வீட்டுக்கு வந்ததும், முதல் வேலையாக, மூன்று மாத்திரைகள் கொண்ட நீல நிற பாட்டில், கைப் பையில் பத்திரமாக இருக்கின்றதா என உறுதிப் படுத்திக் கொண்டேன். அதில் உள்ள முதல் மாத்திரையே என் கணவரை என்னிடம் கொண்டுவந்து சேர்ப்பித்துவிடும் என்று உறுதியாக நம்பினேன். மீதி உள்ள மாத்திரைகளை, அந்த டாக்சியரிடம் (டாக்டர் + ஜோசியர் = டாக்சியர்) நானும் என் கணவரும் சேர்ந்தே கொடுத்துவிட்டு வருவோம் என்றும் உறுதியாக நம்பினேன்.
தினமும் மாலையில், காலு சிங்கிடம், 'இன்று ஏதாவது தகவல் உண்டா?' என்று கேட்டவண்ணம் இருந்தேன். காலு சிங் - பரிதாபமாக 'இல்லையே மேடம். அவர்கள் இருவரில் யாரும் எதுவும் உங்களைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. நான் அவர்கள் இருக்கின்ற அறைக்குச் செல்லும் பொழுதெல்லாம், அவர்கள் மும்பை ஹோட்டல் திட்டம் பற்றிதான் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்' என்றான்.
இது எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும், என் பிறந்த நாள் அன்று, அந்த காவி கலர் மாத்திரையை, என் கணவர் சாப்பிடும் கோக கோலா பானத்தில், அவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ போட்டு விட வேண்டும் என்று மனதுக்குள் திட்டம் வகுத்துக் கொண்டேன்.
ஆகஸ்ட் ஏழாம் தேதி காலையில், வீட்டுக்கு வந்த காலு சிங் என்னிடம் கூறிய செய்தி, எனக்கு மிகுந்த துயரத்தை அளித்தது. 'அவர்கள் இருவரும், ஆகஸ்ட் எட்டாம் தேதி (மறுநாள்) காலை பத்து மணி அளவில் இங்கு வந்து, எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிவிட்டு, மதிய உணவுக்குப் பிறகு மும்பை செல்ல இருப்பதாகவும், மும்பையில் பதிவு திருமணம் செய்துகொண்டு இந்தூருக்குத் திரும்புவார்கள்' என்பதும்தான் அந்தச் செய்தி.

மறுநாள் காலை சென்று, அவர்கள் இருவரையும், ஹோட்டல் ரூமிலேயே மடக்கி, ஓ ஏ சாப்பிடுகின்ற கோக்க கோலா பானத்தில், தன்னிலை அறியும் மாத்திரையை கலந்து விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
(தொடரும்)
தொடர்கிறேன், தொடருங்கள்!
பதிலளிநீக்குநன்றி மீனாக்ஷி.
பதிலளிநீக்குPls continue... with more posts asap.
பதிலளிநீக்குregards
vinoth
Thank you Vinoth.
பதிலளிநீக்குஇப்போவானும் டாக்சியர் கொடுத்த மாத்திரையைக் கொடுத்திருக்கலாமோ?
பதிலளிநீக்கு