செவ்வாய், 30 அக்டோபர், 2012

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 10

           
பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
   

இங்கு ஒரு மாறுதல்.

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...  

 ======
           

1) வீடுதோறும் சூரியசக்தி மின்சாரம் உபயோகப்படுத்தும்படி அரசாங்கம் சொல்கிறதே... அல்லது காற்றாலை மின்சாரம் தயாரிக்கவும் அறிவுறுத்தபடுகிறதே... இதனால் தேவை பூர்த்தியாகும் என்று நினைக்கிறீர்களா? எவ்வளவு செலவு இதற்கு பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்? மின்சாரம் தயாரிக்கக் காற்றாலைக்கு காற்றின் வேகம் குறைந்தபட்சம் எவ்வளவு இருக்கவேண்டும்?
               
2) விடுமுறை இல்லாத விடுமுறை - இவர் பிறந்த நாளில் மாணவர்கள் எல்லோரும் பக்கெட்டும் கையுமாகச் சென்று பொது இடங்களை சுத்தம் செய்வார்கள். யாருடைய பிறந்த நாள் இது? 
           
3) அனுபவமின்மை காரணமாக இளைஞர்களும், விரைந்து  செயல்படமுடியாத முதியவர்களும் அரசியலை விட்டு விலகுவது நன்று என்று நினைப்பது பற்றி உங்கள் கருத்து....
                

25 கருத்துகள்:

  1. 1 .காற்றலை மின்சாரம் வருடம் முழுவதும் சாத்தியமா தெரியவில்லை. மேலும் காற்றடிக்கும் திசைக்கு ஏற்ப காற்றாடியை மாற்றி அமைக்க வேண்டும், அதற்கான போதிய அறிவும் பொறுமையும் நம் மக்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே...
    சூரிய சக்தி அமைக்க செலவு கொஞ்சம் அதிகம். அரசாங்கம் இலவசமாக வழங்கலாம் ( தற்போது அத்தியாவசியம் என்ற நிலையில்)

    மேலும் இவை பழுதானால் சீரமைப்பு பற்றிய தகவல்களும் கொடுக்கலாம். இது புதிய வேலை வாய்பாக கூட உரு எடுக்கலாம்...

    2 . சத்தியமா தெரியல

    3 . ரெண்டு பெரும் போய்டா அரசியலே வேணாம்னு சொல்றீங்களா...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. 1. தெரியலை.
    2. சத்தியமா என்னோட பிறந்த நாள் இல்லை :-)
    3. அனுபவமுள்ளவர்களின் வழிகாட்டுதலோடு துடிப்புள்ள இளைஞர்கள் அரசியலில் இருக்கணும்.

    பதிலளிநீக்கு
  4. சூரிய சக்தி மின்சாரம் உபயோகப் படுத்தலாம். ஆனால் மாற்று சக்தியாகவே பயன்படுத்துவது நல்லது. இதற்காகக் குறைந்த பக்ஷமாக தனி வீட்டிற்கு 2 லக்ஷம் வரை செலவாகலாம் எனக் கேள்விப் பட்டேன். அரசு கொடுக்கும் மானியம் எவ்வளவுனு தெரியலை. ஆனால் இதற்குத் தேவையான உபகரணங்களை நாமே வாங்க முடியாது. அப்படி வாங்கினால் அரசு மானியம் கிடைக்காது எனவும் கேள்விப் பட்டிருக்கேன்.

