வியாழன், 28 ஜூன், 2018

ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டபோது..



பாபு, ராஜம், ரெங்கண்ணா, வைத்தி, பாலூர் ராமு, பார்வதி, அப்புறம் யமுனா....  ஏன் தங்கம்மாவையும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்தப் பெயர்கள் சொல்லும்போதே இந்தக் கதை எது என்று தெரிந்திருக்கும்.  

கல்கியில் வந்த தொடர்கதையா?  முன்னர் பல வருடங்களுக்கு முன்னால் படித்தபோது இருந்த உணர்வுகள் வேறு..   பல வருடங்களுக்குப் பின்னான மீள்வாசிப்பில் வரும் எண்ணங்கள் வேறு.  இது முறையா?  சரியா?  

என் அப்பாவுடன் கூட வேலைசெய்த நண்பர் ஒருவர் அவரைவிட பத்து வயது அதிகமுள்ள பெண்மணியை மணந்திருந்தார். ஏன், டெண்டுல்கர் கூட தன் மனைவியை விட ஐந்து வயது இளையவர் என்று படித்த நினைவு.

கொஞ்சம் சங்கீதம்.  கல்லூரிக்கால நிகழ்வுகள் ஆங்காங்கே கொஞ்சம்..  அந்த அறியாப்பருவத்தில் ராஜம், பாபு இருவரும் கொஞ்சம் பெரிய மனிதத்தனமாய் வித்தியாசமாய்.  ராஜம் அறிவு ஜீவி.  பாபு திறமைசாலி.  பாபுவுக்கு இருக்கும் சிறுபிள்ளை இமேஜ் சீக்கிரமே உடைகிறது. யமுனாவிடம் மனதைச் சொல்லும் வேகம்..  அப்புறம் விலகி நிற்கும் நேரங்கள்.

யமுனா நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்து சரணடையும் இடத்தில் தொடர்ந்து படிக்க மனதைத் தயார் செய்து கொள்ள எனக்கு இரண்டு நாட்கள் இடைவெளி தேவைப்பட்டது.  இந்தக் கதை படமாகவும் வந்தது.  படம் பார்க்கவில்லை.  படத்தில் இதை ஜீவனுடன் எடுத்திருக்க முடியாது.

விடுதலைக்கு முன்னால் நடப்பதாய் கதை.  தஞ்சை மாவட்டத்தின் உள் ஊர்களுக்கெல்லாம் பஸ் வருகிறது.

அவரது எழுத்தில் சில..

-... கூட ஒரு பெண் இருபது வயதிருக்கும், இளமையின் கோலாகலத்துடன் பொலிந்து கொண்டிருந்தாள்.  கழுத்திலும், கன்னத்திலும் யௌவனம் நிகுநிகுத்தது.

- வாழைக்குருத்து போல- பறித்து இரண்டு நாளான - அவள் உடல் பொலிந்து கொண்டிருந்தது.  அப்பால் இருந்தது புதிய குருத்தாக பளபளத்தது.

- அந்த உயரம், வளைவு, சரிவு, குழைவு, மென்மை எல்லாம் பட்டும் பருத்தியும் போட்ட மறைவைக் களைந்து வந்து நிற்கின்றன.

- அந்தப் பாட்டி எவ்வளவு மொத்தம்! பெரிய சத்துமாப் பைகள் மாதிரி ஆடின மார்பில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டே வந்தாளே...

- ... கண்ட இடத்தில் கண்டதை வாங்கி தின்னக் கூடாது.  ஆகாரம்தான் மனதை உருவாக்குகிறது.  ஆகாரத்திற்குத் தகுந்தாற்போல் மனதும் மாறும்.

-....விழுந்து வணங்குவது போல ஒரு கூண்டு வண்டி அவிழ்த்து விடப் பட்டிருந்தது.

