வியாழன், 27 டிசம்பர், 2012

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள்


பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
   
இங்கு ஒரு மாறுதல்.
     
எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...  
====================================================================


1) ரொம்ப சுவாரஸ்யமான கேள்வி எது? சுவாரஸ்யமான பதில் எது?

2) கேட்கப்பட்ட கேள்வி (கேட்டபின்) யாருக்குச் சொந்தம்? கேட்டவருக்கா, கேட்கப்பட்டவருக்கா?
!

3) 2012ன் மிக நல்ல நிகழ்வு என்று எதைச் சொல்வீர்கள்?  

                            

14 கருத்துகள்:

  1. சிறந்த விடைகளுக்கு பரிசு உண்டா சார்?

    பதிலளிநீக்கு
  2. //ரொம்ப சுவாரஸ்யமான கேள்வி எது? // காதலை காதலியிடம் கேட்பது (எல்லாம் வயசுக் கோளாறு வேற ஒன்னும் இல்ல)
    // சுவாரஸ்யமான பதில் எது// அதற்க்கு காதலி சொல்லும் பதில்...

    2) கேட்டவர் தன்னிடம் இருந்து கொடுத்து விட்டார் அதனால் கேட்க்கப்பட்டவருக்கே.. இருந்தும் பொதுவாக கேள்வி ஞானம் கேட்டவர் மற்றும் கேட்கப்பட்டவர் இருவருக்கும் சொந்தம்... அள்ள அள்ள பெருகுவது அது ஒன்று தானே...

    3. 2012ன் மிக நல்ல நிகழ்வு என்று எதைச் சொல்வீர்கள்? // உங்கள் நட்பு கிடக்கக் காரணமான எ(ன்)ங்கள் பிளாக் :-)

    பதிலளிநீக்கு
  3. 1) ரொம்ப சுவாரஸ்யமான கேள்வி எது? சுவாரஸ்யமான பதில் எது?

    சாப்பிட என்ன இருக்குது?
    சாப்பாடு.

    2) கேட்கப்பட்ட கேள்வி (கேட்டபின்) யாருக்குச் சொந்தம்? கேட்டவருக்கா, கேட்கப்பட்டவருக்கா?!

    படிப்பவர்களுக்கு.

    3) 2012ன் மிக நல்ல நிகழ்வு என்று எதைச் சொல்வீர்கள்?

    அந்த வருடம் முடிவதுதான்.

    பதிலளிநீக்கு
  4. 1) ரொம்ப சுவாரஸ்யமான கேள்வி எது? சுவாரஸ்யமான பதில் எது?

    எப்படி இருக்கீங்க..

    பதில் - எப்படி இருந்தாலும் நல்லா இருக்கேங்க என்பதும் பதிலுக்கு ஐவரும் கேள்வி கேட்பதும்

    2) கேட்கப்பட்ட கேள்வி (கேட்டபின்) யாருக்குச் சொந்தம்? கேட்டவருக்கா, கேட்கப்பட்டவருக்கா?

    அதை உணர்ந்தவர்களுக்கு

    3) 2012ன் மிக நல்ல நிகழ்வு என்று எதைச் சொல்வீர்கள்?

    அதிகம் இருக்கு (இது தான்)

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப ஸ்வாரஸ்யமான கேள்வி என்ன சாப்பிடுகிறே?
    பதில் எனக்குப் பிடித்த உணவு
    மிளகாய் பஜ்ஜி....

    2,கேட்டபிறகு கேள்வி புரிந்தவர்களுக்குச் சொந்தம்
    3 2012 இன் நல்ல நிகழ்வு மாயன் பொய்யனானான்:)

    பதிலளிநீக்கு
  6. சுவாரஸ்யமான கேள்வி? எதிர்காலம் எப்படியிருக்கும்?
    பதில்: அதற்கான பதில் (ஜோதிடம் தெரிந்தவரோ இல்லையோ, யார் சொன்னாலும் பெரும்பாலான் மக்கள் ஸ்வாரஸ்யத்துடன் கேட்கத் தயாராயிருப்பார்கள்.
    கேட்ட கேள்வி கேட்டவருக்குத்தான் சொந்தம்.
    இந்த ஆண்டின் சுவையான நிகழ்வு? ஒன்றுமே இல்லயென்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
    உங்களுக்கும் உங்கள் வாசக அன்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  7. நன்றி ஸாதிகா.. பாராட்டி என்கிற பரிசு எப்போதுமே உண்டு! :))

    நன்றி சீனு... சிலிர்த்துப் போனோம்! :)))

    நன்றி கந்தசாமி சார்... மூன்றாவது பதில்.. 'ரசித்தோம்'.

