Saturday, June 16, 2018

தினமும் வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி அரிசி...

1) மேலும், அவர்களுக்கு சத்தான உணவுடன், தரமான கல்வியும் கிடைக்க வேண்டும். எங்கு அக்ஷய பாத்திர அடுப்படி தேவைப்படுகிறதோ, அந்த இடத்தை கண்டறிந்து, அங்கு அடுப்படியை நிறுவுவதே, இதன் நோக்கம்.


ஆந்திராவில், 370 பள்ளிகள், அசாம், 607, சத்தீஸ்கர், 192, குஜராத், 1,621, கர்நாடகா, 2,968, ஒடிசா, 1,840.ராஜஸ்தான், 2,672, மஹாராஷ்டிரா, 74, தமிழகம், ஒன்று, தெலுங்கானா, 805, திரிபுரா, இரண்டு, உத்தரப்பிரதேசம், 3,021 என, 12 மாநிலங்களில், 36 சமையல் அறைகளில், 14 ஆயிரத்து, 173 பள்ளிகளில், எங்களின், 'அக் ஷய பாத்திரம்' சிறப்பாக செயல்பட்டு வருகிறது......

2)  நம் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு இப்படியும் செய்யலாம்....

3)  மாணவர்களிடையே நற்சிந்தனைகளை வளர்க்கும் பள்ளி.  

பள்ளிச் சுற்றுச் சுவர் ஓரத்தில் மாணவர்கள் கொட்டும் மீதமான மதிய உணவை உட்கொண்டு ராகம் பாடித் திரிந்தன பறவைகள். கோடையில் பறவைகளுக்கு நீர் கிடைக்காது. குடிநீர் கிடைக்காமல் இறந்துபோகும் பறவைகளின் எண்ணிக்கையும் இந்தக் காலகட்டத்தில் அதிகரிக்கும். இதையடுத்து சுழற்சி முறையில் பறவைகளுக்கு உதவ ஒரு குழுவை உருவாக்கினர் இப்பள்ளி ஆசிரியர்கள். 
பாடப்புத்தகங்களோடு தினமும் வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி அரிசி, கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களை மாணவர்கள் எடுத்து வரத் தொடங்கினர். பின்னர் மரங்களின் கீழ் தட்டுகளில் தானியங்களையும், தண்ணீரையும் வைத்துவிட்டுச் சென்றனர். தினமும் வந்து பழகிய பறவைகள் பசியுடன் ஏமாறக் கூடாது என்பதற்காக தற்போது விடுமுறை நாட்களிலும் மாணவர் குழு இரை பணியை தொடர்கிறது.

4)  ...... இதற்கு வித்திட்டவர், பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரியும் கே.ஜே.மேத்யூ. இவர், மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கவும் இயற்கை விவசாயம் குறித்து தெரிந்து கொள்வதற்காகவும் பள்ளி வளாகத்தில் இருந்த வெற்றிடத்தை சீரமைத்து சிறிய காய்கறி தோட்டத்தை உருவாக்கினார். இதனால் வெற்றிடங்கள் எல்லாம் முட்டைகோஸ், கத்தரிக்காய், வெண்டை, கீரைகள், பீட்ரூட், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை என விளைந்து கிடக்கிறது. அறுவடை செய்யப்படும் காய்கறிகள் பள்ளியின் சத்துணவு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.....
24 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க...

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் , கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

துரை செல்வராஜூ said...

அருமையான தொகுப்பு...

நல்லோர் பலரும் நலம் பெற்று வாழ்க...

துரை செல்வராஜூ said...

வளரும் பிள்ளைகள் இயற்கையைப் பேணி வளர்வது மகிழ்ச்சியாக உள்ளது...

வாழ்க நலம்...

துரை செல்வராஜூ said...

எங்கே ஒருத்தரையும் காணோம்!...

ரொம்பவும் பயந்துட்டாங்களோ!?...

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்

R.Umayal Gayathri said...

காலை வணக்கம்... நல்ல தொகுப்பு ...

வல்லிசிம்ஹன் said...

அனைத்து நற்செய்திகளுக்கும் நன்றி.
இனிய காலைகளாக எப்பொழுதும் இருக்கட்டும்.
அன்னம்,தண்ணீர் கொடுப்பவர்களுக்கும் காய்கறிகள் வளர்க்கும் குழந்தைகளுக்கும்
மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஒப்பிலியப்பன் கோவிலில்...

