வியாழன், 24 செப்டம்பர், 2009

ஒட்டுக் கேட்ட அனுபவம்.

அண்மையில் ஒரு ஐந்து நட்சத்திர மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன். நான் அனுப்பப்பட்ட பகுதியில் ஒரு இருபது வயதுப் பெண் பொறுப்பில் இருந்தாள் நான் வெளியில் காத்திருக்கும் வேளையில் ஒரு இளைஞன் அவளை வெளியே அழைத்து அரட்டை அடிக்க ஆரம்பித்தான்.  சரிதான் காதலன் காதலி சம்பாஷணையைக் கேட்கும் அரிய வாய்ப்பு என்று எண்ணிக் கொண்டேன். நிறையப் பேசிக்கொண்டிருந்தார்கள். அது என்ன என்று சொல்வது சரியல்ல.  இடையில் தற்செயலாக அந்தப் பெண்ணின் காலில் மெட்டி இருந்தது என் கண்ணில் பட என் கண்ணோட்டம் திடும் என்று மாறியது.  ஐயோ பாவம், கணவன் மனைவி வீட்டில் பேசிக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை போல் இருக்கிறது இங்கு வந்து சல்லாபம் செய்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டேன்.
ஊம். நீ ரொம்பப் படிச்ச பொண்ணு என்று அந்த இளைஞன் கிண்டலாகக் கூறியதைக் கேட்டதும் எனக்குள் மீண்டும் ஒரு கேள்வி. (இதென்னடா புதுக் குழப்பம்? ) அண்ணாத்தே இந்தக் கிண்டல் எல்லாம் வேண்டாம். என்று செல்லமாக அவன் முதுகில் அவள் தட்டியதும் என் குழப்பம் இன்னும் அதிகம் ஆகியது.  ஒருவேளை அண்ணன் தங்கையோ? ஆனால் பேச்சின் உள்ளடக்கம் அப்படி இல்லையே! சரி பாக்க வரப்போறே என்றால் முதல்லேயே போன் பண்ணிட்டு வா, திடும் என்று வராதே என்று சொல்லி அந்தப் பெண் தன வேலையை கவனிக்கப் போனாள். அவள் செல்வதை நேசமாகப் பார்த்தவாறு அந்தக் கணவன், அல்லது அண்ணன் அல்லது கள்ளக் காதலன் (?) மெதுவாக வெளியேறினான்.
என் கண்ணோட்டத்தை மாற்றியது இரண்டு விஷயம். ஒன்று காலில் அணிந்திருந்த மெட்டி.  அடுத்தது அண்ணாத்தே என்ற விளி.  இப்போதெல்லாம் மெட்டி அணிவதற்கும் திருமணம் ஆவதற்கும் தொடர்பு இல்லையோ.  அண்ணாத்தே என்ற பதம் யாருக்கு வேண்டுமானாலும் பயன் படுத்தலாமோ.  வித விதமான கற்பனைகளுக்கு இடமளிக்கும் இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு புதுமையாகப் பட்டது.

ராமன்

3 கருத்துகள்:

  1. ஹூம் நாட்டுல ஒரு கணவன் (மற்றவர்) மனைவியிடம் பேச கூட முடியாது போலிருக்கே - நாடு ரொம்ப கேட்டுப் போச்சு! நீங்களும் தான்!
    :: அனேக பத்தினி விரதன்::

    பதிலளிநீக்கு
  2. ஒட்டுக் கேட்ட அனுபவத்துக்கு ஓட்டுப் போட்டு விட்டோம்.

    பதிலளிநீக்கு
  3. மெட்டி Fancy ஆகி விட்டது. அண்ணா என்று கூப்பிடுவது அரசியல்வாதிகள் முதல் அனாமத்துகள் வரை பொது விளி ஆகி விட்டது. எனவே இதெல்லாம் கண்டு பிடிப்பது கஷ்டம்தான்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!