-...."பக்தி என்பது பேரமில்லை.  'நான் உன்னை நெனைக்கிறேன்; நீ என்ன கொடுக்கிறே?  பணம் கொடுக்கிறியா?  சக்தி கொடுக்கிறியா?  ஆபத்திலேர்ந்து காப்பாத்தறியா?'  இப்படிக்கு கேட்கறதுக்காக பக்தியில்லே.  அப்படிக் கொடுக்கறதுன்னு நாம் நெனச்சிண்டிருக்கற தெய்வம் நாம்தான்.  நாம் சாதாரண மனுஷனா இருந்தாலே போதும்.  அதாவது மாயசக்திகளெல்லாம் நமக்குத் தேவையில்லை.  ஆனால் மனுஷனா இருக்கிறபோது உயர்ந்த மனுஷனா இருக்க பாடுபடணும்.... உயர்ந்த மனுஷன் எப்படியிருப்பான்னு கேட்டா போகப்போகத் தெரியும்.  நீ ஏறஏற உயர்ந்த மனுஷன் மேலேமேலே போயிண்டிருப்பான்...".

-  அந்நிய ஸ்வரங்களை இப்படிச் சேர்த்துக் கலப்பு மணம் செய்கிறாரே,,,  சீர்திருத்த நாயனக்காரர் போலிருக்கிறது!..


பெரும்பாலானோர் படித்த கதை என்பதால் கதையை விவரிக்கத் தேவை இல்லை.  

புரியாத சில வார்த்தைகள் கும்டா, கானோ விடுவது, (ஓடம் என்று நினைக்கிறேன்) 


======================================================================================================


தினமலர் பொக்கிஷம் பகுதியிலிருந்து... நிஜமான பொக்கிஷம்.


மணிமாறன்

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர், இங்கே ஓவிய கல்லூரி படிப்பை முடித்து விட்டு இது தொடர்பான உயர்படிப்பிற்காக ஐதாராபாத்தில் இருப்பவர்.

ஓவியம் வரைவதிலும், புகைப்படம் எடுப்பதிலும் இவருக்கு விருப்பம் அதிகம்.

மணிமாறன் சென்னை வந்திருந்த போது இவரது 94 வயது தாத்தா நமசிவாயம் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். மனைவி லட்சுமியம்மாள்(86)அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட ஏழு தலைமுறையை பார்த்துவிட்ட நமசிவாயம் நடமாட முடியாமல் படுக்கும் வரை மிகவும் சுறுசுறுப்பாக இருந்தவர், இயங்கியவர். சிறு சிறு வியாபாரம் செய்தவர், கடைசியில் உறவினர் ஒருவரின் பிரின்டிங் பிரஸ்சை பார்த்துக் கொண்டார்.

இவரது உயிரே அந்த பிரின்டிங் பிரஸ் என்று சொல்லலாம். பிரஸ்சை திறப்பதும் மூடுவதும் இவரது பிரதான வேலை. பிரஸ்சின் சாவியை கையில் எடுத்து விட்டாலே இவருக்கு தனி பலம் வந்துவிடும்.

வேதனை கலந்த முயற்சி:
இப்படிப்பட்டவர் முதுமை நோய் காரணமாக படுத்த படுக்கையில் விழுந்து விட்டார், எப்படியும் இரவிற்குள் இறந்துவிடுவார் என்ற நிலையில் அந்த வீடும் தாத்தாவின் அறையும் ஒருவிதமாக சோக சூழலுக்குள் அமிழ்ந்து கிடந்தது. நல்லபடியாக அவரது ஜீவன் அடங்க வேண்டுமே என வீட்டில் உள்ளவர்கள் பிரார்த்திக் கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு மேல் தன்னோடு வாழ்ந்த கணவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் தன்னைவிட்டு பிரிய போகிறார் என்ற நிஜத்தை தாங்கமுடியாமல் அருகில் இருந்தபடி அழுது கொண்டிருந்தார் லட்சுமியம்மாள்.

அங்கு இருந்த மணிமாறனுக்கு அங்கு நிலவிய ஒரு அழுத்தமான சோகத்தை பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. அது சரியா? தவறா? என்றெல்லாம் மனதிற்குள் ஒரு பக்கம் ஒடினாலும், அந்த எண்ணத்தை எல்லாம் தள்ளி விட்டு தாத்தாவின் கடைசி தருணத்தை கேமிராவில் பதிவு செய்வது என்று முடிவு செய்தார்.

