ஒரு
சமையல் புத்தகம் கண்ணில் பட்டது. 1971 ஆம் வருடம் எழுதப்பட்டது. மறு
பதிப்புகள் வந்து கொண்டே இருக்க, என் கையில் இருப்பது 2001ம் வருட பதிப்பு.
=============================================
1. கடலை மாவு - கால் படி.
2. அரிசி மாவு - கால் ஆழாக்கு.
செய்முறை :
கடலை
மாவையும். அரிசி மாவையும் நெய் சேர்த்தும், நீர் விட்டும் கெட்டியாகப்
பிசைந்து, காராசேவுக் கரண்டியில் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
(அட, இதுவா?!!!!) சர்க்கரையை ஒரு கரண்டி நீர் விட்டு, முற்றின பாகு வைத்து
ஏலக்காய்ச் சேர்த்து பொரித்துப் போட்ட காராசேவைக் கொட்டி நன்றாகக் கிளறி,
ஒரு தாம்பாளத்தில் கொட்டி ஆற வைக்கவும்.
ஒரு ஆழாக்கு என்பது சுமாராக 200 கிராம். 5 ஆழாக்கு 1 லிட்டராம்.
===========================
ரொம்ப ஈஸியா இருக்கு இல்லே?
ஆனால்
படித்த உடன் இது என்ன வஸ்து என்று தெரிந்து விட்டது. என்னுடன் பணிபுரிந்த
ஒருவர் ஒருமுறை என்னிடம் " 'பொம்பே லகடி' சாப்பிடுவியா, பிடிக்குமா?' என்று
கேட்டார். என்னவென்றே தெரியாததால் "ம்...." என்று ஆவலுடன் தலையாட்டி வைத்தேன்.
அவர் வாங்கி வந்தது சிறு சதுரங்களில் மைதா
மாவு ஸ்வீட் பிஸ்கட் போல இருந்தது. அதைத்தான் அப்படிச் சொல்வார்களாம். என்
இன்னொரு நண்பர் அதை 'கஜகஜா' என்றார். நான் இப்போதும் கடைகளில் அதைப்
பார்க்கிறேன். கடைக்காரர் அதற்கு வேறு பெயர் சொல்வர். அது இப்போது 'சட்'
டென நினைவுக்கு வரவில்லை.
எப்போதாவதுவாங்க வேண்டும் என்றால் அதைக் கைகாட்டி வாங்கி விடுவேன்! ஏனென்றால் அது என் சிறுவயது ஞாபகங்களைத் தருவதால்!
சிறுவயதில்
பரீட்சைக்குப் படிக்கும்போது மதியம் அம்மா தூங்கிக் கொண்டிருக்கும்போது
நான் நைஸாய் கிச்சன் சென்று மைதா மாவு எடுத்து, காரப்பொடி,
பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து காரமாகவும், வெல்லத்தை நீரில் கரைத்து அதில் மாவைப் பிசைந்து ஸ்வீட்டாகவும் பிசைந்து சிறு சிறு சதுரங்களாக்கி
அல்லது வெவ்வேறு வடிவங்களில் ஆக்கிக் கொண்டு தோசைக் கல்லில் இட்டு எடுத்து
விடுவேன். அல்லது தாளிக்கும் கரண்டியில் எண்ணெயிட்டு அதில் பொரித்து
எடுத்துக் கொண்டு வந்து கொறித்துக் கொண்டே படிப்பேன்! அம்மா எழுந்து வந்து
பார்க்கும்போது அந்த மாதிரி செய்த சுவடே இருக்காது! ஆனாலும் எப்படியோ
கண்டுபிடித்து, அருகில் வந்து செல்லமாய்த் தலையில் குட்டுவார். அது நினைவுக்கு வந்தது.
பின் குறிப்பு : படங்கள் இணையத்திலிருந்து எடுத்தது. நான் செய்த மைதா மாவு பிஸ்கெட்டுகள் இப்படி இருக்காது!
