செவ்வாய், 28 மே, 2013

ஜெயமோகனும் வாலியும்...


வாழ்க்கைல கேள்விங்க சகஜங்க... ரோட்ல நடக்கறப்போ எதிர்ல வர்றவங்க 'டைம்' கேக்கற கேள்விகள்ல தொடங்கி, ஆஃபீஸ்ல, ஹோட்டல்ல பஸ்ல, அட அது ஏன், அவிங்கவங்க வூட்லயே எத்தனை கேள்விங்களைச் சந்திக்கிறோம்? எல்லாத்துக்கும் எல்லோராராலயும், எப்பவும் பொறுமையா பதில் சொல்ல முடியுமா என்ன?

பிரபலமானவிங்க கிட்ட சாதா ஜனம் கேள்விகள் கேட்கலாம். சாதா ஜனம் கிட்ட பிரபலங்கள் கேள்விகள் கேட்கலாம். பிரபலங்கள், பிரபலங்கள் கிட்டயேயும், சாதா ஜனம் சாதா ஜனத்து கிட்டயேயும் கேள்வி கேட்கலாம்.


கேள்வி கேக்கற சாக்குல நம்ம ஞானத்தை டாம் டாமடிச்சுக்கலாம். யார்ட்ட கேக்கறோமோ, அவிங்களை விட அல்லது அவிங்களுக்கு தெரியாத ஒண்ணு எனக்குத் தெரிஞ்சிருக்குன்னு காட்டிக்கலாம்.


கேள்விங்க பொறாமையால இருக்கலாம்... தன்னை விளம்பரப்படுத்திக்க இருக்கலாம். வெறுப்பேத்தன்னே கூட இருக்கலாம்!


இது மாதிரிக் கேள்விங்களை யாரு, எப்படி ஹேண்டில் செய்றாங்கங்கறதுலதான் மேட்டரு... இன்னா சொல்றீங்க?


கோவப் படுவாய்ங்க சில பேரு... பேசாமப் பூடுவாய்ங்க சில பேரு... நல்லா பதில் குடுத்துட்டுப் போவாய்ங்க சில பேரு.. இன்னும் சில பேரு அடிக்கவே அடிச்சுடுவாய்ங்க...


என்னியக் கேட்டா, மௌனமாப் பூடுவேன்... நம்மளை முட்டாள்னும் நினைக்கலாம், ஞானின்னும் நினைக்கலாமே...!!!


இப்ப இதெல்லாம் எதுக்குன்னுதானே கேக்கறீய.. இதோ.. அத்தச் சொல்லத்தானே வாரேன்...


இவரு இவரோட அனுபவத்தை இங்கே
சொல்லியிருக்கறதைப் பத்தித்தாங்க முகநூல்ல ஒரே டிபேட்டு... ஆளாளுக்குக் கருத்து மழை பொழியறாய்ங்க...

நமக்குக் கருத்து, கருமாந்தரம் ஏதும் இல்லீங்க... கருத்து சொல்ல நாம யாரு.... இதே மாறிப் படிச்ச வேற ஒண்ணு கியாபகத்துக்கு வந்துடுச்சுங்க.. இருங்க... ஏலே... முன்சாமி... அந்த புக்கை எடுறா... அதில்லடா... பக்கத்துல இருக்கு பாரு, பளபளன்னு தங்கக் கலர்ல... வாலி ஐயா படம் போட்டு... அதான்...ஆங்... ஐயா...அம்மா.. படிக்கிறேன் கேளுங்க... மேட்டரு கொஞ்சம் பெரிசா இருந்தா மன்னிச்சுப் போடுங்க... ஆனா பாதில போயிடாதீங்க..ஆமாம், சொல்லிட்டேன்!


.......விஸ்தாரமான அந்த வெட்ட வெளியில் அந்த விருந்து நடந்து கொண்டிருந்தது. ஒரு மேஜையைச் சுற்றி, நானும், முத்தமிழ்க் கலா வித்தகர் ரத்னா திரு. டி.கே. சண்முகம், திரு டி கே பகவதி ஆகியோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.


அப்போது, அங்கே ஒரு தமிழன்பரும் வந்து அமர்ந்து கொண்டார். அவர் இன்னாரென்று எனக்குத் தெரிந்தாலும், முறையான அறிமுகம் கிடையாது. அறிமுகமில்லாதவர்களோடு, முந்திரிக்கொட்டை போல நானே முந்திக் கொண்டு வம்பளப்பது எனக்கு உடன்பாடல்லாத விஷயம்.


