புதன், 30 செப்டம்பர், 2009

ஜெயிக்க 100 வழி

"என்னடா இப்பதான் போனே...அழுதுகிட்டே வரே...."
"பாய் அடிசிட்டான்மா..."
"ஏண்டா...நான் அடிசுடுவேன்னு வீரமாப் போனியே..."
"என்னம்மா பண்றது? என் கூட வந்தவங்க சரி இல்லைம்மா..."
"விடுடா...மஞ்சமாரி கிட்டயாவது ஜாக்ரதையா இரு..அடிச்சுடு..."
"இல்லம்மா...மழை வந்ததால ஆளுக்கு ஒண்ணு எடுத்துகிட்டோம் அம்மா..."
"அப்புறம்.. இப்போ என்ன பண்றது...என்னடா இது...முதல்லயே பாயை அடிச்சுருக்கலாம் நீ..."
"விடும்மா...இன்னமும் கூட வழி இருக்கு...."
"இன்னமுமா...? எப்படிடா? உன் சான்ஸ் தான் முடிஞ்சு போச்சே...ஒண்ணுதானே பாக்கி? அதுலயும் ஒண்ணும் பண்ண முடியாதே..."
மிச்சப் பேர் எல்லாம் அடி வாங்கினா வாய்ப்பு இருக்கும்மா..."
"எப்படி?"
"மஞ்சமாரியும் பாய் கிட்ட அடி வாங்கணும்..."
"போதுமா?"
"ம்ஹூம்...சேப்பு சட்டைக் காரங்களோட நான் அதிகமா அடிச்சிடணும்..."
"முடியுமா?"
"எனக்குத் தெரியலயே..."
"நீ ரெண்டாவதா அடிச்சா,,,?"
"நான் 85 அடி கூட அடிக்கணும்..."
"அங்க... பாய், மஞ்சமாரில...?"
"பாய் 20 கூட அடிக்கணுமாம்..."
"பாய் இருக்கா...."
"ஏம்மா..?
"ப்ராண்டதான்...போடா போக்கத்தவனே...உன் முயற்சில ஜெய்டான்னா.. வேற எவனோ தப்பு பண்ணனுமாம்...நீ அங்கப் போய்டுவியாம்... போடா புண்ணாக்கு..."

6 கருத்துகள்:

 1. ஆஹா - எ B அருமையான கற்பனை உங்களுக்குத் 'தோணி'யிருக்கு!
  :: மட்டையடி மகாதேவன்::

  பதிலளிநீக்கு
 2. ஹூம் - மஞ்சக் காட்டு மைனர்கள் - ஜெயிக்கிறது நிச்சயமாகிவிட்டது.
  தோனியும் தோழர்களும் - டிக்கெட் ரிசர்வ் செய்துவிடலாம் - வீடு திரும்ப - காரி கிஷ்டன் - வேறு ஏதாவது யுக்திகள் தேடலாம்.

  பதிலளிநீக்கு
 3. நம்ம ஊர் கிரிக்கெட் நம்ம அரசியல் வியாதிகளை விட சீக்காளியா இருக்கறதென்னவோ வாஸ்தவம் தான்!

  அதுக்காக, இப்படியெல்லாம் தலைப்பு வச்சு இப்படியெல்லாம் வயித்தெரிச்சலைக் கொட்டிக்க கூடாது:-((

  பதிலளிநீக்கு
 4. என்ன தான் ஆடுலானும் ஆடடிலானும் அவர்களுக்கு சம்பளம் வர போகுது ...பின்ன என்ன அவர்களுக்கு ..நீங்க என்ன தான் வழி சொன்னாலும் no use for them..

  பதிலளிநீக்கு
 5. I think this is posted based on the ICC Champions trophy. Commenting on India's qualifying chances!? Usage of words matching respective teams is good..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!