திங்கள், 13 ஏப்ரல், 2015

'திங்க'க்கிழமை : அம்மிணிக் கொழுக்கட்டை


பிள்ளையார் சதுர்த்தி மற்றும் வரலக்ஷ்மி நோன்பு சமயங்களில் செய்யப்படுவது கொழுக்கட்டை.
 
    
           Image result for கொழுக்கட்டை images                          Image result for கொழுக்கட்டை images
 
செய்வது சற்றே கடினமான ஒன்றுதான்.   அரிசி மாவுப் பதம் ஒழுங்காய் வரவேண்டும்.  இல்லாவிட்டால் கிண்ணம் ஒழுங்காய் வராது.  உடைந்து உடைந்து போகும்.  ஆவியில் வைத்து எடுக்கும்போதும் விரிசல் விழும்.  தேங்காய், வெல்லம் ஏலக்காய் சேர்த்து இனிப்புப் பூரணம் வைத்துத் தித்திப்புக் கொழுக்கட்டையும்,  உளுந்து ஊறவைத்து அரைத்து, உதிர்த்து, காரம், பெருங்காயம் சேர்த்து பூரணம் சேர்த்து காரக் கொழுக்கட்டையும் செய்வோம்.  எனக்கு மிகவும் பிடித்த பண்டம் இந்த இரண்டும். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.   சொல்லப் போனால் அ.கொ கூட எல்லோருக்கும் தெரிந்திருக்கும்!    
 

           Image result for அம்மிணிக் கொழுக்கட்டை images                       Image result for அம்மிணிக் கொழுக்கட்டை images
 
இது போலக் கொழுக்கட்டை செய்யும்போது பூரணம் தீர்ந்து மாவு மீந்து விடும்.  அப்போது செய்வதுதான் அம்மினிக் கொழுக்கட்டை.   சில சமயங்களில் இதற்கு டிமாண்ட் அதிகமாகி விடும்!
 
மீந்து போன (கிளறி வைத்த) கொழுக்கட்டை மாவில் தோசை மிளகாய்ப்பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்குப் பிசைந்து வித விதமான வடிவங்களில், ஆனால் சிறிய அளவுகளில் (சரியாக வேக வேண்டுமே) செய்து வேக வைத்து எடுத்து விடுவோம்.
 
                                                                   
                                                                  Image result for கொழுக்கட்டை images

இதில் பச்சை மிளகாய் அரைத்து விட்டு, கொத்து மல்லி அரைத்து விட்டு, லேசாக எலுமிச்சைச் சாறு பிழிந்து கூட (கூழ் வடகம் வாசனை, ருசி வரும்) வடிவங்கள் செய்து ஆவியில் வேகவைத்துச் சாப்பிடலாம்.






படங்கள்   :   இணையம்.

25 கருத்துகள்:

  1. ஹப்பா கடைசில எங்க ஊர் (திருநெல்வேலி) அம்மிணிக் கொழுக்கட்டையும் போட்டாயிற்று! அருமை!

    பதிலளிநீக்கு
  2. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை (சூட )ஈட்ட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  3. வருஷப் பிறப்புக்கும் கொழுக்கட்டை உண்டா?

    பதிலளிநீக்கு
  4. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. ,இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பூரணம் மீதியானால் அப்படியே சாப்பிட்டுவிடலாம்.மாவு மீதமாகி விட்டால் அம்மினிக் கொழுக்கட்டையே வழி .
    சுவையான பதிவு

    பதிலளிநீக்கு
  7. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா

    செய்து அசத்திடுவோம்...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே.!

    விதவிதமான கொழுக்கட்டைகள் படங்கள் அருமை..
    நானும்,கொழுக்கட்டை செய்து மீந்த மாவில் தங்கள் செய்முறைப்படி இட்லி மிளாகாய் பொடி கலந்து செய்வேன்.படங்களும் செய்முறை விளக்கங்களும் பார்த்தவுடன் மீண்டும் செய்து சாப்பிட தூண்டுகிறது
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. அது என்ன... பிள்ளையார் சதுர்த்திக்கும் நோன்புக்கும் மட்டும்தான் கொழுக்கட்டை செய்யவேண்டுமா. என் பெரிய அண்ணி வெறும் அரிசிக் கொழுக்கட்டை என்று காலை உணவாகவே செய்வார்கள். ஆஹா. அவ்வளவு டேஸ்டாக இருக்கும். தொட்டுக் கொள்ள தேங்காய்ச் சட்டினி சூப்பராக இருக்கும்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே.!

    முன்னதாக இருக்கும் மற்ற அனைத்து பதிவுக்கும் படித்து கருத்துரைகள் இட்டேன். என்ன மாயமோ அனைத்தும் காணாமல் போகிறது..அதனால் மாய வித்தை காட்டாதிருந்த இந்த பதிவுக்கே மறுபடியும்..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ஜி எம் பி ஸார்... கொழுக்கட்டைக்கு எதுவுமே தொட்டுக்கொள்ள வேண்டாம் எனக்கு!

    பதிலளிநீக்கு
  13. அம்மிணி கொழுக்கட்டை சாப்பிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. நினைவு படுத்திட்டீங்க!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. அம்மிணிக்கொழுக்கட்டைக்குக் கீழே இருக்கது பால் கொழுக்கட்டையா..

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் எங்கள் ப்ளாக் & ஸ்ரீராம் & கேஜிஜி :)

    பதிலளிநீக்கு
  15. அருமையான குறிப்பு. எனக்குப் புதிதே.

    எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவினருக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  16. எங்கள் ப்ளாகுக்கு வந்தால் போதும் எல்லாரையும் படிச்சிடலாம் போலிருக்கே. நன்றி எங்கள்ஸ்ஸ்ஸ் :)

    பதிலளிநீக்கு
  17. அம்மிணிக்கொழுக்கட்டை இதுவரை கேள்விப்பட்டதில்லை.

    கடுகு, உ.ப, க.ப, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை எல்லாவற்றையும் மாவில் தாளித்துக்கொட்டி தேங்காய்த்துருவல் சேர்த்து சற்றே பெரிய உருண்டைகளாக உருட்டினால் நீர் உருண்டையாகிவிடும். :)

    பதிலளிநீக்கு
  18. எங்கள் வீட்டில் இதை மணிக் கொழுக்கட்டை என்பார்கள். எங்களுக்கெல்லாம் ரொம்பவும் பிடித்த டிபன் இது. செய்து சாப்பிட வேண்டும் என்கிற ஆவலை கிளப்பி விட்டுவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  19. 'எங்கள்' ஆசிரியர் குழுவிற்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  20. அம்மினிக் கொழுக்கட்டை சாப்பிட எனாக்கும் ஆசைதான் ,எங்க வீட்டு அம்மணி மனசு வைக்கணுமே :)

    பதிலளிநீக்கு
  21. வெங்கட் நாகராஜ்

    தேனம்மை லக்ஷ்மணன் (கூகிளிலிருந்து எடுத்த படம்! பால் கொழுக்கட்டையாக இருக்கலாம்.)

    ராமலக்ஷ்மி

    கீதமஞ்சரி

    ரஞ்சனி நாராயணன்

    பகவான்ஜி

    அனைவருக்கும் நன்றி. சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. அம்மிணிக் கொழுக்கட்டை - பெயர்க்காரணம்? (அம்-அழகிய மினி-சிறியதான. ஆங்கிலம்தான். கண்டுகொள்ளாதீர்கள்). அழகிய சிறிய கொழுக்கட்டை. கூகுள் படத்தைவிட, நீங்கள் பண்ணின படம் நன்றாக இருந்திருக்கும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!