்.

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by the author.
திண்டுக்கல் தனபாலன் said...

கற்க விரும்பும் வெளி நாட்டு மொழி : அதிரா தமிழ்.- ஹா... ஹா...

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் பானு அக்கா.

வல்லிசிம்ஹன் said...

அனைத்துக் கேள்விகளும் பதில்களும் வெகு அழகு.
கௌதமன் சார் அரசுவை மிஞ்சும் காலம் இது.
தலை முடிக்கு டை அடிக்க கேட்டால் நீங்கள் வேறு தலையகி சொல்கிறீர்கள்.

கீதா சாம்பசிவம் பயணத்தில் இருக்கிறாரா.
சென்னைக்காரர்கள் எல்லாம் வெல் கனெக்டட் .பொறாமையா இருக்கு.

கோமதி அரசு said...

பிறந்த நாளுக்கு நமஸ்காரம் செய்ய வருபவன், "ஆசீர்வாதம் பண்ணு" என்பதற்கு பதில் எங்கள் எதிரே நின்று "நமஸ்காரம் பண்ணு" என்பான்!//

தீபாவளி, பொங்கல் என்று குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் விழாக்களில் மூத்தவர்கள் சின்னவர்களுக்கு ஆசீர்வாதம் செய்து விபூதி பூசுவது உண்டு, பெரியவர்கள் முறை முடிந்தால் குழந்தைகள் முறை வரும் , அதில் யார் பெரியவர்களோ அவர்கள் சின்ன பசங்களுக்கு விபூதி பூசுவார்கள். என் மகன் பூசவேண்டிய கொழுந்தனார் மகன் வரவில்லை நான் யாருக்கு ஆசீர்வாதம் செய்வேன் என் காலில் யாராவது விழவேண்டும் என்று அடம்பிடித்து அழுத நினைவு வருது.

கோமதி அரசு said...

வல்லி அக்கா, கீதா அதிரடி பதிவு போட்டு ஊருக்கு போவதை சொல்லி போய் இருக்கிரார்.

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தகங்களைக் கடன் கொடுத்து கொடுத்துத் திரும்பப் பெற முடியாத அனுபவத்தால், இப்பொழுதெல்லாம் புத்தகங்களைக் கடனாகக் கொடுப்பதில்லை.
ஆனாலும் இப்பொழுதெல்லாம் புத்தகங்களைக் கடன் கேட்பவர்களும் இல்லை

கோமதி அரசு said...

புதிய மார்பிள் நான் ஸ்டிக் தவாவில் வார்த்து சாப்பிட்டேன். பரம திருப்தி. //

நெல்லைத் தமிழன் சொன்னது போல் நான் ஸ்டிக் தவா வாங்கி விட்டீர்கள்.

ஸ்ரீராம். said...

வல்லிம்மா... கீதாக்கா அவங்க தளத்தில்தான் சொல்லி இருக்காங்க. குலதெய்வம் கோவில் போகிறார்களாம்.

ஸ்ரீராம். said...

கோமதி அக்கா... அவ்விடத்தில் இந்த அனுபவம் உண்டா?!!

ஸ்ரீராம். said...

இல்லை கரந்தை ஜெயக்குமார் ஸார்... இப்பவும் புத்தகங்களைக் கடன் கேட்பவர்களும், திருப்பித் தராதவர்களும் உண்டு!

:)))

கோமதி அரசு said...

அதிரா தமிழ் கற்க விருப்பபடுவது கேட்டு மகிழ்ச்சி. எல்லோரும் விரும்புவார்கள் தானே! மழலை மொழியை.

KILLERGEE Devakottai said...

இப்பொழுது எல்லோருமே அதிராவின் தமிழுக்கு(ள்) வந்து விட்டார்கள்.

பதிவு ரசிக்க வைத்தது.

துரை செல்வராஜூ said...

அடடா.. ஒரு பொய்ண்ட்..ல
மிஸ்(!) ஆகிப் போச்சே!..

நா அப்பவே யோசித்தேன்...
இதென்னது....
சுக்ருத...ந்நு வந்திருக்கே அப்புடி...ந்னு..

வேலைப் பளுவில் மறந்து போயிற்று...

இந்த வாரம் அந்த விஷயம்...
யாராவது யோசித்தார்களா.. என்று...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கேள்விகளையும் பதிலையும் ரசித்தேன்.

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம் 🙏

சுவாரஸ்யமான பதில்கள்.

நெ.த. said...

சுவாரசியமான கேள்வி பதில்கள். தொடரட்டும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

கேள்விகளும். பதில்களும் (பதில் என்பது போய்.. இப்போ பதில்..கள் என்று தட்டச்சு வேண்டி உள்ளது.) மிக மிக சுவாரஸ்யமாக உள்ளது. (எப்போதுமே ஸ்வாரஸ்யம். இப்போது எப்போதையும் விட ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. பதில்"கள்"னின் விளைவால் இருக்கும். கடைசியில் "மோ" என்ற எழுத்தை பயன்படுத்தினால் அடுத்த வாரம் நானும் கேள்வியில் ஐக்கியமாகி விடுவேன் என்ற அச்சம். எனவே பார்த்து பார்த்து தட்டச்சு வேண்டி உள்ளது.) மிகவும் அருமை. இன்னமும் விரிவாக படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு நன்றி..

