ஞாயிறு, 28 அக்டோபர், 2012

ஞாயிறு 173 :: புதிர்க் கோலங்கள்!


இவை என்ன? 
     நன்றாகப் பாருங்கள். கண்டு பிடிப்பவர்களுக்கு, கருத்துரைப்பவர்களுக்கு, பாயிண்டுகள் கொடுத்து, பிறகு அதிக பாயிண்டுகள் பெற்றவருக்கு "து நி 2012" பட்டம் கொடுத்து, அதற்குப் பிறகு .... ?? 
          
க்ளூ? கப்பல், ஒட்டுவதற்கு பசை.
                

19 கருத்துகள்:

 1. நல்லா உத்துப் பார்த்து, மூன்றாம் கண் திறந்திடப் போகுதுன்னு விட்டுட்டேன்! :) அப்புறமா வந்து விடை என்னன்னு தெரிஞ்சுக்கறேன்.

  பதிலளிநீக்கு
 2. படம் பாக்க வந்த புதிர் போட்டிருக்கீங்க. டிசைன் நல்லா இருக்கு. முதல் படம் மிதியடி மாதிரி இருக்கு. இரண்டாவது படம் பூ ஜாடி மாதிரி இருக்கு. கப்பல், பசை அப்படின்னு க்ளு இருக்கறதால 'moss' ஆகவும் இருக்கலாம். படத்தை நல்லா பாக்க சொல்லி இருக்கீங்க. இன்னொரு முறை நல்லா பாத்துட்டு திரும்ப வரேன்.

  வரும் வாரம் வலைச்சரம் பதிவு ஆசிரியராக பொறுப்பேற்பதற்கு வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷம். கலக்குங்கள்.

  பதிலளிநீக்கு
 3. ஒட்டகச் சிகையலங்காரம்.

  ராஜஸ்தானிலிருக்கும் பிகானர் மாவட்டத்தில் ஜனவரி தோறும் நடைபெறும் ஒட்டகத் திருவிழாவில் இது போன்ற அலங்காரத்துடன் வலம் வரும் ஒட்டகங்கள். இந்த அலங்காரத்துக்குக் கொண்டு வர ஆண்டுகள் மூன்றாகுமாம். முதலிரண்டு வருடங்கள் சீராக வளர்க்கப்பட்டு, பிறகு மூன்றாம் வருடம் அதில் இதுபோன்ற வடிவங்கள் அமைக்கப்படும். சிறந்த அலங்காரத்துக்கு பரிசும் உண்டு.

  மனித முதுகு போல் அமைந்த இரண்டாம் படத்தை வெளியிட்ட சிந்தனையில் நிற்கிறது ‘எங்கள் ப்ளாக்’:)!

  பதிலளிநீக்கு
 4. ராமலக்ஷ்மி சூப்பர்! உங்க கமெண்ட் வர வரைக்கும் நான் வெயிட் பண்ணிண்டு இருந்திருக்கலாம். :)

  பதிலளிநீக்கு
 5. முதல் படம் பாலைவனக்கப்பல் என்று பின்னூட்டத்திலிருந்தும் , க்ளூ மூலமாகவும் தெரிந்தது..

  இரண்டாவது படம் பசைகொண்டு ஒட்டிய டிசைனர் டிரஸ் ???

  பதிலளிநீக்கு
 6. ராஜஸ்தானில் அஜ்மேருக்கருகே உள்ள புஷ்கரில் ஒட்டகங்களுக்கான மேளா கார்த்திகை பூர்ணிமாவில் நடக்கும். அங்கே இம்மாதிரி நிறையப் பார்த்திருக்கேன். நான் வந்து சொல்லறதுக்குள்ளே ரா.ல.வும் சொல்லி இருக்காங்க போல. பரிசு என்ன??????? ஆயிரம் பொற்காசை சமமாய்ப் பிரிச்சுக்கணுமா?:))))

  பதிலளிநீக்கு
 7. /பட்டம் கொடுத்து, அதற்குப் பிறகு .... ?? /

  ஆயிரம் பொற்காசை டிமாண்ட் செய்து கீதா மேடம் வாங்கித் தந்து விடுவார்கள் என்கிற தைரியத்தில்தான் நான் கேட்கவில்லை:)!

  @ கீதா மேடம்,
  எல்லா வாசகர் பதிலும் வந்த பின் பங்கு பிரிச்சுக்கலாம்:)!

  பதிலளிநீக்கு
 8. ரெண்டுமே ஒட்டகம் தான். கப்பலும் அது தான். ஒட்ட'gum'மும் அது தான்.

  பதிலளிநீக்கு
 9. நான் இந்த விளையாட்டுக்கு வரலே...

  நல்ல டிசைன்... உதவும்... நன்றி...

  வலைச்சர ஆசிரியருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. முதலில் இருப்பது ஒட்டகமா. ஓகே. இரண்டாவது இருப்பது படைவீரரின் கவசம் போல இருக்கிறதே?
  ராயல் ஹெச் ஆர் சி சி என்ற எழுத்துகள் தென்படுவதால் வந்த சந்தேகம்.
  நிற்கும் சிற்பமா. கப்பல் முகப்பில் நிற்கும் தேவதையா!!!!

  பதிலளிநீக்கு
 11. கருத்து பதிந்த ஒவ்வொருவருக்கும் நூறு பாயிண்டுகள்.
  முதலில் சரியாகச் சொன்ன ராமலக்ஷ்மி அவர்களுக்கு ஆயிரம் அதிகப்படி பாயிண்டுகள். மொத்தம் 1100.
  கீதா சாம்பசிவம் அவர்கள் இரண்டாவதாக சொன்னதால், அவருக்கு 999 பாயிண்டுகள் + 100 = 1099. (கிர்ர்ர் என்று சொன்னால் ..... )
  க்ளூவை சரியாகச் சொன்ன HVL அவர்களுக்கு ஐநூறு பாயிண்டுகள். மொத்தம் அறுநூறு.

  பரிசு என்ன, எப்போது என்பதெல்லாம் அப்புறமா சொல்றோம். கிர்ர்ர்ர் மாமி அடுத்த கமெண்ட் என்ன என்று எங்களுக்குத் தெரியும்!!

  பதிலளிநீக்கு
 12. நான் இந்தக் கமென்டைப் படிக்கவே இல்லையே! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க??

  பதிலளிநீக்கு
 13. // Geetha Sambasivam said...
  நான் இந்தக் கமென்டைப் படிக்கவே இல்லையே! இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க??//

  எ அ கு இல்லை! :))

  பதிலளிநீக்கு
 14. எ அ கு இல்லை! :))//

  வே.போ.நா.ஒ.ஏ.மா. :P:P:P:P:P:P:P:P

  பதிலளிநீக்கு
 15. முதல்படம் மிதியடி என்றும், இரண்டாவது சாமி சிலையாக இருக்குமோன்னு நினைச்சேன்.

  ஒட்டகம்னு தெரிஞ்சு வியந்தேன்!!

  //எ அ கு இல்லை! :))
  வே.போ.நா.ஒ.ஏ.மா. //

  டிக்ஷ்னரி ப்ளீஸ்!! :-)))))

  பதிலளிநீக்கு
 16. ஹூசைனம்மா,

  கண்டு பிடிச்சா எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர்கள் ஐந்து பேரும் தனித்தனியாக உங்களுக்குப்பரிசு கொடுக்கிறதாச் சம்மதிச்சிருக்காங்க. கண்டு பிடிங்க. :))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!