எள்ளுருண்டையில் என்ன இருக்கிறது
என்கிறீர்களா? நாங்கள் எள்ளுருண்டை என்பதை எள், வெல்லம், ஏலக்காய்ப் பொடி
மட்டும் வைத்துச் செய்வோம். இந்த எள்ளுருண்டை எனக்கு மிக மிகப் பிடிக்கும்.
இப்போது சொல்லப்போவது அலுவலகத்தில் ஒரு நண்பி சொன்ன எள்ளுருண்டை மாதிரி. இதை அவர்கள் அவ்வப்போது செய்து சாப்பிடுவார்களாம். (நாங்கள் எள்ளுருண்டை திவச தினத்திலும், அமாவாசை தர்ப்பணம் [ரொம்ப ரேர்] போன்ற சமயங்களிலும் மட்டும் செய்வோம்)
இதை நான் இன்னும் செய்து பார்க்கவில்லை என்பதால் படங்கள் இல்லை!
அரைக் கிலோ பனை வெல்லம் எடுத்து துருவி வைத்துக் கொண்டு,
அரைக்கால்படி படி அல்லது கால் கிலோ கருப்பு எள் எடுத்து, பொரியுமளவு வறுத்து அரைத்துத் தனியாய் வைத்துக் கொண்டு,
சீக்கிரத்தில் கெடாது. உடம்புக்கும் நல்லது.
படங்கள் : நன்றி இணையம்.
இதுக்கு நெய்யே வேண்டாம். எள்ளிலேயே எண்ணெய் இருக்குமாதலால் உருண்டை பிடிக்க வரும். இம்மாதிரி உருண்டைகள் ஆந்திராப்பக்கம் செய்து பார்த்திருக்கேன். சாப்பிட்டதில்லை. :)
பதிலளிநீக்குமஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தானில் சங்கராந்தி சமயத்தில் யாரையேனும் பார்க்கப் போனால் எள்ளினால் செய்த இனிப்பு வகைகளையே எடுத்துச் செல்வார்கள். நம்ம ஊர்க் கடலை மிட்டாய் போல் எள் மிட்டாய்கள் பாக்கெட் பாக்கெட்டாக வரும். :) மஹாராஷ்டிர சமையலிலும் எள் அதிகம் சேர்ப்பார்கள். உடலுக்கு வலுவைத் தரும் என்பதால்.
பதிலளிநீக்குசிறு வயதில் எள்ளுருண்டை மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டது
பதிலளிநீக்குநினைவிற்குவருகின்றது
நன்றி நண்பரே
தம =1
பதிலளிநீக்கு--// கால் கிலோ கருப்பு உளுந்து// எள்ளுருண்டை ஆனால் எள் இல்லை. சத்துருண்டை என்று வேண்டுமானால் பெயர் வைக்கலாம்.
Jayakumar
/ கால் கிலோ கருப்பு உளுந்து// :)))))ஆமா, இல்ல, அண்ணா சொன்னதும் தான் கவனித்தேன்,கறுப்பு உளுந்தா இல்லைனா கறுப்பு எள்ளா? ஶ்ரீராம், திருத்துங்க, அல்லது விம் போட்டு விளக்கவும். :))))
பதிலளிநீக்குஎன் அக்கா மிகவும் அருமையாக செய்வார்கள்...
பதிலளிநீக்குஎள்ளுக்குள் எண்ணெய் இருக்கு. எள்ளுருண்டை பதிவுக்குள் இவ்வளவு விஷயங்கள் இருக்கு. எள்ளளவே ஆனாலும் மிகவும் ருசியான பகிர்வாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஅரைக் கிலோ பனை வெல்லம் எடுத்து துருவி வைத்துக் கொண்டு, ......
பதிலளிநீக்குஎன்ற வரிகளுக்குக்கீழே காட்டியுள்ள படம், முதலில் தேங்காய் மூடியோ என என்னை நினைக்க வைத்தது ..... துருவல் என்ற வார்த்தையால் :)
பிறகுதான் தெரிந்துகொண்டேன், அது தேங்காய் மூடியல்ல ..... பனைவெல்ல மண்டை என்று ..... என் (ட்யூப் லைட்) மண்டையின் மஸாலா வேலை செய்ய சற்றே தாமதமானது. :) .... காரணம் நான் பதிவினைவிட படங்களைக் கூர்ந்து நோக்கி ரஸிப்பவன் என்பதால். :)
யாழ்ப்பாணத்தில் எள்ளும் உழுந்தும் பிரதான சிற்றுண்டிக்குரியவைகள். எள்ளில் செய்த எதுவானாலும் என் வீட்டுக்காரருக்கு ரெம்ப பிடிக்கும். ஆனால் எள்ளுன்னாலே நான் வள்ளுன்னு விழுவேன்.
