திங்கள், 4 ஜனவரி, 2016

திங்கக்கிழமை 160104 :: உருளைக்கிழங்கு எக்ளேர்ஸ்!




இந்த வாரம் கொஞ்சம் -  கொஞ்சம்தான் - ஸ்பஷல்!  சற்றே வித்தியாசமான முயற்சி!


ரொம்ப நாட்களாய் இருந்த ஐடியா.  நான் யோசித்தது ஒரு மாதிரி.   வழக்கம் போல அமைந்தது ஒரு மாதிரி.


பாஸ் கிட்ட உருளைக்கிழங்கை வேகவைக்கச் சொல்லும்போது முழுசாவே இருக்கட்டும் என்று சொல்ல மறந்து விட்டேன்.   எப்போதும்  பாஸ் பாதிப் பாதியாக வெட்டி குக்கரில் வைத்து விட்டார்!




தோலுரித்து எடுத்துக் கொண்டேன்.


முன்னதாக, பத்து சின்ன வெங்காயம், ஒரு தக்காளி, மூன்று பல் பூண்டு கொஞ்சூண்டு கொத்துமல்லி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, ஒரு சிட்டிகை கரம் மசாலாப்பொடி, காரப்பொடி மூன்று ஸ்பூன்  போட்டுக்கொண்டு அதில் நெல்லிக்காய் அளவு ஊறவைத்த புளியை அரை டம்ளருக்கும்  குறைவான தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொண்டு அதில் ஊற்றி, மிக்ஸியில் தனியாக அரைத்து வைத்துக் கொண்டேன்.  கலவை சற்று கெட்டியாக இருக்கவேண்டும்!  (ஒரு முறை சுற்றியபின் இன்னும் கொஞ்சம் வெங்காயம், பூண்டு சேர்த்துச் சுற்றினேன்.  அதுதான் படத்தில் மிக்ஸிக் கலவையில் தெரிவது.)



இந்தக் கலவையை வெறும் வாயில் டேஸ்ட் பார்த்த மகன்கள் அதையே ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!!!  (ஹிஹிஹி...)




தோலுரித்த உருளைக்கிழங்கை காரப்பொடி, பெருங்காயத் தூளால் லேசாகப் புரட்டிக் கொள்ளவும்.  (நான் இந்த ஸ்டெப்பைப் பின்னர்தான் செய்தேன்.  முன்னரே செய்திருக்கலாம் என்று செய்யும்போது யோசனை வந்தது!  வெளியே காரம் தேவைப்படாதவர்களுக்கு இது வேண்டாம்!)




தோலுரித்த உருளைக்கிழங்குகளை மிகக் கவனமாக கத்தியால் வெட்டி வெளியே எடுத்துக் கொண்டேன்.  (இங்குதான் வேறு மாதிரி யோசித்து வைத்திருந்தேன்.  நடைமுறைப்படுத்த முடியவில்லை!)   வெளியே எடுத்த பகுதி இருக்கிறதல்லவா.... அதில் உள்ள கீழ்ப் பகுதியை ஜாக்கிரதையாகக் குறைத்து விட்டேன் - வெட்டி ரமாக வைத்து விட்டேன்.  இப்போது மூடி போன்ற குறைக்கப்பட்ட பகுதி மட்டும் மிச்சம்.


அந்த இடத்தில் அரைத்து வைத்திருக்கும் கலவையை இட்டு, (கொஞ்சமாக வைக்க வேண்டும்.  இல்லாவிட்டால் வழிந்து வெளியே ஓடும்!) மூடி போன்ற குறைக்கப்பட்ட பகுதியை வைத்து மூட வேண்டும்.



அப்படியே அலுங்காமல் எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டியதுதான்.



