ஞாயிறு, 13 ஜூலை, 2014

ஞாயிறு 262 : "ஆனால் அருகே நிற்பது ஔவையார் அல்ல....!"


கண்களை ஏன் கட்டிக் கொண்டீர் வினாயகரே.. அவ்வையுடன் கண்ணாமூச்சியா?



19 கருத்துகள்:

  1. சுற்றி நடக்கும் அக்கிரமங்களைக் காணச் சகிக்காமல் தானே கட்டிக் கொண்டாரா? பிரார்த்தனைகள் பலிக்காது போனதில் பக்தருக்கு வந்த கோபமா?

    யார் செய்த வேலையோ. உங்கள் கேமரா கண் சிறைபிடித்து விட்டது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான படம். பொருத்தமாய் பக்கத்தில் ஒளவை பாட்டி.
    பாட்டி என்னால் ஓடமுடியாது கண்ணாமூச்சி விளையாட்டில் மெதுவாய் நடந்து வந்து தான் என்னைப்பிடிக்க வேண்டும் என்று வினாயகருடன் ஒப்பந்தம் செய்து கொண்டோரோ!

    பதிலளிநீக்கு
  3. ஆற்றங்கரை ஓரம் நடக்கிற அசிங்கங்களைப் பார்க்ககூடாது என்று கண்ணைக் கட்டி விட்டுட்டாங்களா ?

    பதிலளிநீக்கு

  4. நன்றி ராமலக்ஷ்மி.. அந்தப் பாட்டியிடம் "என்ன தேடுகிறீர்கள் பாட்டி?" என்று கேட்டேன். "அந்தப் பயபுள்ள முருகன் கூட இங்கனதான் திரிஞ்சிகிட்டிருந்தான்... காணோம்... வந்தா அவனையும் படம் பிடிச்சிப் போடுவீங்கல்லே..." என்றார்! :)))

    நன்றி கோமதி அரசு மேடம்... நீங்கள் சொல்வது போலத்தான் இருக்குமோ... பாட்டி ஒளிந்து கொள்ளத்தான் இடம் தேடறாரோ...! :))

    நன்றி பகவான்ஜி.. அங்க ஆறு இல்லை! இது அழகர்கோவில் மலையில் எடுத்த படம்! பழமுதிர்சோலைக்கு முன்!


    பதிலளிநீக்கு
  5. கண்கட்டுவித்தை செய்த
    மாயம் என்னவோ??!@!

    பதிலளிநீக்கு
  6. அந்தப் பயபுள்ள முருகனின் சேட்டையை காண சகிக்கவில்லையோ...? ஹிஹி...

    பதிலளிநீக்கு
  7. "அந்தப் பயபுள்ள முருகன் கூட இங்கனதான் திரிஞ்சிகிட்டிருந்தான்... காணோம்"// ....ஆஹா....அப்ப இந்தப் பாட்டி ஔவையாரே தான் (ஹாஹாஹா)...."சுட்ட" பழமா, "சுடாத" பழமானு அந்தப் பையன் கேட்டுட்டு ஓடிட்டான்...எப்படித் தெரியும் இவனுக்கு "சுட்ட" பழம்தான்அப்படின்னு?!!!...அண்ணன் பாத்தாரு.....தம்பியோ ஓடிட்டான்....ஒண்ணுமே பாக்காத மாதிரி நாம கண்ணக் கட்டிகிட்டு உக்காந்துருந்தா...பாட்டி நம்மள பாவம்னு நினைச்சு பழத்தைக் கொடுத்துட்டு போகாமயா இருப்பாங்க...(பாட்டி கைல பழம் இல்லைனு தெரியுது...சும்மானாலும்...)

    நம்மள கும்பிடறவங்க பாதி பேருக்கு மேல கேக்கற கேள்வியே ..."என்னய்யா நீர் மெய்யாலுமே இருக்கீறா...இருந்தா எங்களுக்கு வர்ற கஷடத்தல்லாம் பாத்துக்கிட்டு சும்மா சிவனேனு உக்காந்துருக்கீறு...உம்ம கும்பிடறது வேஸ்ட்"..அப்படின்னு சொல்றவங்ககிட்ட..."ம்ம்ம்நான் எதுவுமே பாக்கலையே" அப்படினு சொல்லி தப்பிக்கலாம்ல...

    படம் அருமை! தலைப்பும் அருமை!

    பதிலளிநீக்கு
  8. விநாயகரின் சிலை மீது துண்டு தவறுதலாதான் விழுந்த மாதிரி இருக்கு. ஆனா, யாரும் எடுக்கல.

    பதிலளிநீக்கு
  9. யாரோ குறும்பு பசங்க இடுப்பு வேட்டியை கண்ணுல கட்டி விளையாடி இருக்காங்க போல! கமெண்ட்ஸ் கலக்கல்,! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. படம் ஒரு பக்கம் ரசனை என்றால் அதற்கான பின்னூட்டங்கள் செம ரகளை. அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. எதிரே மூஞ்சுறு பிள்ளையாரையே பார்த்துட்டு இருக்கே! அதான் கண்ணைக் கட்டிட்டு இருக்காரோ! மூஞ்சுறுக்குக் கொடுக்காமல் கொழுக்கட்டையைச் சாப்பிட்டிருப்பார். கிழவி சொல்லி இருப்பா மூஞ்சுறு கிட்டே. மாட்டிக்கிட்டேனே கண்ணை மூடிட்டு உட்கார்ந்துட்டார். :)

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    ஐயா
    கலியுகத்தில் காலம் அபாயமானது .. என்பதால் கண்னை மூடியுள்ளார்.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. மூன்று கைகள் இருந்தும்
    துண்டை எடுக்க முடியாமல்
    சிவனே என்று அமர்ந்திருக்கும்
    வினாயகனிடமே வினாவா?

    பதிலளிநீக்கு
  14. பாட்டி பார்க்கிற பார்வையிலே
    நாட்டு நடப்புப் பிழை
    ஆகையால்...

    பதிலளிநீக்கு

  15. பாட்டி ஏதோ தப்பு செய்யப் போகிறார். அதைப் பிள்ளையார் பார்த்து விடக் கூடாது என்று பிள்ளையார் கண்களைக் கட்டிப் போட்டு விட்டார். நீங்கள் பதிவாக்கி விட்டீர்கள்....!

    பதிலளிநீக்கு
  16. நான் வேணா ஜூட் சொல்லிடறேன். பிள்ளையார் கட்டை அவிழ்த்துவிட்டு எழுந்து வந்துவிடுவார். நல்லபடம் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  17. அழகர் கோவில் மலையில் இருக்கும் பிள்ளையார்...

    கண்ணைக்கட்டி விட்டார்களே?

    பாட்டியார்... அவ்வையாரோ....

    பதிலளிநீக்கு
  18. விநாயகருக்கு கண்ணைக் கட்டினாலும் ஞானக்கண்ணில் அவர் பார்க்க முடியும். பாவம் பாட்டிதான் வழி தெரியாம கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்காங்க

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!