8.11.10

ஜல், ஜல் , ஜல் என்னும் ....

                      
சென்னை எப்படி இருக்கின்றது?
'ஜில்'லுனு இருக்கா? அல்லது 'ஜல்'லுனு இருக்கா?

சரி, மழை சம்பந்தப்பட்ட சில 'ஜாலி' கேள்விகள்:
(குறிப்பு: பதில்கள் பெரும்பாலும் ஈரெழுத்து வார்த்தையாக இருக்கும்.)

# ஒன்று: மழை நாளில், குடை பிடித்துக் கொண்டு பார்க்குக்கு வாக்கிங் செல்பவரை எப்படி அழைக்கலாம்?

# இரண்டு: அடாது மழை பெய்தாலும், விடாது குடை பிடித்துக் கொண்டு, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுபவரை என்ன சொல்லலாம்?

# மூன்று:  கொட்டுகின்ற மழையில், ரயில் பஸ் ஓடவில்லை என்றாலும் சைக்கிளிலாவது அலுவலகம் செல்லும் நபரை என்ன சொல்லலாம்?

# நான்கு: காசு கொடுத்து நாம் வாங்கிய பொருள்தான்; ஆனால் இது மழையில் நனைந்தால், நாம் கவலைப்பட மாட்டோம். அது, எது?

# ஐந்து How beautiful is the rain ! என்னும் அழகிய ஆங்கிலப் பாடலை இயற்றிய கவிஞர் யார்?

பதில் தெரிஞ்சவங்க, உடனே கருத்துரையுங்கள்!
                                          

12 கருத்துகள்:

அஹ‌ம‌து இர்ஷாத் சொன்னது…

4. Umbrella

5.Henry Wadsworth Longfellow

எல் கே சொன்னது…

terinjathu onnuthan athuku irshad sollitar

பெசொவி சொன்னது…

முதல் மூன்று கேள்விக்கு விடை : லூசு
:)

சுருதிரவி..... சொன்னது…

ஓன்று,இரண்டு,மூன்றுக்கு விடை லூசு.நாலாவது குடை

அப்பாதுரை சொன்னது…

கேனை, லூசு,சடை, குடை, ??

Unknown சொன்னது…

பதில் எல்லோரும் சொல்லியாச்சா..

பாஸ்கரன் சொன்னது…

கடன்காரன் கண்ணில் படவேண்டாம் என்று குடையைப் பிடித்துக் கொண்டு போனால் இப்படி சென்னை டிராபிக் போலீஸ் காரர் மாதிரி என்னைக் கூப்பிட்டு இப்படி மானத்தை [மிச்சம் மீதி இருப்பதை] வாங்குகிறீர்களே அப்பா இது ஞாயமா?

௨. பேதை
௩ [ மீனாக்ஷி புருஷன்] மீபு

Chitra சொன்னது…

மழை பெய்யும் போது, அதை ரசிக்காமல் - அல்லது திட்டாமல் - இப்படி உட்கார்ந்து போட்டி ஒன்றை யோசித்த உங்களை எப்படி "பாராட்டலாம்"? ஹா,ஹா,ஹா,ஹா....

ஹேமா சொன்னது…

அப்பா சொன்னதுதான் சரியாயிருக்கும்.

ஹேமா சொன்னது…

மீனு...சுகம் விசாரிச்சிருந்தீங்க.நான் நல்ல சுகம்...நீங்களும்தானே.
பிந்தின அன்பான தீபாவளி வாழ்த்துகளும் கூட !

R. Gopi சொன்னது…

முதல் மூன்று பேரை நான் கேட்க விரும்புவது, " உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?"

நான்கு: நம்மளைக் கால் கடுக்க நிக்க வெச்சுத் தங்கமணி வாங்குன பட்டுப் புடவை

ஐந்து: கூகிளில் இருக்கும்

Madhavan Srinivasagopalan சொன்னது…

எனக்கு எல்லாத்துக்கும் விடை தெரியும் ஆனா சொல்ல மாட்டேன்.. சொன்னா மட்டும் நீங்க சரி / தப்புனு சொல்லி சரியான விடைய சொல்ல மாட்டீங்களே .. அதான்..