குறைக்கப்பட்ட பகுதிகளை அம்மிணிக் கொழுக்கட்டை போல அதே கலவையில் புரட்டி பொரித்து எடுக்கலாம். இல்லை தனியாகப் பொரித்து சாப்பிடலாம்!  கொஞ்சம்தான் இருக்கும்.  அந்தக் கலவையில் மிச்சம் மீதி இருந்தால் அதை பொரித்த உருளைக்கிழங்கைச் சாப்பிடும்போது தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.




உள்ளே ஸ்டஃப் செய்யும் முறையில் / பொருளில்  அவரவர்கள் யோசனைகளுக்கேற்ப மாறுதல் செய்து கொள்ளலாம்.   கார்ன்ஃப்ளார் மாவு வைத்துப் புரட்டிக் கொள்ளலாம்.  மைதா மாவு பேஸ்ட் போலச் செய்து பிளந்தால் ஒட்டலாம்!


பதிவை விட படங்கள் ஜாஸ்தி இல்லை?!!!


54 கருத்துகள்:

  1. நீங்கள் செய்யும் முறை சற்று வித்தியாசமாக இருக்கிறது நேரம் கிடைக்கும் போது செய்து பார்க்க வேண்டும்

    இதே முறையில்தான் நான் சிறிது மாற்றி செய்வேன். எனது முறைப்படி முழு உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து அதின் டாப் பகுதியை அரை இஞ் அளவிற்கு கட் செய்து எடுத்துவிட்டு அதன்பின் மீது உள்ள உருளைக்கிழங்கை உட்புறமாக குடைந்து எடுத்துவிட்டு அதின் உட்பகுதியில் ஜீஸுடன் வேண்டிய காய்கறிகளை வேகவைத்து அதில் வேண்டிய அளவு க்ர்ஷ்டு சில்லியை போட்டு மீண்டும் அதன் மேல்பகுதியை கட் செய்து வைத்த உருளை கிழங்கை வைத்து மூடிவிடுவோம் அப்படி மூடும் போது அது கழண்டுவிடாமல் இருக்க பல் குத்து குச்சியை வைத்து முடுவோம் அப்போதுதான் அதன் மேல் பகுதி எண்ணெயில் பொரிக்கும் பொது கழண்டுவிடாமல் இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மதுரைத்தமிழன். நீங்களும் வித்தியாசமாக நிறைய முயற்சிப்பீர்கள் என்று தெரிகிறது.

      நீக்கு
  2. ஆலூ தம்! :) இப்படியும் செய்வதுண்டு. குடைமிளகாய், தக்காளி போன்றவற்றில் கூட இப்படி ஸ்டஃப் செய்யலாம். ஆனால் புளி சேர்ப்பதில்லை. தக்காளி, வெங்காயம், பூண்டு, கொ.ம. மசாலாக்கலவையை நீர் ஊற்றாமல் அரைச்சுக்கணும். மற்றபடி பாஸ்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா மேடம். சிறு சிறு மாறுதல்களில் சுவையே மாறும். உதாரணமாக சரவணபவன் சாம்பார்! அதுபோல ஒரே மாதிரி செய்யாமல் புளி விட்டு, விடாமல் என்று முயறசித்துப் பார்ப்பது என் வழக்கம்.

