சனி, 12 செப்டம்பர், 2009

லஞ்சகக் கவிப்பா

லஞ்சம் எனப்படுவது வலி யோரால்
பஞ்சத்திலும் பெறப் படும்.

இந்த மாதிரி கி்றள் நிறைய எழுத முடியும் என்பது ஆர்வத்தைத் தூண்டும் விஷயம். இதில் நகைச் சுவை எள்ளல் வயிற்றெரிச்சல் இன்னும் எவ்வளவோ உணர்வுகள் செறிந்து சுவை தருகிறது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யலாமா?

லஞ்சம் பெறாதான ஆதலெளிது அவ்வாறில்
லஞ்சம் இடாத நிலை.

வஞ்சமாய் மிரட்டி வன் சொற்கள் சொல்லி
லஞ்சம் பெறப் படும்.

காலத்தில் ஆக வேண்டி காசு கொடுத்தோர்
ஞாலத்தில் நிறைய உளர்.

கையூட்டுப் பெற்று களவாடி சேர்த்த பணம்
பொய்ஊட்டுப் போலக் கெடும்.

வோட்டுக்குக் காசுதர வீட்டுககுப் புகுந்தகால்
நாட்டுக்கு வந்ததே நலிவு.

கம்பெனியிடம் கோடி கைநீட்டிப் பெறுகின்றார்
வம்பெதற்கு எனவிருந்தக் கால்.

டெண்டேரில் பணம் போட்டு டென் டைம்ஸ் ஈட்டிட
குண்டர்கள் துணை வேண்டும் காண.

2 கருத்துகள்:

  1. ஓர் அதிகாரத்திற்கு இன்னும் மூன்று தேவை -- அதை யாராவது கையூட்டாகப் பெற்றுச் சென்றுவிட்டனரா?

    பதிலளிநீக்கு
  2. "வோட்டுக்குக் காசுதர வீட்டுககுப் புகுந்தகால்
    நாட்டுக்கு வந்ததே நலிவு"

    லட்சர அட்சம்... சீ...அட்சர லட்சம் பெறும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!