சகோதரி கீதாவின் மகன் நல்லபடியாக ஊர் சென்று சேர்ந்து விட்டார் என நினைக்கிறேள். (அப்பா.. இந்த கேள்விக்குறி வேறு நடுநடுவே அதுவும் புதனன்று வந்து வந்து குறுக்கிடுகிறதே...) சகோதரியின் தொடர் கருத்துரைகள் மகிழ்ச்சியை தருகிறது. அவருக்குத்தான் பிரிவின் வேதனை சில நாட்கள் வருத்தும்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan said...

என்று தட்டச்சு பண்ண வேண்டி உள்ளது என படிக்கவும். தட்டச்சு அதன் இடத்திலேயே காலை வாரி விடுகிறது.

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ கோமதி அரசு: ..அதிரா, தமிழ் கற்க விருப்பபடுவது கேட்டு மகிழ்ச்சி.//

அடடே! அதிராவில் இப்படி ஒரு மாற்றமா? இது எப்போதிலிருந்து ?

G.M Balasubramaniam said...

கேள்வி பதில் சீரியஸ் ரகமா சுவாரசியமா

Angel said...

நீல வண்ணக் கண்ணன் .... கின்லே விளம்பரம்

//இதை வைச்சே கண்டுபிடிச்சிட்டேனே ஹாஹாஅஹீ

Angel said...

MSG ..கேட்ட கேள்விக்கு பதில் சொன்னது KGG :) நியாயப்படி ஞானி தமிழ் மூதறிஞர் புலவர் கவிமாமணி என்ற பட்டங்களோடு திரிபவர் க்ரேட் மியாவ் தானே கண்டுபிடிச்சிருக்கணும் சுக்ரத தவறு என்பதை ???

Angel said...

1971 இல் பஸ் மற்றும் பிரயாணம் எப்படி இருந்திருக்கம்னு அறியா ஆசை ..நான் அப்போல்லாம் பிறக்கல்லியே :))

Thulasidharan V Thillaiakathu said...

தலய்க்கு மய் போடுவது என்பது மய்யமாக இருக்கவேண்டும். ஆங்காங்கே சர்வாதிகார இருள் முடிக்குள் சில ஜனநாயக வெண்மை ஒளிக்கீற்றுகளும் தெரியவேண்டும். //

ஹா ஹா ஹா ஹா...மய்யத்தை விட மாட்டீங்க போல....

//தலைக்கு டையா! ஹா ஹா ஹா .... காலா என்றால் கருப்பு! ஆன்மிகம் ஆனால் என்றும் வெளுப்பு!//

ஹா ஹா ஹா இது என்னப்பா முதல்ல மய்யம்ன்றாங்க அடுத்தாப்புல காலா ன்றாங்க என்றும் வெளுப்புன்றாங்க...அரசியல் நெடி அடிக்குதே!!! ஹா ஹா ஹா ஹா...

கீதா

Angel said...

சரோஜா அவங்க அக்கா கஸ்தூரி :) ஹாஹாஆ உண்மையில் சிரித்து விட்டேன் .. ரசித்தேன்

கோமதி அரசு said...

ஏகாந்தன்,சலாமியா மொழி மற்றும் அதிரா தமிழ்

மொழியை கற்க ஆசையாம் கெளதமன் சாருக்கு.
அதை சொன்னேன், எல்லோருக்கும் அதிரா தமிழ் படிக்க ஆசை என்று அதிராதான் அழகான மழலை தமிழ் பேசுகிறாரே!

Angel said...

சலாமியா ஒரு இடத்தின் பேர்தானே ? சிரியா இல்லின்னா லெபனான் பக்கம்
எனக்கு ஸலாமியா பாட்டுத்தான் தெரியும் :))

Thulasidharan V Thillaiakathu said...

@ கோமதி அரசு: ..அதிரா, தமிழ் கற்க விருப்பபடுவது கேட்டு மகிழ்ச்சி.//

அடடே! அதிராவில் இப்படி ஒரு மாற்றமா? இது எப்போதிலிருந்து ?//

ஹா ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா இதுக்கு ஏஞ்சல் சொல்லிருக்கறதுல பாதி எடுத்துக்கறேன்...//ஞானி தமிழ் மூதறிஞர் புலவர் கவிமாமணி என்ற பட்டங்களோடு திரிபவர் க்ரேட் மியாவ் // டமில்ல டி ஆக்கும்....தெரியாதோ உங்களுக்கு!!!!!!

கீதா

Asokan Kuppusamy said...

உங்கள் போலவே பிக்பாஸ் பார்ப்பதில்லை செருப்பு போட்டு சரக் சரக் தேய்த்து நடந்தால் காதுக்கு எரிச்சல்

kg gouthaman said...

அ கு! இன்னிக்கு மழைதான்!

ஞானி:) athira said...

ஆஆவ்வ்வ்வ் பல எலி சேர்ந்தால் புத்தெடுக்காது என்பினமே.. அந்தப் பயமொயி கரீட்டா கெள அண்ணன்???