இதை கறுப்பு வெள்ளையில் பதிவு செய்வது, யாருக்கும் தெரியாமல் படம் எடுப்பது, கேமிராவை கண் அருகே கொண்டு செல்லாமல் செட்டிங் செய்து கொண்டு படம் எடுப்பது, என்று முடிவு செய்து அங்கு இருப்பவர்களுக்கு தெரியாதபடி படம் எடுக்க ஆரம்பித்தார்.

நெகிழ வைத்த காட்சிகள்:
சிலர் வந்து தாத்தாவின் நாடியை பிடித்துவிட்டு, கண்ணைப் பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கவிட்டு சென்றனர். பாட்டி மட்டும் பக்கத்தில் உட்கார்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வாயில் கஞ்சியை ஊற்றினார், கஞ்சி வாய்க்குள் செல்லாமல் வழிந்தது.



சரி பால் கொடுக்கலாம் என்று பாட்டி எழுந்திரிக்க முயற்சித்த போது தாத்தா தனது மெலிதான கையை அசைத்து பாட்டியின் புடவை தொட்டு லேசாக இழுத்தார், இந்த நேரத்தில் என்னை விட்டு எங்கேயும் போய்விடாதே என்று தாத்தா தனது விரல்மொழியால் சொல்வது போல பட்டது.

பாட்டியும் அந்த சைகையை உணர்ந்தவர் போல இன்னும் அருகில் நெருங்கி அமர்ந்தார், பாட்டியின் கண்களில் அளவிடமுடியாத சோகம், பெருகிய கண்ணீரை துடைக்ககூட தோணாமல் தாத்தாவை வைத்த கண்வாங்காமல் பார்த்தவாறு இருந்தார்.

தாத்தாவிடம் எந்த அசைவும் இல்லை, ஆனால் தொண்டைக்குழி சன்னமாக ஆனால் சீரில்லாமல் ஏறி இறங்குவதை வைத்து ஜீவன் போராடுகிறது என்பதை உணரமுடிந்தது.

அவர் உயிராக மதித்த பிரின்டிங் பிரஸ் சாவியை பாட்டி கையில் கொடுத்ததும் உடம்பில் சின்ன அசைவு ,சாவியை கொஞ்ச நேரம் இறுக்கிப் பிடித்தவரின் பொக்கை வாயில் மெலிதாக ஒரு புன்னகை, கொஞ்ச நேரம்தான், புன்னகை மறைந்தது பிடிதளர்ந்து சாவி கீழே விழுந்தது.
அதற்கு மேல் 
மணிமாறனால் அந்த அறைக்குள் இருக்கமுடியவில்லை.

நெஞ்சைப் பிசைந்த நிஜம்:
தாத்தாவின் அந்திம காரியங்கள் எல்லாம் முடிந்த பிறகு சில நாள் கழித்து தாத்தாவின் கடைசி தருணத்தில் எடுத்த படங்களை கம்ப்யூட்டரில் இறக்கி பார்த்தார். நேரில் பார்த்தபோது இருந்தைவிட இந்த நிழற்படத்தை பார்த்தபோது சோகத்தின் கனம் கூடியிருந்தது.

இவரது இந்த புகைப்பட முயற்சி பற்றி உடனடியாக கருத்து சொல்லமுடியாவிட்டாலும் படங்கள் நெஞ்சை பிசைந்தது மட்டும் நிஜம்.

- எல்.முருகராஜ்
  ஜூன் 22 2014





===================================================================================================


சென்ற வாரம் உறவினர் ஒருவர் திடீர் மரணம் அடைந்தார்.  குடும்பத்தை உலுக்கிய சோகம் அது.   வெளியிடத்தில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் மயங்கி விழ, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தபோது, ஸ்ட்ரோக் என்று தெரிந்தது.  மூளையிலிருந்து ரத்தம் வழிவது நிற்காமல் எல்லா நம்பிக்கைகளையும் பொய்யாக்கி  நான்காவது நாள் மறைந்தார். அப்போது தோன்றிய சில வரிகள் கீழே...

அழுதழுது 
பெரும் கூட்டத்தினருடன் 
அந்திமக் கிரியைகள் 
செய்தாலும் 
அடுத்தநாள் காலை 
அவர்கள் மட்டும் 
தனியாகத்தான் 
அந்த வீட்டில் 
இருக்கவேண்டும்.