      நீக்கு
  3. நம்ம வீட்டில் ரங்க்ஸுக்கு இதெல்லாம் பிடிக்காது. ரசிக்க மாட்டார். ஆகையால் செய்வதில்லை. குட்டி உ.கி. வாங்கி வரச்சே இந்த மசாலாக் கலவையை கிரேவியாகக் கொண்டு உ.கி.யை வேகவைத்துத் தோலுரித்துக் கொண்டு ஒரு குத்தூசியால் எல்லாப் பக்கங்களிலும் குத்திக் கொண்டு, எண்ணெயில் காரம், உப்புச் சேர்த்து வதக்கிக் கொண்டு கிரேவியில் போட்டுக் கொதிக்க விட வேண்டும். உள்ளே குத்தி ஓட்டை போட்டிருப்பதால் கிரேவியில் காரம் எல்லாம் உ.கி.க்குள்ளே போய் ருசி நல்லா இருக்கும். கீழே இறக்கியதும், மேலே சீஸைத் துருவிப் போடலாம். அல்லது ஃப்ரெஷ் க்ரீம் மேலே போடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் செய்வதுண்டுதான் கீதா மேடம். வழக்கமான முறைகளிலிருந்து சிறு வித்தியாசம் காட்டிச் செய்யும்போது அதைப் பகிர்கிறேன். பேபி பொடேடோ போட்டு நீங்கள் சொல்லியிருக்கும் முறையில் என் மனைவியின் உறவினர் சொல்லி, அதையும் முயற்சித்துப் பார்த்திருக்கிறேன். அப்போது தோன்றியதுதான் இது! ஆலு தம் என்ற பெயரையெல்லாம் நான் அறிந்ததில்லை.

      நீக்கு
  4. வித்தியாசமான குறிப்பு. கொஞ்சமாய் வேக வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நன்றாக வேகவைத்து விட்டால் எண்ணெயில் பொரித்து எடுக்க கஷ்டம் இல்லையா? எண்ணெய் வேறு குடிக்கும் இல்லையா? செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அரசு மேடம். எண்ணெய் நிறைய குடிக்கவில்லை. குறைந்த அளவு எண்ணெயே செலவு.

      நீக்கு
  5. படிப்படியான படங்கள் இதுபோன்ற செய்முறைக்கு அவசியமே. அருமை!

    பதிலளிநீக்கு
  6. தம் ஆலு போல இருக்கு கீதா மேம் சொன்னது போல புளி இல்லாமல் குட்டி உருளையயை ஊசி வைச்சு குத்தி இந்த மசாவில் கொதிக்க வைத்து எடுக்கலாம். படம் அதிகம்தான் ஆனா எண்ணெய் அதை விட அதிகம் ஹாஹா.. நாங்க இப்ப ஒரு ஸ்பூன் எண்ணெயில எல்லாம் செய்ய ஆரம்பிச்சுட்டமாக்கும். இருந்தாலும் பார்க்கும்போதே ஜொள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தேனம்மை லக்‌ஷ்மணன். எண்ணெய் நிறைய குடிக்கவில்லை.

      நீக்கு
  7. அருமையான, சுவையான செய்முறைக்குறிப்புகளும் , படங்களும் சிறப்பு சேர்க்கின்றன.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    அற்புதமான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. சாக்லேட் எக்ளேர்ஸ் போன்றே உ கி எ யும் ருசியாய் இருக்கும் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பகவான்ஜி. எனக்கு உருளைக் கிழங்கு பிடிக்காது தெரியுமோ...

      நீக்கு
  10. Geetha Sambasivam அவர்களின் முறையும் நன்றாக இருக்கிறதே


    இப்படி வரும் விதவிதமான முறையில் நான் சமையல் செய்ய ரெடி ஆனா எங்க வூட்டம்மா ஆயிலா என்று ஒரு பேயாட்டம் ஆடிவிடுவார்கள் அவர்களுக்கு ஆடுகளுக்கு போடுவது போல இலைதழைதான் வேண்டும் அதைதான் இங்கே சாலட் என்று சொல்லுகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கு நன்றி மதுரைத் தமிழன். கீதா மேடம் சமையல் எக்ஸ்பர்ட். அவங்க அதுக்காக 'சாப்பிட வாங்க'னு ஒரு தளமே வைச்சிருக்காங்க..

      மறுபடியும் சொல்றேன். எண்ணெய் ரொம்பக் குடிக்கலை!