    நன்றி ஹாரி...

    நன்றி வல்லிம்மா... 3வது கேள்விக்கான பதில் 'உண்மைதான்' என்று நினைக்க வைத்தது.


    நன்றி கீதா சந்தானம்... உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. ஹாஹா, இது ஆளாளுக்கு மாறுபடும். என்னைப் பொறுத்த வரையில் உங்களோட இந்தக் கேள்வியே ஒரு சுவாரசியம் தான். அதுக்கு இன்னும் யார் வந்து சுவாரசியமா பதில் கொடுப்பாங்கனு பார்க்கலாம்.

    கேள்வி கேட்டபின்னால் பதில் அளிப்பவர் தானே முழிக்கணும்? கேள்வியின் நாயகனுக்கு என்ன கவலை! :P :P :P

    வல்லி சொன்னதும் உண்மையே என்றாலும் தினம் தினம் திருநாளே! குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா! குறையொன்றுமில்லை கோவிந்தா!

    பதிலளிநீக்கு
  9. குரோம்பேட்டை குறும்பன்28 டிசம்பர், 2012 அன்று 7:13 PM

    சுவாரஸ்யமான கேள்வி: "என்னங்க - டின்னருக்கு என்ன வேணும்?"
    சுவாரஸ்யமான பதில்: "நான் கடைக்கு எதற்கும் இப்போ போக மாட்டேன். கிரிக்கட் பார்க்கணும்"

    எந்தக் கேள்வியும் யாருக்கும் சொந்தமில்லை. உதாரணத்திற்கு:
    பயணி: "இந்த பஸ் எங்கே போகுது?"
    தியேட்டரில்: "என்ன சார்? சினிமாவுக்கா?"
    வீட்டில்: "என்னங்க - டின்னருக்கு என்ன வேணும்?"

    இந்த வருடத்தின் மிக நல்ல நிகழ்வு: இன்னும் நான்கு நாட்கள் கழித்து, அதுவரை நடப்பவைகளைப் பார்த்துச் சொல்கிறேன்!

    பதிலளிநீக்கு
  10. // ....... அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். //

    Perhaps, (அவர்களுக்கு) பதில் (சொல்லத்) தெரிந்தால், பிரசுரம் ஆகும்.

    பதிலளிநீக்கு
  11. நேற்று நிலா கேட்டிருந்தாள்...இப்பவே எங்கட அம்மா கிழவியாயிட்டா நான் என்ன செய்வேன் ?

    சமாளிச்சபடி நான்.....அப்பிடியெல்லாம் ஆகாது.

    சரி.....அப்பிடி ஆயிட்டால்....!

    திரு திரு....சரி அதைவிடு.வேற ஏதும் கதைப்பம்.என்ன சாப்பிட்டாய் இப்ப !

    இந்தக் கேள்வி எப்போதுமே நிலாவுக்குத்தான் சொந்தம் !

    வயசு ஒன்று கூடியிருக்கு.2012 ன் நல்ல நிகழ்வு.சில நல்ல கவிதைகள் எழுதியிருக்கேன் !

    பதிலளிநீக்கு
  12. எதுவுமே சுவாரசியம் ஆறது என்னோட மனநிலை பொருத்துதான்.

    கேட்கப்பட்ட கேள்வி கேட்டவருக்குதான் சொந்தம்.

    டிசம்பர் 21 ஆம் தேதி ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் என் பயம் பொய்யானது. :))

    பதிலளிநீக்கு
  13. சுவாரசியமான கேள்வி : "நேத்திக்கி என்ன நடந்தது தெரியுமா?"

    மேற்படி பதில் : " எவ்வளவு தொகை வேணும்னு சொல்லு. ரெடியா இருக்கு."

    மிக நல்ல நிகழ்வு: ஒரு அநியாயத்தை எதிர்த்து/கண்டித்து ஆயிரக்கணக்கில் மக்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றித் திரண்டது.

    பதிலளிநீக்கு
  14. சுவாரஸ்யமான கேள்வி: வெளியே போலாமா?
    பதில்: ( பதிலே சொல்லாமல் உடனே தயாராகி விடுவேன்!)

    கேட்பவருக்கே சொந்தம். கேள்வி பிறந்தது அவரிடமிருந்து என்பதால்.

    நல்ல நிகழ்வு: ஊழலுக்கு எதிராகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும் எல்லோரும் வீட்டை விட்டு வெளியே ஒன்றாகத் திரண்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!