***********************************

அத்தியந்த உறவுகளின் 
அத்தனை 
அஸ்திக் கரைப்புகளிலும் 
உடனிருந்தார்..
இப்போதும்தான் 
இருக்கிறார் 
ஆனால் 
அவரே அஸ்தியாக 
(எங்கள் மாமாக்களில் ஒருவர் அச்சமயம் சொன்னதை வைத்து எழுதியது)

**************************************

இப்போது 
நமக்குத் தெரியும் 
அவரின் பல நல்ல குணங்கள் 
முன்னாலேயே 
அவரிடம் இருந்ததுதான்.


**************************************



====================================================================================================



வீட்டில் மறுபடியும் ஒரு, இல்லை இல்லை இரண்டு புதிய விருந்தினர்கள்.  அதிரா, ஏஞ்சல், கீதா ரொம்பவே ரசிப்பார்கள்!


இரட்டை வேஷமா?  சிறு வித்தியாசம்தான்!  முதல் நாள் ஒன்று மட்டும் வந்தது.  மறுநாள் காலை கதவு திறக்கும்போது இரண்டாய் நின்று கொண்டிருந்தது!


"திறந்துட்டாங்க கதவை...  இப்போ பால் ஊத்துங்க..  இரு.. " (அது மட்டும்தான் சாப்பிட்டது)


மானிட்டரில் தெரிந்த மவுஸை துரத்துத் துரத்து என்று துரத்திய பிறகு அப்படியே ஓய்வெடுத்துக்கொண்டு நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறது.


=========================================================================================================













======================================================================================================









==================================================================================================

237 கருத்துகள்:

  1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ 200 ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)) பொற்கிழி எனக்கே:))

    பதிலளிநீக்கு
  2. நோஓஓஓஓஓ இது 202.. என்னுடைய மேல் கொமெண்ட் 200.. பொற்கிழி எனக்கே:))

    பதிலளிநீக்கு
  3. பேஜ் 2 திறந்திருக்கு கொமெண்ட்ஸ்க்காக ஹா ஹா ஹா முன்பு என் பக்கம் இப்படித்தான்:))

    பதிலளிநீக்கு
  4. // ஶ்ரீராம், தமன்னாவைக் குறிப்பிட்டால் அவரது ரசிகன் எப்படிச் சும்மா இருக்கமுடியும்?//

    ஹா... ஹா... ஹா... பிக்பாஸ் நித்யா பாலாஜி சண்டை மாதிரி ஆகிவிடும் போலிருக்கே!!!

    பதிலளிநீக்கு
  5. அதிரா...

    சபாஷ்... சரியான போட்டி என்று சொல்லவா?!!!

    பதிலளிநீக்கு
  6. நான் மாவரைச்சிட்டு இருக்கேன் கிரைண்டரில் :) வந்து ரிப்ளை போடறேன் நெல்லைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  7. //ஸ்ரீராம். said...
    அதிரா...

    சபாஷ்... சரியான போட்டி என்று சொல்லவா?!!!//

    நீங்க எந்தப் போட்டியைச் சொல்றீங்க ஸ்ரீராம்? இங்கு மூன்று விதமாக கதை ஓடுது:)) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  8. எங்கள் தளத்தின் பத்தாவது பிறந்த நாளன்று ரெகார்ட் பின்னூட்ட எண்ணிக்கை... அதிரா, ஏஞ்சல், கீதா ரெங்கன், கீதாக்கா... உங்களால் இது சாத்தியமாயிற்று... நன்றி உடன்பிறப்புகளே...

    பதிலளிநீக்கு
  9. @nellai thamizhan

    https://gallery.yopriceville.com/var/albums/Free-Clipart-Pictures/Cartoons-PNG/Angry_Jerry_Free_PNG_Clip_Art_Image.png?m=1447991701

    பதிலளிநீக்கு
  10. அஞ்சுவும் நானும்.. இன்னும் பேசியிருப்போம்ம் ஆனா உங்களுக்கு ஓவர் தொல்லை குடுக்கக்கூடாது என நினைச்சே அடிக்கடி அடக்கி வாசிப்பதும் உண்டு ஹா ஹா ஹா:)).. சந்தோசம் பொயிங்குது இப்பவும் கொமெண்ட்ஸ் எண்ணிக்கை பார்த்து...