ஜோரா இருக்கு போங்க! சம்பாரப்புளி என்னும் பெயரில் இருந்தே இது செல்லம்மாள் எழுதின சமையல் புத்தகமா இருக்குமோ என்று யூகிக்கிறேன். :))))
பதிலளிநீக்குபொதுவா நொக்கல் என்பது காராச்சேவிலேயே சர்க்கரைப் பாகிலே போட்டதைத் தான் சொல்வார்கள். மைதாமாவிலே டைமன்ட் வடிவத்தில் செய்வதை தீபாவளி மிக்சருக்குப் போட்டுப் பார்த்திருக்கிறேன். மஹாராஷ்டிராவில் இது பிரபலம். சங்கர்பாலி என்பார்கள். இது இல்லாத வீடே இருக்காது.
பதிலளிநீக்குமுதல் பலகாரம் இனிப்பு சேவு
பதிலளிநீக்குஇராண்டாவது இனிப்பு துக்கடா
பதிலளிநீக்குஸ்ரீமதி வேதவல்லி வெங்கடாச்சாரி?!
பதிலளிநீக்குநீங்கள் செய்வது போல் அம்மாவை மழை நாளில் செய்து தரச் சொல்லி சாப்படுவோம் அப்பாவுக்கு அதில் மிளகு போட்டு செய்வார்கள்.மைதா பிஸ்கட் துக்கடா என்றும் சொல்வோம்.
பதிலளிநீக்குஎனக்குத்தெரிந்து நொக்கல் என்பது திருமணங்களில் செய்யும் சர்க்கரைப் பாகுடன் கூடிய முந்திரிப்பருப்பு.
பதிலளிநீக்குஇந்த மாதிரி மைதா மாவு பிஸ்கட்டுக்கு எங்கள் ஊர் (கர்நாடகா) பெயர் ஷங்கர்போளி. தனியாக சர்க்கரைப் பாகு வைக்காமல் மைதா மாவுடன் சர்க்கரையையும் சேர்த்து பண்ணுவார்கள்.
சம்பாரப்புளி என்பது கொத்தமல்லி பொடி தானே? அடுத்தவாரம் வரை காத்திருக்கப் பொறுமையில்லை!
'திங்க' கிழமை உங்கள் பதிவுகள் படிக்கவும் சுவாரஸ்யம் தான்!
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
சமையல் சார்ந்த விடயங்கள் மிகத் தூரம் நமக்கு இருந்தாலும் இப்படித்தான் சமைக்க வேண்டும் என்ற முறையை சொல்லியுள்ளீர்கள் அதற்கு நான் பாராட்டுகிறேன் ஐயா...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
சமையல் சார்ந்த விடயங்கள் மிகத் தூரம் நமக்கு இருந்தாலும் இப்படித்தான் சமைக்க வேண்டும் என்ற முறையை சொல்லியுள்ளீர்கள் அதற்கு நான் பாராட்டுகிறேன் ஐயா...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சம்பாரப்புளி கொத்துமல்லி, மி.வத்தல், உப்பு, பெருங்காயம் வைத்து இடிப்பது தான் ரஞ்சனி. இப்போல்லாம் யாரால் இடிக்க முடியுது? எல்லாம் மிக்சியார் தயவு தான். :))))
பதிலளிநீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், காலம்பர ஒண்ணும் சொல்லலை "எங்கள் ப்ளாக்" இப்போ வேர்ட் வெரிஃபிகேஷன் வேணுமாம். இல்லைனு சொல்லித் துரத்திட்டேன். :)
பதிலளிநீக்குஸ்ரீராம் அண்ணா இது கொஞ்சமே கொஞ்சம் கல்கல் கிறிஸ்மஸ் கால ஸ்பெஷல் பலகாரம் ..போலிருக்கு முட்டை சேர்த்தும் செய்யலாம் ..ஆனால் எங்கம்மா முட்டை சேர்க்காம ஸ்பெஷலா எனக்கு செய்வாங்க அந்த மைதா மாவில் டயமண்ட் கட் செய்தும் சர்ரக்கரை பாகில் போட்டு செய்வாங்க ..திருநெல்வேலி மனோகரம்னு ..ஒரு ரெசிப்பி மங்கையர் மலரில் எடுத்து வச்சிருக்கேன் அது பழைய புக் (1997)
பதிலளிநீக்குஅதில் கூட நீங்க சொன்ன கடலை மாவு அரிசிமாவு, போட்டு பொரிச்சி பாகில் விடும் முறை .