    காற்றாலை மின்சாரம் வீடுகளில் தயாரிப்பதற்குப் பதில் பெரிய பெரிய தொழிற்சாலைகள், கம்பெனிகள், மருத்துவமனைகளில் தயாரிக்கலாம். ஆனால் அவ்வளவு காற்று வசதி இருக்க வேண்டும். காற்றின் வேகம் சுமார் மணிக்கு 120 கிமீட்டர் இருக்கலாம் எனக் கேள்வி. அதைத் தாங்கும் வண்ணமாகவே உபகரணங்கள் தயாரிக்கப் படுகின்றன. காற்றின் வேகம் அதிகரித்தால் மின்சாரமும் கூடக் கிடைக்கும். அதுக்குப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. இரண்டாவது கேள்விக்குப் பதில் மனசிலே இருக்கு. ஆனால் நினைவில் வரலை. :(

    மூன்றாவது கேள்விக்கு ஆமாம், அனுபவமில்லாத இளைஞர்கள், பெண்கள், விரைந்து செயல்படமுடியாத முதியவர்கள் அரசியலில் ஈடுபடாமல் இருப்பதே நன்மை தரும். முதியவர்கள் அனுபவங்களின் மூலம் ஆலோசனைகள் கூறலாம்.

    பதிலளிநீக்கு
  7. 1. நல்ல விஷயம் தான் குறைந்தது ஐம்பதாயிரம் ஆகும் என நினைக்கிறேன்

    2. தெரியலீங்க

    3. வயதானவர்கள் வழிவிட்டு ஒதுங்கி கொள்ளட்டும். இளைஞர்கள் விலக வேண்டிய அவசியமில்லை

    பதிலளிநீக்கு
  8. 1.சூரிய மின் சக்தி சாத்தியமான ஒன்று அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு உதவினால் ஐம்பதாயிரம் முதல் லட்சம் வரை செலவில் மின் உற்பத்தி செய்து தன் தேவை பூர்த்தி செய்து கொள்வதுடன் மிஞ்சியதை அரசுக்கு விற்கவும் செய்யலாம்! காற்றாலை மின்சாரம் வீடுகளில் தயாரிக்க வாய்ப்புக்கள் இல்லை!
    2. அன்னை தெரசா! ஒரு ஊகம் தான்

    3. வயதானவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கத்தான் வேண்டும் இளைஞர்களும் ஒதுங்கினால் அனுபவம் எப்படி கிடைக்கும்? இளைஞர்கள் விலகத்தேவையில்லை!

    பதிலளிநீக்கு
  9. S.Suresh, Your answer is correct for 2nd question. enakku sattunu ninaivu varalai. :(

    பதிலளிநீக்கு
  10. அனுபவமற்ற இளைஞர்கள் விலகுவதே நல்லது. அரசியலில் நுழைந்தால் அனுபவம் கிடைத்துவிடும். உண்மைதான். ஆனாலும் அரசியல் ஞானம், உண்மையான தேசப்பற்று, இருந்தால் சரி. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு வரும் இளைஞர்களைக் கண்டறிந்து விலக்குவது நல்லது.

    பதிலளிநீக்கு
  11. எல்லாவற்றுக்கும் போதுமான பணம் வேண்டும். கீதாவின் கருத்துதான் எனக்கும்.
    சுரேஷ் சொல்லி இருக்கார்.நான் ஆமோதிக்கிறேன்:)
    இரண்டு பேரும் வேண்டாம். பண்பட்ட நடுத்தர வயதுக்காரர்கள் அரசியலில் இருக்கலாம். வேண்டும் அளவுக்கு வயதானவர்களையும் ரப்பர் ஸ்டாம்புகளையும் பார்த்தாச்சு.

    பதிலளிநீக்கு
  12. எனக்குக் கேட்கத் தான் தெரியும்.

    1. ரெண்டு Fan, ஒரு AC, ஒரு Fridge, எட்டு லைட், ஒரு washer, ஒரு kitchen oven புழக்கத்தில் இருக்கும் வீட்டுக்கு மாதம் தமிழ்நாட்டில் எத்தனை யூனிட் மின்சாரம் பிடிக்கிறது? எத்தனை செலவாகிறது?

    2. அத்தனையும் தேவை/வசதிக்கேற்ப 8-16-24 மணி நேரத்துக்கு இயக்கும் சூரிய சக்தி ஜென்ரேடருக்கு மாதம் எவ்வளவு வாடகை தருவார்கள்?