பிக்கோஸ்ஸ் ஒருவர் இருவராகி.. இப்போ மூவரில வந்து நிக்குதே பதில்கள்.. நான் நினைக்கிறேன் நம் கேள்விக்கணைகளுக் குத்தாக்குப் பிடிக்க முடியாமல் மெல்ல மெல்ல பதிலுக்காக ஆட்களை உள்ளே இறக்கிறார் கெள அண்ணன்.. இப்பொ மூணாவது:) ஆசிரியரும் உள்ளே வந்தாச்சு பதில் சொல்ல.. இனி என்னாகுமோ அந்த வில்லிவாக்கம் பெருமானுகே வெளிச்சம்...

ஞானி:) athira said...

//(இவர் எந்தக் கே ஜி யும் இல்லை! ) //

ஆமா ஆமா அவர் கம்பபாரதக் கரெக்ட்டரா இருப்பார்:))

ஞானி:) athira said...

//தலைக்கு டையா! ஹா ஹா ஹா .... காலா என்றால் கருப்பு! ஆன்மிகம் ஆனால் என்றும் வெளுப்பு! ///

ஹா ஹா ஹா தொண்டர்கள் கலைக்கப் போகினம் எண்டோ.. இங்கின புலூஊஊஊஊக்கலருக்குப் பதில் ஆம்பல் கலர் அடிச்சிருக்கு பதிலில்:)) இருப்பினும் ஆராவது கேய்ட்டால் மீ சொல்லிக் குடுப்பேன் அது எங்கள்புளொக்கின் 3 ஆவது ஆசிரியரின் பதில் என...:)) ம்ஹூம் நான் பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்..

ஞானி:) athira said...

//கொங்கணவர் செய்த ஸ்டண்ட் தான் ஆதிகாரணம்.///

ஆங்ங்ங் ரெண்டாவது ஆசிரியரே இதுக்கு கரெக்ட் பதில் சொல்லியிருக்கிறார்ர்.... எங்கே என் செக்:) எடுத்து வாங்கோ அந்த வெள்ளிக் கிரீடத்தை:))

ஞானி:) athira said...

அந்தப்பூஸூஊஊஊ மலையாளமா பேசுது?:) தெலுங்குபோல இருக்கே:)).

//ப: சலாமியா மொழி மற்றும் அதிரா தமிழ்.//

ஹா ஹா ஹா சலாமி என்றால் ஒருவகைப் பதப்படுத்தப்பட்ட இறைச்சி:))

அதிரா டமில்? ஆவ்வ்வ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஉ ஓடியாங்கோ உடனடியா என் சுவிஸ் பாங் எக்கவுண்டை டஸ்ட்டுப் பண்ணுங்கோ.. முதல்ல பீஸு, பிறகுதானே பாடம்:) இதுதானே எங்க வழக்கம்... ஹையோ நேக்கு லெக்ஸ்சும் ஆடல்ல காண்ட்ஸும் ஓடல்ல.. “பிள்ள உனக்கு செவ்வாய் மாறினது வெள்ளி துலாவில போல பணமாக் கொட்டப்போகுது”:) என திருநெல்வேலி பசுபதிச் சாத்திரியார் சொன்னது பலிக்கப் போகுதூஊஊஊஊஊ:)). நான் இன்றோடு என் வேலையை ஆசீனாமாச் செய்கிறேன்ன்ன்ன்ன்ன்:)).. டமில் படிப்பிக்கப் போறேஎன்ன்ன்ன்:))..

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இடிபட்டு கையைக் காலை உடைக்காமல் ஒழுங்கா கியூவரிசையில்:) வாங்கோ எலோருக்கும் சொல்லித்தருவேன் டமில்:))

ஞானி:) athira said...

///
9,சிறு வயதில் பப்ளிக் டெலிபோன் பூத்தில் காயின்ஸ் போட்டு தெரியாத நம்பருக்கு ராங் கால் செய்த அனுபவம் உண்டா ?//

ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சுவுக்குக் கொஸ்ஸனே கேய்க்கத் தெரியலே:)).. சிறுவயதில தெரியாம எல்லாம் இருக்காது...

வளர்ந்தபின் தெரிஞ்ச நம்பருக்குப் பப்ளிக் பூத்தில இருந்து கோல் பண்ணினோர் நிறையப் பேர் இருப்பாங்க:) அதுபற்றிக் கேட்டு மூணு ஆசிரியர்களையும் மாட்டி விட்டிருக்கலாம் சே.சே ஜஸ்ட்டூ மிஸ்ட்டூஊஊஊஊ:))

ஞானி:) athira said...

///ப: நல்ல பழக்கம் : நான் சொல்லும் ஜோக்குகளுக்கு சிரிப்பது.
கெட்ட பழக்கம்: அவர்கள் சொல்லும் அறுவை ஜோக்குகளுக்கு நான் சிரிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது!///

ஹையோ ஆண்டவாஆஆஆஆ தற்பெருமை தாங்க முடில்லேஏஏஏஏஏ.. இதை விட தேம்ஸ்கரை ஆலமரத்தடியில இருந்து மெடிரேசன் செய்வது எவ்ளோ மேல்ல்:))..

