Saturday, June 23, 2018

போலீஸார் மெத்தனம் காட்டினார்கள் என்பதால் விட்டுவிட முடியுமா?

1)  தினந்தோறும், 300 ஆதரவற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்கு உணவளித்து, அவர்களின் பசியாற்றி வருகிறார் கோவை ரமேஷ்.


2)  போலீஸார் மெத்தனம் காட்டினார்கள் என்பதை விட்டு விடுவோம்..  அவர்களை எதிர்பார்க்காமல் சாதுர்யமாக,  தைரியமாக பெரிய காரியம் செய்திருக்கும் சிமியோனைப் பாராட்டுவோம்.


3)  நீர் வீணாவதை தாங்க முடியாத இளைஞர்கள் சிலர் நீரை தேக்கி வைக்கும் முயற்சியில் களமிறங்கினர். புதுச்சேரியைச் சேர்ந்த ‘மிஷன் கனகன் டிசம் பர் 31’ அமைப்பின் கீழ் ‘விழித்தெழுந்த தமிழர் மாணவர் இளைஞர் பேரவை’, ‘உயிர்துளி உறவு கள்’ உள்ளிட்டவை அமைப்புகள் ஒன்றாக இணைந்து, ‘வாரம் ஒரு குளம்’ என ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் குளங்களை தூர்வாரும் பணியை செய்யத் தொடங்கினர்......


4)  கோடை விடுமுறையில் தூசிபடிந்து கிடக்கும் அரசு பள்ளிகளை சுத்தம் செய்து புதுப்பொலிவாக்கும் சேவையை செய்கிறது மதுரை ‘வா நண்பா’ என்ற இளைஞர்கள் குழு. 20 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க...

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் ,கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

Geetha Sambasivam said...

வரேன் மத்தியானமாப் படிக்க! இப்போ பிரசன்ட் சார்!

Geetha Sambasivam said...

என்னோட செல்ஃபோனையும் இவரை விட்டுக் கண்டுபிடிக்கச் சொல்லி இருக்கலாம். இங்கேயும் போலீஸ் ஆக்‌ஷன் ஏதும் எடுக்கவில்லை. :( மற்றச் செய்திகளையும் படிச்சுட்டேன்.

KILLERGEE Devakottai said...

சிமியோன் செய்தது தவறல்ல! ஆனால் இவருக்கு போலீஸால் ஆபத்து வரலாம்.

சில இடங்களில் இளைஞர்கள் நல்ல செயல்கள் செய்கிறார்கள். அரசியல்வாதிகளிடம் சேராமல் இருக்கணும்.

துரை செல்வராஜூ said...

// வரேன் மத்தியானமா!... - கீதா //

இந்த மாதிரியெல்லாம்
கட் அடிக்கக்கூடாது ...

எங்கே அவங்க?.. ஆள காணோம்!...

துரை செல்வராஜூ said...

படித்ததும் பிடித்ததுமாக -
இன்றைய பதிவு அருமை...

வாழ்க நலம்..

Anuradha Premkumar said...

இளைஞர்கள் பணி போற்றுதலுக்கு உரியது...

நாடு நலம் பெறும்...வாழ்க நலம்

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

தினந்தோறும், ஆதரவற்றவர்கள் முதியோர்கள் என அவர்களின் பசி பிணி போக்கி வரும் கோவை ரமேஸ் அவர்களின் செயல் பாராட்டத்தக்கது.

நீர் நிலைகளை சுத்தம் செய்து நீரின் அருமையை உணர வைக்கும் இளைஞர்களும், வருடந்தோறும் அரசு பள்ளியை சுத்தம் செய்யும் இளைஞர்களும் போற்றப்பட வேண்டியவர்கள்.

தனக்காக தானே துப்பறிந்து தன் செல்ஃபோனை கண்டுபிடித்துக் கொண்ட இளைஞருக்கு பாராட்டுக்கள்.

அனைத்தும் அருமையான செய்திகள்.
பகிர்வுக்கு நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு said...

வருங்காலம் என்னாகும் ? இனிதாகும் இனி என்ற நம்பிக்கைதரும் செய்திகள்.
இது போன்ற பிறர் நலம் காக்கும் நாட்டுக்கு உழைக்கும்
இளைஞர்கள் கையில் நாடு முன்னேறும் .

அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.
வாழ்த்துக்கள்.

செல்போன் திருடனை பிடித்த சிமியோனுக்கும் வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் பாராட்டுகள்...

நெ.த. said...

நம்பிக்கை தரும் செய்திகள். பகிர்வுக்கு நன்றி

Asokan Kuppusamy said...

சிமியோன் துப்பறியும் கதையாக உள்ளது பாராட்டுக்குரியது

Bhanumathy Venkateswaran said...

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. கோவை ரமேஷின் பணி பாராட்டுதலுக்குரியது.

எல்லாவற்றிர்க்கும் அரசாங்கத்தையே சார்ந்திருக்காமல் பொது மக்களும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல் பட வேண்டும் என்பதை
உணர்த்துகிறார்கள் புதுச்சேரியை சேர்ந்த 'மிஷன் கனகன் டிசம்பர் 31' குழு இளைஞர்கள். அதே போல சுத்தம் செய்வது என்றால் கோவில்களை சுத்தம் செய்வதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அமைப்புகளுக்கு மத்தியில் மாநகராட்சி பள்ளிகளை சுத்தம் செய்யும் மதுரை 'வா நண்பா வா' அமைப்பையும் போற்றுகிறோம். ரியல் ஹீரோ சிமியோனுக்கும் பாராட்டுகள்.

மொத்தத்தில் எல்லாமே நல்ல செய்திகள். வாழ்க!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

போற்றப்படவேண்டியவர்களைப் பற்றிப் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள். தேடி எழுதும் உங்களின் முயற்சி பிரமிக்க வைக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

நல்ல விஷயங்களும் எங்கோ நடக்கின்றன அவை வாழ்வியலில் கலக்க வேண்டும் அல்லவா

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

நம்பிக்கை தரும் நற்பணி செய்வோரைப் பாராட்டுவோம்.
இவ்வாறு நம்மவரும் செய்ய முன்வந்தால்
நாடு முன்னேறும்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!