    பதிலளிநீக்கு
  13. சூரிய சக்தி மின்சாரம் மூலம் வீடுகளுக்கு தேவையான மின்சாரம் பெற முடியும். இதற்கான அரசாங்க உதவி அலுவலகங்கள் எல்லாம் சென்னையில் தான் இருக்கின்றன! இதுவே ஏக்கர் கணக்கில் வயல்கள், தோப்புக்கள் என்றால் 5 லட்சம் வரை செலவாகின்றது. சூரிய சக்தியில் இன்வெர்ட்டர்களும் தனியார் கம்பெனிகள் தயாரிக்கின்றன. வழக்கமான இன்வெர்ட்டருக்கு ஆகும் செலவுகள் தாம் இதற்கும் ஆகுமாம்! கிடைக்கும் மின்சக்தியும் அதே அளவு தான் கிடைக்கும் என்று அந்த கம்பெனியை விசாரித்தபோது பதில் கிடைத்தது!

    சமீபத்தில் தான் படித்தேன். இப்போது ஞாபகம் வரமாட்டேனென்கிறது!

    முதியவர்கலை ஆலோசகர்களளாக வைத்துக்கொண்டு, அவர்கள் அனுபவப்பாடங்கள் மூலம் இளைஞர்கள் அரசியல் அறிவு பெறலாமே!

    பதிலளிநீக்கு
  14. சூரிய ஒளி மின்கலங்கள் நம் நாட்டுக்கு மிக அவசியம். தேவையான வழிமுறைகளை அரசு கண்டுபிடிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. சூரிய சத்தி மின்சாரம் மிகவும் அவசியம்தான்.எவ்வளவு தூரம் தேவைகள் பூர்த்தியாகும் என்று சரிவர தெரியவில்லை. இந்த விவரங்களை அரசாங்கம் சரியான முறையில் மக்களுக்கு தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கு.

    யார்?

    விரைந்து செயல்பட முடியாத அனுபவமிக்க முதியவர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களை தயார் செய்யாலாம்.

    பதிலளிநீக்கு
  16. //Madhavan Srinivasagopalan said...

    1) தெரியல
    2) I don't know
    3) नहि मलुम//

    Madhavan your sense of humour is brilliant....

    பதிலளிநீக்கு
  17. 1. மின்சாரத்தை விடுங்க... அடுத்து குடிக்கவே தண்ணீர் இருக்கப் போவதில்லை... என்ன செய்யப் போகிறோம்...?

    2. அன்னை தெரசா ... இல்லையா...? அப்படி என்றால் இனி அன்னை தெரசா பிறந்த நாள் தான்...

    3. அரசியலா நடக்குது...?

    பதிலளிநீக்கு
  18. 1. For 1000 watts solar inverter + 200 watts solar panel + 150Ah Battery costs 45,000. battery life - 5 years.

    பதிலளிநீக்கு
  19. SOLAR HYBRID UPS 850 VA UPS HYBRID(SOLAR&MAIN)
    150AH LA BATTERY
    80 WATTS PANEL
    STAND
    TROLLEY Rs.29990

    இரண்டாவது கேள்விக்கு பதில் தெரியவில்லை.
    மூன்றாவது பக்குவமும், வேகம், விவேகம் நிறைந்த நடுத்தர வயதினருக்கே என் ஓட்டு

    பதிலளிநீக்கு
  20. சமீபத்தில் அவள் விகடனில் சோலார் பவர் பற்றி விரிவாக எழுதிருந்தாங்க. அதன்படி:

    //ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி, ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெறுவதற்கு சோலார் தகடுகள் மற்றும் பேட்டரி என அமைப்பதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும்.//

