திங்கள், 29 அக்டோபர், 2012

உள் பெட்டியிலிருந்து - 10 2012


வலைச்சரத்தில் எங்கள் முதல் பதிவு "இங்கே சொடுக்குக!"


காதல் உளறல்


என் தவிப்பு
அவளுக்கு 
சிரிப்பாக இருக்கலாம்
ஆனால்
அவளுக்குத் தெரியாது,
நான் தவிப்பதே
அவளின் சிரிப்புக்காகத்தான் என்று...!

********

பிரிவு என்பது
உறவின் முடிவு அல்ல...
நினைவின் ஆரம்பம்.
=========================

என்ன அர்த்தம்?


உங்கள் அனுபவங்களை நீங்கள் விரும்பும் எல்லோருடனும் பகிருங்கள்.

உங்கள் உணர்வுகளை உங்களை விரும்பும் ஒருவருடன் பகிருங்கள்!!
===============================

பதில் சொல்ல முடியா காரணம்!


உங்கள் நண்பரிடமிருந்து உங்கள் கேள்விக்கு நேரிடையான பதில் வரவில்லை என்றால் ஒன்று அது உங்களுக்கு அதிக துன்பத்தைத் தரலாம் அல்லது அவர்கள் ஒத்துக் கொள்ள முடியாததாய் இருக்கலாம்.
==============================  
   
கெட்ட நேரமாத்தான் இருக்கணும்!


சூரியனைப் பார்த்தும் நேரம் சொல்லலாம்...கரண்ட் போறதை வைத்தும் நேரம் சொல்லலாம்..  
---------------------------------------

அப்படிப் போடு...


எல்லாரையும் இழந்து தனியாக நிற்கும்போதும் 'அப்பாடி, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்ற எண்ணமே பாசிட்டிவ் திங்கிங்!    
===========================

ஜோக்'கடி' 1


டீச்சர் : "ஏன் லேட்?"

மாணவன் : "அப்பாவும் அம்மாவும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.."

டீச்சர் : "அவர்கள் சண்டையிட்டால் உனக்கு ஏன் லேட்?"

மாணவன் : "என்னுடைய ஒரு ஷூ அப்பா கையிலும் இன்னொரு ஷூ அம்மாவின் கையிலும் இருந்தது"   
=================================

ஜோக்'கடி' 2


பெண் : "ஹலோ....இது 'கஸ்டமர் கேர்'தானுங்களே..."

கஸ்டமர் கேர் : "ஆமாம் மேடம்...சொல்லுங்கள் என்ன பிரச்னை?"

பெண் : "என் அஞ்சு வயசுப் பையன் சிம் கார்டை முழுங்கிட்டான்...அதுல எழுபத்தைந்து ரூபாய் மிச்சம் இருந்தது...."

கஸ்.கேர் : "சொல்லுங்க மேடம்..."

பெண் : இப்போ அவன் பேசும்போது காசு போகுமா.."    
=================================================

ஆமாம்...தெரிஞ்சுக்குங்க..!


பிரார்த்தனை என்பது கடவுளின் சித்தத்தை மாற்ற அல்ல... நம் மனதைத் தயார் செய்ய...   
==========================================

அற்புத கணங்கள்...


தனிமையின் கணங்கள்தான் உலகின் மிகச் சிறந்த கணங்கள். ஏனெனில் அப்போதுதான் அப்போதுதான் நம்முடைய ஆழமான ரகசியங்களை உலகிலேயே நாம் நம்பும் ஒருவரிடம் நாம் பகிர்ந்து கொள்கிறோம். நம் உள்மனதுதான் அது!     
================================

முதியோர் இல்லத்தில் தாயின் கண்ணீர்


நீ இருக்க
ஒரு
கருவறை இருந்தது
என்
வயிற்றில்...

ஆனால்
நான் இருக்க 
ஒரு
இருட்டறை கூடவா
இல்லை உன் வீட்டில்....    
========================

ஆமாம் இல்லை?!


குழந்தைகளின் மனம் ஈர சிமென்ட் போல.... எது விழுந்தாலும் பதிந்து விடுகிறது!  
======================================

வாழ்க்கை ஒரு வட்டம்டா...!

     

கரப்பு எலிக்கு பயப்படுகிறது
எலி பூனைக்கு
பூனை நாய்க்கு
நாய் மனிதனுக்கு
மனிதன் தன் மனைவிக்கு
மனைவி கரப்புக்கு...   
====================================

ஜோக்'கடி' 3


கணவன் :"ஹிப்னாடிசம் என்றால் என்ன...?"

