எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.1.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) டீ இங்கல்ல, மும்பையில்!
 
 


3) 40 ஆண்டுகளாக ஏழைகளின் பசியைத் தீர்க்கும் பிரியாணி பாபா.
 


4) வல்லவளுக்குக் கேமிராவும் ஆயுதம்! அனு.
 



5) 18 நாடுகளில் இருந்து, என்னைப் போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மெக்கானிக்குகள் வந்திருந்தனர். அதில், அனைத்துத் தேர்வுகளி லும் வென்று, முதல் இடம் பிடித்து, உலக அளவில், 2014ம் ஆண்டின் சிறந்த மெக்கானிக்காகத்தேர்வானேன். மதுரை மீனாட்சி சுந்தரம்.
 


6) இப்படித்தான் இருக்கவேண்டும். முதியோர் உதவித்தொகை வேண்டாம் என்று சொன்ன புச்சம்மாள். (ஆந்திரா)
 
                                                                                 

7) நெகிழ்ச்சியான  செய்தி.  பேருந்து ஓட்டுனரைப் பாராட்டுவதா?  முகம் காட்டாமல் உதவிச் சென்ற காரில் வந்தவரையா? இருவரையும்தான்.
 
              
 
8) இப்போதல்ல, 92 லிருந்தே ஆட்டோ ஓட்டுகிறார் பி ஏ படித்த லட்சுமி.
 
 

10.1.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.




1) "புகழ்பெற்ற சதுரங்க வீரர் என்று நான் புகழ் அடைய வேண்டுமே தவிர, பார்வையற்ற சதுரங்க வீரர் என்று அல்ல" என்று சொல்லும் முஹம்மத் சாலி ஒரே சமயத்தில் 10 திறமையான வீரர்களுடன் விளையாடி ஜெயிக்கக் கூடியவர்.
 


2) வாழ்க்கை சரியாக அமையாத வரிசையில் வரும் பெண். துணிச்சலும், கைத்தொழிலும் (தன்)நம்பிக்கையைத் தர, தாயையும் சேர்த்துக் காப்பாற்றும் அபிராமி.
 


3) குறைந்தபட்சம் 10,000 ரூபாய்த் தேவைப்படும் இறுதிக் காரியங்களை இலவசமாகவே, சேவையாகச் செய்து வரும் கோவை விலான்குரிச்சியைச் சேர்ந்த செல்வராஜ்.  
 


இதில் இன்னொரு விஷயம் அவர் ஒரு மாற்றுத் திறனாளி.

4) "கோமதி இங்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்த பின் கடந்த 10 ஆண்டுகளில் ஒருவர்கூட படிப்பைப் பாதியில் நிறுத்த வில்லை. இவரிடம் டியூஷன் படித்த மாண வர்கள் பொறியியல், செவிலியர், டிப்ளமோ, பட்டப் படிப்பு ஆகியவற்றைப் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 6 பேர் 400-க்கு அதிகமாகவும், 15 பேர் 300-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளதைப் பெருமையாகச் சொல்கிறார் கோமதி." இலவசமாக வகுப்பெடுக்கும் கோமதி.
 



5) இது ஒரு நல்ல செயல். ஆரம்பித்திருக்கும் இடமும், முறையும்  சிறப்பு. மகேந்திர பாபு.
 


6) கேரளாவின் குடும்பஸ்ரீ வெள்ளம் பாதித்த ஜம்மு காஷ்மீர் சகோதரிகளுக்குச் செய்திருக்கும் சேவை சொற்களால் விவரிக்க முடியாதது. 
 



7) தன் எடையைப்போல 80 மடங்கு எடையைத் தாங்கக் கூடிய பேப்பர் பாலத்தை வடிவமைத்துள்ள டெல்லி ஐ ஐ டி மாணவர்கள்.
 




8) பழனிராஜுக்கு ஒரு சல்யூட்!
 


9) வயது ஒரு பொருட்டும் அல்ல, தடையும் அல்ல. இன்றைய அவசியத்தேவையான மரங்களை நடும் முதியவர் கருப்பையா.




10) ஆண்கள் செய்யும் எல்லா வேலைகளையும் பெண்களால் செய்ய முடியும் என்னும்போது இதில் மட்டும் முடியாதா என்ன என்று கேட்கிறார்கள் இந்த ராஜஸ்தான் தீயணைப்புத்துறை வீராங்கனைகள்.  சீதா பற்றியும் அக்னிப்ரவேசம் பற்றியும் சொல்லியிருக்கும் குறிப்புகள் சுவாரஸ்யம்.







11) வாளேந்திய வனிதை!


                                                                                 


27.12.14

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம்.



1) இந்த முதியவர்களுக்கு இது பொழுதுபோக்கு மட்டுமல்ல, சிறு வருமானமும் கூட.  விஸ்ராந்தி.
 



2) ரிக்ஷாக்களே வழக்கொழிந்துவரும் காலம் என்றுதான் தோன்றுகிறது. ஆயினும் அதை வைத்தும் பிழைப்பவர்கள் இருக்கிறார்களே... அவர்களுக்கு உதவ டாக்டர் ராஜ்வன்ஷி செய்திருக்கும் கண்டுபிடிப்புச் சேவை.
 


3) உண்மை செத்து விட்டது, இது கலிகாலம் என்று நினைக்கிறீர்களா? இங்கு பாருங்கள்!  ஒரு தெலுங்குத் திரைப்படக் காட்சியின் நாடகத்தன்மையுடன் இருந்தாலும் இப்படி நிஜமாக நடந்திருக்க முடிவதில் சந்தோஷம் ஏற்படுகிறது. உ.பி மாநில புலந்த்ஷஹர் மாவட்டச் நீதிபதி B. சந்திரலேகா என்ன போடு போடுகிறார் என்று வீடியோவில் பாருங்கள். பாஷைதான் புரியவில்லை.
 


