Saturday, September 19, 2009

குழப்ப அழைப்புகள்!
சென்ற வாரம் - சன் டி வி இல் நினைத்தாலே இனிக்கும் பட - கலந்துரையாடலைப் பார்த்து, கேட்டுக் கொண்டிருந்தேன். நடிகர்கள், நடிகை ப்ரியாமணி டைரக்டர் - எல்லோரும் அமர்ந்து - பழைய ஆனந்தவிகடன் பாணியில் - 'எனக்கு பிடிச்சிருக்கு - எனக்கும் பிடிச்சிருக்கு - எனக்கு கூட' என்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது போன் பண்ணிய ஒரு அம்மணி - "நான் அமுல் பேபி கிட்ட பேசணும்" என்றார்.  காமிரா முன் உட்கார்ந்திருந்த எட்டு பேரும் குழம்பிப் போனார்கள். பிறகு ஒருவாறாகச் சமாளித்த ப்ரியா மணி - மைக்கைக் கையில் வாங்கி - நானா? என்பது போல் கேட்டார். போனில் அழைத்த அம்மணி - 'இல்லைங்க' என்றார். உடனே மைக் ப்ரித்விராஜ் கைக்குச் சென்றது - அவருக்கு ப்ரியாமணி நம்பிக்கையில் பாதி கூட 'தான் ஒரு அமுல் பேபியாக இருக்கலாம்' என்பதில் இல்லை. ஆரம்பத்திலிருந்தே பாக்யராஜ் தான் ஒரு அமுல் பேபி இல்லை என்று தீர்மானித்துவிட்டார் - எனவே அவர் மைக்குக்கு கை நீட்டவே இல்லை. அதற்குப் பிறகும் கூப்பிட்ட அம்மணி உங்களில் யார் அமுல் பேபி என்று நீங்களே கண்டுபிடிங்க என்று சொல்லி குழப்ப - கடைசியில் வேறு வழியில்லாமல் - மைக் அங்கு இருந்த வில்லன் (?) நடிகரைத்  தவிர்த்து  மீதி  இருந்த  ஷக்தியிடம்  கொடுக்கப்பட்டது. பிறகு அழைத்த அம்மணி அந்த (வழிச்சல்) உரையாடலைத் தொடர்ந்தார்.  என்  மனதில் ஓடிய சந்தேகங்கள் - 
1) போன் - இன் நிகழ்ச்சியில் கூப்பிடுகின்ற அழைஞர்கள் - 'எங்க ஊருக்கு ஒரு டிக்கெட் கொடுங்க' பாணியில் பேசாமல் ப்ளைன் பேச்சு பேசுபவர்களாக இருக்கக் கூடாதா?  
2) அவர்கள் ஊரில் இருக்கும் பேபிகள் - மீசை தாடியுடன்தான் காணப் படுவார்களா?
3) அழைத்தவர்  ஒருவேளை 'அமுல்' கம்பெனியில் விளம்பரப் பிரிவில் வேலை செய்பவரா?


4) உண்மையிலேயே ஷக்திக்கு பால் வடியும் முகமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். அதன் விளைவு - ஐயோ பயமா இருக்கு! --->ஒரு தகவல் - அடுத்த சில வாரங்களுக்கு - சன் டி வி இல் டாப் டென் நிகழ்ச்சியில் நம்பர் ஒன் ஆக - இனி எந்த பாட்டு / படம் இடம்பெறும் என்பதை - சுலபமாக எந்த குப்பனும் சுப்பனும் அனுமானித்து விடலாம்!

2 comments:

Ravichandran said...

அழைஞர்'களெல்லாம் 'அலைஞர்'களாக இருப்பதுதான் பிரச்னை....முகம் தெரியா நிலையில் என்ன வேண்டுமானாலும் பேச மனம் துணிகிறார்கள்...அவர்தம் உறவினர்கள் நண்பர்கள் அதைக் கேட்க நேர்ந்தால் என்ன நினைப்பார்கள் என்று தோன்றும்

Anonymous said...

Paal vazhivadhu enraal...it should come out from the side...udhadu vazhiyaaga niagara falls madhiri pottu..irundhalum sirandha karpanai !

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!