பதிலளிநீக்குஆனாலும் நீங்க சொன்ன செய்முறையே சூப்பராக இருக்குதே ஐயா!
நெய் தேவையில்லையா? இருக்கலாம். வழக்கமான எள்ளுருண்டைக்கு நெய் தேவை இல்லைதான் இல்லை? எல் மிட்டாய்ப் பாக்கெட்டுகள் கடைகளில் கிடைக்கின்றனதான். வாங்கியும் சாப்பிட்டிருக்கிறேன். ஏனோ திவசத்தில் செய்யும் எள்ளுருண்டை ருசி அதில் கிடைப்பதில்லை எனக்கு! நன்றி கீதா மேடம்.
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். இப்போதும் கடைகளில் எள்ளுருண்டை கிடைக்கிறது. கடினமாக இருக்கும்!
பதிலளிநீக்குஹிஹிஹி...jk sir ... யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்தேன்... ஹிஹிஹி.. திருத்தி விட்டேன்! (எப்படி சம்பந்தமே இல்லாமல் உளுந்து என்று வந்தது என்று புரியவில்லை) நன்றி!
பதிலளிநீக்குஹிஹிஹி கீதா மேடம்.. நீங்க கூட சரியாப் படிக்கவில்லை போல! திருத்தி விட்டேன்!
பதிலளிநீக்குநன்றி தனபாலன். அங்கே திண்டுக்கல்வரும்போது சாப்பிட்டுப் பார்க்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி வைகோ ஸார். ரசனைக்கு நன்றி. படம் தெளிவாக இல்லையோ... வேறு படம் சேர்த்திருக்கலாமோ என்னவோ! சாதாரணமாக நாங்கள் வீட்டில் ஒருமுறை செய்து பார்த்து அதன் படத்தைச் சேர்ப்பேன். இது செய்து பார்க்காதது!
பதிலளிநீக்குநன்றி நிஷா. எள்ளுருண்டை எனக்கு சுடச்சுடச் சாப்பிடப் பிடிக்கும்!
பதிலளிநீக்குபயத்தமா லாடு, ரவா லாடு போன்று, எள் லாடுக்கு செய்முறை சொல்லிவிட்டு அதை எள்ளுருண்டை என்று போட்டுள்ளீர்களே.. எள்ளுருண்டைனா, கடும் பாகில் வறுத்த எள்ளைப் போட்டு உருண்டை பிடிப்பதல்லவா? கரந்தைசார் சொன்ன மாதிரி, இப்போதெல்லாம் கேரளாவிலிருந்தும் (மிக மிக அதிகமாக), நாகர்கோவிலிலிருந்தும் எள்ளுருண்டை பாக்கெட்களிலேயே கிடைக்கிறது. வீட்டில் செய்து சாப்பிடும் Excitement மட்டும் இதில் missing.
பதிலளிநீக்குஎல்லுருண்டையை இப்பவே சாப்பிடனும்ன்னு தோனுதே....
பதிலளிநீக்குஆந்திராவில் கருப்பு உளுந்து உருண்டை செய்வார்கள் மிக நன்றாக இருக்கும்.
தம 5
பதிலளிநீக்குஇந்தமாதிரி செய்தது இல்லை பாகு வைத்து செய்வார்கள்! இது வித்தியாசமாக இருக்கிறது! நன்றி!
பதிலளிநீக்குஇப்போதும் காதிக் கடையில் கிடைக்கிறது நண்பரே.....தம.6
பதிலளிநீக்குசிறிய வயதில் எள்ளு உருண்டை சாப்பிட்ட நினைவு வந்தது
பதிலளிநீக்குநிறைய சாப்பிட பிடிக்காது ,நல்லது எதைவும் அப்படித்தானே சாப்பிடுவோம் :)
பதிலளிநீக்குஎள்ளை தண்ணீரில் அலம்பி வடியவைத்துத் தரையில் நன்றாகத் தேய்த்து உலர்த்துவார்கள். சிரார்த்த காரியத்தில் முதல்வேலை அதுதான். உலர்ந்தும் உலராததுமான எள்ளை,
பதிலளிநீக்குஅடுப்பில் வாணலியிலிட்டு வறுப்பார்கள். படபடவென்று பொரியும். அதைப் புடைத்தால் ஓரளவு தோல் நீங்கிவிடும்.
