சம்பாரப்புளி 'கேள்வி'க்கான விடை சென்ற வாரமே 'லீக்'காகி விட்டதால் அதனை விடுத்து ( !....! ) அதே புத்தகத்திலிருந்து அடுத்த உணவுக்குறிப்புக்குப் போவோம்.
================================================================
மாங்காய் மசியல் :
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - கால் ஆழாக்கு
மாங்காய் -1
ப.மிளகாய் - 2
வற்றல் மிளகாய் - 1
சாம்பார்ப்பொடி - 1 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
துவரம்பருப்பை அரை டம்ளர் நீர் விட்டு நன்றாகக் குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
மாங்காயை மெல்லியதாகச் சிறிது நீளநீளமாக நறுக்கி ஒரு கரண்டி தண்ணீர் விட்டு சாம்பார்ப்பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
நன்றாக வெந்தவுடன், இதில் வெந்த பருப்பைப் போட்டு, உப்பு சேர்த்து, வற்றல் மிளகாய், கடுகு, வெந்தயம், பெருங்காயம், அரை ஸ்பூன் துவரம்பருப்பு இவற்றைச் சிறிது எண்ணெயில் வறுத்துக் கடைசியில் பச்சை மிளகாயையும் சேர்த்து ஒரு தடவை வறுத்து அதையும் கொட்டி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
மாங்காய் போடுவது போலவே அரை நெல்லிக்காயையும் சேர்க்கலாம்.25 நெல்லிக்காய் எடுத்துக் கொண்டு கொட்டை நீக்கி சிறு துண்டுகளாகச் செய்து வேக வைத்துக் கொள்ளலாம்.
=====================================================================
நான் கீரை மசியல் தவிர வேறு மசியல் எதுவும் சாப்பிட்டது கிடையாது.
அல்லது சாப்பிட்டிருந்தாலும் அதற்கு வேறு நாமகரணங்கள்
இருந்திருக்கக்கூடும்!
முளைக்கீரையோ,
அரைக்கீரையோ, மணத்தக்காளிக் கீரையோ ஏதோ ஒன்றைப்போட்டு மசியலோ, அல்லது
மோர்க்கூட்டு போலவோ செய்வார்கள். வாழைத்தண்டு, முட்டைகோஸ் போட்டுக் கூட
மோர்க்கூட்டு செய்வார்கள்.
அம்மா
செய்யும் குருமா எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கத்தரிக்காய், உ.கி, கேரட்,
வெங்காயம், பூண்டு பீன்ஸ் எல்லாம் போட்டு செய்வார்கள். காய் நறுக்கித்
தருவது, தேங்காய் துருவித் தருவது நான்தான்.
குருமா இரண்டு வகையாகச் செய்வாள் அம்மா. பச்சை மிளகாய்க் காரம் மட்டும் போட்டு, மசாலா சேர்த்து வெண் குருமா, காரப்பொடி சேர்த்து சிவப்புக் குருமா. மாறுதலுக்காக மாற்றி மாற்றிச் செய்வாள். இரண்டுமே எனக்குப் பிடிக்கும்.
சப்பாத்திக்கு அப்பளம் இடுவதும் நான்தான். சகோதர சகோதரி சிறு அளவில் உதவி, இட்டு முடிப்பதற்குள் வேகமாக நான் நிறைய இட்டு விடுவேன்.
குருமா
செய்து முடித்ததும் ஒரு வினோதமான காரியம் நடக்கும். முன் அனுபவங்களே
காரணம்! அந்தக் குருமா ஐந்து சரி பாகமாய்ப் பிரிக்கப்படும். அவரவர்களுக்கு
ஒரு தனிப் பாத்திரத்தில் தரப்பட்டு விடும். தரப்பட்டுவிடும் என்ன, நான்தான்
பங்கு பிரிப்பேன். நியாயமாகத்தான் பிரிப்பேன்!
கொஞ்சம் தனியாகவே சாப்பிட்டு விடுவேன். சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள மீதியும் வைத்துக் கொள்வேன். அம்மா பங்கிலிருந்தும் எனக்குக் கிடைக்கும்!
மாங்காய் மசியல்னு சொல்லி ஆரம்பித்து விட்டு குருமா வரைக்கும் வந்தாச்சு!
நன்றி நன்றி நன்றி...... : படங்கள் இணையத்திலிருந்து...