தான் சொல்வது குட் ஜோக்ஸ் ஆம்ம்.. நண்பர்கள் சொல்வது மட்டும் மொக்கையாம்ம்ம்ம்.. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

//என் மகன் முன்பு கேசரியை கேஸ்வரி என்பான்! பிறந்த நாளுக்கு நமஸ்காரம் செய்ய வருபவன், "ஆசீர்வாதம் பண்ணு" என்பதற்கு பதில் எங்கள் எதிரே நின்று "நமஸ்காரம் பண்ணு" என்பான்!///

ஹா ஹா ஹா என் கணவர்... தெத்தம் பண்ணுவதை.... ரத்தம் பண்ணுவது என்பார்ர்.. நான் விழுந்து விழுந்து சிரிச்சு பின்பு மாத்தி கரெக்ட்டா டமில் சொல்லிக் கொடுத்தேன்:)) பீஸ் வாங்காமல் ஃபிரீயா..:))

ஞானி:) athira said...

4,உங்களிடம் இருக்கும் மிகவும் வயதான பொருள் ?
//என் மாமியார்!/

யூ மீன் முருங்கி மாமி?:) ஹா ஹா ஹா அவோக்கு இது தெரியுமோ?:)

//நானேதான்//
ஹா ஹா ஹா:)

ஞானி:) athira said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் படிச்சதிலயே களைப்பாகிட்டேன்ன்... கேள்வி கேட்கோணும் என நைட் சிலது நினைச்சு வச்சேன்ன்.. பின்பு வருகிறேன்:)..

ஞானி:) athira said...

///Angel said...
MSG ..கேட்ட கேள்விக்கு பதில் சொன்னது KGG :) நியாயப்படி ஞானி தமிழ் மூதறிஞர் புலவர் கவிமாமணி என்ற பட்டங்களோடு திரிபவர் க்ரேட் மியாவ் தானே கண்டுபிடிச்சிருக்கணும் சுக்ரத தவறு என்பதை ???///

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தேவையில்லாத விசயங்களுக்கெல்லாம் நான் கிட்னியைக் கசக்கி ரைம் வேஸ்ட் பண்ணமாய்ட்டேன்ன்ன்ன்ன்:))... ட்றம்ப் அங்கிளுக்கு ஐடியாக்கள் எடுத்துக் குடுக்கவே நேரம் பத்தல:))

ஞானி:) athira said...

///திண்டுக்கல் தனபாலன் said...
கற்க விரும்பும் வெளி நாட்டு மொழி : அதிரா தமிழ்.- ஹா... ஹா...///

ஆஆவ்வ்வ்வ் எல்லோரும் ஓடிவாங்கோ வாழ்க்கையில் முதல் தடவையாக டிடி சிரிச்சிருக்கிறார்ர்.. வெடி கொழுத்திக் கொண்டாடுவோம்ம்ம்ம்ம்:))

ஞானி:) athira said...

//கோமதி அரசு said...
அதிரா தமிழ் கற்க விருப்பபடுவது கேட்டு மகிழ்ச்சி. எல்லோரும் விரும்புவார்கள் தானே!//// மழலை மொழியை.//// //

ஹையோ மீ இப்போ கட்டிலுக்குக் கீழே:)) கடவுளே மீ ச்சும்மா இருந்தாலும் கல்லெடுத்து எறியாமல் விடமாட்டினம் போல இருக்கே:))

ஞானி:) athira said...

//ஏகாந்தன் Aekaanthan ! said...
@ கோமதி அரசு: ..அதிரா, தமிழ் கற்க விருப்பபடுவது கேட்டு மகிழ்ச்சி.//

அடடே! அதிராவில் இப்படி ஒரு மாற்றமா? இது எப்போதிலிருந்து ?///

ஹா ஹா ஹா ஹையோ எனக்கு டமில்ல டி எல்லோ மீ எதுக்கு இனிமேல் டமில் கற்கோணும்:)) மீ ஊருக்குச் சொல்லிக் குடுக்கப்போறேஎன் ஏகாந்தன் அண்ணன்:)).. நீங்க மச் லயே மூழ்கி இருப்பதால புளொக் நடப்பே உங்களுக்கு தெரியுதில்ல கர்ர்:)) ஹா ஹா ஹா:))

ஞானி:) athira said...

கீதா.. எப்படி இருக்கிறீங்க? வீட்டில் இருக்காமல் வெளியே போய் வாங்கோ மனம் இலேசாகிடும்... பயணம் போவோருக்கு கவலை பெரிசா தெரியாது, ஆனா வழி அனுப்பிவிட்டு இருப்போருக்கே கவலை அதிகம்...

“நாள் செய்வதுபோல் நல்லோர் செய்யார்”... எவ்ளோ உண்மை இது.

Thulasidharan V Thillaiakathu said...

