Saturday, November 8, 2014

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்1) எந்த அளவு உபயோகமாக இருக்கும் என்று தெரியா விட்டாலும், ஏதோ ஒரு மாற்றைக் கண்டு பிடிக்க முடிந்த பேராசிரியர் கிருபாகரனுக்குப் பாராட்டுகள்.
 

 
2) எடுத்த உடனே லாபம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள், பிசினசுக்கு லாயக்கில்லை.  'பிரெஷ்'ஷாக அவ்வப்போது சமைக்கப்படும், 'எக்ஸ்க்ளூசிவ்' வட மாநில உணவுகளை, ஓட்டலில் பரிமாறுவது என்று முடிவு செய்திருந்தோம். சாப்ட்வேரில் இருந்து சாப்பாட்டுக் கடைக்கு மாறிய சக்சஸ் ஜோடி பல்லவி குப்தா
 
 
 
3) Jaco Swanepoel விசாகப்பட்டினம் புயலால் பாதிக்கப் பட்டவர்களைப் பார்த்து மனமுருகி செய்யும் உதவிகள்.
 

 
4) முப்பது பவுன் இல்லை, முன்னூறு பவுன் இருந்தாலும் நல்லவர்கள் மனம் மாறாது என்பதற்கு உதாரணம் ஆட்டோ ஓட்டுநர் திரு சீனிவாசன்.
 
 
 
5) உயிர்போகும் தருணத்திலும் பயணிகளின் பத்திரத்தை நினைத்த கேரள பேருந்து ஓட்டுநர் அப்துல் ரகுமான் (48)
 

 
6) ஜூன் 2013. முதல் நாள் 5 பேர்கள்தான் வந்தார்களாம். திடீரென ஒரு நாள் பார்த்தபோது 400 மாணவர்கள் இதனால் பயனடைகிறார்கள் பீஹார் கிராமம் ஒன்றில். PRAYOG . சூர்யப் பிரகாஷ் ராயைப் பாராட்ட வேண்டாமா?
 


 
 


 
8) கோபி தாய்த்தமிழ் பள்ளியின் தாளாளர் குமணன் சொல்வதைக் கேளுங்கள்.
 


9) ஜம்மு காஷ்மீர். சூழ்ந்த வெள்ளத்தில், ஆழ்ந்த இருளில் 75 பிரசவ கேஸ்கள். விட்டுக் கொடுக்காமல் போராடிய மருத்துவர்கள் டாக்டர் ஷானாஸ் டிங், டாக்டர் நசீரா ஃபரூக்
10) செவாங்க் நார்ஃபெல் 
 

11)  "கண்மணிகளுக்கான கருத்து கதைகள், குழந்தைகளுக்கான குரு சிஷ்ய கதைகள், விலங்குகள் கூறும் விசித்திர கதைகள், நல்ல நல்ல நெடுங்கதைகள் உள்பட 17 கதை தொகுப்புகளை குழந்தைகளுக்காக எழுதி வெளியிட்டுள்ளேன். ஆரம்பத் தில் கோதை சிவக்கண்ணன் என்ற பெயரில் எழுதி வந்தேன்" - பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த காஸ் சிலிண்டர் விநியோக ஊழியர் ஒருவர், குழந்தைகளுக்கான 17 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். கோதை சிவகண்ணன்.9 comments:

Yarlpavanan Kasirajalingam said...


சிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்

புலவர் இராமாநுசம் said...


அனைத்தும் நன்று! அதிக நேரம் படிக்க இயலாத வயதான எனக்கு தங்கள் பதிவுகள் அமுதம் போன்றவை!நன்றி!

Geetha Sambasivam said...

கோதையம்மாள் செய்தி புதிது. மற்றவற்றில் சில படித்தவை. சில புதியவை. பகிர்வுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்டது. கோபத்தில் கொடுக்கலை. ஆனால் பப்ளிஷ் ஆகலை. மறுபடிகமென்டினேன். போயிடுச்சு. :) எல்லோரிடமும் கோபத்தைக் காட்டணும் போல! :)

-'பரிவை' சே.குமார் said...

ஒரு சிலவற்றை முகநூலில் வாசித்திருந்தாலும் உங்கள் பாஸிட்டிவ் செய்திகள் சிறப்பு அண்ணா....

Bagawanjee KA said...

கோதை அம்மாவின் கோலம் அழகு ,அவரின் மனம் அதை விட அழகு !

கீத மஞ்சரி said...

தியாகம், தன்மானம், விடாமுயற்சி, கடின உழைப்பு, சமுதாயத்தின் மீதான அக்கறை என்று எவ்வளவு தகவல்கள்... எத்தனை மனிதர்கள்... ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறது. வாசித்து முடிக்கும்போது ஒரு பாசிடிவ் எனர்ஜி உண்டாவது உண்மை. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

Chokkan Subramanian said...

அனைத்தும் தெரியாத செய்திகள். வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

10 வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும் கதை எழுத கற்பனை வளம் தானே முக்கியம், படித்தும் எழுத முடியாமல் இருப்பவர் இடையில், சிறு கதைகள் தொகுப்பு வெளியிட்ட கோதைக் கண்ணன் பாராட்டப்பட வேண்டியவர்.

தன் உயிரை விட்டு பயணிகளைக் காப்பாற்றிய அப்துல் ரஹ்மான் ஆன்மா நிச்சயமாக சாந்தி அடையும்!

ஐஸ் மேன் பிரமிக்க வைக்கின்றார். அவர் நீடுழி வாழ பிரார்த்தனைகள்!
பிரயோக் சேவை மகத்தானது. கிராமத்து குழந்தைகளுக்கு நூலகம் என்பது...

ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தில் சநலம் கருதாமல் சேவை செய்த மருத்துவர் ஷானாஸ் டிங்க், மற்றும் மருத்துவர் நசீரா ஃபரூக் சேவஹை மகத்தானது. இப்படியும் மருத்துவர்கள் இருக்கின்றார்கள் எனப்து மிகவும் நம்ம்பிக்கையும், மகிழ்வையும் கொடுக்கின்றது. நிஜமாகவே பாசிட்டிவ் செய்திதான்.

கோதையம்மாள் பாட்டி பெண்களுக்கு வழிகாட்டியாகத் தன்னம்பிக்கை நிறைந்த பெண்மணியாக திகழ்கின்றார். இந்த வயதிலும் பிறரைச் சார்ந்திருக்காத தன்னம்பிக்கை நிறைந்த பெண்மணி!

எலாமே அருமை!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!