நன்றி நண்பரே
பதிலளிநீக்குதனியாகவே சாப்பிட்டு விட்டு, நியாயமாக பிரிப்பது சரி தான்... ஹிஹி...
பதிலளிநீக்குmele solli iruppathu, innum sariyap padikka mudiyalai. aanaalum mangaay Barnum ninaikkiren. masiyal illai.
பதிலளிநீக்குkannaadi mathiyanam vanthudum. appo marupadi parkiren.
பதிலளிநீக்குAandhra, Karnataka vile mangay paruppunu solvangka. ithannu ninaikkiren. thappillaamal adikkirena theriyalai! :) so no punishment. :)
பதிலளிநீக்கு"//நான்தான் பங்கு பிரிப்பேன். நியாயமாகத்தான் பிரிப்பேன்!//
பதிலளிநீக்குஇதை படிக்கும்போதே கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு. அடுத்த வரியை படிச்சவுடனே சந்தேகம் தீர்ந்துடுச்சு.
நீங்க ரொம்ப நியாயமானவர் தானுங்க!!!!
//நான் கீரை மசியல் தவிர வேறு மசியல் எதுவும் சாப்பிட்டது கிடையாது.//
பதிலளிநீக்குகருணைக்கிழங்கு மசியல்?? சேனைக்கிழங்கு மசியல்?? பீர்க்கங்காய்ச் சட்டி மசியல்??
கருணை, சேனையில் புளி விட்டும் பண்ணலாம் எலுமிச்சை பிழிந்தும் பண்ணலாம். :))))
முளைக்கீரையை சும்மா வெறுமே சீரகம் போட்டு மசிக்கலாம். மி.வத்தல், துபருப்பு, சீரகம் ஊற வைத்துத் தேங்காயோடு சேர்த்து மிளகூட்டல் பண்ணலாம். தேங்காய், பச்சை மிளகாய் போட்டு அவியல் மாதிரிப் பண்ண்லாம், புளி விட்ட கீரை பண்ணலாம். கீரைத் தண்டைத் தனியாக எடுத்துக் கொண்டு மோர்க்கூட்டுப் பண்ணலாம். பொரிச்ச குழம்பு பண்ணலாம். :)))))
பதிலளிநீக்குமணத்தக்காளிக்கீரையைச் சின்ன வெங்காயம் போட்டு வதக்கலாம். தேங்காய், பாசிப்பருப்புப் போட்டுக் கூட்டு, கறி பண்ணலாம். பொரிச்ச குழம்பும் பண்ணலாம். அரைக்கீரையைச் சும்மா மசிச்சுட்டு அதிலே மோர் மிளகாய், குழம்புக்கறிவடாம் தாளித்தால் நல்லா இருக்கும். அரைக்கீரையோடு சுண்டைக்காய் வத்தல் குழம்பு தான் சரியான ஜோடி. :))))
பதிலளிநீக்கு//அம்மா செய்யும் குருமா எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கத்தரிக்காய், உ.கி, கேரட், வெங்காயம், பூண்டு பீன்ஸ் எல்லாம் போட்டு செய்வார்கள். காய் நறுக்கித் தருவது, தேங்காய் துருவித் தருவது நான்தான்.//
பதிலளிநீக்குஹிஹிஹி, நல்லாப் பழக்கி இருக்காங்க. உங்க பாஸுக்கு நீங்க ரொம்பவே உதவி பண்ணுவீங்கனு சொல்லுங்க. :)))) உங்கம்மாவோட குருமா செய்முறையும் வரும் வாரங்களில் பகிர்ந்துக்கோங்க! :))))
எங்க வீட்டிலே சாப்பாடு சாப்பிடும் முன்னர் இப்படித் தனியாகக் கிண்ணங்களில் வைத்துச் சாப்பிடும் வழக்கம் எல்லாம் வைச்சுக்க முடியாது. அதாவது என் பிறந்த வீட்டிலே! :))))
பதிலளிநீக்குமாங்காய் மசியல் புதுசா இருக்கு. முடியும் போது செய்து பார்க்கிறேன். கருணைக்கிழங்கில் புளி விட்டும், எலுமிச்சை பிழிந்தும் அம்மா செய்வாங்க. இரண்டுமே எனக்கு பிடிக்கும். கீரை மசியலில் கறி வடாம் வறுத்து போடுவதும் உண்டு.
