வியாழன், 19 ஜனவரி, 2012

யானை, கிரிகெட், பட்டிமன்றம், எஸ் எம் எஸ் கட்டணங்கள்...வெட்டி அரட்டை.

       
ஆடாத மனமும் உண்டோ? 
   
தோனிக்கு ஒரு மேட்ச் தடையாம்.... காரணம் மெதுவான ஓவர் ரேட்டாம்...     
    
மொத்த டீமும் தோனியைப் பார்த்துப் பொறாமைப் படும்.
     
திட்டு குறையுமே... ஏதாவது ஐடியா செய்து மொத்த டீமுக்குமே தடை வரும்படி ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்... அடுத்த மேட்ச் விளையாடித்தான் ஆக வேண்டுமா என்ன? (அதுவும் ஊர்ப் பெயரைப் பாருங்கள் - அடிலயிட் (அடி + Laid) ரிசல்ட் தெரியும். பேசாமல் நீங்களே ஜெயித்ததாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவித்து விட்டு கார் விளையாட்டு, மூணு சக்கர சைக்கிள், பனிச் சக்கரச் சறுக்கு என்று போய் விளயாடியாவது பொழுதைக் கழிக்கலாம்.
                             
"ஐ பி எல் வந்ததும் பாருங்கள்.. இவர்கள் எல்லாம் மிகப் பிரமாதமாய் விளையாடுவார்கள் மக்களும் ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவார்கள்" என்று பிஷன் சிங் பேடி சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது!
********************************
 So & சோ 

  
ஜெயா செய்தியில் துக்ளக் ஆண்டு விழா பற்றிச் சொல்லும்போது ஸோ ஸோ என்று பத்து முறை சொன்னார் அந்தப் பெண் செய்தி வாசிப்பவர். அவர் குறிப்பிட்டது துக்ளக் ஆசிரியர் 'சோ'வை!
**********************************
 ஆன மட்டும் பார்க்கிறார்கள்!  

கேரளாவிலிருந்து யானைகளை வண்டியில் அழைத்து வந்து உலவ விட்டு தமிழக மக்களை பயமுறுத்துவதாக சில மக்கள் சொல்வதை செய்திச் சேனல்கள் காட்டின, சொல்லின.
                  
மனிதர்களை அவை  கொல்வதில்லை என்றாலும் கேஷுவலாக சுற்றி வருகின்றன என்றார்கள். காட்டு யானைகள் என்றால் மனிதர்களைக் கண்டால் ஓடுமே... அல்லது எதிர்க்குமே என்றார்கள். சிலர் அபபடி சர்வ சாதாரணமாக இவற்றை அழைத்து வந்து விட்டுச் செல்வதற்கு சீப்பான விஷயமில்லை யானை என்றும் கருத்து வந்தது.
                     
காடுகளை அழிப்பதிலும் வன விலங்குகளின் இடத்தை மனிதன் ஆக்ரமிப்பதாலும் அவை தற்சமயம் கிராமங்களுக்குப் படை எடுக்கின்றன என்றும் கூடிய விரைவில் நகரங்களுக்குள்ளும் அவை நுழையும் என்று வன ஆர்வலர்கள் சொல்கின்றனராம்.
                   
அப்போ கொஞ்ச நாளில் சென்னைத் தெருக்களிலும் மற்ற இடங்களிலும் ஆடு மாடுகள் மேய்வது போல யானைகள் திரிவதைக் காணலாம் என்று எதிர்பார்க்கலாமா... !    
***************************************
உன்னை வாழ்த்திப் போடுகிறேன்! 


   
இந்தமுறை பழைய முறையில் பொங்கல் வாழ்த்துகள் வாங்கி நண்பர்களுக்கு அனுப்பலாம் என்ற யோசனை இருந்தது. முன்பு போல மூலைக்கு மூலை பொங்கல் வாழ்த்துகள் விற்கும் கடை கிடைக்காததாலும், தேடிச் சென்று வாங்கும் பொறுமை இல்லாததாலும் செய்ய முடியவில்லை. வேலை மும்முரத்தில் முகவரி சேகரித்து வைக்க வேண்டும் என்று நினைத்ததும் மறந்து போனது.

அடுத்த முறையாவது செய்ய வேண்டும்!   
***************************************
  குறுஞ்செய்திக் குமுறல்   


    
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என்று வந்தால் எஸ் எம் எஸ் ஸுக்கு ரகம் ரகமாகக் காசு வாங்கும் அலைபேசி நிறுவனங்களைப் பார்க்கும்போது மக்கள் அனைவரும் ஒன்றாகப் பேசி முடிவு செய்து அந்த மாதிரி நாட்களில் முன் பின்னாக ஒரு மூன்று நாட்கள் எஸ் எம் எஸ் அனுப்புவதையே சுத்தமாக நிறுத்தினால்  என்ன என்று தோன்றுகிறது. ஒரு நபர் என்றால் ஒரு நபர் கூட எஸ் எம் எஸ் அனுப்பக் கூடாது. முடியுமா?             
**********************************
 பட்டி சுட்டதடா!           
       