    பதிலளிநீக்கு
  11. நம்மளால ரெண்டு பெரியோர் சந்தாஷப்படறாங்கன்னா :) எவ்ளோ தடவை வேணும்னாலும் என்னை ஆன்ட்டி னு கூப்டுக்கலாம் :) ஹாஹ்ஹா
    அந்த ரெண்டு பெரியோர் நெல்லைத்தமிழனும் அதிரடி மியாவும்தான் :)

    பதிலளிநீக்கு
  12. அஆவ் !!கண்டுபிடிச்சிட்டேன் ஸ்ரீராம் பிக் பாஸ் பார்க்கிறார் :)
    ஸ்ரீராம் எனக்கு இந்த முறை பிக் பாஸ் சுத்தமா பிடிக்கலை :)

    பதிலளிநீக்கு
  13. //Angel said...
    அஆவ் !!கண்டுபிடிச்சிட்டேன் ஸ்ரீராம் பிக் பாஸ் பார்க்கிறார் :)
    ஸ்ரீராம் எனக்கு இந்த முறை பிக் பாஸ் சுத்தமா பிடிக்கலை :)//

    கு.கு.. பிக்பொஸ் எப்பவும் லேட்டாத்தான் சூடு பிடிக்கும்.. போன தடவையும் ஒரு மாதம் போனபின்புதானே நாங்க பார்க்கத் தொடங்கினோம்.. வெயிட் அண்ட் சீ யா:).. பெரியவங்க சொன்னாக் கேட்கோணும் ஓகே?:).. இனி இதை வச்சே ஆளை ஒரு வழிப்பண்ணிடுறேன்ன்:)).. பெரியவர்களுகு மரியாதை குடுக்கோணும் அஞ்சு:))

    பதிலளிநீக்கு
  14. ஏஞ்சல்..

    // அந்த ரெண்டு பெரியோர் நெல்லைத்தமிழனும் அதிரடி மியாவும்தான் :) //

    ஹா... ஹா... ஹா..

    // எனக்கு இந்த முறை பிக் பாஸ் சுத்தமா பிடிக்கலை :) //

    நான் பார்க்கவில்லை. வீட்டில் இரண்டு மகன்களும், போதாதற்கு அண்ணன் மகனும் கண்கொட்டாமல் பார்க்கின்றனர். அவ்வப்போது கண்ணில் படும். எ ரா எ ப போனாலும் பெரும்பாலும் நான் ஒன்பதிலிருந்து ஒன்பதரைக்குள் தூங்கச் சென்று விடுவேன்.

    பதிலளிநீக்கு
  15. அதிரா..

    // இனி இதை வச்சே ஆளை ஒரு வழிப்பண்ணிடுறேன்ன்:)).. //

    ஹா.. ஹா... ஹா... பாவம் அஞ்சு!

    பதிலளிநீக்கு
  16. மோகமுள் படத்திற்கு எந்த நடிகரும் பொருந்தி இருப்பாங்கனு தோணலை. அர்ச்சனா ஒரிஜினலாகவே மராட்டிக்காரர் என்பதாலும் நாட்டியம் ஆடத் தெரிந்தவ்ர் என்பதாலும் அவரால் பாவங்களை எளிதில் காட்ட முடியும் என்பதால் தேர்ந்தெடுத்திருக்கலாம். அந்தப் பாத்திரம் ஓர் கடினமான கதாநாயகி பாத்திரம். உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு நடிக்க வேண்டும். அதில் அர்ச்சனா வெற்றி பெற்றாரா என்றால் இல்லைனே சொல்லணும். கதையின் ஜீவன் வெளியே வரலை. ராஜமாக விவேக்கைப் போட்டது காமெடியாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  17. நானும்/நாங்கள் எல்லோருமே அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் தூர்தர்ஷனில் போடும் எல்லா மொழிப் படங்களையும் விடாமல் பார்ப்போம். அப்படித் தான் சம்ஸ்கிருதத்தில் மகாபாரதம் ஜி.வி. ஐயர் இயக்கத்தில் பார்க்க நேர்ந்தது. மரங்கள் பற்றிய ஒரு படம் கிரிஷ் கர்நாட் எடுத்தது பார்த்தோம்.வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர் ஓய்வூதியத்துக்காக அலைந்த கதையைச் சாருஹாசன் நடிச்சுப் பார்த்திருக்கேன். இதுவும் கன்னடம் தான். இப்படி இன்னும் பல படங்கள்.

