உங்களில் எத்தனை பேர் சூப்பர் சிங்கர் ரசிகர்களோ எனக்குத் தெரியாது. நானும் தொடர்ந்து பார்க்காத ஆள்தான். எப்போதோ ஒருமுறை பார்த்த போது ஏற்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆசை.
சின்னப் பையன்களுக்கு பாரதியார் முண்டாசு, பொய் மீசை, கலர் ஜிப்பா, பஞ்சகச்சம் (ரெடி மேட) என்று கண்ணை உறுத்தும் கலர்களில் உடை. சின்னப் பெண்கள் பற்றியோ சொல்லவே வேண்டாம். நூடுல்ஸ் அல்லது strapless வெள்ளை கவுன் ஓவராக மேக் அப என்று ஒரு மினி த்ரிஷா மாதிரி தயார் செய்து கொண்டு வருகிறார்கள்.
இந்த மழலைப் பட்டாளம் பாட எடுத்துக் கொள்ளும் அயிட்டங்கள் சில சமயம் திடுக்கிட வைக்கும். அது என்ன மாதிரி செலக் ஷன் என்று நான் சொல்ல வேண்டாம் நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.
ஜெயித்துவிட்ட பாடகர் ஐஸ்வர்யா ராய் பிரசித்தி படுத்திய பாணியில் கண்ணீர் ததும்ப திகைக்க வேண்டும். ஆண் பிள்ளைகள் துள்ளித்துள்ளிக் குதிக்க வேண்டும். யா என்று பலமாகக் கூவினால் சிலாக்கியம்.
தோற்றுப் போனால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வெல்லம் சாப்பிட்ட மாதிரி. அழும் போட்டியாளர், கலங்கும் அப்பா அல்லது அம்மா, இவர்களை சோகமான இசைப் பின்னணியோடு அசைந்தாடுவதாகக் காட்டலாம்.
யாரும் சோகம் காட்டவில்லை என்றால் நடுவர்களை விட்டு அவர்களை சீண்டி அழ வைக்க முயற்சிக்கலாம். முடியாத பட்சத்தில் நடுவர்களே கோபித்துக் கொண்டு வெளி நடப்புச் செய்யலாம். எப்படியோ காண்பவர்களை கட்டிப் போட வேண்டும் என்பது தான் முக்கியம்.
காதல் விரகம் தொனிக்கும் பாடல்களில் feel இல்லை என்று நடுவர்கள் கமன்ட் சொல்லலாம்.
இதெல்லாம் யார் சொல்லியும் நிற்கப் போவதில்லை. என்றாலும் வயிற்றெரிச்சல் சொன்னாலாவது சற்று தீவிரம் குறையலாம் என்ற எண்ணத்தில் கொட்டி இருக்கிறேன்.
என்னென்னவோ 'பில்ட் அப்' கொடுக்கிறார்கள் என்பது உண்மைதான். இந்த நிகழ்ச்சிகளையும் - சீரியல்கள் போல் கண்ணீர் - அதிர்ச்சி - கவலை - (நல்ல வேளையாக சீரியல்களில் வரும் 'சுருதி பேத' விவகாரங்கள் இங்கு இல்லை) ஆகியவைகளைக் கலந்து மிக்சியில் அடித்துக் கொடுக்கிறார்கள்.
பதிலளிநீக்குநல்ல அருமையான வர்ணனை. நிகழ்ச்சியை நேரில் பார்த்த உணர்வு....அதாவது நூறு போட்டிகளில் பங்கு கொண்ட அந்தக் குழந்தை ஒண்ணரை சினிமாப் பாட்டுப் பாடி நடுவரானவரால் நிராகரிக்கப் பட்டதால் அழுதிருப்பாரோ?
பதிலளிநீக்குகுட்டீஸ் பாடும் பாட்டு கேட்டு, மட்டு இல்லா மகிழ்ச்சி அடைவீரா - அதை விட்டு - குழந்தைகள் ப(பா)டும் பா(ட்)டு குறித்துப் பதிவு இட்டு - தயாரிப்பாளர்கள் குட்டைப் புட்டு புட்டு வைத்து - இப்படி போட்டுக் கொடுப்பீர்களா?
பதிலளிநீக்கு(இந்தப் பின்னோட்டத்தில் மொத்தம் எவ்வளவு 'டு' இருக்கு என்று சொல்பவருக்கு ஒரு பரிசு உண்டு )
எனக்கு idea star singer in Asianet மிக்கவும்பிடித்திருக்கிறது. அதில் சுருதி தாளம் போன்ற சில விஷயங்கள் திரும்ப திரும்ப சொல்லப்பட்டாலும், நடுவர்கள் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தான் பேசுகிறார்கள். மலையாளம் தெரியா விட்டாலும் தினமும் இரவு எட்டரை மணிக்கு ஒளி பரப்பாகும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் போட்டிகளைப் பற்றிய உங்களது ஒட்டுமொத்தமான அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வீர் என்பது உறுதி.
பதிலளிநீக்குநிகழ்ச்சி அதிகம் பேரால் பார்க்கப் படுகிறது என்பதால், விளம்பரங்களும் அதிகம் - வெகுமதிகளும் அதிகம்.
Asianet - அந்த நிகழ்ச்சியில், சென்ற வாரம் ஒரு நடுவர் பாடினார் - "அலை பாயுதே - கண்ணா - 'உன்' மனம் மிக அலை பாயுதே!" - எப்பொழுதோ சுப்புடு அடித்த கிண்டல் ஒன்று நினைவுக்கு வந்தது - "தாயே யசோதா உந்தன் நாயர் குலத்தில் உதித்த மாயன் ...."
பதிலளிநீக்குஎன்று ஒரு பிரபல M வித்வான் வெகு நாட்கள் பாடிக் கொண்டிருந்தாராமே!
ஒண்ணரை சினிமாப் பாடல் பாட வேண்டும் என்றால் கூட நூறு போட்டியில் ஜெயிதால்தானே அந்த இடத்துக்கு வர முடியும்?
பதிலளிநீக்குஆசியாநெட் நிகழ்ச்சி ரொம்ப நன்றாக இருப்பதை நானும் சில முறை பார்த்து ரசித்திருக்கிறேன். அதற்கு காரணம் கர்நாடக சங்கீதம் பாடப்படுவது என்பதாக இருக்கலாம்.
பதிலளிநீக்குசினிமா பாடல்களிலும் சில அருமையான இசை இனிமையைக்கொன்டவை. அவற்றை தேர்வு செய்து பாடுவது மகிழ்ச்சி தான். ஆனால் குத்துப் பாட்டு ரகங்களில் பில்ட் அப ரொம்ப அதிகமாகிக் கொண்டே வருகிறதாக எனக்குத் தோன்றுகிறது.
Mali said--
பதிலளிநீக்குஎனது நீண்ட நாளைய ஆசை:
நடுவர்களை எல்லாம் அழைத்து போட்டி
வைத்து" சுப்புடு" போன்ற கிரிடிக்சை கூப்பிட்டு
நார் நார் ஆக கிழிக்க வேண்டும்என்று.