சகோதரி கீதாவின் மகன் நல்லபடியாக ஊர் சென்று சேர்ந்து விட்டார் என நினைக்கிறேள். (அப்பா.. இந்த கேள்விக்குறி வேறு நடுநடுவே அதுவும் புதனன்று வந்து வந்து குறுக்கிடுகிறதே...) சகோதரியின் தொடர் கருத்துரைகள் மகிழ்ச்சியை தருகிறது. அவருக்குத்தான் பிரிவின் வேதனை சில நாட்கள் வருத்தும்.//

மிக்க நன்றி கமலா சகோ....இப்பதான் போர்ட்லேன்ட் ஏர்போர்ட்டிலிருந்து யுனிவேர்சிட்டி ஷட்டில் பிடித்து வீட்டுக்குப் போய்ட்டுருக்கான். 2 மணி நேரம் பயணம். 2 ம்ணி ஆகிடும் போய்ச்சேர. ஆமாம் அவன் இல்லாமல் போர் மனமும் கொஞ்சம் டல் தான்....பழகித்தானே ஆகணும் பழகிடும். மிக்க நன்றி சகோ

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ப: எப்படி வந்ததெனவா? ஓ, தெரியுமே! பூசார் நடந்து வந்திருப்பார், கொக்கு பறந்து வந்திருக்கும். //

கௌ அண்ணா பூசார் நடந்து வந்திருப்பாரா...நோ !!! இது பூஸாரின் பெருமையை அதாவது ஓட்டத்தில் இரண்டாவது பரிசு பெற்ற பூசாரையா சொல்லுவது? தேம்ஸ்கு ஓடி ஓடிப் போய் ஒவ்வொரு ப்ளாகிற்கும் நாலு கால் பாய்ச்சலில் ஓடி ஒடிப் போய் வரும் பூஸாரையா இப்படிச் சொல்லுவது...

ஹா ஹா ஹா ஹா...பூஸார் ஏன் பொய்ங்கலை?!!!!!!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா ஐ ஆம் ஓகே. ரொம்ப தாங்க்ஸ்பா....கொஞ்சம் டல் தான் இருந்தாலும் நான் சமாளித்துவிடுவேன்....இன்று நெட் வேரு தகராறு....ஸ்ரீராமுக்கும் பிரச்சனைதானாம் ஹப்பா இதுல ஒரு திருப்தி!!!! எனக்கு ஹா ஹா ஹா ஹா ஹா...

மகன் போய்ச் சேர்ந்தாச்சு....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓ பூஸார் ஞானியாயிட்டார் இப்போ அந்த அவதாரம் ஸோ பொய்ங்கலை...தேம்ஸ்கு ஓடலை குதிக்கலை....போல....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சைக்கிள் ஓடுவது! புதுசா இருக்கே! எப்படி ஓடும்? இப்போ இருக்கின்ற இரத்தில் ரீவி கிரையாது. //

ஹா ஹா ஹா இது அதிரா தமிழ்!!! ஹிஹிஹி....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கேள்விகளுக்கு பதில் சொல்லும் app //

ஹா ஹா ஹா அப்படிப் போடுங்க நீலவண்ணக் கண்ணன்!!!!!!! வந்துரும் பாருங்க...கூடிய சீக்கிரம். பதில் சொல்லும் ரோபோ வந்துருச்சே..app வந்துருச்சுனா எபி க்கு ஒன்னு வாங்கிப் போட்டுரலாமோ!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பூஸாரின் தமிழே இன்னும் விளங்கின பாடில்லை இப்ப மலையாளமுமா!!! ஹா ஹா ஹா ஹா...ஹையோ இனி மலையாளத்துலயும் இங்கின புகுந்து விளையாடுவாரே....

கீதா

ஞானி:) athira said...

கீதா .. மீ மலையாளமும் பறையும் பெண்குட்டி யாக்கும்:)) ஹா ஹா ஹா ..

Angel said...

இந்த வாரம் நீங்கள் பார்த்த அழகான ஒன்று ?//

morning glory flower ..

Angel said...

/குட்னெஸ் மீ ..யாராச்சும் அந்த பூனையை அந்த பெண் கிட்டருந்து காப்பாத்துங்க .

ஞானி:) athira said...

Angel said...
இந்த வாரம் நீங்கள் பார்த்த அழகான ஒன்று ?//

morning glory flower ..///

ஆங்ங்ங் நாரதர் கலகத்தை இங்கிருந்தே ஆரம்பிச்சிடலாம்:)).. கெள அண்ணன் தன் வைஃப் ஐச் சொல்லலே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) ஹையோ எனக்கு என்னமோ கன்ஃபோமா ஆச்சூஊஉ மீ கோயிங் யா:))

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்வாரஸ்யமான கேள்விகள் பதில்கள். ஏஞ்சல் அவர்கள் நிறையவே அழகான கேள்விகளாகக் கேட்டிருக்கிறார்கள். பதிலும் பலது சுவாரஸ்யமாக இருந்தது. அது சரி அந்த நீலவண்ணக் கண்ணன் யார்? அந்த நீலவண்ணக் கண்ணனின் இதை "வீட்டில் இருந்து கொண்டே டீவியில் சைக்கிள் ஓட்டுவதையும் ஜிம் செய்வதையும் பார்க்கப் பிடிக்கும்.// அப்படியே வழி மொழிகிறேன்.

என் மனதில் கேள்விகள் எதுவுமே எழவில்லையே! ஏன்? நான் அதிராவைப் போல் ஞானியாகிவிட்டேனா?

துளசிதரன்

Geetha Sambasivam said...

