ஆனால் அதுவும் கஷ்டமான கேள்வியல்ல. ஒன்றிரண்டைத் தவிர மற்றவற்றை எளிதாகச் சொல்லி விடலாம்!
1) சரண்யா போனை வைத்தாள். அவள் திலீப்புக்கு சம உயரம் இருப்பாள். பூசின தேகம். முதல் பிரசவத்திலேயே மாமியாகி விடுவாள் என எச்சரித்தது. எடையையும் இடையையும் கவனிக்கவில்லை என்றால் பருத்து விடுவாள். ஆனால் குழந்தை முகம். அவளுக்கு நாய்க்குட்டி, பூனைக்குட்டி, ஏன், எலி, அணில்கள் எல்லாம் பிடிக்கும். கர்னாடக சங்கீதம் கேட்பாள். லூயி கரால் படிப்பாள்.
2) உள்ளே நுழைந்த பெண்ணுக்கு வயது பத்தொன்பதுக்கு மேல் ஒரு செகண்ட் கூட இருக்காது என்று தோன்றியது. கரிய கூந்தல், கரிய கண்கள், உடலின் சாத்தியங்களை மழுப்பியிருந்த கரிய பளபளப்பு உடைகள். அதன் மார்புப் பகுதியில் எம்ப்ராய்டரி போட்டு, வசந்த்தின் இதயத் துடிப்பை கதிகலக்க சற்றே திறந்திருந்தது. பிரதான மூக்கில் குத்தி ஒரே ஒரு சிறிய வைரம் பளிச்சிட்டது. தூக்கலான மூக்குக்குத் தோதாக இருந்தது.
3) "மே ஐ கமின்?" என்றாள்.
"யெஸ்" என்றேன். நைலான் சாகரமாக உள்ளே நுழைந்தாள். அவள் அணிந்திருந்த புடைவையை நான் விரும்பினேன். நான் மட்டும் தொடர் நாவலின் ஹீரோ சேகராக இருந்தால் அவளைக் கண்ட உடன் காதல் கொண்டிருப்பேன். அழகி. மூக்கு நுனியில் ஒரு சிறு வளைவு ஒரே குறை. யூனிவர்ஸிட்டி படிப்பினால் உதட்டோரத்தில் ஒர் அலட்சியம். நல்ல வளர்த்தி. நல்ல வளர்ப்பினால் பொருத்தமான உடை, பொய்யில்லாத வளப்பம். புன்னகைக்காக சுப்ரீம் கோர்ட் வரை வாதாடலாம். மனித வாழ்க்கைக்கு அத்தம், காரணம் ஏற்படுத்தும் புன்னகை.
4) எனக்காக அந்த மாது காத்திருந்தாள். "நீங்கள் பத்து நிமிஷம் லேட்" என்றாள். நான் கதவைத் திறந்து என் தாமதத்தைப் புன்னகையால் மறைத்தேன். பின் குறிப்பாக "ஸாரி" என்றேன். அம்மாள் வெண்மை சாகரமாக இருந்தாள். அவளுக்கு வயது நாற்பத்தி எட்டு இருக்கலாம். லேசாக மீசை இருந்தது. கண்களில் கண்ணாடி வட்டங்கள். தலையில் நரை என்பதே இல்லை. விஸ்தாரமாக இருந்தாள்.
5) நான் கல்யாணத்துக்குப் பெண் பார்க்கப் போகிறவன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பெண் என் முன் எப்படி வந்து உட்காருவாள்? அப்படி வந்து உட்காந்தாள் மாயா. தரை நோக்கி வந்தாள். ஒரு தடவை நிமிர்ந்து கரம் குவித்து, போர்த்திக் கொண்டு உட்கார்ந்தாள். தன் கை நகங்களைப் பார்த்துக் கொண்டாள். எளிய ஸாரி அணிந்திருந்தாள். கழுத்தில் காதில் நகைகள் இல்லை. திருவள்ளுவரின் 'மனைமாட்சி' என்கிற அதிகாரத்திலிருந்து நேரே நடந்து வந்தவள் போலிருந்தாள்.
6) "என்ன ரத்னா?" என்று குரல் கேட்டுத் திரும்பினேன். சரஸ்வதி! ஆம். அவள்தான் சரஸ்வதியாய் இருக்க வேண்டும். அம்மாடி! ஒரு இந்தியப் பெண்ணுக்கு இத்தகைய அதிக உயரம், வளர்த்தி, அடர்த்தி! உடைகளை மீறி வழிந்து கொண்டிருந்தாள் சரஸ்வதி. நல்ல உயர்தரப் பட்டுப்புடைவை அணிந்து கொண்டு சிக்கனமாக தலையை முடிந்து கொண்டு, நெற்றியில் ஒன்றுமில்லாமல்... நாற்பது வயதிருக்கும். இன்னும் அழகு தேங்கியிருக்கும் சரஸ்வதி. காயத்ரியின் வருணனை கச்சிதமாகப் பொருந்துகிறது.
அப்புறமா வர்றேன்...!
பதிலளிநீக்குசுஜாதா படத்திற்கா பஞ்சம்?.. ஒன்றைக் கூடப் போடாது இது என்ன கஞ்சம்?
பதிலளிநீக்குசு(வாரஸ்ய சு)ஜாதா நடை!!