      நீக்கு
  11. வருட ஆரம்பத்தில் எண்ணையில் பொரிக்காமல் உடம்புக்கு ஏத்த மாதிரி ஒரு டிஷ் போட்டிருக்கலாமே? புளி வாசனை, வெறும்ன பொரிச்சா போயிடுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லைத் தமிழன். புளி சிறு இணுக்கு எடுத்துக் கரைத்ததுதான். நீர் தெளிப்பது போல! தக்காளியும் சேர்த்து அரைக்கப் பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவும்.

      ஏற்கனவே சொன்னதுபோல இது மற்றவர்களுக்காகத்தானே தவிர, எனக்கு உ.கி பிடிக்காது!

      நீக்கு
  12. நெல்லைத் தமிழன், இதிலே புளி சேர்த்தால் அவ்வளவு ருசி வராது. தக்காளி ப்யூரி தான் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  13. மதிப்பெண் பட்டை காணோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம வாக்குப் பட்டையா? என்ன ஆச்சுன்னு தெரியலையே புலவர் ஐயா..

      நீக்கு
  14. நான் புளி சேர்ப்பதில்லை. சேர்த்து பார்த்து டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புது வருடத்தில் முதல் வரவு. வாங்க ராஜி... நன்றி

      நீக்கு
  15. எந்த ஒரு புது ரெசிப்பியையும் முதலில் தயக்கத்தோடுத்தான் என்மனைவி முயற்சிப்பாள் சொல்லிப் பார்க்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  16. படங்களே அழகாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  17. Creative (ரொம்ப சிரமம் போல் தோணுது)

    பதிலளிநீக்கு
  18. சந்தடி சாக்கில் புதிதாக ஒரு கொழுக்கட்டையை நுழைத்திருக்கிறீர்களே? அம்மிணிகளுக்கு மட்டுமா?

    பதிலளிநீக்கு
  19. என் கண் என்னை ஏமாற்றி விட்டதே ...ஹா ஹா :)நேத்து fb யில் படத்தை பார்த்து நான் உண்மைல காபி டம்ப்ளர் இல் இட்லி செஞ்சி மிளகாப்பொடி டிங்கரிங் அடிச்சி விட்டிருக்கிங்கன்னு நினைச்சேன் ..இங்கே சிவப்பு கிழங்குdesiree potatoes கிடைக்கும் அதில் செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  20. நல்லா இருக்கும் போல! செய்து பார்த்துடுவோம்.....

    பதிலளிநீக்கு
  21. நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்பதையும் சொல்லி இருந்தால் போட்டோக்களும் விபரங்களும் சரி நிகராயிருந்திருக்கும். உண்வுச்செய்முறை பதிவில் படங்கள் சுவை கூட்டும் தானே? படிக்கும் போது சுவையாய் இருக்கும் போல் தான் தெரிகின்றது, நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து விடலாம்!

    பதிலளிநீக்கு
  22. நா ஊறுகிறது! செய்து ருசிக்க வேண்டும்! நன்றி!

    பதிலளிநீக்கு
  23. ஆஹா! செய்து கொடுத்தால் சாப்பிடலாம், இவ்ளோ வேலை செய்யனுமா!!!! :-)

    நான் முட்டை என்று நினைத்தேன் , முக நூலில் பார்த்தபோது

    பதிலளிநீக்கு
  24. நன்றி அப்பாஜி... சிரமமேயில்லை!!!!

    பதிலளிநீக்கு
  25. நன்றி ஏஞ்சலின். ஹிஹிஹி... ஏமாற்றி விட்டேனா? மன்னிச்சுக்கோங்க...

    பதிலளிநீக்கு
  26. நன்றி சகோதரி நிஷா. நான் என்ன நினைத்தேன் என்பது சிக்கலான கற்பனை!

    பதிலளிநீக்கு
  27. நன்றி நண்பர் சாமானியன் சாம்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி சகோதரி கிரேஸ். முட்டையா.... மூச்!

    பதிலளிநீக்கு
  29. வித்தியாசமா இருக்கே... ரொம்ப பொறுமை வேணும் போலவே அண்ணா...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!