  
இந்த முறை சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அந்த அளவு சுவை இல்லை. குறிப்பாக ராஜா பேச்சில். முன்பெல்லாம் ராஜாதான் கடைசியாகப் பேசுவார். கடந்த சில முறைகளாக பாரதி பாஸ்கர்.

அந்த நேரத்தில் எந்த சேனலைத் திருப்பினாலும் எல்லா சேனல்களிலும் பட்டிமன்றங்கள். எவ்வளவு பேச்சாளர்கள்...எவ்வளவு நடுவர்கள்...தென்றல் தொலைக் காட்சியில் பட்டிமன்றம் மணிக்கணக்கில் நீண்டிருந்தது. ஆனால் ராஜா, பாரதி பாஸ்கர் பேச்சு தவிர வேறு எதையும் கேட்பதில்லை!  
     
நிற்க! 
   
பதினெட்டாம் தேதி காலை எட்டு மணிக்கு சன் டி.வி 'வாங்க பேசலாம்' நிகழ்ச்சியில், 'பன்னிரண்டு' மகத்துவம் பற்றி பாரதி பாஸ்கரும் ராஜாவும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது, ராஜா, ஒரு ரூபாய்க்கு, பன்னிரெண்டனா என்று கூறினார். எந்த ஊரில் இப்படி ஒரு கணக்கு? எங்களுக்குத் தெரிந்து, ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாக்கள்தான்!     

   
  ***************************************   
                                       

15 கருத்துகள்:

  1. பொங்கல் வாழ்த்து அட்டையை நினைவு படுத்தியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. ரெய்னா - முத்தரப்பு போட்டியில் "விட்டதை" பிடிச்சிடுவோம்னு சொல்லி நம்பிக்கை அளிக்கிறார். கவனிக்கலயா.

    பதிலளிநீக்கு
  3. நவரச பதிவு, எனக்கு என்னமோ நாம அடிலைடில் அடி வாங்க மட்டோமுன்னு தோணுது, பார்ப்போம் நம்பிக்கைதானே வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  4. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என்று வந்தால் எஸ் எம் எஸ் ஸுக்கு ரகம் ரகமாகக் காசு வாங்கும் அலைபேசி நிறுவனங்களைப் பார்க்கும்போது மக்கள் அனைவரும் ஒன்றாகப் பேசி முடிவு செய்து அந்த மாதிரி நாட்களில் முன் பின்னாக ஒரு மூன்று நாட்கள் எஸ் எம் எஸ் அனுப்புவதையே சுத்தமாக நிறுத்தினால் என்ன என்று தோன்றுகிறது. ஒரு நபர் என்றால் ஒரு நபர் கூட எஸ் எம் எஸ் அனுப்பக் கூடாது. முடியுமா?//

    எஸ்.எம்.எஸ்ஸுன்னா என்னங்க? என்ன விலை? எங்கே விக்குது? ஒண்ணுமே பிரியலை!

    பதிலளிநீக்கு
  5. எந்த ஊரில் இப்படி ஒரு கணக்கு? எங்களுக்குத் தெரிந்து, ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாக்கள்தான்!

    ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி. பல்லு சுளுக்கிடுச்சு.

    பதிலளிநீக்கு
  6. இந்த முறை சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் அந்த அளவு சுவை இல்லை.//

    கொஞ்சம் சீரியஸாப் பின்னூட்டம் ..... எப்போவுமே சுவை இருக்கிறதாத் தெரியலை. பண்டிகை நாட்களில் செய்தி கேட்பதைத் தவிர மற்றவற்றிற்கு இந்தச் சானல்கள் எல்லாம் பார்ப்பதே இல்லை. பொதிகையில் கொஞ்சம் பரவாயில்லை. முன்னெல்லாம் ரேடியோவில் கேட்ட சுவையோ, சுகமோ இப்போ இல்லை.

    பண்டிகை காலங்களில் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பதே நல்லது.

    பதிலளிநீக்கு
  7. பட்டிமன்றங்கள் என்பவை வெட்டி மன்றங்கள் என்பது என் கருத்து என்பதால் எப்போதுமே விரும்பி‌க் கேட்ட/பார்த்ததில்லை ஸ்ரீராம் ஸார். என் சின்ன வயதுகளில் பொங்கல் வாழ்த்துக்களை டிஸ்ப்ளே செய்து தனிக் கடைகளே நிறையப் போடுவார்கள். இப்போ... ஹும்! நல்லவேளை... நான் யாருக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்து தெரிவிப்பதில்லை. (அதற்குப் பதில் ரெண்டு வரி பேசிவிட்டு வைத்துவிடுவேன்) 50 பைசாவை எட்டணா என்றுதான் பலர் வாயில் வரும். அப்படின்னா ரூபாக்கு 16 அணான்னு சுலபமா தெரிஞ்சுக்கலாமே... ராஜாவுக்கும் வார்த்தை சறுக்கும் போலருக்கு! நான் பிஷன்சிங் பேதி சொன்னதை முழுகக ஆமோதிக்கிறேன். உங்கள் அரட்டை அடிக்கடி நடககட்டும்!