பதிலளிநீக்குநன்றி கரந்தை ஜெயக்குமார் ஸார்.
பதிலளிநீக்குநன்றி டிடி.
கீதா மேடம், கண்ணாடி இல்லாமலேயே இவ்வளவு சரியாக டைப் அடிக்கிறீர்களே... சபாஷ்.
கிண்ணம். இந்த வார்த்தை எனக்குத் தோன்றாமல் குழம்பித்தான் பாத்திரம் என்று எழுதினேன்!
கருணைக்கிழங்கு மசியல் மறந்து விட்டேனே... ஆமாம்! சேனைக்கிழங்கு போட்டு மசியல் என்றில்லை, எரிசேரி செய்து சாப்பிடுவோம்.
கீரையில் தேங்காய்ப் போடா விட்டால் சுவைப்பதில்லை எனக்கு! மோர்க்கூட்டு சொல்லியிருக்கிறேனே... இன்று கூட இங்கு முருங்கைக்கீரை (எங்கள் தோட்டத்துக் கீரையாக்கும்!) பொரிச்ச கூட்டுதான்!
மணத்தக்காளிக் கீரையில் சின்ன வெங்காயம்? ம்ம்ம்.... சாப்பிட்டிருக்கிறேனா? நினைவில்லை. செய்துடுவோம் ஒருதரம்!
அரைக்கீரை-சுண்டைவத்தல் குழம்பு செம காம்பினேஷன். ஆனால் வத்தக் குழம்பில் புளிச்சுவை மிகக் கூடாது!
குருமா செய்முறை புதுசா ஒண்ணுமில்லை. எல்லாம் ஒரே மாதிரிதானே... அதையும் எழுதிடுவோம்! அம்மா கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது செய்யத் தோன்றுவதுதான் அப்படியே பழகி விட்டது!
நன்றி சொக்கன் சுப்பிரமணியம்.
நன்றி திருமதி ஆதி வெங்கட். நீண்ட இடைவெளிக்குப்பின் வருகிறீர்கள் போல!
சப்பாத்திக்குத் தொட்டுக்கப் பண்ணும்போது எல்லாக்கீரைக்கும் வெங்காயம், பட்டாணி போட்டுச் செய்வது உண்டே ஶ்ரீராம்! காலம்பரப் பண்ணின கீரை மிஞ்சினால் சாயந்திரம் அதில் இஞ்சி, ப.மிளகாய், வெங்காயம் தக்காளி அரைத்துவிட்டு (நினைவாக உப்புப் போடக் கூடாது. காலம்பர கீரையில் போட்ட உப்பே போதும்) கீரையில் கலந்து கொதிக்கவிட்டு, கரம் மசாலா (பிடித்தமானால்) அரை டீஸ்பூன் போட்டுச் சப்பாத்தியோடு தொட்டுக்கலாம்.
பதிலளிநீக்குபாலக் கீரையில் பட்டாணி, பனீர் போட்டுச் செய்வது தனி முறை. :)))
பதிலளிநீக்குபுளி போடாமல் மாங்காய் சேர்த்து அரைத்துவிட்ட ஸாம்பார்கூட நன்றாக இருக்கும். நான் எழுதியதும் செய்வதும் உண்டு. மசியலுக்கு நன்றி. அன்புடன்
பதிலளிநீக்குநாங்கள் குறிப்பாக பசலைக் கீரையில்தான் சின்ன வெங்காயம் போட்டு, பாசிப்பருப்புப் போட்டு செய்வோம். மணத்தக்காளிக் கீரைக்குக் கூட பாசிப் பருப்புதான் போடுவோம். மற்ற கீரைகளுக்கு து.ப.
பதிலளிநீக்குஆனால் தேங்காய் கட்டாயம் உண்டு. தேங்காய் போடாமல் செய்தால் சுவை குறைவதாய் எண்ணம்!
சேனைக்கிழங்கில் எரிசேரி மட்டுமில்லை. அதோடு காராமணி சேர்த்துப் பிட்லையும் பண்ணலாம். சேனைக்கிழங்கை வேக வைத்துக் கொண்டு. மி.வத்தல், சீரகம், தேங்காய்த் துருவலை ஒன்றிரண்டாக மிக்சியில் அரைத்துக் கடுகு, உ.பருப்பு, கருகப்பிலையுடன் தேங்காய் எண்ணெயில் பிரட்டலாம்.