அந்த பாம்பே லக்கடி முந்தி சாப்பிட்டிருக்கேன் அதன் இன்னொரு பெயர் கஜுர் ..கொஞ்சம் சோடா மாவு தூக்கலா இருக்கும் :)
first photo ..the shape looks like candied cashew nuts !!
பதிலளிநீக்குஸ்வீட் காரசேவுதான் நொக்கலா? மைதா பிஸ்கெட் நானும் செய்து சாப்பிட்டிருக்கேன்! நன்றி!
பதிலளிநீக்குசம்பாரப்புளி பெயரே வித்தியாசமா இருக்கு! அடுத்தவாரம் என்னன்னு பார்த்துடறேன்!
பதிலளிநீக்குகீதா மேடம்... நன்றி! உங்கள் யூகம் தவறு! சென்னைப்பித்தன் ஸார் கரெக்டாச் சொல்லியிருக்கார்!
பதிலளிநீக்குகோமதி அரசு மேடம்.. சிறு வயதில் அம்மாவுக்கு எல்லா வேலைகளிலும் ஹெல்ப் செய்யப் போய் இது போல நிறைய விஷமங்கள் செய்வேன்!
சென்னைப்பித்தன் ஸார், கரெக்டோ கரெக்டு!
ரஞ்சனி மேடம்... நீங்கள் யூகித்திருப்பதும் கரெக்டு!! எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது பாருங்கள். என்னை மாதிரி சின்னப் பசங்களுக்கு எல்லாம் புதுசாத் தெரிகிறது!
நன்றி ரூபன்.
கீதா மேடம்.. உங்கள் பிளாக்கர் அக்கவுண்ட், அல்லது மெயில் அக்கவுண்ட் புதிதாக லாகின் செய்யும் நேரங்களில் வர்ட் வெரிபிகேஷன் எல்லா இடங்களிலும் கேட்கிறது. இது புது அவஸ்தை. உங்கள் தளத்திலும் என்னைக் கேட்டது.
நன்றி ஏஞ்சலின்...அதன் பெயர் கஜுர் கூட இல்லை, கடைக்காரர் வேறு ஏதோ பெயர் சொன்னார். நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது! :))) அந்த புகைப்படம் இணையத்திலிருந்து சுட்டது!
நன்றி 'தளிர்' சுரேஷ்.
பதிலளிநீக்குமழை நாட்களில் என் மனைவி இதை என் மகன்களுக்குச் செய்து கொடுப்பார். ‘கல கல’ என்று கூறுவாள். சம்பாரப்பொடி என்று சொல்லிக் கேள்வி. கேரளாப் பக்கம் சர்வசாதாரணம்
#பத்து வரிகளுக்குக் குறையாமல் கமெண்ட் எதிர்பார்க்கிறேன்#
பதிலளிநீக்குநொக்கலை விட இந்த நக்கல் நல்லா இருக்கே :)
சிறந்த பதிவு
பதிலளிநீக்குதொடருங்கள்
கொமதி அரசு சொல்வது போல சீனி பாகு வைத்து செய்யும் சேவை இனிப்பு சேவு அல்லது சீனி சேவு என்பார்கள்!
பதிலளிநீக்குசிறு வயதிலேயே சமைத்த சுவடே தெரியாமல் அதுவும் பலகாரங்களைத்திறமையாக செய்திருக்கின்றீர்கள் என்றால் இப்போது ' நிச்சயம் 'நளபாக சக்கரவர்த்தி'யாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!!
பெயர்களே புதிதாய் இருக்கிறது. சாப்பிடத் தூண்டுகிறது. ( நொக்கல்- நக்கலின் திரிபோ ?)
பதிலளிநீக்குசெய்முறை சாப்பிட்ட பதார்த்தங்களை ஞாபகப் படுத்தினாலும் பெயர்கள் புதிதாக இருக்கின்றன அண்ணா...
பதிலளிநீக்குஇனிப்பு காராசேவு எனக்குப் பிடிக்கவே பிடிக்காத நொறுக்ஸ். காராசேவு என்றாலே காரம். அதிலென்ன பிறகு இனிப்பு என்று கோபம். ஆனால் பெயர் சூப்பரா இருக்கு. இதுவரை கேள்விப்படாத பெயர். சம்பாரப்புளியும் கேள்விப்பட்டதில்லை.
