Monday, July 14, 2014

வருத்தப்படுகிற வயோதிகர் சங்கம்அன்றாட தினசரிகளைப் புரட்டினால்
முன்பக்கத் தலைப்புச் செய்திகளாக
முழுப் பக்கங்களிலும்
முக்கியச் செய்திகளாக 

எங்கெங்கு எத்தனை எத்தனை
கற்பழிப்புகள்
அப்புறம் அந்தப் பெண்கள்
கொலையாவது 

வங்கியிலிருந்து ஓய்வூதியம் எடுத்து வரும்
வயோதிகரை வழிமறித்து
பணப்பையைப் பிடுங்கிக் கொண்டு
ஓடிப்போகிற வன்முறைகள்
 
வழிப்பறிகள் பஸ்கள் மோதல் - பலிகள்
நின்று கொண்டிருக்கிற பேருந்து மீது
பின்னாலிருந்து வந்து மோதும் இன்னொரு
பேருந்து - உயிர்ச்சாவுகள்
அரசு அலுவல்களில் எல்லாம்
லஞ்சக் கோரிக்கைகள்
 
பட்டப் பகலிலும்
பக்கத்து வீட்டைச் சூறையாடும்
பேட்டை ரௌடிகள்
 
பட்டப் பகலில் நகையணிந்து
பயமின்றி தெருவில்
இளம்பெண்கள் நடந்து செல்லும்
காந்தி கண்ட ராமராஜ்யக் கனவு
 
என்றிப்படியாக
எத்தனையோ கொடுஞ்செய்திகள்
இல்லாமல் தடுக்கிற
இயலாமையை எண்ணி எண்ணி
வருத்தப் படுகிறது வயோதிகர் சங்கம்.

( இதை எழுதியது நானல்ல.. ! )

24 comments:

இராஜராஜேஸ்வரி said...

யார் எழுதினாலும் உண்மைதானே..

இராஜராஜேஸ்வரி said...

யார் எழுதினாலும் உண்மைதானே..

உலகளந்த நம்பி said...

( இதை எழுதியது நானல்ல.. ! )

தன்னடக்கம்?

ரூபன் said...

வணக்கம்
ஐயா

உண்மைதான்...உண்மைதான் யார்எழுதினாலும் என்ன தங்களின் வலைப்பூவில்தான் உள்ளது. பகிர்வுக்கு நன்றி ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

தற்போதைய நிலையை அப்படியே சொன்ன கவிதை.....

திண்டுக்கல் தனபாலன் said...

நம்புவதாக இல்லை...!

சே. குமார் said...

யார் எழுதினாலும் உண்மையை உரக்கச் சொல்லுகிறதே அண்ணா...
அருமை.

வல்லிசிம்ஹன் said...

நான் இல்ல நான் இல்லன்னு சொன்னால் இல்லாமப் போகிடுமா.நல்லத்தான் இருக்கு கவிதை. எங்களுக்கு ரொம்பப் பொருத்தம்.

அருணா செல்வம் said...

அவ்வளவு வயதாகி விட்டதா உங்களுக்கு?

Yarlpavanan Kasirajalingam said...

"இயலாமையை எண்ணி எண்ணி
வருத்தப் படுகிறது வயோதிகர் சங்கம்." என்பது
உண்மையே!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருணா மேடம்!
நீங்க இப்படி கேப்பீங்கன்னுதான் இதை எழுதியது நான் இல்லைன்னு சொல்லி இருக்கார்.
நீங்க எப்பவாவது வயதானவர் பற்றி கவிதை எழுதுவீங்க இல்ல அப்ப பாத்துக்குவார்.
ஆமாம்
உங்க ஈமெயில் முகவரி
avvaipaatti@live.fr தானே!
நீங்க பாட்டியான்னு கேக்கப் போறார். ஹிஹிஹ்

Geetha Sambasivam said...

விஷயம் எல்லாம் சரிதான், ஆனால் இதைக் கவிதைனு சொல்றீங்க????????????????????

Geetha Sambasivam said...

வய்சானவங்க புலம்பல் வேறே மாதிரியும் இருக்குமே! நேத்து இதை எப்போப் போட்டீங்க? "திங்க" ஏதானும் கிடைக்குமானு வந்து பார்த்தேன். ஒண்ணும் தேறலை! :)

Bagawanjee KA said...

#பட்டப் பகலில் நகையணிந்து
பயமின்றி தெருவில்
இளம்பெண்கள் நடந்து செல்லும்
காந்தி கண்ட ராமராஜ்யக் கனவு

இதுவுமா கொடுஞ்செய்தி?

G.M Balasubramaniam said...


இந்தச் செய்திகளில் உங்களுக்கு உடன் பாடு இல்லையா.? எதற்கு அந்த டிஸ்கி.?

மாடிப்படி மாது said...

கவிதையில் சொல்லிய கொடுமைகளுக்கு உள்ளாவது பெரும்பாலும் இளைய வயதினர். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை கண்டு பொறாமை கொள்ளாமல் அவர்களுக்கு நேரும் கொடுமைகளுக்காக கண்ணீர் சிந்தும் இந்த வருத்தப்படும் வயோதிகர் சங்கம் பல்லாண்டு வாழட்டும்

Geetha Sambasivam said...

//பட்டப் பகலில் நகையணிந்து
பயமின்றி தெருவில்
இளம்பெண்கள் நடந்து செல்லும்
காந்தி கண்ட ராமராஜ்யக் கனவு//

காந்தி இரவு பனிரண்டு மணிக்குத் தன்னந்தனியாக நகைகள் அணிந்து பெண்கள் செல்லும் நாள் வரணும்னு தானே கனவு கண்டார்? பகலிலா?? ம்ஹூம், இல்லை. :)

Madhavan Srinivasagopalan said...