பதிலளிநீக்குகுருமா கொஞ்சம் தனியாகச் சாப்பிட்டு விடுவேன் என்று நான் சொல்லியிருப்பது என் பங்கிலிருந்துதான். பங்கு பிரிக்குமுன் இல்லை. இப்போதுதான் மறுபடி படித்துப் பார்க்கும்போது வேறு அர்த்தம் வருவதைக் கவனித்தேன்! (சொக்கன் சுப்பிரமணியம், டிடி கவனிக்க) அம்மாவுக்கு மசாலா வாசனை பிடிக்காது என்பதால் அவர் பங்கை எனக்கும் என் தங்கைக்கும் தந்து விடுவாள்.
பதிலளிநீக்குகீதா மேடம்! சாப்பாட்டுக்குமுன் கிண்ணத்தில் வைத்து சாப்பிடுவது கூட எங்கள் வீட்டில் நான் மட்டும்தான்! மற்றவர்களுக்கு அந்தப் பழக்கம் இல்லை. ஏனென்றால் நான் "ராமன், சாப்பாட்டு ராமன்" (மை நேம் இஸ் பாண்ட்... ஜேம்ஸ்பாண்ட்' போலப் படிக்கவும்!) பாருங்கள்! அதனால்!
மாங்காய் மசியல் மிக அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅம்மாவுக்கு நீங்கள் உதவிய விஷயம் படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
என் மகனுக்கும் நான் அப்படித்தான் கொஞ்சம் வைத்து இருப்பேன் அவன் மறுபடியும் கேட்பான் என்று எனக்கு தெரியும்.
.
மாங்காய் மசியல் புதியதாக இருந்தது! எனக்கு கீரை மசியல் கூட பிடிக்காது! அதே சமயம் என் அம்மா செய்யும் கருணைக் கிழங்கு மசியல் சூப்பராக இருக்கும்! இந்த பதிவை படித்ததும் அதை செய்ய சொல்லி சாப்பிட ஆசை வந்துவிட்டது! நன்றி!
பதிலளிநீக்குகுறிப்பு அருமை. செய்து பார்க்கிறேன். குருமா கதையும் தொடர்பான பின்னூட்டங்களும் சுவாரஸ்யம்:)!
பதிலளிநீக்குதிருமணத்துக்கு முன் நானும் சமையலில் நிறைய உதவிகள் செய்வேன். தி. பி, மனைவி என்னைக் கிச்சனில் அனுமதிப்பதில்லை. இப்படிச் செய் அப்படிச் செய் என்று நான் சொல்லி விடக் கூடாது பாருங்கள், பொதுவாக சமைப்பவர்களுக்கு அவர்கள் சமையலில் விருப்பம் இருக்காது என்பார்கள் சரியா. ?
பதிலளிநீக்குமாங்காய் மசியல் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் மாங்காயிக்கு நான் எங்கே போவேன்.....(
பதிலளிநீக்குஇந்தியாவுல ஜனத்தொகை ஏறிகிட்டே போகுது . நீங்க என்னடான்னா மாங்காய் மசக்கை என்று போஸ்ட் போடுறீங்க! .
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்... அம்மா எனக்காக என்று வைப்பதில்லை, அவருக்கு மசாலா பிடிக்காது!
பதிலளிநீக்குநன்றி 'தளிர்' சுரேஷ். க.கி மசியல் எனக்கும் பிடிக்கும். எரிசேரி சாப்பிட்டுப் பாருங்கள் அதையும் ரசிப்பீர்கள்.
நன்றி ராமலக்ஷ்மி. இந்த டிஷ் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைத்தேனே... இல்லையா?
நன்றி ஜி எம் பி ஸார்... நீங்கள் சொல்வது சரி. சமைப்பவர்களுக்கு அவரவர் சமையலில் விருப்பமிருக்காது என்றுதான் எனக்கும் தோன்றும்!
அடடா.... அருணா செல்வம்... அங்கு மாங்காய் கிடைக்காதா? அரை நெல்லிக்காய்?
கே ஜி ஜி... ஜனத்தொகைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை!