    பதிலளிநீக்கு
  18. மனதை அடக்குவது பற்றி பானுமதி சொல்லி இருப்பதை ஓரளவு ஒத்துக் கொள்கிறேன். இம்மாதிரியான மிகவும் நுணுக்கமான பிரச்னைகளில் மனதை அடக்கித் தான் ஆகணும். தறி கெட்டு ஓடாமல் பார்த்துக்க வேண்டியது தான். ஆனாலும் சில விஷயங்களில் மனம் சொல்வதை ஏற்றே ஆக வேண்டி இருக்கு!

    பதிலளிநீக்கு
  19. அதிரடி எழுதி இருக்கும் பாட்டி கதை யதார்த்தம். போகிற போக்கில் உண்மையைச் சொல்லிப் போவது அதிராவுக்குக் கை வந்த கலை! மனதை அதுவும் கலக்கியது! :( எல்லாவற்றையும் எளிதாகக் கடந்து செல்லும் அதிராவின் மனம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. // மோகமுள் படத்திற்கு எந்த நடிகரும் பொருந்தி இருப்பாங்கனு தோணலை//

    கீதாக்கா... இது மோகமுள் என்று இல்லை, நாவலிலிருந்து திரைபபடமாக மாறும் எந்தத் திரைப்படத்துக்கு பொருந்தும்.

    // மத்தியானம் தூர்தர்ஷனில் போடும் எல்லா மொழிப் படங்களையும் விடாமல் பார்ப்போம். அப்படித் தான் சம்ஸ்கிருதத்தில் மகாபாரதம் ஜி.வி. ஐயர் இயக்கத்தில் பார்க்க நேர்ந்தது. மரங்கள் பற்றிய ஒரு படம் கிரிஷ் கர்நாட் எடுத்தது பார்த்தோம்//

    நானும் பார்த்திருக்கேனோ (அதே பிறமொழித் திரைப்படங்கள் வரிசையில், தூர்தர்ஷனில்) என்கிற சம்சயம் எழுகிறது!

    // எல்லாவற்றையும் எளிதாகக் கடந்து செல்லும் அதிராவின் மனம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன். //

    நானும்... அதுவும் எனக்கு.

    பதிலளிநீக்கு
  21. @ Sriram: எங்கள் தளத்தின் பத்தாவது பிறந்த நாளன்று ரெகார்ட் பின்னூட்ட எண்ணிக்கை... அதிரா, ஏஞ்சல், கீதா ரெங்கன், கீதாக்கா... உங்களால் இது சாத்தியமாயிற்று... நன்றி உடன்பிறப்புகளே...//

    Diplomatic -ஆக இருப்பதெல்லாம் சரி. உண்மையான காரணம் முருகன் தான் என ஏன் புரியவில்லை? அதாவது மதுரை இட்லி, முருகன் இட்லி, இட்லிமுருகன்..

    பதிலளிநீக்கு
  22. கதம்பப் பதிவுகள் மெருகேறுகின்றன

    பதிலளிநீக்கு
  23. கதம்பப் பதிவுகள் மெருகேறுகின்றன

    பதிலளிநீக்கு
  24. // உண்மையான காரணம் முருகன் தான் என ஏன் புரியவில்லை? அதாவது மதுரை இட்லி, முருகன் இட்லி, இட்லிமுருகன்..//

    அப்படி எல்லாம் இல்லை ஏகாந்தன் ஸார்.. முன்னரும் அதாவது முருகன் இட்லிக்கடை சென்று வந்த பின்னர் உடனேயும் கூட பதிவு போட்டிருக்கிறேனே...!

    பதிலளிநீக்கு
  25. // கதம்பப் பதிவுகள் மெருகேறுகின்றன //

    நன்றி ஜி எம் பி ஸார்.