//கீதா சாம்பசிவம் பயணத்தில் இருக்கிறாரா.// grrrrrrrrrrrrrrrrrr நான் நேத்திக்குப் போட்ட கே.வா.போ.க. பின்னூட்டத்திலேயே சொல்லி இருந்தேன். ஊருக்குப் போவதால் பிரசாதம் பண்ணப் போறேன். வர முடியாதுனு! யாருமே ஒழுங்கா எதையும் படிக்கிறதே இல்லை. அங்கே என்னன்னா நெ.த. பிரசாதம் செய்து எடுத்துப் போனீங்களானு கேட்கிறார். இங்கே வல்லி நான் சொல்லவே இல்லையேனு வருத்தப்படறார். :)))))

//வல்லிம்மா... கீதாக்கா அவங்க தளத்தில்தான் சொல்லி இருக்காங்க. குலதெய்வம் கோவில் போகிறார்களாம்.//

ஶ்ரீராம் என்னடான்னா பதிவிலே சொல்லி இருப்பதாச் சொல்லிட்டு இருக்கார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹெஹெஹெஹெ, ஒழுங்கா எல்லோருடைய கருத்தையும் படிங்க எல்லோரும்! முன்னெல்லாம் டெஸ்ட் வைச்சு மார்க் போடுவேன். அது மாதிரி மீண்டும் ஆரம்பிக்கப் போறேன்.

Geetha Sambasivam said...

அந்த நீலவண்ணக் கண்ணன் ஶ்ரீராம் தானே கேஜிஜி சார்? அப்போ இந்தச் சிவப்பு வண்ண மனிதர் யாராக்கும்?

//தலய்க்கு மய் போடுவது என்பது மய்யமாக இருக்கவேண்டும். ஆங்காங்கே சர்வாதிகார இருள் முடிக்குள் சில ஜனநாயக வெண்மை ஒளிக்கீற்றுகளும் தெரியவேண்டும். //இது கேஜிஜி இல்லைனு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?

Geetha Sambasivam said...

கேஜிஜி சார்! உப்புமான்னா எல்லோரும் ஓடறாங்க! நீங்க எப்படி?

//ஓட்ஸ் தோசை என்று புதிய காலை உணவு ஒன்றைக் கண்டுபிடித்தேன். புதிய மார்பிள் நான் ஸ்டிக் தவாவில் வார்த்து சாப்பிட்டேன். பரம திருப்தி.// இது நீலவண்ணக் கண்ணன் பதில் இல்லையோ? ஆனால் எல்லோரும் கேஜிஜி சொல்லி இருப்பதா நினைக்கறாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது ஏன்? புதன்கிழமை என்றாலே கேஜிஜி கிழமைனு அர்த்தமா?

Geetha Sambasivam said...

எல்லாரும் மொபைலை வைச்சுட்டு ஏதோ பேசிட்டே இருக்காங்க! ஆனா எனக்கு அப்படி ஏதும் தோணறதே இல்லையே? ஏன்?

மொபைலில் நீங்க சினிமா பார்ப்பீங்களா? பார்த்திருந்தா என்ன படம் பார்த்தீங்க?

ஓட்ஸ் தோசை என ஶ்ரீராம், (நீலவண்ணக் கண்ணன்) ஏதோ புதுசாக் கண்டு பிடிச்சாப்போல் சொல்றார். ஆனால் அது ஏற்கெனவே நான், வல்லி எல்லாம் செய்திருக்கோமே! இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?

கேஜிஜி சார், உங்களோட புதிய சமையல் கண்டுபிடிப்பு என்ன? அதுக்குப் பாராட்டுக் கிடைச்சதா? நீங்களே உங்களைப் பாராட்டிக் கொண்டீங்களா?

Geetha Sambasivam said...

நாளைக்கு என்ன சமைக்கிறது என்பதை இன்னிக்கே திட்டம் போடுவீங்களா?

எங்க வீட்டில் என் கணவர் எக்கச்சக்கமாய்க் காய்கறிகள் வாங்கிட்டு என்னிடம் வாங்கிக் கட்டிப்பார். அப்படி அனுபவம் உங்களுக்கு உண்டா?

இப்போக் கூடப் பாருங்க! கும்பகோணத்திலே இருந்து நீட்டுப் புடலங்காய் 20 ரூபாய்னு வாங்கிட்டு வந்தாச்சு! எங்களுக்கு ஒரு வாரத்துக்கு வருமோனு பயம்மா இருக்கு! என்ன செய்யறது? அடுத்த 2 நாட்களுக்கு ஓ.சி. சாப்பாடு புக்கிங்! புடலங்காயை என்ன செய்யலாம்? அடுத்த புதனுக்கு பதில் சொல்லவும். எல்லாத்துக்கும் பதில் யோசிச்சு வைங்க! அப்புறமா வந்து மிச்சம் கேட்கிறேன். இப்போச் சாப்பிடப் போகணும். :)

Angel said...

///அம்மாவைக் கிள்ள முடியவில்லையே என்கிற ஏக்கமோ என்னவோ...!//

கர்ர்ர்ர்ர் :) அதிரா நீங்க இதை கவனிக்கவில்லை

Angel said...

1,உங்கள் பொன்னான நேரத்தை விழுங்குவது எது ?
2,அம்மா சுட்ட தோசை உங்கள் மனைவி சுட்ட தோசை ..3 வித்யாசங்கள் ப்ளீஸ் ?