    இதுதவிர, இன்வர்ட்டர் பேட்டரிகளை இரண்டு அல்லது நான்கு வருடங்களுக்கொரு முறை மாற்ற வேண்டும். மேலும், சோலார் பேனல்களும் 6-8 வருடத்துக்கொரு முறை மாற்ற வேண்டுமாம் (வாசகர் பின்னூட்டஙக்ளின்படி)

    கட்டுரை மட்டுமல்லாது, வந்திருக்கும் பின்னூட்டஙக்ளும் இதன் சாதக பாதகங்கள் குறித்து நல்ல தெளிவைக் கொடுக்கின்றன. அதன்படி, சூரிய ஒளி மின்சாரம் என்பது ஒரு சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, முழு மாற்றாக அமைவது சந்தேகமே என்று தெரிகிறது. இதில் கருத்து வேறுபடுவோரும் உண்டு.

    பதிலளிநீக்கு
  21. 2வதுக்குப் பதில் “ஐ டோண்ட் க்நோ”. (இப்போதான் தெரிஞ்சுகிட்டேன்)

    3வது - வேகம், விவேகம் இரண்டுமே அவசியமானவை. ஒன்றைத் தவிர்த்து, இன்னொன்று மட்டும் முழு பயன் தராது.

    பதிலளிநீக்கு
  22. அப்புறம், காற்றாலை மின்சாரத்திற்கும் இதுபோல limitations உண்டு. அதிக விபரம் தெரியலை. நாகர்கோவில் ஆரல்வாய்மொழி பக்கத்தில், காற்றாலைகள் உண்டு. சிலசம்யம், அதிகக் காற்றுவீசும்போதும் சில காற்றாடிகள் சுழலாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அதற்கு, அதிகக் காற்றடித்தாலும் சுழல விடமுடியாது என்கிற ரீதியில் என்னவர் ஏதோ விளக்கம் கொடுத்தார், மறந்துபோச்.

    தமிநாட்டில் ஒரு விவசாயி தன் சிறு வயலுக்குத் தேவையான மின்சாரத்தைத் தன் நிலத்தில் அமைத்துள்ள ஒற்றைக் காற்றாலை மூலமாகவே தயாரித்துக் கொள்வதாக முன்பு எங்கோ படித்தேன். அதுவும், விபரங்கள் மறந்துபோச்.

    பதிலளிநீக்கு
  23. //1. ரெண்டு Fan, ஒரு AC, ஒரு Fridge, எட்டு லைட், ஒரு washer, ஒரு kitchen oven புழக்கத்தில் இருக்கும் வீட்டுக்கு மாதம் தமிழ்நாட்டில் எத்தனை யூனிட் மின்சாரம் பிடிக்கிறது? எத்தனை செலவாகிறது?//

    @அப்பாதுரை:

    இத்தனையும் வச்சுஇருந்தாலும், என் நட்பு/உறவு வட்டத்திலேயே, ரெண்டு மாசத்துக்கு கரண்டு பில் ஜஸ்ட் ஆயிர்ரூவா கட்டுறவங்களும் இருக்காங்க. எட்டாயிரம் கட்டுறவங்களும் இருக்காங்க!!
    :-)))) :-(((((

    பதிலளிநீக்கு
  24. எங்கள் ப்ளாக்4 நவம்பர், 2012 அன்று PM 9:04

    பின்னூட்டங்களுக்கு நன்றி.

    _/\_ _/\_ _/\_

    சோலார் பேனல் செய்திகள் நம் பாசிட்டிவ் செய்திகளிலேயே இடம் பெற்றிருந்தன. பேட்டரியில் சேமிக்காமல் நேரடியாக மின்சாரத்தை உபயோகிக்க வைக்கும் கருவிக்காகும் செலவான 25,000 ரூபாயைக் கூட அரசாங்கமே தரத் தயாராக இருக்கிறது என்று படித்ததைப் பகிர்ந்திருந்தோம்.

    லெனினின் பிறந்த நாள் அன்றுதான் இப்படிச் 'சுத்த நாள்' கடைப் பிடிக்கப் படுகிறதாம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!