    பதிலளிநீக்கு
  26. ஹையோ இத்தனையும் விட்டுப் போட்டேனே....இந்த ஜல்பு, இருமல், தொண்டை என்னை ரொம்பவே படுத்திவிட்டது.நேற்று...ஹூம்

    அதிரா நான் பூஸாரைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போயிருப்பேன்....ஆனா நீங்க என்னோடு சண்டை போடுவீங்களேனுதான்....நான் வரும் போது பூஸாரைக் காணலையேனு!!! நீங்க பார்த்தாச்சல்லோ இனி எனக்குத்தான் அந்த ரெண்டும் ஹா அஹா ஹா ஹா

    என்ன ஒரே ஒரு கஷ்டம் இங்கு கொண்டு வந்தால் இந்த கண்ணழகி அவர்களைத் துரத்துவாளே...

    அதான்...

    ஸ்ரீராமுக்கு இன்னொரு பாஸ்!! இல்லையா அதிரா இந்தப் பூனை துரத்தி துரத்தி அவர் மௌஸைத் துரத்தி என்று..என்னோடு விளையாடு கம்ப்யூட்டரில் என்ன உக்காந்துருக்கேனு...

    கீதா

    பதிலளிநீக்கு
  27. அதிரா அனுக்கா மழையில நனைஞ்சா பொட்டு அழியாமல் இருக்குமா? பொட்டில்லாமல் ஒன்னும் வரலை தமனா போல! ஹா ஹா ஹா ஹா அதனால ஸ்ரீராம் காட்டில்தான் மழை...இந்த ரீசன் சொல்லிப்புடலாமே...ஹிஹிஹிஹிஹிஹி...அரம சார்பிலும் ஹிஹிஹிஹி....

    கீதா

    பதிலளிநீக்கு
  28. ஸ்ரீராம்ஜி எபி பிறந்தாளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் நிறைய ஆக்கங்கள் படைத்திட வாழ்த்துகள்.

    வழக்கம் போல் உங்கள் கவிதைகளை அனைத்தையும் ரசித்தேன். நன்றாக இருக்கின்றன.

    மரணம் என்பது யதார்த்தம் என்றாலும் நம் நெருங்கிய நபர் மரணிக்கும் போது வருத்தம் தான். தலைப்பு கொஞ்சம் அச்சப்படுத்தியது முதலில்...

    அந்தத் தாத்தா பாட்டி நிகழ்வு மனதை நெகிழ்த்திவிட்டது. இப்படி எத்தனைபேருக்கு வாய்க்கும்?!

    கண்ணதாசன் அவர்களின் வரிகள் அனைத்தும் யதார்த்தம்.

    அனைத்தும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றி துளஸிஜி.

    பதிலளிநீக்கு
  30. @ sriram:..முன்னரும் அதாவது முருகன் இட்லிக்கடை சென்று வந்த பின்னர் உடனேயும் கூட பதிவு போட்டிருக்கிறேனே...!//

    ஓ! முன்பே வந்திருக்கிறதா இட்லி? அப்ப சரி.

    பதிலளிநீக்கு
  31. அப்படியே இருந்தாலும் அது ஒரு குரங்கு. அதை நல்ல பழக்கங்கள் என்னும் கோலெடுத்து அடக்க வேண்டாமா?//

    சரியே பானுக்கா நான் சொன்னது நார்மல் கல்யாணங்களுக்கான ஹைஃபைவ். அதற்கு அது பொருத்தம் தானே. அப்புறம் மனதை அடக்குவது என்பது மிக மிக மிக ப்ரம்மப்பிரயத்தனம். எல்லோராலும் முடியாது. அது ஒரு சிலருக்கே முடியும் ஒரு விஷயம். அப்படி எல்லோருக்கும் முடிந்தால் எல்லோரும் அதிராவைப் போல் ஞானி ஆகிட்டால் இந்த உலகத்தில் எந்த நிகழ்வுமே இருக்காதே அக்கா ஹா ஹா ஹா அப்புறம் பத்திரைகள் ஊடகங்கள் எல்லாம் கதவை இழுத்து முடிவிட வேண்டியதுதான்....

