அப்ரண்டிஸ் ஆக இருந்த பொழுது முதல் இரண்டு அல்லது ஒன்றரையாண்டுகள் பல பிரிவுகளிலும் பயிற்சி. மெஷின் ஷாப் முதல் அக்கவுண்ட்ஸ் செக்சன் வரையிலும் எல்லா பகுதிகளிலும் குறைந்த பட்சம் ஒருநாள் அதிகபட்சம் ஒருமாதம் என்று பயிற்சி உண்டு. (காண்டீனில் மட்டும் பயிற்சி கிடையாது)
ஒவ்வொரு பகுதிக்கும் ட்ரைனிங் சென்ற நாட்களில் அங்கு அரட்டை அடிக்க சில ஆட்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வேன். அதற்கு ஆள் பிடிப்பது ரொம்ப ஈசி.
அந்தந்தப் பகுதிகளில் உள்ள யாராவது ஒருவர், நீங்கள் யார், பெயரென்ன, எங்கிருந்து வருகிறீர்கள், எந்த ஊர் என்று ஏதாவது கேட்டுவிட்டால் போதும். விலாவாரியாக விவரங்கள் கூறி, அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டு, அவருடைய இண்டரஸ்ட் என்ன என்று தெரிந்துகொண்டு, அந்த சப்ஜெக்டிலேயே பந்து போட்டு, பந்தடித்து விளையாட ஆரம்பித்துவிடுவேன்.
ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு நண்பர் அதிக பட்சம் அந்தப் பகுதியில் இருப்பவர்கள் எல்லோரையும் நண்பராக்கிக் கொண்டுவிடுவேன். சந்தடிசாக்கில் நண்பருடைய பிறந்தநாள் எது என்று தெரிந்து வைத்துக்கொள்வேன். டயரியில் எழுதி வைத்துக்கொள்வேன். பிறந்தநாளில் அவரை நேரில் சென்று கைகுலுக்கி வாழ்த்திவிட்டு வருவேன்.
சூப்பர்வைசர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் (என்னுடைய பேட்ச் ஆட்களைத் தவிர) யாரும் சுலபமாகப் பழகமாட்டார்கள். அவர்கள் எல்லோரும் மேலதிகாரிகளுக்கு நிறைய பயப்படுபவர்கள். எனவே எனக்கு அதிக நண்பர்கள் தொழிலாளர் வர்க்கத்தினர்தான். அதிலும் குறிப்பாக செமி ஸ்கில்டு / அன் ஸ்கில்டு / காஷுவல் / தொழிலாளத் தோழர்கள் அதிகம். ஜாதி, மத, இன வித்தியாசமே கிடையாது. எல்லோரும் நன்கு பழகுவார்கள்.
நான் வடிவமைப்பு & அபிவிருத்திப் பகுதியில் நிரந்தர வேலை செய்ய ஆரம்பித்த பிறகு கூட, மற்றப் பகுதிகளில் ஏதேனும் வேலை ஆகவேண்டியிருந்தால், (உதாரணத்திற்கு) ஒரு சாம்பிள் பிராக்கெட் செய்ய ஸ்டீல் ப்ளேட் 7" X 8" தேவை என்றால், ஷியரிங் செக்சன் சென்று, அங்குள்ள நண்பரிடம் என் தேவையைக் கூறி, யாரிடம் கேட்டால் காரியம் ஆகும் என்று தெரிந்துகொண்டு அவரின் சிபாரிசோடு வேலையை முடித்துக்கொண்டு வருவேன்.
மெஷின் ஷாப்பில் ஓல்ட் மெஷின்ஷாப், நியூ மெஷின்ஷாப் என்று இரண்டு மெஷின்ஷாப்கள்.
அதில் ஓல்ட் மெஷின்ஷாப்புக்கு ட்ரைனிங் சென்றிருந்த பொழுது அங்கிருந்த ஒரு நண்பர், ஆரம்பக் காலத்தில் (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டு / ஐம்பதுகளில்) லேலண்டு கம்பெனி எப்படி இருந்தது என்று விவரமாகச் சொன்னார்.
அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
நல்ல அலேக் அனுபவம்தான் போல...சூப்பர்...தொடர்கின்றோம்!