இதை எழுதியது நானுமல்ல !

Chellappa Yagyaswamy said...

நண்பரே! சென்னையில் இருக்கிற இன்னல்கள் எல்லாவற்றையும் ஒரே கவிதையில் நீங்களே எழுதிவிட்டால், மற்ற கவிஞர்களுக்கு எழுத விஷயம் இல்லாமல் போய்விடுமே, கவனம் வேண்டாமா?

Thulasidharan V Thillaiakathu said...

நடக்கும் நிகழ்வுகள் பளிச்! சார்! வயசாயிடுச்சா சார்? ஆனா உங்க எழுத்து அப்படிச் சொல்லலியே! அப்படியே இருந்தாலும் வயதெல்லாம் இப்படி உரக்கச் சொல்லக் கூடாது சார்! வயோதிகச் சிங்கங்கள் னு சொல்லுங்க சார்!

‘தளிர்’ சுரேஷ் said...

நீங்க எழுதாவிட்டாலும் பதிவிட்டமைக்கு நன்றி! இன்றைய நிலையைக் கூறும் கவிதை!

வருண் said...

Just a thought..

இன்றுள்ள பதிண்ம வயதோர், எல்லாம் 50 வருடம் சென்று பிறகு "இன்றைய இழி நிலையை" (உங்க கவிதையை)ப் பார்த்து பொற்காலம்னு என்று சொல்லி அவர்கள் வாழும் "அந்நாளை" இன்னும் கடுமையாக விமர்சிப்பார்களா?

இல்லைனா நம் மக்கள் பண்பட்டுவிடுவார்களா?

அதாவது இன்றைய வாழ்க்கையை மேற்கோள் காட்டி, "இங்க பாரு எப்படிப்பட்ட காட்டிமிராண்டிகளுடன் நம்ம ஸ்ரீராம் வாழ்ந்து இருக்காரு பாவம், இப்போலாம் மனிதர்கள் பண்பட்டுவிட்டார்கள், காந்தியுடைய பகல்கனவும் நனாவயிடுச்சு" பாருனு சொல்லுவாங்களா?

Is there any optimist around here? :)

ஸ்ரீராம். said...


நான்கு நாட்களாக இணையம் படுத்தும் படுத்தலில் எந்த செயலுமே வேகமாகச் செய்ய முடியவில்லை.

ராஜராஜேஸ்வரி மேடம்... நீங்கள் சொல்வது உண்மைதான்.

உலகளந்த நம்பி - தன்னடக்கம் இல்லை. நிஜமாக நான் எழுதவில்லை!

நன்றி ரூபன்.

நன்றி வெங்கட்.

நன்றி DD.

நன்றி சே. குமார்.

வல்லிம்மா..... நிசம்மா நானில்லை! எழுதினது பாஹே!

அருணா செல்வம் - அவ்வளவா ஆகலை!

நன்றி யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.

நன்றி முரளி.

கீதா மேடம்... இப்போ நான் என்ன சொல்லணும்? ஆ...ங்... "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"


பகவான்ஜி கருத்தும், கீதா மேடம் கருத்தும் எழுதியவரிடம் சொல்லப் பட்டது. ஒரு வெறித்த பார்வையும், நீண்ட மௌனமும் மட்டுமே பதில்!

ஜி எம் பி ஸார்.... உடன்பாடுதான்...ஆனாலும் எழுதியது நானில்லை!

நன்றி மா. மாது. கஷ்டம் தெரிஞ்சவரா இருக்கீங்க....

மாதவன் ... அதுதான் எனக்குத் தெரியுமே.....

செல்லப்பா ஸார்.... நீங்களும் எழுதுங்களேன்.

துளசிதரன் ஜி... நான் 'யூத்'துதான்! அதான் சொன்னேனே... இதை எழுதியது நானில்லைன்னு!

நன்றி 'தளிர்' சுரேஷ்.

வருண்ஜி... நானும் இப்படி யோசித்திருக்கிறேன்!

சாய்ராம் கோபாலன் said...

வருந்ததக்கது இத்தகைய குற்றங்களுக்கு வாதாடும் மற்றும் தண்டனையை தள்ளிவைத்தே காலத்தை கடத்தும் நீதி துறை தான்.

உத்தர பிரதேசத்தில் ஒரு பெண் நிதிபதியை மானபங்க நினைத்த கயவன் செய்தி கண்டு தங்கள் துணிகளை தளர்த்தி போராட்டம் நடத்தும் பெண் வக்கீல்கள் - பெண்களையும், சிறு குழந்தைகளையும் கற்பழிப்பு செய்யும் கேடுகெட்ட கயவர்களுக்கு வாதாடாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவன் நான்.

இந்தியாவில் - டைரக்டர் ஷங்கர் இந்தியன் படத்தில் வருவது போல் சின்ன தவறு சின்ன தவறு என்று பூதாகரமாக உருவாகிக்கொண்டு இருக்கின்றது - எல்லாமே. எதற்கும் காசு கொடுத்தோ அடுத்த யுகத்துக்கும் நீளும் நீதித்துறையை நாடி நாட்டில் நடமாடுபவர்கள் தான் அதிகம்.

கணவன் பெண்களை கொடுமை படுத்தினால் harassment என்று அவர்களே செல்லமுடியும்....பெங்களூரில் ஆறு வயது குழந்தையை கெடுக்கும் இவர்களை சௌதியை போல் நாடு ரோட்டில் சாட்டையால் அடித்தே கொன்றால் என்ன ?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!