Saturday, June 9, 2018

சீர் வரிசை உட்பட, இரண்டு மாதத்திற்கான மளிகை சாமான்....

1) தங்கத் தாலி, பட்டுப் புடவை, பட்டு வேட்டி மற்றும் 51 வகை சீர் வரிசை உட்பட, இரண்டு மாதத்திற்கான மளிகை சாமான் என்று, ஒன்றரை லட்சம் ரூபாய் செலவழித்து, உடல் ஊனமுற்ற ஒவ்வொரு மணமக்களுக்கும், இலவசமாக திருமணம் செய்து வைக்கிறார், சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த, 'கீதா பவன் அறக்கட்டளை'யின் நிர்வாக அறங்காவலர், அசோக்குமார் கோயல்....


2)  சீனிவாசனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது தன் நோயின் தன்மையை, ஏழ்மையை, இயலாமையை  ஒரு போதும் வௌிப்படுத்தவில்லை, நேர்மையும் நெஞ்சுரமும் லட்சியமும் கொண்டவராகவே தென்பட்டார்.... 

3)  தினமணியில் வந்த பாஸிட்டிவ் செய்தி.  இணைப்பு தருவதை விட இது பெட்டர்!  அங்கு ஆடிக்கொண்டே இருக்கும்!

4)  வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த அந்த மருத்துவரை அங்கே எட்டிப்பார்க்க வைத்தது அந்தத் தொழிலாளியின் விதி, நல்லநேரம்தான்.  5)  தக்க சமயத்தில் வெளிப்படையாகப் பேசி மதக்கலவரம் ஆகாமல் தடுத்ததுதான் பெரிய செயல்.  அடுத்த பாஸிட்டிவ், தன் ஒரே மகனைக் கொன்றவர்கள் குடும்பத்தையும் விருந்துக்கு அழைத்தது....28 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க...

middleclassmadhavi said...

Good morning

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம், கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

வாழ்க நலம்...

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

துரை செல்வராஜூ said...

ஆகா..
என்றுமில்லா அதிசயமாக....

Mcm அவர்களுக்கு நல்வரவு...

ஸ்ரீராம். said...

Goodmorning middleclassmadhavi...

middleclassmadhavi said...

Newspaper cutting seidigal nalla idea!! Kaalaile nalla news padikka koduthamaikku thanks! Nalla ullangal vaazhga!

ஸ்ரீராம். said...

//என்றுமில்லா அதிசயமாக.... Mcm அவர்களுக்கு நல்வரவு...//

ஆமாம்.. . இனிய ஆச்சர்யம்! கீதா மகன் வருகையில் சந்தோஷ டென்ஷனில் இருப்பார். கீதா அக்காவுக்கு பால் இன்னும் காயவில்லையாம்!

ஸ்ரீராம். said...

// Newspaper cutting seidigal nalla idea!!//

ஆம், குறிப்பாக தினமணி செய்திகள்.. காரணம் அவர்கள் தளத்துக்குச் சென்றால் குதித்துக் கொண்டே இருக்கும். விளம்பரங்கள் மூழ்கடிக்கும்..

துரை செல்வராஜூ said...

தன் மகனைப் பறிகொடுத்த பின்னும்
அதற்குக் காரணமானவர்களுக்கு விருந்து வைப்பது என்பது -

எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது...

அந்த பிப்ரவரி சம்பவத்தைப் போல இங்கும் கோவையில் ஒன்று நிகழ்ந்தது...

துரை செல்வராஜூ said...

தினமணியை இணையத்தில் படிப்பதற்குள் சந்தைக் கடை நெரிசலில் நுழைந்து சாமான் வாங்கிக் கொண்டு வந்து விடலாம்...

ஸ்ரீராம். said...

// தினமணியை இணையத்தில் படிப்பதற்குள் சந்தைக் கடை நெரிசலில் நுழைந்து சாமான் வாங்கிக் கொண்டு வந்து விடலாம்... //

ஹா... ஹா... ஹா... அதன் பொறுப்பாளர்களிடம் ஓரிருமுறை இதைச் சொல்லியும் விட்டேன். பயனில்லை!

middleclassmadhavi said...

இன்று என் மகன்களுக்கு அலுவலகம்/கல்லூரி விடுமுறை. அதனால் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற அமர செய்யலாம்! அதான்....

கோமதி அரசு said...