பதிலளிநீக்குசுஜாதா நடையழகு தொடருங்கள் நன்று
பதிலளிநீக்குசுஜாதாவின் பல கதைகள், நாவல்கள் வாசித்ததுண்டு. 25 வருடங்களுக்கு முன். ஸோ....ஹிஹிஹி மெமரி வீக் ஆகிக் கொண்டிருப்பதால், மீண்டும் அப்லோட் செய்யணும், இல்லனா ஒரு மெமரி கார்ட் போடணும்...இதற்கும் மூளையைப் பற்றி எழுதிய சுஜாதா சொல்லியதை (அப்படியே அல்ல அதன் அர்த்தத்தை) சொல்லுகின்றேன்..."நம் மூளையில் கம்ப்யூட்டர் போல பல தகவல்களைச் சேமித்துவைக்கும் பகுதியில் நடிகை மீனாவின் விலாசத்தைச் சேமிப்பதற்குப் பதிலாகச் சேமிப்பதற்கு நிறைய இருக்கும் போது....."
பதிலளிநீக்குகீதா
ஒருத்தர் கூட பதில் சொல்லலையே, மீண்டும் வருவேன் :)
பதிலளிநீக்குஎனக்கு ஒன்றும் நினைவில் இல்லை. கடைசி காயத்ரியாக இருக்குமோ என்னவோ.
பதிலளிநீக்குநான் சுஜாதா நாவல்கள் அதிகம் படித்ததில்லை! அதனால் தெரியவில்லை.
பதிலளிநீக்குநான்காவது வரிகள் அந்த மாது காத்திருந்தாள் என்பது நினைவுக்குள் வருகின்றது. மாது மாது.... எப்பவோ படித்தது. வழமை போல் கணேஷ் வசந்த் வரும் கதை. மாயாவியோ என்னமோ சரியாக நினைவில் இல்லை. அந்த நாயகியின் பெயரில் கதைத்தலைப்பு இருக்கும். சரியான நினைவு வரவில்லை . யோசிக்கலாம்.
பதிலளிநீக்குஐந்தாவதும் ... பழையை கதை.. சட்டென நாவலின் பெயர் நினைவில் வரவில்லை. ஆனால் இந்த சம்பவம் சிறு கதையில் இருக்கும் என நினைக்கின்றேன் சுஜாதாவின் குறுங்கதை அல்லது சிறு கதை.
பதிலளிநீக்குசுஜாதாவின் நாவல்கள் பத்துக்குள் படித்திருக்கலாம் அதுக்கு மேல் நினைவில் இல்லை. அதில் ஒன்றாய் இக்கதை..!
4.விபரீதக் கோட்பாடு, 5. மாயா, 6. காயத்ரி, மற்றவை... யோசிச்சிங்...
பதிலளிநீக்குநியாபகம் வரவில்லை.
பதிலளிநீக்குஇனிய உழவர் தின நல்வாழ்த்துக்கள்.
4 வது மாயா என்ற குறுநாவல் ஒரு முறை வெங்கட் நாகராஜ் எழுதி இருந்தகாக ஞாபகம் மற்றவை கொஞ்சம் யோசித்து விட்டு வருகிறேன்.
பதிலளிநீக்குபொங்கல் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குகதையில் வரும் கற்பனை
பதிலளிநீக்குஎழுத்துலக மன்னன் சுயாத்தாவின் கற்பனை
பலருக்குப் பட்டறிவு
பகிர்வுக்கு நன்றி!
சுஜாதா அவர்கள் இப்போது அவர் புத்தகம் படித்தாலும் புதிய வர்ணணையாகத் தோன்றும் வண்ணம் அப்போவே சிந்தித்து எழுதியுள்ளார். அவர் புக்கைப் படித்து (மாவட்ட நூலகத்தில் அல்லது யூனிவர்சிட்டி நூலகத்தில், பாளையங்கோட்டையில்) கல்லூரி அட்டென்டென்ஸைக் கோட்டைவிட்டது 'நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குசுஜாதா நாவல்களில் இவற்றை வாசிக்க வில்லை! இப்போதுதான் சிலவற்றை வாங்கி படித்துக் கொண்டு இருக்கிறேன்! அதில் இவை இல்லை! எனவே தெரியவில்லை!
பதிலளிநீக்குசுஜாதாவின் வர்ணனைகளை படித்துக்கொண்டே இருக்கலாம் அத்தனை ஈர்ப்பு அவர் கதைகளில் உண்டு தலைப்பு எதுவானாலும் சரி
பதிலளிநீக்குதமிழர் திருநாள் வாழ்த்துக்களை
பதிலளிநீக்குமகிழ்வோடு நவில்கின்றேன்
கனிவோடு ஏற்றருள்வீர்
கொலையுதிர் காலம் ,அனிதா இளம் மனைவி,நைலான் கயிறு ..மூன்று மட்டுமே நினிவுக்கு வருகிறது :)
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே,
பதிலளிநீக்குபதிவு அருமை. ரசித்தேன். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
2016 தைப்பொங்கல் நாளில்
பதிலளிநீக்குகோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் மற்றும் தங்களின் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் மற்றும் தங்களின் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குஒன்று கேட்டதற்கு எத்தனை? எத்தனை?.. அந்த கடைசிப் படம் என்ன மேக்கப் போட்ட மாதிரி இருக்கு?.. ஐ ஸீ.. ஏதோ போஸ்டர் படம் போலிருக்கு!
பதிலளிநீக்குபால் பொங்கியாச்சா?..
பின்னூட்டம் அளித்த அனைவர்க்கும் நன்றிகள். விடைகள் :
பதிலளிநீக்கு1. மெரீனா.
2. அம்மன் பதக்கம்.
3. பாதி ராஜ்ஜியம்.
4 மற்றும் 5) மாயா.
6. காயத்ரி.