வந்தவர், சண்முகம் அன்னாச்சியோடும் பகவதி அண்ணாச்சியோடும் வார்த்தையாடலானார். அப்போது சண்முகம் அண்ணாச்சி அவர்கள், என்னை அவரிடம், "இவர்தான் கவிஞர் வாலி" என்று அறிமுகப் படுத்தினார். அவரையும் இன்னாரென்று எனக்கு எடுத்துக் கூறினார். பரஸ்பர வணக்கங்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம்.


பொதுவாக, அந்த நபருக்கு என்னை அவ்வளவாகப் பிடிக்காது. நான் ஒரு பாவமும் அறியேன்; இருந்தும் நான் சினிமாவில் வெற்றி பெற்றது குறித்து அவருக்கு ஒருவித உளைச்சலும், நமைச்சலும் உள்ளத்தில் உண்டு என்பதை, நான் பிறர் சொல்லத் தெரிந்து வைத்திருந்தேன்.


அவர் சிறுகதைகளும், நாவல்களும் நிறைய எழுதி வரும் பிரபல எழுத்தாளர். சொந்தமாக ஒரு பத்திரிகையும் நடத்தி வந்தார்; த
ன் நாவல் ஒன்று, திரைப்படமாக வந்து விட வேண்டுமென்பதற்காக, அவர் முன்னின்று முயன்று அந்த முயற்சி முளையிலேயே பட்டுப் போனதால், என் போன்ற வெற்றி பெற்ற சினிமா எழுத்தாளர்கள்பால் ஏகப்பட்ட எரிச்சலோடு இருப்பவர்.

                                           
 
"இவனெல்லாம் ஒரு கவிஞனா?" என்று என்னைப் பற்றிய ஒரு கணிப்பை விழிகளில் எப்போதும் ஒட்டி வைத்துக் கொண்டு உலா வருபவர்.

சண்முகம் அண்ணாச்சி என்னை அவரிடம் அறிமுகப்படுத்தியதும், என்னை ஏதோ ஒரு இக்கட்டான கேள்வியைக் கேட்டு திக்குமுக்காட வைக்க வேண்டும் என்று திட்டமிட்டாரோ என்னவோ!


அவர் என்னைப் பார்த்து ஒரு வினாவைத் தொடுத்தார் :


"நீங்க ஏன் ஸார் வாலின்னு பேர் வச்சிக்கிட்டு இருக்கீங்க?"


அவரது உள்நோக்கம் ஓரளவு எனக்குப் புரிந்திருக்கும். நான் பவ்யமாக பதில் சொன்னேன், "ஸார்! நீங்க தழறிஞர்; ராமாயணம் படிச்சிருப்பீங்க! எதிராளி ஒருவன் வாலிக்கு முன்வந்து நின்றால் அவனது பலத்தில் பாதி வாலியை வந்தடையும் என்பது இராமாயண வழக்கு. அதுமாதிரி, எந்த அறிவாளி என்முன் வந்து நின்றாலும், அவரது அறிவின் பாதி என்னை வந்து சேர வேண்டும் என்பதற்காகத்தான், நான் 'வாலி' என்று பெயர் வைத்துக் கொண்டுள்ளேன்; அப்படிப் பலரது அறிவு எனக்குக் கிடைக்கும் என்ற ஆசைதான்!"


இந்த விளக்கத்தைக் கேட்டதும் அவர் ஏளனமாகச் சிரித்து விட்டுப் பேசினார் :


"அப்படிப் பலரது அறிவில் பாதி உம்மைச் சேர்ந்திருந்தால், நீர் இவ்வளவு காலம் பெரிய அறிவாளியாக அல்லவா ஆகியிருக்க வேண்டும்...? உம்மைப் பார்த்தால், அப்படித் தெரியவில்லையே...!"


நான் ஒருவினாடி கூடத் தயங்காமல் அவருக்கு பதிலுரைத்தேன்:


"ஸாரி! நான் இன்னும் என் வாழ்க்கையில் ஒரு அறிவாளியைக் கூடச் சந்திக்கவில்லையே?"


என்னுடைய இந்த பதிலைக் கேட்டதும் சண்முகம் அண்ணாச்சியும், பகவதி அண்ணாச்சியும் எட்டு ஊருக்கு எட்டும்படியாக பலமாகச் சிரித்து விட்டார்கள்.


