செவ்வாய், 20 மார்ச், 2012

உலகக் குருவிகள் தினம்!

   
நன்றி : கூகிள் உலகக் குருவி நாள் 

இன்று (மார்ச் 20 ) உலக குருவிகள் தினம். 

எங்கள் பழைய பதிவு ஒன்றில் சிட்டுக்குருவிகளுக்கான வீடு கட்டிக் கொடுப்பது எப்படி என்று பட விளக்கம் + சுட்டிகள் கொடுத்திருந்தோம். 

சென்ற வாரத்தில், விசு என்பவர் எங்களுக்கு அனுப்பியிருந்த குறுஞ்செய்தியில், 'இந்தக் கோடை காலத்தில் வெப்பம் மிகவும் அதிக அளவில் இருக்கும். பறவைகளுக்கு அருந்துவதற்கு நீரை, ஒரு தட்டில் இட்டு, அதை உங்கள் வீட்டு மாடியில், திறந்த வெளியில் வையுங்கள்.' என்று செய்தி அனுப்பி இருந்தார். 

குருவிகளுக்கு வீடு கட்டித் தரவில்லை என்றாலும், குறைந்த பட்சம் அவைகள் குடிப்பதற்கு, தண்ணீராவது தரலாம் அல்லவா? 

அட! உடனே தண்ணீர்த் தட்டுடன் கிளம்பிவிட்டீர்களே! வெரி குட்! ஐ லைக் இட்!   
                  

12 கருத்துகள்:

 1. நல்ல பகிர்வு. நிச்சயம் செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 2. நான் குஜராத்தில் இருந்தபோது பறவைகளுக்கான தண்ணீர்த் தொட்டி பார்த்திருக்கிறேன்.
  இதோ.. இன்னைக்கே எங்க வீட்டில தொட்டி ரெடி பண்ணிடுறேன்.

  பதிலளிநீக்கு
 3. சிறந்த பதிவு .. என் நன்றிகள்

  பதிலளிநீக்கு
 4. எங்க வீட்லயும் அதுங்களுக்கு தினமும் தண்ணீரும் சாப்பாடும் வைக்கிறது வழக்கம்தான்..

  பதிலளிநீக்கு
 5. குருவிகள் தின பகிர்வுடன் ஒரு சமூக சேவை.

  பதிலளிநீக்கு
 6. நல்ல செய்தி; நல்ல செயல், சுலபமாக பின்பற்றலாமே!

  பதிலளிநீக்கு
 7. இதைக்கூடச் செய்யாவிட்டால்....!

  பதிலளிநீக்கு
 8. நல்ல பகிர்வு.நீங்கள் சொன்ன முரையை அவசியம் பின்பற்றலாம்.

  http://shadiqah.blogspot.in/2012/03/blog-post.html எனது இந்த இடுகையும் உங்கள் பார்வைக்கு.

  பதிலளிநீக்கு
 9. இப்போது காக்கைகள் வருவது கூட அரிதாகிவிட்டது. சுற்றிவர வீடுகளை இடித்துக் கட்டுகிறார்கள்.
  எங்க வீட்டு மாடிநிழலில் தண்ணீர் தாராளமாக வைக்கலாம். வைக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 10. அட! உடனே தண்ணீர்த் தட்டுடன் கிளம்பிவிட்டீர்களே! வெரி குட்! ஐ லைக் இட்!

  அருமையான பகிர்வுகள் வெரி குட்! ஐ லைக் இட்!

  பதிலளிநீக்கு
 11. http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_4505.html

  சிங்காரச் சிட்டுக்குருவி

  பதிலளிநீக்கு
 12. வல்லி சொல்றாப்போல் கொஞ்ச நாட்களில் காக்கைகளும் அரிதாகி விடும். என்னதான் தண்ணீர்த் தொட்டி கட்டினாலும், அதுங்க குடியிருப்பை வெட்டித் தள்ளிடறோமே! அதுக்கு என்ன செய்யறது?? எங்கே போய்க் குடி இருக்கும்? :(((((( செல்ஃபோன் டவரினால் சிட்டுக்குருவி அழிந்தது என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. மற்றப் பறவைகளுக்கும் அந்தத் தாக்கம் இருக்காதா என்ன? மனிதன் தான் வேட்டையாடுகிறான் பறவைகளை. :((((((

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!