ஞாயிறு, 16 டிசம்பர், 2012

ஞாயிறு 180:: சொல்லுங்க அண்ணே, சொல்லுங்க!


எந்த சபா காண்டீன் சாப்பாடு, டிஃபன் எல்லாம் நல்லா இருக்கு? 


13 கருத்துகள்:

  1. இந்த காக்காவெல்லாம் பாக்கும்போது பொறாமையா இருக்குங்க. Track மேல நடக்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுவும் அதுல கீழ இறங்காம balance பண்ணி நடக்கறது பயங்கர த்ரில்.
    நிறைய நடந்திருக்கேன் படிக்கற காலத்துல. அதுலேயும் குறிப்பா மாம்பலம்லேந்து கோடம்பாக்கம் போற தூரத்துல முக்கால்வாசி தூரம் இருக்கற ஷ்யமளான்னு ஒரு தோழியோட வீட்டுக்கு போகும்போதெல்லாம் நாங்க ஒரு நாலு பேர் சேந்து எப்பவுமே track மேல நடந்துதான் போவோம். ஒரு முறை நாங்க பேச்சு சுவாரசியத்துல எதிர்க்க train வரதை கூட கவனிக்கல. அவனும் ஒரு horn கூட அடிக்காம சத்தம் போடாம கிட்ட வந்துட்டான். திடீர்னு பக்கத்துல வந்த train பாத்து அப்படியே track லேந்து குதிச்சோம். அந்த நடுக்கம் போகவே சில மணி நேரம் ஆச்சு. ஆனாலும் தோழி வீட்டுலேந்து திரும்பி வரும்போது மறுபடியும் track லதான் நடந்து வந்தோம். ஆனாலும் ரொம்பவே தைரியசாலிதான் நாங்க. :))

    படம் எடுத்தவர் ரொம்ப ரசிப்பு தன்மை உடையவரா இருக்கணும். படம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. ட்ராக் மேலே நடக்கும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைச்சிருக்கு. கூடியவரை ஜாக்கிரதையாகவே போவேன். ஒரு முறை ரெயின் கோட் அணிந்து செல்கையில் பின்னால் வண்டி வருவது சப்தம் (நல்ல மழைநாளில் மழை கொட்டிக் கொண்டிருக்கையில்) கேட்காமல் நடக்க எதிரே வருபவர்கள் கையைக் கையை ஆட்டிக் கொண்டு பதற என்னனு புரியாமல் ஜாலியா நான் போக, யாரோ வந்து பிடிச்சு இழுத்துத் தள்ள, ரயில் என்னைக் கடந்து சென்றது. சுபம்! இது நடந்தது 88-89 ஆம் வருஷங்களில், வில்லிவாக்கம் ஸ்டேஷனில். :))))))

    பதிலளிநீக்கு
  3. காக்கைகிட்டே கேட்டீங்களா ??

    என்ன சொல்லியது ??

    கா..கா.. ன்னு...

    பதிலளிநீக்கு
  4. அண்ணனுங்க சொன்னாங்களா:)?

    எந்த சபாவுக்கெல்லாம் சென்றீர்கள் என மாதம் முழுக்க பதிவுகள் எதிர்பார்க்கலாம்னு சொல்லுங்க!

    படம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. காக்கைப் பள்ளிக்கூடத்துக்கும் போய்விட்டீர்களா.:)என்ன சொன்னாங்க.?மைலாப்பூர் சபாவுக்குத்தான்ன்னு சொல்லி இருப்பார்கள். ஞானாம்பிகா போர்ட் பார்த்ததாக நினைவு.
    ரயில் தண்டவாளங்களில் யாராவது நடக்காமல் இருப்பார்களா. நாங்கள் இருந்த ஊரில் மேற்சொன்ன வியபத்துகள் நடக்கச் சான்சே இல்லை நாளுக்கு எட்டு வண்டிதான் வரும்:)

    பதிலளிநீக்கு
  6. டிரைன் போகையில தண்டவாளத்துல காத வெச்சு கேட்டா சத்தம் வருமாம் -- இத கேள்விப்பட்டு.. ஒரு தடவ நா (தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் காலேஜ்) ட்ராக்ல டிரைன் போனபின் (புத்திசாலி பையன் நானு..), குனிஞ்சு காத வெச்சு கேக்க.. அந்தப் பக்கமா அப்ப வந்த வயல் வேலை செய்யும் பெரியவர்கள் நான், டிரைன்லேருந்து தவறி கீழ விழுந்துட்டேன்னு பதறி கிட்ட வந்து.... ம்.. ஹ்ம்ம்.. தேவையில்லாம அவங்கள கலவரப் படுத்திட்டேன்.


    PS: it was in 1991. Also after that train, I think the next train was at least an hour later.

    பதிலளிநீக்கு
  7. அருமையான படப்பிடிப்பு,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. ஒன்றுகூடுதல்
    தண்டவாளத்
    தெரிவில்தானோ
    தொடரட்டும்
    விசாரிப்புக்கள் !

    பதிலளிநீக்கு
  9. என்ன அழகாய் படம் எடுத்து என்ன அருமையாக தலைப்பும் வைத்து அசத்தி விட்டீர்கள்.சூப்பர் படம்.

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான படம்.

    எத்தனை பேரின் நினைவலைகளை மீட்டி விட்டது படம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!