1951-52 வாக்கில் சிவாஜி நடித்து முதல் படம் "பராசக்தி" வந்தது. மு.க வசனம். படம் பிய்த்துக்கொண்டு ஓடி நல்ல வசூல். அதில் சிவாஜிக்காக சிதம்பரம் ஜெயராமன் பாடிய காக்கா பாட்டு ரொம்ப பிரபலம். அதை பட்டி தொட்டிகளில் எல்லாரும் பாடிக் கொண்டாடுவர். அதில் இரண்டு வரி கீழே தருகிறேன்.
"பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க,
பட்சமாயிருங்க, பகிர்ந்துண்டு வாழுங்க, உங்க பழக்கத்தை மாத்தாதீங்க.."
பாடல் ஆசிரியர் பாவலர் பாலசுந்தரம் என்று நினைவு. கதையும் அவருடையதுதான். .
இந்த பாடலை மிகுந்த உற்சாகத்துடன் பாடிய எங்கள் நண்பர் குழுவில் ஒருவர் பட்சமாயிருங்க என்ற வார்த்தையை மா வுக்கு பதிலாக ம போட்டு பாடினார். அதைக் கேட்டுவிட்டு ரொம்ப சீரியஸ் ஆக முகத்தை வைத்துக்கொண்டு எம் குழு நண்பர் ஒருவர் " மயிர் சாதாரணமாக கருப்பு அல்லது வெள்ளையாகத்தான் இருக்கும். பச்சை மயிர் நான் பார்த்தது இல்லை. வார்த்தையை சரியாகப் பாடு ஒரு கால் நரைச்ச மயிரோ என்னவோ " என்று சொல்லிக் கலகலப்பு ஊட்டினார்.
"பட்சமாயிருங்க" என்ற வரியை பட்சணமாயிருங்க என்று பாடாமல் போனாரே....
பதிலளிநீக்கு