நீங்கள் சொல்லும் மாங்காய் மசியல் ஆந்திரா டைப் மசியல் என்றே நினைக்கிறேன். உங்கள் அம்மா செய்யும் வெள்ளைக் குருமா ரெசிபியை கொஞ்சம் போடுங்களேன்.
பதிலளிநீக்குபின்னூட்டங்கள் சுவாரசியம்.
பதிலளிநீக்குகீதா சாம்பசிவம் அவர்களுக்கு தெரிஞ்சிருக்க முடியாத டிஷ் ஏதாவது தேடிப்பிடியுங்க அடுத்த திக பதிவுக்கு.
aanaalum mangaay Barnum ninaikkiren. //
பதிலளிநீக்குஇப்போத் தான் தப்பைக் கண்டு பிடிச்சேன். நேத்துக் கண்ணாடி வந்தப்போவே பார்க்க நினைச்சு மறந்து போச்சு. மாங்காய் சாம்பார்னு எழுதி இருக்கணும். "பார்"னு மட்டும் எழுதி இருக்கேன். கண்ணாடி இல்லைங்கறதாலே ஹிஹிஹி, நோ பனிஷ்மென்ட்! :)))))
மாமரம் இருக்கும் வீடுகளில் மாங்காய் மசியல் கட்டாயம் உண்டு. மாங்காய்ப் பருப்பும் உண்டு.அமர்க்களமான பதிவு. கீதா சும்மா கலக்கறே சந்துரு லெவலில் இருக்கிறார்கள். அம்மா குருமா நினைவுகள் இனிமை.
பதிலளிநீக்குஉங்க வீட்டில செஞ்ச குருமா
பதிலளிநீக்குபங்கு கணக்கு சரியா வருமா...?
பதிலளிநீக்குபசிக்கு உணவேதான் இன்றெந்தன் நிலை!சுவைக்கு இடமில்லை!
'திங்க' கிழமை படிக்க செவ்வாய் கிழமை வந்துவிட்டேன். இதைப்படிக்க தவறுவதில்லை.
பதிலளிநீக்குகீதா சொல்வதுபோல நாங்களும் மாங்காய் பருப்பு என்றுதான் சொல்லுவோம்.
கீதாவிற்குத் தெரியாத சமையல் இந்த உலகில் உண்டா?
குருமா அவ்வளவாகப் பிடிக்காது எங்கள் வீட்டில். அதனால் செய்வதில்லை. மற்ற மசியல்கள் செய்வது உண்டு.
வாராவாரம் ருசிருசியாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள்!
திங்கள் கிழமை மாங்காய் மசியலை செவ்வாய் இரவு (இந்திய நேரப்படி புதன்கிழமை வந்தாச்சு) வந்திருக்கேன்... இருந்தாலும் மசியல் சூப்பரண்ணா...
பதிலளிநீக்குநாக்கில் நீர் ஊறுகின்றது...மாங்காய் பருப்பு என்றும் சொல்வதுண்டு! நண்பரே! சொல்ல வேண்டும் என்று நினைத்த மசியல்கள், ரிசிப்பிஸ் எல்லாம் மேலே வந்துவிட்டன.....
பதிலளிநீக்குவெள்ளைப் பூஷணிக்காயிலும் மோர் கூட்டு செய்வதுண்டே. கீரையிலும் மோர்க்கூட்டு செய்வதுண்டே...நீங்கள் சொல்லியிருப்பது போல் தனியாகச் சாப்பிடுவது இங்கும் நடக்கும்....
நல்ல ரசனை! அதுவே "ரசமாக" ரசனையாக இருக்கின்றது!
//அந்தக் குருமா ஐந்து சரி பாகமாய்ப் பிரிக்கப்படும். அவரவர்களுக்கு ஒரு தனிப் பாத்திரத்தில் தரப்பட்டு விடும். //
பதிலளிநீக்குஅட!! நான் சின்னவளா இருந்த காலங்களில் வீட்டில் முறுக்கு, சீடை செய்யும்போதுதான் அவரவருக்குன்னு பங்கு போட்டுக் கொடுத்து விடுவார்கள்.
அண்ணனின் நண்பர்கள் ஏகப்பட்டவர்கள் வந்து செஞ்சது அனைத்தும் ஒரே நாளில் காலி ஆகிவிடும் என்பதால் அக்காக்கள் முறையீடு காரணம் இந்த பாகப்பிரிவினை:-)