பதிலளிநீக்குமைதா பிஸ்கட் மிகவும் பிடிக்கும்.
கேள்விப்படாத பேராக இருக்கிறது.
பதிலளிநீக்குஇந்த மாதிரி நொறுக்குத்தீணியை யாராவது வேண்டாம் என்று சொல்லுவார்களா என்ன? சரி, எப்ப இந்த பலகாரத்தை பார்சல் அனுப்பி வைக்க போறீங்க?
இரண்டுமே கேள்விப் பட்டதில்லை. சமையற் கலையிலும் வல்லவராக இருக்கிறீர்கள்.ஸ்ரீராம் சார்.
பதிலளிநீக்குசமைப்பது மட்டுமல்ல்ல ருசித்து சாப்பிடுவதும் ஒரு கலைதான்
இதெல்லாம் செய்யும்போது தகவல் அனுப்புங்கள் வீட்டுக்கே வந்ததுடறோம்
புதுசா இருக்கு...!
பதிலளிநீக்குபெயரை கேள்விபட்டிருக்கிறேன் . இப்போது தான் தங்கள் பகிர்வில் இது பற்றி தெரிகிறது நன்றி
பதிலளிநீக்குபச்சை கொத்தமல்லியை எண்ணெயில் வதக்கி மிளகாய்,கருப்பு உளுந்து புளி பெருங்காயம் எல்லாம் வறுத்து கொண்டு எல்லாவற்றையும் உப்போடை இடித்து வைத்துக்கொள்வார்கள் அதற்கு பெயர் தவணைபுளி என்பார்கள்.
பதிலளிநீக்குரயிலில் வரும் போது செல் போன் மூலம் பின்னூட்டம் அளித்தேன், உப்போடு என்றாள் அது உப்போடை என்று அடிக்கிறது.
பதிலளிநீக்குதுக்கடா என்று சொல்வார்கள்... இனிப்பு மற்றும் காரமில்லாத சீவல் போல இருக்கும்...
பதிலளிநீக்குவேதவல்லி வெங்கடாச்சாரி புத்தகம் பத்தி இப்போது தான் கேள்விப் படறேன். ஆனால் பொதுவாக வைணவர்கள் கொத்துமல்லித் துவையலை, எங்க வீட்டிலே கொ.ம.மிளகாய்ப் பொடினு சொல்வோம். அதை சம்பாரப்புளி என்றே சொல்வார்கள். அதனால் செல்லம்மாள் (அவங்க எழுதின புத்தகம் கூட என் கிட்டே இருந்தது. லிஃப்கோ வெளியீடு) சமையல் குறிப்போனு நினைச்சேன். :))))
பதிலளிநீக்குநொக்கல் என்பது முந்திரிப்பருப்பை சர்க்கரைப் பாகில் புரட்டி (பாதுஷா மேல் ஒட்டியிருப்பது போல) அதன் மேல் சர்ர்கரைப் பாகு ஒட்டி இருக்கும். இது கல்யாணங்களில் வைக்கப்படுவதுண்டு. மனகோரம் கோனில் வைப்பது போல்.
பதிலளிநீக்குநீங்கள் கொடுத்திருக்கும் படத்தில் முதல் படத்தில் ஒரு மாமியின் கை இருக்கின்றதே அது பாம்பே காஜா என்று சொல்லப்படும் அதைப் போலத்தான் இருக்கின்றது. வீட்டில் செய்வதுண்டு இவை எல்லாமே. - கீதா
நீங்களும் நன்றாகச் சமைப்பீர்கள் போல இருக்கிறதே ! சிறுவயது முதல்?!!!!!