    பதிலளிநீக்கு
  8. என்னங்க இது.. கொஞ்சம் எக்ஸ்ட்ராவா சாப்பிட்டு வளந்தவங்களை அதுக்காக யானை கீனைனு சொல்றது.. உங்களுக்கே நல்லாயிருக்கா?

    பதிலளிநீக்கு
  9. நல்ல அரட்டை கச்சேரி.

    பட்டி மண்டபங்கள் இப்பொதெல்லாம் ரசிக்கும்படியாகவே இருப்பதில்லை. அவற்றை பார்ப்பதையே விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.

    //அப்போ கொஞ்ச நாளில் சென்னைத் தெருக்களிலும் மற்ற இடங்களிலும் ஆடு மாடுகள் மேய்வது போல யானைகள் திரிவதைக் காணலாம் என்று எதிர்பார்க்கலாமா... ! //

    இப்படியே போச்சுனா, நாம இனிமே zoo க்கு போகவே வேண்டாம், அங்க இருக்கும் மிருகங்களே நம்மள பார்க்க வந்துவிடும்.

    பதிலளிநீக்கு
  10. ஸோ...ஸோ...இது அந்த ஸோ இல்ல.சும்மா ஸோ !

    பதிலளிநீக்கு
  11. All points are nach.

    இன்னும் பட்டி மன்றம்லாம் பாக்கறீங்களா ..?
    --- வேஸ்டு சார். வேஸ்டு.. அந்த நேரத்துல உருப்படியா வேற ஏதாவது செய்யலாம்..

    ----
    12 அணா -- அவரு மூணு குவாட்டறப் பத்தி சொல்லி இருப்பாரோ ?

    பதிலளிநீக்கு
  12. நம்மல்லாம் சின்னப் புள்ளையா இருக்கையில் [உங்களையும் சேர்த்துக் கொண்டேன். எழுதும் விஷயங்களை வைத்து ஒரு அனுமானம்:))!] 25 பைசா, 50 பைசாவை நாலணா, எட்டணா என்றே விளிப்பது வழக்கம்.

    சில நாட்கள் முன்னர் ஆனைக்கல் பக்கம் வனத்திலிருந்து இப்படி வெளிவந்த யானைக்கூட்டத்தை ஒரு நபர் மிக அருகில் சென்று படமெடுக்க முயன்றிட அதன் ஃப்ளாஷ் ஒளியில் சினம் கொண்டு யானை அவரை துரத்து, வேகமாக ஓடியவர் ஒரு மரத்தில் தலையை மோதிக் கொண்டதில் காலமாகி விட்டார்:(. யானை அவரைத் தொடாவிட்டாலும் பீதியில் ஹார்ட் அட்டாக் ஆகிவிட்டதென்றும் சொல்லுகிறார்கள்.

    விலங்குகளின் வாழ்விடங்களை நாம் அபகரித்துக் கொண்டே வருகிறோம். இப்படியான விபரீதங்களும் தொடர்கின்றன.

    பதிலளிநீக்கு
  13. எஸ்.எம்.எஸ்ஸுன்னா என்னங்க?//

    எஸ்எம்எஸ்சுன்னா எஸ் எம் சுப்பையா நாயுடு. பழைய இசையமைப்பாளர்.

    பதிலளிநீக்கு
  14. எஸ்.எம்.எஸ்ஸுன்னா என்னங்க?//

    எஸ்எம்எஸ்சுன்னா எஸ் எம் சுப்பையா நாயுடு. பழைய இசையமைப்பாளர்.//

    அப்பாதுரை, நினைச்சேனே! :)))))))

    பதிலளிநீக்கு
  15. //அப்போ கொஞ்ச நாளில் சென்னைத் தெருக்களிலும் மற்ற இடங்களிலும் ஆடு மாடுகள் மேய்வது போல யானைகள்//

    ஈரோட்டுப்பக்கம் அப்பப்ப வந்து போகத்தானே செய்யுது? ஒரு வடமாநிலத்துநகர்ல (பாட்னா?) சிறுத்தை வந்துவந்து போகுதே.. அதுக்கு ஆனை பரவால்லையோ? :-(((

    //ஒரு நபர் என்றால் ஒரு நபர் கூட எஸ் எம் எஸ் அனுப்பக் கூடாது/
    அப்படின்னு ஒரேயொரு எஸ்.எம்.எஸ். மட்டும் அனுப்பிக்கலாம்ல? :-)))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!