வெள்ளி, 14 டிசம்பர், 2012

(மடக்கி) மடக்கிப் போட்ட மன வரிகள்!
கருப்பு மேகத்தால்
வெண்மை தேகம்
கறையானதாக
வானம் விட்ட கண்ணீர்..

கண்டு இரங்கிய

காற்று வந்து
மேகம் துரத்தியவுடன்
கண்ணீர் நின்றது.  
******************************************************

கரியவானின்
நட்சத்திர பொத்தல்கள்
சுருட்டி முடித்து
தூர எறிந்து
வெண்மையாக்கிக் கொடுத்தது
வெளிச்ச வானம்.

********************************************************

 

தேக்கி வைத்த 
மௌன அணைக்கட்டு 
உடைந்தது....
பேச்சு வெள்ளம்.

தனியாய் இருந்த 
தாத்தா.
********************************************************கனவுக் கற்களால்
மனக்குளத்தில்
கல்லெறிகிறேன்..
தெறிக்கிறது
சிறு திவலைகளாய்
உன்
நினைவுகள்!

**********************************************************

படங்கள் : நன்றி இணையம் 

20 கருத்துகள்:

 1. கவித... கவித...

  நன்று. அதிலும் தனியாய் இருந்த தாத்தா என்னமோ செய்துவிட்டார் மனதை!

  பதிலளிநீக்கு
 2. சில புதுசு. சில முன்பு எழுதியது கரக்ட்டா?

  பதிலளிநீக்கு
 3. சில புதுசு. சில முன்பு எழுதியது கரக்ட்டா?

  பதிலளிநீக்கு
 4. கவிக்கூ! அத்தனையும் அருமை. தாத்தா எங்கே இருக்கிறார் நான் போய்ப் பேசுகிறேன்.
  கவிஞருக்கு என் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான கவிதைகள் . அதிலும் தாத்தாவின் தனிமை வலி.

  பதிலளிநீக்கு
 6. தனிமையின் தவிப்பு உணர முடிகிறது.

  பதிலளிநீக்கு
 7. காற்றின் இரக்கத்தால் மழை போச்சே!
  மழையை எதிர்ப்பார்த்தவர்கள் காற்று வந்து மழையை கெடுத்து விட்டது என்று புலம்புவார்கள் இப்போது தான் தெரிகிறது அது காற்றின் இரக்கம் என்று!

  பேச ஆள் இல்லாத முதியவர்களுக்கு பேச ஆள் கிடைத்தால் மடை திறந்த வெள்ளம் தான் பேச்சு.
  எல்லா கவிதையும் நன்றாக இருக்கிறது.

  அருமையான கவிதை.

  பதிலளிநீக்கு
 8. மனவரிகள் அத்தனையும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 9. தலைப்பைக் கூட
  மடக்கிப்
  போட்டிருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 10. எல்லாமே நல்லா இருந்தாலும், கடைசி இரண்டும் ஜூப்பரு.

  பதிலளிநீக்கு
 11. கவிதைகள் அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. எத்தனை கவிதைகள் எழுதினாலும் இப்படியான கவிதைகளப் பார்த்தால் ஏன் நான் இன்னும் இப்படி எழுதவில்லையெனத் தோன்றுகிறது.அருமையான கவிதைகள்.நன்றி !

  பதிலளிநீக்கு
 13. எனக்கும் வயதாவதாலோ என்னவோ தாத்தா மனதை நெகிழ வைக்கிறார்!
  கவிதையை எழுதியவருக்குப் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு

 14. நன்றி வெங்கட்... கிட்டத் தட்ட அந்த தாத்தா கவிதை என் தந்தையை மனதில் நினைத்தே தோன்றியது!

  நன்றி T N MURALITHRAN.

  நன்றி லக்ஷ்மிம்மா..

  நன்றி மோகன் குமார்... எல்லாமே 'புச்சு'தான் மோகன்..! :))

  நன்றி ஆத்மா.. (சுஜாதா கதை நினைவுக்கு வருகிறது உங்கள் பெயர் படித்ததும். ஆத்மா, நித்யா என்று இருவர் வெளி கிரகத்திலிருந்து தமிழ் கற்க வருவார்கள்!)

  நன்றி அமைதிச்சாரல்.

  நன்றி கவிதை வீதி...//சௌந்தர்//

  நன்றி எழில்.

  நன்றி சசிகலா.

  நன்றி கோமதி மேடம்.

  நன்றி ராமலக்ஷ்மி.

  நன்றி ஜீவி சார். அப்படியும் யோசித்தேன்!

  நன்றி கீதா மேடம்.

  நன்றி 'தளிர்' சுரேஷ்.

  நன்றி, நன்றி ஹேமா... தன்யனானேன்!

  நன்றி ரஞ்சனி மேடம்.

  பதிலளிநீக்கு
 15. மடக்கிதான் போட்டுடுத்து மனசை. கடைசி கவிதை கலக்கல்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!