//உடல் ஊனமுற்றோருக்கு செய்யும் உதவி, இறைவனுக்கு செய்யும் தொண்டு என்று காந்திஜி சொன்ன வாக்கை, என்னால் முடிந்தளவு செயல் படுத்துகிறேன்...//

''கீதா பவன் அறக்கட்டளை'யின் நிர்வாக அறங்காவலர், அசோக்குமார் கோயல்.அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

சீனிவாசன் கனவு பலிக்க வேண்டும்.வாழ்க வளமுடன்.

சர்வரின் நல்ல செயல் தொலைக்காட்சியில் பார்த்தேன். நல்ல உள்ளங்கள் இருக்கிறது என்பத்ற்கு ரவி சாட்சி.

நல்ல சமயத்தில் வந்து உதவி மனோகர் உயிரை காப்பாற்றிய வைத்திய நாதன் டாக்டர் நாகரேந்திர பூபதிக்கும், உதவிய மருத்துவ கல்வி மாணவருக்கும் வாழ்த்துக்கள்.

மதஓற்றுமை செய்தி அருமை. வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai said...

அசோக்குமார் கோயல் பிரமிப்பான மாமனிதரே..

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம்.
தினமணியில் படித்த செய்தி . ஹோட்டல் ஊழியரின் மாண்பு பெரியது.

அதே போல தக்க சமயத்தில் உயிர் காப்பாற்றிய மருத்துவரை எத்தனை பாராட்டினாலும் தகும்.
மனித நேசம் பாராட்டிய இஸ்லாமிய நணபருக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி ஸ்ரீராம்.

நெ.த. said...

செய்திகள் அருமை. கடைசிச் செய்தி ஆச்சர்யம் ஊட்டுகிறது

Geetha Sambasivam said...

நான் தான் நேத்திக்கே சொன்னேனே, லேட்டாகும்னு! எங்கே! யாரும் ஒழுங்காப் படிக்கிறதில்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :) தினமணி செய்திகள் மட்டும் படிச்சிருக்கேன். மத்ததுக்குப் பின்னர் வரேன். இன்னிக்கு மருத்துவரைப் பார்க்கப் போகணும். அதுக்குத் தயார் செய்துக்கணும். அங்கே போய் உட்காரணும்! கூட்டம் இருக்கும்.

Bhanumathy Venkateswaran said...

சக்சேனா வைத்து பாராட்ட வார்த்தைகள் இல்லை. கீதா பவன் அறக்கட்டளையின் செயல் போற்றுதலுக்குறியது.சீனிவாசனின் கனவு பலிக்கட்டும்.

Bhanumathy Venkateswaran said...
This comment has been removed by the author.
Bhanumathy Venkateswaran said...

மன்னிக்கவும் என் பின்னூட்டத்தில் சக்சேனாவை என்று படிக்கவும். ஆட்டோ கரெக்ஷன் அட்டூழியம்.

துரை செல்வராஜூ said...

/// எங்கே/.. யாரும் ஒழுங்கா படிக்கிறதில்லே!...///

பெஞ்ச் மேல ஏறி நிக்கலாமா டீச்சர்!?...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

இலவசமாக பல சீரோடு திருமணம் செய்து வைக்கும் கீதா பவன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அசோகன் குமார் கோயல் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஏழ்மையில், உடல் நிலை சரியில்லாத போதும், படிப்பில் சாதிக்க நினைக்கும் சீனிவாசன் மென்மேலும் முன்னேற வேண்டும். வாழ்த்துக்கள்.

சர்வரின் நேர்மையான செயலும், தக்க சமயத்தில் கவனித்து உயிர் காத்த மருத்துவரின் செயலும் போற்றத்தக்கவை.

மத ஒற்றுமை காத்த மாமனிதரும் போற்றதலுக்குரியவர்.பாராட்டுக்கள்.

இவர்களை பாஸிடிவ் செய்திகளில் அறிமுகப்படுத்திய தங்களுக்கு என் நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம். நல்ல மனிதர்கள் பற்றிய சிறப்பான செய்திகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. சில தகவல்கள் படித்தவை.

Asokan Kuppusamy said...

போற்றுதலுக்கு உரியவர்கள் பாராட்டுகள்

ராமலக்ஷ்மி said...

நல்ல செய்திகளை அறியத் தந்தமைக்கு நன்றி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!