புதன், 6 ஜனவரி, 2016

அலுவலக அனுபவங்கள் :: ஓய்வுக்குப் பின் வேலை


ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒய்வு பெற்ற நண்பர்கள் ஒன்றாகக் குழுமியிருந்தனர்.  இப்படி அடிக்கடி சந்தித்துக் கொள்பவர்கள்தான்.


பேச்சு பல்வேறு விஷயங்களிலும் சுற்றிக் கொண்டிருந்தது.  இவர்களோடு பணியாற்றியவர்களில் சிலர் மறைந்து விட்டிருந்தனர்.  சிலர் வெளிநாட்டில் மகன், அல்லது மகளோடு.  மிக உயர்ந்த பதவிகளிலிருந்து ஒய்வு பெற்றிருக்கும் இந்த நண்பர்களில் இருவர் ஓய்வுக்குப் பிறகும் ஒரு வேலைக்குப் போய்க் கொண்டிருப்பவர்கள்.  சும்மா வீட்டிலிருக்கப் பிடிக்காதவர்கள், பொழுது போகவில்லை என்பதால் வேலைக்குச் செல்பவர்கள்.


அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் கிண்டல் செய்து பேசிக் கொள்வார்கள்.

"இவன் வேலைக்குப் போக மாட்டேன்னு சொல்றானேன்னு பெருமைப் பட்டுக்காதேம்மா... இவனைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இவனை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள மாட்டாங்க..  இவன் கேக்கற கேள்விகளுக்கு அவனவன் ஓடிப்போயிடுவான்.." என்பார் ஒருவர் விஸ்வநாதன் மனைவியிடம்!

"ஆமாமாமாம்... வேலியில போற ஓணானை யாராவது மடில கட்டிப்பாங்களா என்ன.."  என்று கிண்டலடிப்பார் இன்னொரு நண்பர்.
 


எல்லோருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால் பேச்சு களை கட்டும்.
 


இவர்களைப் போலவே ஓய்வுக்குப்பிறகு வேலைக்குச் சென்ற இன்னொரு நண்பர் ஆரோக்கியராஜ் வேலையை விட்டு அப்போதுதான் நின்றிருந்தார்.
 


பேச்சு அதை பற்றித் திரும்பியது.  ஆளாளுக்குக் கிண்டலடித்துக் கொண்ருந்தார்கள்.
 


"என்ன ஆச்சு ஆரோக்கியம் ஸார்?  ஏன் வேலையை விட்டுட்டீங்க... போரடிச்சுப்போச்சோ?" விஸ்வநாதன் கேட்டார். 


"நீதான் சரி விசு..  ரிடயர்மெண்டுக்குப் பின் வேலை வேண்டாம்னு கரெக்டா முடிவெடுத்திருக்கே..  நாம இருந்த போஸ்ட் என்ன..  சோம்பேறித்தனம் கூடும்னு ஏதாவது வேலைக்குப் போகலாம்னு நினைச்சப்போ 'சர்ச்சு'ல என்னைப்பற்றி நல்லாத் தெரிஞ்சிருந்த ஃபாதர்  "நீங்க இங்கேயே வேலைக்கு வாங்களேன்..  எங்களுக்கும் கௌரவமா இருக்கும்.  உங்கள் அனுபவம் எங்களுக்கு உபயோகப்படும்" னு கூப்பிட்டார்..."
 


"அதான் எங்களுக்கே தெரியுமே ஆரோக்கியம் ஸார்.. அப்புறம் என்ன ஆச்சு?"
 


"முதல்ல எல்லாம் சாதாரணமாத்தான் இருந்தது.  முதல் பதினைந்து நாள் ஆபீஸ் போன உடனே ஒரே மரியாதைதான்.  "வாங்க ஸார்! இது வேணுமா, அது வேணுமா? நீங்க சொன்னா சரிதான்" ன்னு போயிகிட்டிருந்தது.  ஒருநாள் "ஸாரை"க் கட் செய்தார்.  அப்புறம் எந்த விளித்தலும் இல்லாமல் பேச ஆரம்பித்தார்.  அப்புறம் அவரைப் பார்க்கப் போனால் ஆளை விட்டு "அப்புறம் வரச்சொல்லு" ன்னு திருப்ப ஆரம்பிச்சார்.  இப்படியே ரெண்டு மாசம் ஓடி விட்டது. என்மேல் என்ன அதிருப்தின்னும் தெரியலை.  எதில் அவர் நினைத்தபடி நான் நடக்கலைன்னும் எனக்குப் புரியலை.  ஒரு நாள் நான் உள்ளே நுழையும்போது "அந்தாளைக் கூப்பிடுய்யா" என்று சொன்னது காதில் விழுந்தது.
 