அந்தத் தமிழ் எழுத்தாளரின் முகம் தொங்கிப் போயிற்று. உடனே என்மீது வேறு ஒரு கணை
யைத் தொடுத்தார்.

"என்னதான் நீர் சினிமாவில் பாட்டு எழுதினாலும், கண்ணதாசன் மாதிரி ஒரு கவியரசர் ஆக முடியாது..."


உடனே நான் சொன்னேன்: "ஸார்! எதற்கு நான் இனிமேல் கவியரசர் என்று ஆகணும்? 'வாலி'ன்னு சொன்னாலே கவியரசு என்றுதானே அர்த்தம்? இதுவும் ராமாயணம் படிச்ச உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே..."


இதற்குமேல் அந்தத் தமிழ் எழுத்தாளர் எங்களுடன் இருக்கப் பிரியப்படாமல் மெல்ல எழுந்து போனார்.


இந்த எழுத்தாளர், மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் என்னுடன் மோதினார்.


காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் நான் பேசப் போனேன். அந்த விழாவுக்கு என் அருமை நண்பர் திரு எஸ் பி முத்துராமனும் வந்திருந்தார். ஒரு திரைப்பட இயக்குனர் என்ற முறையில், அவர் திரைப்படப் பாடல்கள் பற்றிப் பேச நேர்கையில், என்னை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். நான் முன்னம் சொன்ன தமிழ் எழுத்தாளருக்கு, இது பொறுக்கவில்லை. பேச்சாளர் பட்டியலில் அவரும் ஒருவராக அந்த விழாவுக்கு வந்திருந்தார். இது எனக்குத் தெரியாது.


எனது அருமைச் சகோதரியும், அந்தக் கல்லூரியின் பேராசிரியையும் ஆன, திருமதி அரசு மணிமேகலை அவர்கள் என்னை அழைத்ததால், மற்ற விவரங்கள் எதையும் கேட்டு அறியாமல், அந்தச் சகோதரியின் அன்பு அழைப்பை அப்படியே ஏற்றுக் கொண்டேன்.


அந்தத் தமிழ் எழுத்தாளர் பேச ஆரம்பித்தார்.."இயக்குனர் எஸ் பி முத்துராமன் இங்கே வாலியை புகழ் வாய்ந்த திரைப்படக் கவிஞர் என்று பாராட்டிப் பேசினார்... இதை, நான் முழுமையாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்... வாலி, சில நல்ல பாடல்கள் எழுதி இருந்தாலும், மோசமான பாடல்களைத்தான் அதிகம் எழுதி இருக்கிறார்..." என்று அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே, நான் 'மைக்'கை அவர் கையிலிருந்து வாங்கி அவர் குற்றச் சாட்டுகளுக்கு விளக்கம் கொடுக்கலானேன்.


"இவரைப் புகழ்வாய்ந்த தமிழ் எழுத்தாளர் என்று நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், இவர் என்னை புகழ் வாய்ந்த திரைப்படக் கவிஞர் என்று ஒப்புக் கொள்ளவில்லை. அதுகுறித்து நான் விசனி
க்கவில்லை. ஆனால், நான் எழுதிய மோசமான பாடல்கள் எவை எவை என்று, இவர் இங்கே சொல்லாமல் பொத்தாம்பொதுவாக இவர் என்மேல் குற்றம் சாட்டுவது நாகரீகம் ஆகாது...  இவ்வளவு பெரிய எழுத்தாளர் எதைக் காக்கத் தவறினாலும் தன்னுடைய இன்ஷியலைக் காக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்... இது நான் சொன்னதல்ல; வள்ளுவன் சொன்னது..." என்று கூறி அமர்ந்தேன்.

மாணவிகளின் கைதட்டல், கொட்டகையைப் பிய்த்துக் கொண்டு போயிற்று. அந்த எழுத்தாளரின் இன்ஷியல் 'நா'. இப்போது அமரராகி விட்ட அவரது பெயரைச் சொல்லாமல் விடுகிறேன். என்னைப் பொ
றுத்தவரையில் இன்றளவும் அவரது எழுத்தின்மீதும் புலமையின் மீதும் அளவிடற்கரிய மதிப்பும் மரியாதையும் உண்டு.