பதிலளிநீக்கு...விவரங்கள் தெரிந்து.....அந்த சப்ஜெக்டிலேயே பந்து போட்டு பந்தடித்து......ஆஹா....பிறந்த நாள் வாழ்த்து....நல்ல டெக்னிக் எல்லாம்..
பதிலளிநீக்குசுவாரஸ்யமான மலரும் நினைவுகள்.
பதிலளிநீக்குகாத்திருக்கிறேன்.. :-)
பதிலளிநீக்கு////நண்பருடைய பிறந்தநாள் எது என்று தெரிந்து வைத்துக்கொள்வேன். டயரியில் எழுதி வைத்துக்கொள்வேன். பிறந்தநாளில் அவரை நேரில் சென்று கைகுலுக்கி வாழ்த்திவிட்டு வருவேன்.////
பதிலளிநீக்குநட்பின் நேர்மையை வெளிப்படுத்த இது ஒரு சிறப்பான முறை. அந்த சமயம் அந்த நண்பர் அடையும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
மற்றவர்களுக்கு பிடித்தவிஷ்யம் பேசி அவர்களை நண்பராக்கிக் கொள்வது மிகவும் நல்ல விஷயம்.
பதிலளிநீக்குபிறந்தநாளை நினைவு வைத்துக் கொண்டு வாழ்த்துவது மகிழ்ச்சியானசெயல்.
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபணிக்காலத்து அனுபவங்கள் பலவும் நம்மை செப்பனிட செதுக்கி இருக்கும். தொடர்கிறேன்.
நல்ல கெட்டிக்காரர்தான் நீங்கள்! தொடருங்கள்!
பதிலளிநீக்குஅடுத்த பதிவிற்கு காத்திருக்கும் வாசகனில் ஒருவனாய்!!!
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
பழைய அனுபவங்களை அசைபோடுவதே அலாதியான இன்பம் தரும் விஷயம்.
பதிலளிநீக்குபுதிதாக வேலைக்கு சேருபவர்களுக்கு இவை நல்ல யோசனைகள். தொடருங்கள். படித்து ரசிக்கக் காத்திருக்கிறேன்.
#காண்டீனில் மட்டும் பயிற்சி கிடையாது) #
பதிலளிநீக்குசாப்பிடவா ,காய்கறி நறுக்கவா ?
நினைவுகள் இனிமையானவை
பதிலளிநீக்குதொடருங்கள் நண்பரே
தொடர்கிறேன்
நன்றி
அப்ரண்டிஸ் என்றாலே, எனக்கு ரஜினியும், கவுண்டமணியும் "மன்னன்" படத்தில் அடித்த கூத்து தான் நினைவுக்கு வரும்.
பதிலளிநீக்குநான் பெங்களூரில் branch manager ஆக இருந்தபோது எங்கள் கம்பெனியின் புது விற்பனை அல்லது மார்க்கெட்டிங் வேலைக்கு MBA படித்து புதியதாக வருடாவருடம் எடுத்தவுடன் பெங்களூர் ஹெட் ஆபீசில் இருந்து என்னிடம் அனுப்புவார்கள். பதினைந்து இருபது பேர் என்று அவர்களுக்கு வேலையின் நெளிவு சுளிவுகளை சொல்லிக்கொடுத்து பலர் இன்று பலபல ஐ.டி. செர்விசெஸ் கம்பனிகளில் பெரிய ஆள் ஆகிவிட்டார்கள் என்று நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கு. அப்போது என்னிடம் கற்றுக்கொண்டது இன்னும் அவர்களுக்கு உதவி செய்கின்றது என்று அவர்கள் சொல்லும்போது இன்னும் சந்தோஷமாக இருக்கும்.
// அவருடைய இண்டரஸ்ட் என்ன என்று தெரிந்துகொண்டு, அந்த சப்ஜெக்டிலேயே பந்து போட்டு, பந்தடித்து விளையாட ஆரம்பித்துவிடுவேன். //
பதிலளிநீக்குஅச்சச்சோ... இதான் விஷயமா..? நீங்க நிஜமாவே என் கவிதைகளை ரசிக்கறீங்கன்னு நெனச்சு ரீல் ரீலா படித்தேனே.. இப்படி ஒரு சூது இருக்குமென்று தெரியாமல் போய்விட்டதே..!!!