மனைவி ;"அடுத்தவர் மனத்தைக் கட்டுப் படுத்தி நம் இஷடத்துக்கு ஆட்டுவிப்பது..."

கணவன் :"என்னை முட்டாளாக்காதே...அதற்குப் பெயர் திருமணம்..."    
=============================

சிந்தனை முத்து...


கௌரவமான, உண்மையான இதயங்களை வெளியில் தேடுவதை விட ஏன் நாமே அபபடி இருந்து விடக் கூடாது?    
===============================

இது பதில்...!


கடல் ஆற்றைக் கேட்டது. "இன்னும் எத்தனை நாள் என் உப்பு இதயத்துக்குள் ஊடுருவிக் கொண்டே இருக்கப் போகிறாய்..."

ஆறு சொன்னது " நீ இனிப்பாகும் (இனிமையாகும்) வரை"    
================================  
                               

18 கருத்துகள்:

  1. எல்லாமே அருமை.

    அடித்த ஜோக்ஸ் கடிக்கவில்லை! அதிலும் இரண்டாவது சூப்பர்:)!

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் கலக்கல்...

    வலைச்சரம் செல்கிறேன்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. பாசிடிவ் திங்கிங், அற்புத கணங்கள் இரண்டுமே அற்புதம்.
    ஜோக் 2 சிரிச்சு மாளல.

    பதிலளிநீக்கு
  4. வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள். வாழ்க்கை ஒரு வட்டமா ஹாஹாஹா ஹா.
    முதியோர் அச்சோ அம்மா:(
    பிரிவு நினைவு சூப்பர்,.

    பதிலளிநீக்கு
  5. //எல்லாரையும் இழந்து தனியாக நிற்கும்போதும் 'அப்பாடி, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்ற எண்ணமே பாசிட்டிவ் திங்கிங்!//

    ஆஹா.. என்னா ஒரு தத்துவம் :-))

    ரெண்டாவது ஜோக்கு.. சிரிச்சு முடியலை :-))

    பதிலளிநீக்கு
  6. எல்லாமே அருமையாக இருந்தது.முதுமையின் வரிகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  7. உள் பெட்டி சிரிப்பு, சிந்தனை.. கலவை..சுவையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  8. அடடா! அருமை. :)
    படிச்சதும் மனசு காற்றாகிப் போச்சு.

    பதிலளிநீக்கு
  9. முதல் நாள் 'நமக்கு நாமே' அங்கே முடிந்ததா?..

    போகட்டும். இன்னும் 6 நாட்கள் பாக்கி.

    'வலைச்சரத்'தில் புதுசாக ஏதாவது செய்யுங்கள்.. முதன் முதலாக இவர்கள் என்கிற பெயராவது கிடைக்கும்!

    பதிலளிநீக்கு
  10. உங்கள் அனுபவங்களை நீங்கள் விரும்பும் எல்லோருடனும் பகிருங்கள்.

    உங்கள் உணர்வுகளை உங்களை விரும்பும் ஒருவருடன் பகிருங்கள்!!//

    அருமையான கருத்து; உண்மையானதும் கூட. வலைச்சரம் ஆசிரியரா இந்த வாரம்? ஐந்து பேரும் சேர்ந்து எழுதுவீங்களா? இல்லாட்டி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு நாளுக்கா? அப்போக் கடைசி இரண்டு நாள் யார் எழுதுவாங்க? சீனியாரிடி உண்டா இதிலே? இன்னும் நிறைய சந்தேகம் இருக்கு. மெதுவா வந்து கேட்கிறேனே! :)))

    பதிலளிநீக்கு
  11. ஹூம், இந்தப் பதிவே இப்போத் தான் அப்லோட் ஆயிருக்கு. :( நாளைக்கு நான் பார்க்கிறதுக்குள்ளே விடிஞ்சுடும். :(((

    பதிலளிநீக்கு
  12. //ஐந்து பேரும் சேர்ந்து எழுதுவீங்களா? இல்லாட்டி... //

    'எங்கள்'லேயே அஞ்சு பேரையும் பாக்க முடியறதில்லே...

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான பகிர்வு. அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. ”உளறலை”த் தவிர எல்லாம் ஓக்கே. :-)))))

    பதிலளிநீக்கு
  15. எங்கள் ப்ளாக்4 நவம்பர், 2012 அன்று PM 9:06


    பின்னூட்டங்களுக்கு நன்றி.

    _/\_

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!