இது ஒரு
புகழ்பெற்றவர் தன்னை எதிர்த்து வந்த ஒரு அறிவாளியையே சமாளித்த நிகழ்ச்சிங்க... இதாங்க என் கியாபகத்துக்கு வந்தது... நாம்படிச்சதை முளுசா கேட்டீகளா? நீங்க என்ன நினைக்கறீக....

19 கருத்துகள்:

  1. நா.பா???? ம்ம்ம்ம்ம்?? இன்னும் சில கதைகளும் உண்டு! :)))))

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. 1 : "நான் முட்டாள்களிடம் பேசுவதில்லை..."

    2 : "நானெல்லாம் அப்படி இல்லேங்க... நீங்க பேசுங்க..."

    இந்த உரையாடல் ஞாபகம் வந்தது...

    "புகழ் (?) வாய்ந்த" தமிழ் எழுத்தாளர் போல பலரும் உண்டு... மாற்ற நினைப்பது நம் தவறு...

    பதிலளிநீக்கு
  4. முழுசாக் கேட்டேமுங்க:). ஒண்ணும் சொல்றதுக்கில்லங்க.

    பதிலளிநீக்கு
  5. ஒரு ஏழு எட்டு வருடத்திற்கு முன் வாலி பேசியது இது

    "கல்லாய் நிற்கும் இறைவனின் கர்ப்பக்ருகத்திற்குள் சென்றேன்

    நீ கல் என்றேன்

    நீ கல் என எதிரொலித்தது.

    முதல் கல் பெயர்ச்சொல்

    அடுத்த கல் வினைச்சொல் "

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  6. பின்னூட்டம் ரசித்தேன், சூரி சார்.

    பதிலளிநீக்கு
  7. இணைப்பில் :

    அப்போ இருந்தது... இப்போ இல்லை...

    பதிலளிநீக்கு
  8. //கல்லாய் நிற்கும் இறைவனின் கர்ப்பக்ருகத்திற்குள் சென்றேன்

    நீ கல் என்றேன்

    நீ கல் என எதிரொலித்தது.

    முதல் கல் பெயர்ச்சொல்

    அடுத்த கல் வினைச்சொல் //

    முதலில் எனக்கு புரியவில்லை... புரிந்த பொழுது வெட்கினேன்... நான் இன்னும் கற்க வேண்டியது அதிகம் உள்ளது... என்ன ஒரு ஆழ்ந்த உள்ளர்த்தம்...

    ஜெமோ பேசியதில் தவறெதுவும் இல்லை... குறை குடங்கள் கூத்தாடும் போது சகித்துக் கொள்ள முடியாது.. அவர்கள் துறையில் அவர்கள் சாதனையாளர்கள் தான்....

    பேஸ்புக்கில் அரைகுறை விதண்டாவாதங்களை நானும் கவனித்தேன்

    ஒரே சொல்

    காழ்புணர்ச்சி ...

    பதிலளிநீக்கு
  9. என்ன சொல்லலாம். எல்லோரும் எப்போதும் கற்றவர்களாகவும் இருப்பதில்லை. முட்டாள்களாகவும் இருப்பதில்லை.
    நேரம் தான்.நல்லவிவாதம்.

    பதிலளிநீக்கு
  10. இது ஒரு புகழ்பெற்றவர் தன்னை எதிர்த்து வந்த ஒரு அறிவாளியையே சமாளித்த நிகழ்ச்சிங்க... இதாங்க என் கியாபகத்துக்கு வந்தது... நாம்படிச்சதை முளுசா கேட்டீகளா? நீங்க என்ன நினைக்கறீக.... //

    பேச தெரிந்த அறிவாளி.
    வேறு என்ன சொல்வது?.
    மற்றவர்களை முட்டாள் ஆக்கநினைத்தால் நாம் முட்டாள் ஆகி விடுவோமென்பதுபடிப்பினை.
    இதன் மூலம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  11. வாலி வார்த்தை விளையாட்டுகளில் வல்லவர்.
    சுப்பு தாத்தா கூறிய வாலியின் கவிதை அருமை.

    இதில் ஜெயமோகன்பற்றி எந்த செய்தியும் என் கண்ணில் படவில்லையே

    பதிலளிநீக்கு
  12. TNM.... 'இவரு இவரோட அனுபவத்தை இங்கே' என்று மாறிய நிறத்தில் உள்ள வார்த்தையை (யில் உள்ள சுட்டியை)க் 'கிளிக்'குங்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!