பதிலளிநீக்குசம்பாரம் என்பது நல்ல மசாலா மோர் கேரளா பக்கம் பிரசித்தம் போல் சம்பார புளி என்பதும். அது வேறு ஒன்றும் இல்லை, தமிழ்நாட்டில் கொத்த மல்லித் தொக்கு என்பதுதான் அங்கு தண்ணீர் சேர்க்காமல் புளி, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு (வறுத்து) எல்லாம் பொட்டு உரலில் இரும்பு உலக்கையால் இடிப்பார்கள். என் அம்மாவும் நானும் நாகர்கோவில் கிராமத்தில் எங்கள் வீட்டில் செய்ததுண்டு. இதுதான் நாங்கள் சம்பாரப் புளி என்போம். ஒருவேளை வேறாக இருந்தால் தெரிந்து கொள்ளும் ஆவல்!(பெரும்பாலும் கேரளத்து ரிசிப்பிஸ்/பாலக்காடு) இங்கு சென்னையில் உரல் எல்லாம் இல்லாததால் செய்வதில்லை. ஆனால் கேரளத்து மக்கள் இன்னும் வீட்டில் உரலும், அம்மியும் வைத்திருக்கின்றார்கள். துளசியின் வீட்டில் இப்போதும் உபயோகிப்பது உண்டு. நான் அங்கு செல்லும் போதெலாம் சம்மந்தி செய்வதுண்டு-கீதா
பதிலளிநீக்குசம்பாரப் புளி பற்றி போட்டது எங்கே போச்சு?-கீதா
பதிலளிநீக்குசம்பாரப்புளி பெயர் இப்போ தான் கேள்விப்படுகிறேன். அம்மா கொத்தமல்லி தொக்கு என்று சொல்வார்கள். இடித்து தான் சாப்பிட்டிருக்கிறோம். படித்தவுடன் அம்மா செய்த புளி மிளகாய், கொத்தமல்லி தொக்கும் நினைவுக்கு வந்தன.
பதிலளிநீக்குநீங்கள் நளபாக சக்கரவர்த்தி தான்... தங்கள் பாஸ் கொடுத்து வைத்தவர் தான்....:)
சிறுவயதில் நானும் நிறைய சமையல்கட்டு விஷமங்களை செய்திருக்கிறேன். அவை தனியாக ஒரு பதிவில்....:))
'நொக்கல் படத்தில் இருப்பதுபோல் இருக்காது. ரொம்ப குண்டா ஆனா கொஞ்சம் முந்திரிப் பருப்பு ஷேப்ல, கலர் கலரா இருக்கும். அதாவது பச்சைக் கலர் சேர்த்த ஜீனிப் பாகு, சிவப்பு கலர் சேர்த்தது, ஒன்றும் சேர்க்காதது போன்று. முந்திரியை வெறும்ன வறுத்துவிட்டு, இலுப்பச் சட்டில இருக்கற ஜீனிப்பாகுல முந்திரிப் பருப்பைப் போட்டு, அதை ஆட்டி ஆட்டி, ஒவ்வொன்றின்மேல் ஜீனிப்பாகு சேர்ந்து சேர்ந்து நல்ல உருண்டையா ஆகி நொக்கல் கிடைக்கும். இதைக் கல்யாணத்தின்போது கண்டிப்பாகச் செய்வார்கள்.
பதிலளிநீக்குகாராசேவு (காரமில்லாததுல)ல, ஜீனிப்பாகு போட்டுச் செய்வது சாதாரணக் கடைகளில் செய்வது. இது கல்யாணத்திற்கோ அல்லது வீட்டிலேயோ செய்யமாட்டார்கள்.
நீங்கள் கொடுத்துள்ள செய்முறை உ.பி வாலாக் கடைகள்ல நான் பொதுவாப் பாக்கற ஸ்வீட். அதில் வெறும் மைதாவுல குண்டு குண்டா பொரிச்செடுத்துட்டு, ஜீனிப்பாகுல போடறது. ஆறினா, ஜீனிப்பாகு, கொஞ்சம் வெண்மையா அங்க அங்க இருக்கும்.
நம்ம மிக்சருக்குப் பண்ணறது, இனிப்பு கலந்த மைதா மாவில், சிறிது சிறிதாக டைமண்ட் ஷேப்பில் கட் பண்ணி பொரித்தெடுப்பது. இதை வெறும்ன சாப்பிடலாம். மிக்சர்ல கலக்கும்போது, காரமாச் சாப்பிடறச்சே அங்க அங்க இனிப்பா இது வரும் (டைமண்ட் ஸ்வீட்னு அல்லது மைதா ஸ்வீட்னு நாங்க சொல்லுவோம்).
ரஞ்சனி மேடம் மட்டும்தான் (துளசி கீதா அவர்களையும் சேர்த்து) சரியாச் சொல்லியிருக்காங்க.