முன்னுரை தேவையா என்ன....?
1) மனம் விட்டு இவரிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உங்களை நினைக்கவைத்த நிகழ்ச்சி எதாவது ஒன்று...
2) சென்டிமென்டலாக நீங்கள் வைத்திருக்கும் / வைத்திருந்து தற்சமயம் இழந்து விட்ட எதாவது ஒரு பொருளும் அதன் பின்னணியும்...
மன்னிப்புக் கேட்க நிறைய நபர்கள் உண்டு. முக்கியமாகச் சொல்ல வேண்டியது என் பெற்றொருக்கு.அவர்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர்களுடன் உதவியாக இல்லை.
பதிலளிநீக்கு2, தொலைத்த செண்டிமெண்டல்
பொருள். அம்மா க்ரோஷா வேலைப்பாடு செய்த பெரிய ரோஜாவும், எனக்காகத் தைத்த ஸ்கர்ட்& ஜாக்கெட்(க்ரோஷாவில் பின்னியது)
3, புத்திசாலி தன் குழந்தைகளிடம் தோற்கிறான். முட்டாள் எளிமையான விஷயங்களை எளிமையாகவே எடுத்துக் கொள்ளும்போது. அவனுக்கு எதுவும் சிரமம் என்றே நினைக்கத் தோன்றாது.
நினைவுகளை மீட்டும் கேள்விகள்.
பதிலளிநீக்குநல்ல கேள்விகள் தான் ஆனால் இதை இந்த சிறிய கருத்து பெட்டியில் அடக்கமுடியாது...
பதிலளிநீக்குஅப்பா தப்பிச்சாச்சி...!
அப்படி நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கும் படி எந்த நிகழ்ச்சியும் என் வாழ்க்கைல இதுவரை நடக்கல. ஒரு வேளை என்னால யாராவது மனசு உடைஞ்சு போயிருப்பது இனி தெரிய வந்தா நிச்சயமா நான் அவர்களிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்பேன்.
பதிலளிநீக்குஒரே ஒரு பொருளை மிகவும் பொக்கிஷமா வெச்சுண்டு இருக்கேன். என் வாழ்க்கைல எனக்கு பொக்கிஷமா கிடைத்ததும் இது ஒன்றுதான். இதோட பின்னணி அப்பறமா சொல்றேன். :)
காதலில்தான்! :)
எழுதுவற்கு இடம் போதாது
பதிலளிநீக்குசொல்வதற்கும் மன தைர்யம் போதாது.
உண்மையை சொல்வதானால் ஒவ்வொரு
மனிதனும் தன மனசாட்சியை கேட்டுக்கொள்ள
வேண்டிய கேள்வி.
மீண்டும் மீண்டும் அதே தவறை
செய்யாமலிருக்க................
தொலைத்த விசயங்களுக்கெல்லாம்
சென்டிமென்ட் பார்த்தால்
வாழவே முடியாது...........
புத்திசாலி முட்டாளிடம் தான் தோற்கிறான்.
அவனை புத்திசாலி என்று நினைக்கும்போது....
1. இறந்து போன என் நண்பன் விவேக்கிடம் மன்னிப்பு கேட்க ஆசை...
பதிலளிநீக்கு2. சிறு வயதில் அது போல் நிறைய விஷயங்கள் இருந்தது, தற்பொழுது எந்த பொருளும் என்னுடையது அல்ல என்ற பக்குவம் வந்து விட்டது.
3. புத்திசாலி எங்கும் தோற்பதில்லை, ஆனால் அறிவாளி வளைந்து கொடுக்க தெரியாததால் பல இடங்களில் தோற்று விடுகிறான்..
முட்டாள் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் நிம்மதியாக இருப்பதில் வெற்றி பெறுகிறான்
முதல் கேள்விக்கான எனது பதிலை மீனாட்சி சொல்லிவிட்டார். இரண்டு கேள்விக்கான பதிலை சூரியா ஜிவா சொல்லி விட்டார். மூன்றாவது கேள்விக்கான பதிலை வல்லிசிம்ஹன் சொல்லி விட்டார்.
பதிலளிநீக்குமனசு சரில்ல.யோசிச்சு எழுத முடியேல்ல !
பதிலளிநீக்குமூன்று கேள்விகளுக்கும் பதில்களை யாரார் சொன்னார்கள் என்பதை தமிழ் உதயம் சொல்லிவிட்டார்..
பதிலளிநீக்கு1) நாங்கலாம் அப்பப்ப ... உடனிடியா மன்னிப்பு கேட்டுடுவோம்.. நோ பெண்டிங்....
பதிலளிநீக்கு2) எனது அண்ணன் எட்டாம் வகுப்பு முதல், பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும், அதன் பின்னர் நான் எனது எட்டாம் வகுப்பு முதல்.. முதுகலை.. மற்றும் அலுவலகத்திலும் பயன் படுத்திய. .இன்றும் எனது வீட்டில் இருக்கும் ச்டைன்லஸ் ஸ்டீல் டிபன் பாக்ஸ் (பூரி டபபானு சொல்லுவோம் ரவுண்டா இருக்கும்.
I missed it few times and got it back.(in office.. couple times in college)
3)ரெண்டு மூணு தடவ ச்செஸ்ல தோத்திருக்கேன்..(புத்தி சாலி தான..) --- ஆனா ஜெயிச்சதே இல்ல (முட்டாளா என்ன ? ) ட்ராதான்..
1. பகிரமுடியாது
பதிலளிநீக்கு2. சென்டிமெந்டில் நம்பிக்கை இல்லை
3. காலம்
முதலிரண்டும் கேள்வி போலவே இல்லையே?
சுவாரஸ்யமான பதில்களைப் பெற்றுத் தந்திருக்கும் மூன்று கேள்விகளுக்கும் பாராட்டுகள்:).
பதிலளிநீக்குமறைந்த தந்தை மற்றும் அண்ணன், வளர்த்த தாத்தா ஆகியோர் உபயோகித்த சின்ன பொருட்கள் சிலவற்றை நினைவாக இன்னும் வைத்துள்ளேன்.
ம்ம்ம்.. மனிதருள் மாணிக்கம் ஒண்ணு ரெண்டு பேர் இருக்காங்கனு தெரிஞ்சு போச்சு.. இல்லின்னா அவங்க வீட்டுல கண்ணாடி இல்லையா? :)))))
பதிலளிநீக்கு1 . உரிமையில் அம்மாவைத் திட்டிவிடுவது..மன்னிப்பு என்றைக்குக் கேட்டிருக்கிறேன்?
பதிலளிநீக்கு2. நானே கிழித்துப் போட்டுவிட்ட ஒரு கடிதம்.
3 . அறிவாளி தோற்பது: பார்க்க பதில் 2 முட்டாள் ஜெயிப்பது: பார்க்க பதில் 1 ( அதாவது உணர்வுப் போராட்டத்தில் என்ற பதில் இரண்டுக்கும் பொருந்தும்)
வல்லிசிம்ஹன், சூர்யஜீவா, அப்பாதுரை- சுவாரசியமான பதில்கள்
பதிலளிநீக்கு