    மனம் என்பது நீங்கள் சொன்ன பாயின்ட் மிகவும் சரியே எண்ணங்கள் சிந்தனைகளின் தொகுப்பு. அதை பேஸ் செய்துதான் ப்ரெய்ன் கெமிஸ்ற்றி எல்லோருக்கும் அவரவர் எண்ணங்களினால் எற்படும் அந்த கெமிஸ்ற்றியில் வேறுபாடுகள் இருப்பதால் தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையாக இருக்கிறான் வேறுபட்ட செயல்களால். (கோபம், பொறாமை எட்ஸ்ற்றா எட்ஸற்றா..) மனதை அடக்க முயல பல பயிற்சிகள் எடுப்பவரும் கூட மனம் பிறழுகின்றனர்.

    அப்படிப் பயிற்சிகள் எடுப்பவர் கூட ஷணப் பொழுதில் ஏற்படும் மனத்தடுமாற்றத்தில் தற்கொலையே செய்தும்கொள்கின்றனர். மனம் ஒரு பிசாசு....அதைக் கன்ட்ரோல் செய்வதற்கும் கொடுப்பினை வேண்டும். நாம் சொல்வது எளிது. செய்வது கடினம்.

    அதைத்தாவ விட்டால், தப்பி ஓடவிட்டால் நம்மைப் பாவத்தில் தள்ளி விடும்...!//

    சரிதான் ஆனால் அதுதானே ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது...

    // அதனால்தான் நிறைய அனுபவங்கள் கொண்டவர்களும், அறிவு முதிர்ந்தவர்களும் யாரையும், எதையும் கீழ்த்தரமாக விமரிசிக்க மாட்டார்கள். //

    யெஸ் யெஸ் யெஸ் யெஸ்....இது மிக மிக மிக மிக உயர்ந்த குணம்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. இருவரும் மிக மிகத் தங்கமானவர்களாக இருப்பார்கள் ஆனா அவர்களுக்குள் ஒற்றுமை இருக்காது அப்போ அவர்களை என்ன சொல்வீங்க?..//

    ஹையோ அதிரா இதைத்தான் நான் நேற்றெல்லாம் சொல்ல நினைத்து என்னால் வர இயலாமல் போய்விட்டது...இந்த லைன் உள்ள அந்த முழு கருத்தும் டிட்டோ செய்யறென் அதிரா...

    நாம் எப்போதுமே நம் நிலையிலிருந்து பார்க்கிறோம் அதனால் தான் கமென்ட் அடிக்கிறோம். அவரவர் ஷூவிலிருந்து பார்க்கும் போது எல்லாமே மாறுபடும் நீதி உட்பட.

    நான் ஏஞ்சலின் கருத்தையும் வழி மொழிவேன். அவரவர் விருப்பம். இதைத் தவறு என்றோ சரி என்றோ சொல்ல முடியாது.

    //மனங்கள் கடவுள் அருளால் தானாக பொருந்தி விட்டால் சொர்க்கம் ..வற்புறுத்தலில் பொருத்தி விட்டால் அது நரகமாகிடும்..//

    வெகு வெகு உண்மை அதிரா. நான் சொல்ல நினைத்து விட்ட கருத்துகள் பலவும் நீங்கள் சொல்லிட்டீங்க!! ஏஞ்சலும் சொல்லிருக்காங்க..

    // அதனால்தான் நிறைய அனுபவங்கள் கொண்டவர்களும், அறிவு முதிர்ந்தவர்களும் யாரையும், எதையும் கீழ்த்தரமாக விமரிசிக்க மாட்டார்கள். //

    இதைத்தான் நான் டிட்டோ செய்வேன்....இது பானுக்கா அல்லது ஸ்ரீராம் சொல்லிருக்காங்களோ?!!...சரி சரி அதிரா நீங்க ஞானிதான் ஞானியேதான் ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  33. கருப்பு வெள்ளைப் படம் மனதைக் கலங்க வைத்தது.

    /இப்போது
    நமக்குத் தெரியும்
    அவரின் பல நல்ல குணங்கள்
    முன்னாலேயே
    அவரிடம் இருந்ததுதான்./
    உண்மை.

    பதிலளிநீக்கு
  34. உயிரின் சாவி பிரஸ் சாவிதானோ

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!