புதன், 9 செப்டம்பர், 2009

பேராசிரியர் கல்கி.

                                                                               
இன்று பேராசிரியர், நகைச்சுவையாளர், நாவலாசிரியர், கல்கி அவர்களின் பிறந்த நாள். (09-09-99) - 1899! கல்கியின் தமிழ் படித்து - தமிழ்ப் பற்றுக் கொண்டோரில் நானும் ஒருவன். வாழ்க அவர் புகழ்.!

4 கருத்துகள்:

 1. கல்கி என்றால் நாவல்கள், அதுவும் குறிப்பாக சரித்திர நாவல்கள் என்று நினைப்பவர்கள் அவரது ஏட்டிக்கு போட்டி, ஒ மாம்பழமே போன்ற கட்டுரைகளையும் , கர்நாடகம் என்ற பெயரில் அவர் எழுதிய இசை விமர்சனங்களையும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன். சமீபத்தில், நான்கு நாட்களில் பொன்னியின் செல்வன் முழுவதும் படிக்க முடிந்தது. கல்கியில் வெளி வந்த போது இருந்த வாராந்தர இடை வெளிகள் இல்லாமல் ஒரே மூச்சில் படித்தது ஒரு நல்லா அனுபவம். இருப்பினும், நெட்டில் கிடைத்த புத்தகத்தில், திரு மணியம் அவர்களின் சித்திரங்கள் இல்லை என்பது ஒரு குறை அனுபவம்.

  ஆமாம், சூடாமணி விஹாரத்துக்கும் நாகைக்கும் அவர் கூறும் திசைகள் சரியானவை தானா?

  பதிலளிநீக்கு
 2. சூடாமணி விஹாரம் - பழைய அவுரித் திடலின் பக்கத்தில் இருந்த நீதி மன்ற வளாகம் என்று என்னுடைய தமிழ் ஆசான் (பன்னீர் செல்வம்) கூறினார். அங்கு முன்காலத்தில் புத்தர் சிலைகள் காணப்பட்டன என்றும் கூறினார். அவுரித் திடல் இப்பொழுது புதிய பேருந்து நிலையம் ஆகிவிட்டது.

  பதிலளிநீக்கு
 3. அப்போ சூடாமணி விஹாரம் இப்போதைய பஸ் ஸ்டாண்டுக்கு மேலே இருந்ததா அல்லது கீழே இருக்கிறதா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!