அதைத்தான் வெல்லத்தைப் பாகுகாய்ச்சி அதில் சேர்த்து உருண்டை பிடிப்பார்கள். சிரார்த்த எள்ளுருண்டை இதுதான். இப்போதுதான் வெள்ளை எள்,பிரவுன் எள், நைலான் எள் என்று பலவிதம் கிடைக்கிறதே. கருப்பு எள்ளை அலம்பி உலர்த்தி,மர உரலில் உலக்கையால் 4 குத்து குத்தி தோலை நீக்கி வறுத்து உரலில் இட்டு நன்றாகக் குத்திப் பொடி சேர்ந்து வரும்போது,வெல்லப்பொடியையும் சேர்த்து இடித்து,ஏலப்பொடி சேர்த்தால் உருண்டை தானாகவே பிடிக்க வரும். எள்ளிலுள்ள எண்ணெய்,வெல்லத்தின் பசை நல்ல அழகான உருண்டைரகளாக உருட்ட வரும். இதன்பெயர் சிம்லி உருண்டை. வேர்க்கடலையும் வறுத்துப் போட்டு சேர்த்து இடிக்கலாம். தில்லியில் ரேவ்டி என்று சர்க்கரை சேர்த்துச்செய்த பர்பி மாதிரி கிடைக்கும் இன்னும் எவ்வளவு தினுஸுகள் வேண்டும். பெண்கள் பூப்படையும்போதும், நவராத்திரியிலும் சிம்லி உருண்டை பிரசித்தம். கீதா ஏன் குறிப்பிடவில்லை. கர்நடகாவில் இதன்பெயர் சிகளி. இன்னும் ஏதாவது செய்திகள் வேண்டுமா? அன்புடன்
குத்தி,குத்தி என்பது இடிப்பது. இப்போது மிக்ஸி எல்லாவற்றையும் செய்து விடுகிரது. அன்புடன்
பதிலளிநீக்குஇந்த எள்ளுருண்டை மிகவும் சுவாரஸ்யம்!!
பதிலளிநீக்குமிகவும் பிடிக்கும் எள் உருண்டை! எள்ளு மிட்டாய்! நீங்கள் கொடுத்திருக்கும் ரெசிப்பி சாப்பிட்டதில்லை
பதிலளிநீக்குகீதா : ஸ்ரீராம் ஃபேவரிட்! அடிக்கடிச் செய்வதுண்டு. மகனுக்கும் பிடிக்கும் என்பதால். நல்ல சத்து உள்ளது என்பதாலும். இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு. உடல் சக்திக்கு எள்ளு. கொழுப்பு கரைய கொள்ளு. எள்ளு உருண்டை பிடிக்கும். எள்ளுச் சிக்கி என்று இப்போது கடைகளில் விற்பது பிடிக்காது.
நீங்கள் சொல்லியிருக்கும் ரெசிப்பி செய்ததுண்டு. இது வெல்லூர் பக்கத்து உருண்டை. சிமிலி உருண்டை என்று சொல்லுவதுண்டு. இதில் வேர்க்கடலை சேர்த்தும் செய்வதுண்டு. ஆனால் ராகி புட்டு செய்து சேர்த்தால் கெட்டுவிடுமே. புட்டு என்பது ஆவியில் வேகவைத்துச் செய்வதாயிற்றே. ராகி மாவை வறுத்துக் கொண்டு சூடு தண்ணீர் விட்டு ரொட்டிக்குப் பிசைவது போல் பிசைந்து ரொட்டி செய்து அதைப் பொடித்துக் கொண்டு கலந்து செய்வதுண்டு. இது ஆந்திராவில் நுவ்வுலு, கர்நாடகாவில் சிகளி என்று சொல்லுவதுண்டு (மாமியார் பங்களூரில் இருந்ததால்...)
பனைவெல்லம்/கருப்பட்டி எங்கள் ஏரியாவில் ஒரே ஒரு கடையில் மட்டுமே கிடைக்கின்றது. விலை கிலோ 120 ரூபாய்
//நவராத்திரியிலும் சிம்லி உருண்டை பிரசித்தம். கீதா ஏன் குறிப்பிடவில்லை.//
பதிலளிநீக்குஅம்மா, காலையில் பதிவு வெளியிட்டவுடனே அவசரம் அவசரமாகக் கொடுத்த கருத்துகள். அப்போ சிமிலி உருண்டை பத்தி எழுதலியேனு அப்புறமாத் தான் நினைச்சுண்டேன். அப்புறமா இந்தப்பக்கம் வந்தபோதும் நினைவில் வரலை! :)