துரை செல்வராஜூ said...

// ஒப்பிலியப்பன் கோயிலில்...//

ஆகா... அப்படியே ஐயாவாடி
ஸ்ரீப்ரத்யங்கிரா அம்பிகையையும் தரிசனம் செய்து வாருங்கள்...

KILLERGEE Devakottai said...

நல்ல உள்ளங்கள் வாழ்க வளமுடன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

போற்றத்தக்கவர்களைப் பற்றிய அரிய, அருமையான செய்திகள். பாராட்டுகள்.

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம்.

சிறப்பான செய்திகள். அக்ஷய பாத்திர பற்றி முன்னரே படித்திருக்கிறேன். மற்றவை புதிய செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

சிறப்பான பணிகள்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அனைத்துமே சிறப்பான செய்திகள். பள்ளிக் குழந்தைகளின் சிறப்பான சேவைகள் ஆச்சரிமூட்டுகின்றன. அவர்களுக்குள் நல்ல எண்ணங்களை வளர்த்த ஆசிரிய பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவரது சேவைகளையும், போற்றி பாராட்டுவோம்.
பகிர்வுக்கும் நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு நன்றி.

நெ.த. said...

அனைத்துச் செய்திகளும் நன்றாக இருக்கின்றன. அதிலும் பச்சைக் காய்கறிகளை பள்ளியில் விளைவிப்பது கேட்கவே நன்றாக இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

Bhanumathy Venkateswaran said...

இன்று எல்லாமே பள்ளிக்கூட செய்திகளாகவே இருக்கிறதே? எல்லாமே சிறப்பு! குறிப்பாக இரைப் பணியை இறைப்பணியாக செய்யும் குழதைகளையும், அதற்கு வித்திட்ட ஆசிரியரையும் பெரிதும் பாராட்டத் தோன்றுகிறது.

அதே போல பள்ளிக்கு கொடுக்கும் நன்கொடையை அப்படி குறிப்பிடாமல் பள்ளிக்கு அளிக்கும் சீர் என்பது புது கோணம். அன்பளிப்பு என்னும் பொழுது, தருபவர் கை மேலயும், பெறுபவர் கை கீழேயும் இருக்கும். சீர் என்னும் பொழுது ஒரு பந்தம் வந்து விடுகிறது. வாழ்க நலம்!

Geetha Sambasivam said...

இன்னைக்குக் காலம்பரவே பட்டுக் குட்டிக் குஞ்சுலு வந்ததால் வர முடியலை! அது கடைசியில் டாட்டா காட்டும்போது இன்னிக்கு flying கிஸ்ஸும் கொடுத்தது. குஞ்சுலு வரும்னு தெரியாது! அதுவே ஓர் இனிய ஆச்சரியம்.

Geetha Sambasivam said...

பள்ளிகள் பற்றிய சிறப்பான செய்திகள்.

கோமதி அரசு said...

அனைத்து செய்திகளும் மிகவும் அருமையான செய்திகள்.
பறவைகளுக்கு குழந்தைகள் வைக்கும், உணவும் தண்ணீரும் தரும் செய்தி( விடுமுறை நாளிலும்) குழந்தைகளை பாராட்ட வேண்டும். அசிரியர்களையும் பாராட்டவேண்டும்.

சத்தான காய்கறிகளை பள்ளியில் பயிரிட்டு அதை சத்துணவாய் மதியம் குழந்தைகளுக்கு கொடுப்பது மிக நல்ல செய்தி.
சிறப்பான செய்திகளுக்கு நன்றி.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மனோ சாமிநாதன் said...

செய்திகள் நெகிழ்ச்சியடைய வைத்தது. எதிர்கால இந்தியா மீது நம்பிக்கையும் ஏற்படுகிறது!

Angel said...

இரைப்பணி தான் எனக்கு மிகவும் பிடித்தது .மாணவர்களின் தோட்ட விவசாயமும் அருமை ஆசிரியர் வாழ்க .அனைத்தும் அருமையான தகவல்கள்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான முயற்சி
பாராட்டுகிறேன்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!