4) விளையாட்டா(ல்)ய் ஒரு நல்லெண்ணப் பரவல். ஐசம் உல் ஹக் கொரேஷி  நம்மூர் ரோஹன் போபண்ணாவுடன் இணைந்து பரப்பும் நல்லெண்ண அலைகள்.
 


5) நாட்டைக்க காக்கும் கை பாட்டு போல, காட்டைக் காக்கும் அன்னா குஜுர் . ஒடிஸா பாஸிட்டிவ்.
 



6)  "உனக்கு நடந்து போக கால் இல்லையேப்பா எப்படிப்பா? என்று கேட்டபோது சுத்தம் செய்ய இரண்டு கைகள் இருக்குங்களேய்யா என்று சொன்னதும...."  ஜெயராமன்.
 


7) தவறான திருமணம் என்னும் சிறையை விட்டு வெளியில் வந்தது மட்டுமல்ல சாதனை... மிசோரம் லால்தஞ்சமி.
 


8) மோதீஸ்வரும் நண்பர்களும்.
 


9) குப்பையில் இத்தனை விஷயங்களா... அட.. பாராட்டப்பட வேண்டிய, குருடம்பாளையம் பஞ்சாயத்தில், 14வது வார்டு கவுன்சிலராக இருக்கும் சாந்தாமணி.  

20.12.14

பாஸிட்டிவ் செய்திகள் கடந்தவாரம்





1) அதிகமாக ஆசைப்படவில்லை. ஆட்களை வைத்து சமாளிக்கும் திறமையோடு இன்னும் நால்வருக்கு வேலை வாய்ப்பு. படிக்காவிட்டால் என்ன? மூன்று குழந்தைகளையும் தன்னுழைப்பில் ஆளாக்கிய சரஸ்வதி.

                       


2) உணர்ச்சி வசப்படாமல், அழுது புலம்பாமல் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவுடன் செயல் பட்ட தாய்.

போதை மருந்து விற்ற போது பிடிபட்ட சுனில் ஷர்மா (வலது)


3) உதவி என்றால் என்ன? மனிதாபிமானம் என்றால் என்ன? திரு(மிகு)நங்கைகள்.

                                            


4) நினைத்தால் வெளிநாடு போய் லட்சம் லட்சமாகச் சம்பாதித்திருக்கலாம். ஆனால், இப்படியும் ஒரு மனிதர். டாக்டர் முத்துகிருஷ்ணன்.

                                                              


5) 'நானா-நானி இல்லம்' நடத்தும் உமா மகேஸ்வரி பாராட்டப் பட வேண்டியவர்தான். சந்தேகமில்லை. இன்றைய சூழலுக்கு இவர் செய்யும் தொண்டு பாராப்பட வேண்டியது.  ஆனால் இது போன்ற இல்லங்கள் நிறையத் திறக்கப் படாதிருக்கும் சூழ்நிலை வரவேண்டும் என்பதே நம் விருப்பம்.

                                              


6) படித்துப் பட்டம் பெற்றால் வேலை கிடைக்கும் என்ற இவரது அறிவுரை சரியில்லை என்று திட்டிய சக கிராமவாசியின் வார்த்தைகள் இவரை இவரது வேலையை விடவைத்து, சொத்துகளை விற்று ஒரு தரமான கல்வி நிறுவனத்தைக் கட்ட வைத்தது. ப்ரஞ்சால் துபே.

                                    Pranjal Dubey


7) இந்தக் காலத்திலும் பிரசவம் என்பது எவ்வளவு கடினம் என்பதை உணராத கிராமவாசிகளுக்குச் சரியான வழி காட்டிய ASHA அமைப்பும் மார்த்தா டிக்காலும்.

                                                      In Rajkhol, the village health atlas has equipped ASHA Martha Diggal with all the right tools to do her job well. She has been able to motivate women to go in for institutional deliveries, linked them with government schemes and achieved 100 per cent immunisation. (Credit: Sarada Lahangir\WFS)

6.12.14

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்



2) வரவேற்பைப் பெறும் வரதட்சணை.


 
3) விஜயலட்சுமி ஒரு பாஸிட்டிவ் பெண்.


4) சபாஷ் சகோதரிகள். ஓடும் பஸ்ஸில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களை தைரியமாக தாக்கிய 2 சகோதரிகள் வரும் குடியரசு தினத்தில் கவுர விக்கப்படுவார்கள் என ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.

[இந்தச் செய்தியில் இப்போது ஒரு மாற்றுக்கருத்து உள்ளது. அந்த இளைஞர்கள் அப்படி ஒரு தவறைச் செய்யவில்லை என்று சில பயணிகள் போலீஸில் சொல்லியிருப்பதாக இன்றைய செய்திகள் சொன்னாலும் 'ஈவ் டீசிங்'குக்கு ஆளாகும் பெண்களுக்கு 'எப்படிச் செயல்பட வேண்டும்' என்ற பாடமாக இருக்கட்டுமே....]





 

5) லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன் எழுதிய, நிசப்தம்  வலைப்பதிவின் திரு வா மணிகண்டன் பற்றிய இந்த பாசிட்டிவ் பக்கத்தை இப்போதுதான் ஃபேஸ்புக் வாயிலாக அறிகிறேன்.