இந்த கேள்விக்கு வரும் பதில்களால் மூன்று பேரின் வீட்டிலும் நடக்கும் எதற்கும் நான் பொறுப்பில்லை :))

3, நல்லவர் , ரொம்ப நல்லவர் வித்யாசம் கூறவும் .?
4, உங்ககிட்ட ஒரு கடிகாரம் டைம் மெஷின் கவுண்ட் டவுன் டைமருடன் கொடுத்தா சரியா உங்க வாழ்க்கையில் எந்த மறக்க முடியா இனிய சம்பம் நடந்த நேரம் அதை நிப்பாட்டுவிங்க ?

5 ,உங்களை பற்றிய மூன்று சுவாரஸ்யமான உண்மைகள் ?

6,ஞாபக மறதியால் அசடு வழிந்தது சமீபத்தில் எப்போது ?
7,நமக்கெல்லாம் ஏன் கனவு வருது ?
இதை நிறுத்த வழி இருக்கா ?
8, ஈமெயில் /கடிதம் /இரண்டின் சாதக பாதகம் ?
9,பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்கிறார்களே ஏன் ?
10, பேய் படம் பார்த்து பயந்த அனுபவங்கள் ?
என்ன படம் அது ?

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்கா நீங்க சொல்லிருந்தீங்க ப்ரசாதம் செஞ்சு கொண்டு போணும் நாளை வர மாட்டேன் மாலையாகும் என்று அதான் உங்க பதிவுல வந்து பயணம் சிறக்கட்டும்னு சொல்லிருந்தேன்...பாருங்க நான் கருத்துகளை ஒழுங்கா வாசிக்கிறேனாக்கும்....

அதுக்காக நான் அதிரடி மாதிரி பச்சைக்கல் ப்ளாட்டினம் நெக்லஸ் எல்லாம் கேக்கமாட்டேனாக்கும் மீ ரொம்ப ஜிம்பிள்!!! ஹா ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்கா ஓட்ஸ் தோசை எல்லாம் நீலவண்ணக் கண்ணன் கண்டுபிடிச்சதா சொலல்வே இல்லையெ. அது கௌ அண்ணாவாக்கும்!!!

கீதா

Angel said...

கீதா ரெங்கன் .நான் அரிசி வடை செஞ்சு பிளாகிலும் போட்டேன் :)

Angel said...

உங்களுக்காக ரசவடை வெயிட்டிங் geetha

ஞானி:) athira said...

எப்பவாவது.. எந்தப் படமாவது பார்த்து நெஞ்சடைத்து கண்கலங்கியதுண்டோ? அது எந்தபடம்?/படங்கள்... பிக்கோஸ் என்னிடமும் அப்படி 4 படங்கள் உள்ளன:).

ஞானி:) athira said...

எங்கள் புளொக்கின் 2 வது ஆசிரியர், சிக்கும் போன பின்பு அடுத்து எங்காவது சுற்றுலா போனாரோ? அல்லது போவதற்குப் பிளான் பண்ணியிருக்கிறாரோ?:)

ஞானி:) athira said...

///Angel said...
///அம்மாவைக் கிள்ள முடியவில்லையே என்கிற ஏக்கமோ என்னவோ...!//

கர்ர்ர்ர்ர் :) அதிரா நீங்க இதை கவனிக்கவில்லை ///

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் விடுங்கோ அஞ்சு.. அது அனுஸ்காவின் குழந்தையாக இருக்கும்:) நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா:))

Angel said...

//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் விடுங்கோ அஞ்சு.. அது அனுஸ்காவின் குழந்தையாக இருக்கும்:) நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா:))

https://www.meme-arsenal.com/memes/dcb5d41d0fff2ff6fefe2ed2f9603ca6.jpg

Angel said...

என்றைக்காவது உங்கள் வீட்டு பாஸை . ஐ மீன் மனைவி , உங்கள் அக்கா தங்கை பேரை சொல்லி (எதோ ஒரு மறதியில் ) அழைத்து :)மாட்டிக்கொண்டதுண்டா :) ??

ஞானி:) athira said...

ஹாஅ ஹாஅ ஹாஅ குட் கொஸ்ஸன்:)

https://www.google.co.uk/search?q=hi+five+cat&safe=strict&client=safari&hl=en-gb&prmd=ivsn&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwi3wIi1kOPbAhVoD8AKHTTxCOAQ_AUIESgB&biw=414&bih=622#imgrc=6jx69xcGTVjLlM

Madhavan Srinivasagopalan said...

// ப: Statistical Analysis. Forward interpolation using any accurate formula. I will enter x and y values 6 or 7 sets and ask for forward interpolation value next. Example : I will give stock price of Reliance industries for the past 6 or 7 consecutive days and ask for the interpolation for tomorrows stock price. //

That's *Extrapolation* (finding a value of y(x), beyond the given limits of 'x'). (not Interpolation)

Madhavan Srinivasagopalan said...

One day during winter in a town, everyone felt that the day was double the cold that was felt the previous day. For, eg. if someone used 1 sweater the previous day, to receive a particular warm comfort, he/she needed 2 sweaters to keep him/her self the same warm-comfort on the day of this report.

The newspaper on that day reads the previous day's temperature was 0 degree Celsius. What's the temperature on that day ?

Geetha Sambasivam said...

