வியாழன், 8 மார்ச், 2012

ம தி வாழ்த்துக்கள்!




18 கருத்துகள்:

  1. நன்றி. நன்றி:)!

    எங்கள் ப்ளாக் குழுவினருக்கும் குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதியா? 7 ஆம் தேதியா? தெரியலை!

    போகட்டும். சரியான, ஆண்துணை இல்லாமல் எந்த மகளிராலும் எதையும் சாதிக்க முடியாது. அதே போல் ஆணுக்கும் சரியான பெண்துணை இல்லை எனில் அவன் என்ன தான் சாதித்திருந்தாலும் அதை ஏற்க முடியாது. தரிசான நிலத்தை எப்படிப் பண்படுத்த வேண்டுமோ அப்படியே ஒவ்வொருத்தருக்கும் அவர்கள் உள்ளம் பண்பட இன்னொருவர் துணை வேண்டும். அது சரியான ஆணாக அமைந்தால் அதிர்ஷ்டமே! அதையும் மீறி ஜெயித்தாலும் கொஞ்சம் வேதனை இருந்து கொண்டே தான் இருக்கும். இது இருபாலாருக்குமே பொருந்தும்.

    இருவருமே ஒருவரை ஒருவர் சார்ந்தவர்களே. ஆகவே மகளிர் தினம் என அன்று ஒருநாளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லிட்டு மறுநாளில் இருந்து .............:)))))))

    எனக்கு இந்த சர்வதேச தினங்களில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆகவே ஆர்வம் உள்ளவர்களுக்கு நீங்கள் அளித்திருக்கும் வாழ்த்து ஏற்புடையதே.

    மேலே சொன்னவை என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

    யாருக்கானும் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  3. மார்ச் திங்கள்.. மதி நிறைந்த நன்னாள் வாழ்த்துக்கள்...

    -- Courtesy Andal thiruppaavai 1st paasuram

    பதிலளிநீக்கு
  4. தைரியமாகத் தன் கருத்தைச் சொன்ன கீதா சாம்பசிவம் வாழ்க வாழ்க வாழ்க.
    இருங்க.. தோளை விட்டு இறங்கிக்கிறேன். ஸ்.. அம்மாடி.
    சாதனை என்பது கூட்டுமுயற்சியின் விளைவாக இருக்கலாம். முனைப்பு மட்டும் தனிமனிதரில் தொடங்குகிறது. அதற்கு ஆண் பெண் என்ற பேதம் தேவையில்லை. ஆணில்லாமல் பெண்ணால் சாதிக்க முடியும். எதிர்மறையும் பொருந்தும். 'குடும்ப வாழ்வு' என்ற வட்டத்துக்கு வெளியே ஆண் துணை பெண் துணை எல்லாம் செல்லுபடியாகாது.
    இருந்தாலும் யுகம் யுகமாக ஆணாதிக்கத்தில் அடிபட்ட/படும் பெண்களுக்கு வருடத்தில் ஒரு நாள் இது ஒரு ஸ்பெஷல் அங்கீகாரம் இல்லையா? வருஷம் முழுக்க மகளிர் தினம் கொண்டாடுவதும் சரியே - ஆனால் ஸ்பெஷல் அங்கீகாரம் போயிடுமே? மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று தண்ணியடிச்சுப் பாடியிருந்தாலும் ஏதோ ஒரு காரணம் இருந்ததால் தானே பாடத் தோன்றியது என்று நினைக்கத் தோன்றுகிறது.
    மனிதர் தினம் என்று யாராவது எப்பவாவது கொண்டாடுகிறார்களா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. ஆண்டாள் திருப்பாவைல மார்ச் திங்களா? ஆ! மாதவன்! ஆட்டோ அனுப்பப் போறாங்க பாத்து.

    பதிலளிநீக்கு
  6. தைரியமாகத் தன் கருத்தைச் சொன்ன கீதா சாம்பசிவம் வாழ்க வாழ்க வாழ்க.//


    அநியாயமா இருக்கே! :))))) இதுக்குக் கூட தைரியம் வேணும்னு சொல்ற அப்பாதுரையின் ஆணாதிக்க மனப்பான்மையை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாய்க் கண்டிக்கிறேன்.

    ஹிஹீஹிஹீ! சேம் சைட் கோல்????

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  9. சும்மாக்கு....ஒரு நன்றி சொல்லி வைக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  10. பெண்ணா பிறந்ததுக்கு ரொம்பவே பெருமை படறேன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி! :)

    பதிலளிநீக்கு
  11. மகளிர்தினவாழ்த்துகளுக்கு நன்றி
    அப்படியே உங்கள் குடும்ப மகளிருக்கும் என் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்ளுகிறேன்.

    எல்லாதினங்களும் நம் தினம்தான்.

    பதிலளிநீக்கு
  12. பதிவை விட பின்னூட்டங்கள் காட்டமா இருக்கே

    பதிலளிநீக்கு
  13. சூர்யாஜீவா, நாம ஒருத்தர் தான் எதிர்ப்புத் தெரிவிச்சிருக்கிறது! அதனால் காட்டமெல்லாம் இல்லை! :)))))))

    அதோட இந்தியாவிலே தான் இந்த தினங்களெல்லாம் அமர்க்களப் படுது. இங்கே ஒண்ணையும் காணோம்! :))))))

    பதிலளிநீக்கு
  14. கீதா மேடத்தின் இரண்டு கமெண்டுகளுக்கு ரிப்பீட்டு (சர்வதேச தினங்கள் & இதுக்குக்கூட தைரியம்...) :-)))))

    நேற்று (மகளிர் தினம்) நகைக்கடைக்குப் போகவேண்டியிருந்தது. விற்பனையாளரிடம் இந்த மகளிர் தினத்துக்கெல்லாம் சேல்ஸ் கூடுமான்னு (ச்சும்மா) கேட்டேன். சொல்லிக்கும்படி இருக்காதாம். அன்னையர் தினத்துக்குத்தான் அதிகமா கூட்டம் (அரபிகள்தான் 90%) வருமாம்!! அடுத்து ‘அன்பர் தினமாம்’ - அதான் வேலன்டைன்ஸ் டே!!

    பதிலளிநீக்கு
  15. மகளிர் தின வாழ்த்துகள்.....
    எனக்கென்னவோ தற்பொழுது வெறும் சம்பிரதாயமாக
    மாறி வருவது போல தோன்றுகிறது.......

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!