//ப: ஓட்ஸ் தோசை என்று புதிய காலை உணவு ஒன்றைக் கண்டுபிடித்தேன். புதிய மார்பிள் நான் ஸ்டிக் தவாவில் வார்த்து சாப்பிட்டேன். பரம திருப்தி. //தி/கீதா, என்னோட லாப்டாப்பில் இது நீலக் கலரில் தான் தெரியுது. கேஜிஜி சாரோட பதிலே இல்லையே! அதோட ஶ்ரீராம் தான் தோசாயணம் எழுதினார். கேஜிஜி சாருக்கு தோசை எடுக்க வராததில் தோசை மேலேயே ஒரு அவெர்ஷன் வந்திருக்கும். ;)))))

Geetha Sambasivam said...

பொதுவா எல்லோருக்கும் தெரியச் சாப்பிடுவதை விடத் தெரியாமல் எடுத்துச் சாப்பிடுவது ரொம்ப ருசி! அப்படி நீங்க சாப்பிட்ட உணவு எது? அப்போக் கையும் களவுமா மாட்டிக் கொண்டு முழிச்சிருக்கீங்களா?

ஶ்ரீராம் சமையல்லே அம்மாவுக்கு ஒத்தாசை செய்வது பத்தி நிறையச் சொல்லி இருக்கார். அப்படி உங்க அம்மாவுக்கு நீங்க ஒத்தாசை செய்திருக்கீங்களா?

உங்க மனைவி சமையல் நல்லா இருக்குமா? உங்க அம்மா சமையல் நல்லா இருக்குமா? அல்லது உங்க சமையல் தான் உங்களுக்குப் பிடிக்குமா?

Geetha Sambasivam said...

ச்ரீராமுக்கு அனுஷ்கா, நெ.த.வுக்குத் தமன்னா! இன்னும் சிலருக்கு நயன் தாரா! அப்படி உங்களுக்குப் பிடிச்ச நடிகை யார்? ஏன் பிடிக்கும்?

இப்போதுள்ள நடிகைகளிலே நன்றாக நடிப்பவர்கள் யார்?

திரைப்படங்கள் பழைய படங்களின் பெயரிலேயே வரது எனக்குக் குழப்பமா இருக்கு! உங்களுக்கு? அதே கண்கள் என்னும் பெயரில் முன்னர் வந்த ஏவிஎம் படம் ஓர் மர்மப் படம். கிட்டத்தட்ட அதே போல் ஓர் மர்மப் படம் அதே பெயரில் இப்போவும் வந்திருக்கு! இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஸ்ரீராம். said...

கீதாக்கா....

// ஶ்ரீராம் சமையல்லே அம்மாவுக்கு ஒத்தாசை//

// ச்ரீராமுக்கு அனுஷ்கா, //

கர்ர்ர்ர்ர்.... முதலில் சொல்லும்போது ஒழுங்காய் ஸ்ரீராம்னு வந்திருக்கு.... இரண்டாவதில் மட்டும் என்ன ச்ரீராம்?

// அப்படி உங்களுக்குப் பிடிச்ச நடிகை யார்//

இந்தக் கேள்விக்கு நெல்லை கௌ அங்கிள் சார்பில் மேனகா என்பார். அநன்யா பார்த்திருந்தால் மஞ்சுளா என்பார்!!!!

// இப்போதுள்ள நடிகைகளிலே நன்றாக நடிப்பவர்கள் யார்? //

அப்படியெல்லாம் வேற செய்யறாங்களா என்ன!

Geetha Sambasivam said...

//ச்ரீராமுக்கு அனுஷ்கா// ஹிஹிஹி, ஜாலியா இருக்கு ஶ்ரீராம். உண்மையில் அதைக் கவனிக்கலை. எல்லாம் இந்தக் கலப்பையோட வேலை. ஆனால் உங்களுக்குப் பிடிக்கலைனதும் ஜாலியா இருக்கு! நல்லவேளையாத் திருத்தலை! ஹிஹிஹிஹிஹி!

Geetha Sambasivam said...

//அப்படியெல்லாம் வேற செய்யறாங்களா என்ன!// நான் என்னத்தைக் கண்டேன்? பாட்டிலிருந்து ரசிக்கிறவர் நீங்க தான்! :)))) நீங்க தான் பதில் "ஜொள்ள"ணும்.

ஸ்ரீராம். said...

கீதாக்கா...

// நான் என்னத்தைக் கண்டேன்? பாட்டிலிருந்து ரசிக்கிறவர் நீங்க தான் //

பாட்டை ரசிப்பேன். படம்லாம் அதிகம் பார்க்கறதில்லை!

​// ஜாலியா இருக்கு ஶ்ரீராம். //

என்ஜாய்!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

கலகலப்பான கேள்வி - பதில்
அருமையான பதிவு

Angel said...

கேள்வி பதில் பகுதிக்கு நமக்குள் எழும் கேள்விகள் அதாவது கொஞ்சம் சீரியஸ் டைப் கேள்விகள் கேட்கலாமா ?
(இதில் அரசியல் வராது ஒன்லி வாழ்வியல் /மனிதர் பற்றித்தான் தான் நிறைய டவுட்ஸ் இருக்கு )

Angel said...

101 :)))))))))))))))))))))))))))

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!