"வேலையாள் வந்து என்னை அழைக்கவும், அந்த 'அந்தாளு' நான்தான் என்று தெரிந்தபோதே கஷ்டமாயிருந்தது.  உள்ளே நுழையும்போதே அவர் "என்ன ஆரோக்கியராஜ்..  வரவர உங்களைப் பார்க்கக் கூட முடியவில்லை.."ன்னு ஆரம்பிச்சார்.  அவர் பேர் சொல்லிக் கூப்பிட்டதுமே ஒரு மாதிரி இருந்தது..  அவருக்கு 35 வயசு.  எனக்கு 60 வயசு.  வேலைக்குச் சேரும் முன்பு 'சர்ச்சு'க்கு வரும் போதெல்லாம் எனக்கிருந்த மரியாதை நினைவுக்கு வந்தது.  அப்படியும் நான் அவரைப் பார்க்கப் போன போதெல்லாம் 'அப்புறம் வரச்சொல்லு' ன்னு அவர் சொன்னதை ஞாபகப் படுத்தினேன்"   


"அதுக்கு அவர் சொன்னார்.."நான் ஆயிரம் வேலையா இருப்பேன்..  நீங்க காத்திருந்துதான் என்னைப் பார்த்திருக்கணும்.  சம்பளம் வாங்கறீங்க இல்லே?   இவ்வளவு அனுபவம் இருக்கற உங்களுக்கு அது தெரியலையா ஆரோக்கியராஜ்?   இதுக்குதான் ஒரு புதுப் பையனை வேலைக்கு வைக்கணும்" னு பேசிகிட்டே போனார்!"
 


"புதுப் பையனையே வேலைக்கு வச்சுக்கோங்க"ன்னு எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன்"
 


ஆரோக்கியராஜ் சொல்லி முடித்தார்.
 


"அதுவும் சரிதான்"  என்றார் விஸ்வநாதன்.
 


"யாருக்கு?"  என்றார் சுந்தர்.
 


"ரெண்டு பேருக்கும்தான்"  என்று முடித்தார் விஸ்வநாதன்.
படங்கள்  :  நன்றியுடன் இணையத்திலிருந்து...

52 கருத்துகள்:

 1. நஷ்டம் நம்ம ஆரோக்கியத்துக்கு தானே :)

  பதிலளிநீக்கு
 2. ம்ம்ம்ம்.... அப்படியும் சொல்லலாம். ஆனால் அவர் பணம் ஒரு பொருட்டல்ல என்கிறார்! நன்றி பகவான்ஜி.

  பதிலளிநீக்கு
 3. பொழுது போக வேலைக்கு போறவர்களுக்கு வேலை கிடைக்குது,??????

  பதிலளிநீக்கு
 4. அனுபவசாலிகளை வேலைக்கமர்த்துவதும், குறைந்த சம்பளமும் வேலை கொடுப்பவர்களுக்கு லாபம்தானே?

  நன்றி வலிப்போக்கன்.

  பதிலளிநீக்கு
 5. எங்கள் நிறுவனத்தில் நல்ல பொசிஷனில் இருந்த ஒருவர் கம்பனியின் ஒப்பந்ததாரகளில் ஒருவாரானார் அவர் பொறுப்பில் இருந்தபோது அவர் மேற்பார்வையில் நடந்த பணிகளை இவர் செய்யத் தொடங்கியதும் அவரது ஜூனியர்களே இவரைப் பந்தாடினர் ஒரு டி ஜி எம் பதவியிலிருந்தவர் அசிஸ்டன்ட் ஃபோர்மனுக்கெல்லாம் பதில் சொல்லும் நிலையாகிவிட்டதுபணம் சம்பாதிக்க அவர் எல்லோருக்கும் பணிய வேண்டி வந்தது

  பதிலளிநீக்கு
 6. கௌரவமான மனிதர்களின் முடிவுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் இருவருக்குமே நல்லது அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
 7. நடக்கும் விஷயம் தான் இது! என்றாலும் மனம் வருந்தியது. :(

  பதிலளிநீக்கு
 8. மரியாதை இல்லாத இடத்தில் எப்படி தொடர்ந்து வேலைப்பார்க்க முடியும்?
  நல்ல முடிவு.

  பதிலளிநீக்கு
 9. இவர்களுக்கு தேவை நல்ல அனுபவம் உள்ள அடிமை மட்டுமே இவர்களிடம் எனக்கு மரியாதை தேவை இல்லை பணம் மட்டும் போதுமே என் கிறவர்கள் மட்டுமே வேலை செய்ய இயலும் 8

  பதிலளிநீக்கு
 10. பணத்தின் தேவை அவசியம் என்று இல்லாதவர்கள், பொழுது போக வேலை பார்க்கலாம். ஆனால் சம்பளமாக பணம் பெறக்கூடாது. மரியாதையும், சுதந்திரமும் இருக்கும். என் அனுபவம் இது.

  பதிலளிநீக்கு
 11. மரியாதை இல்லாத இடத்தில் வேலை செய்வது கஷ்டம்தான்! இந்த மரியாதைதான் என்னை மூன்று இடங்களில் வேலையைவிட்டு விலகச் செய்தது. அதில் இரண்டு பணிகள் ஆரோக்கிய ராஜ் சார் போன்று கவுரவத்திற்காக விரும்பி செய்த கல்விப் பணிகள் என்பது வேதனை.

  பதிலளிநீக்கு
 12. வை. கோபாலகிருஷ்ணன் said...

  //"அதுவும் சரிதான்" என்றார் விஸ்வநாதன்.
  "யாருக்கு?" என்றார் சுந்தர்.
  "ரெண்டு பேருக்கும்தான்" என்று முடித்தார் விஸ்வநாதன்.//

  நல்லா இருக்கு இவர்களின் நகைச்சுவையான பேச்சு.


  தங்களின் பதிவினில் என்னால் மேற்படி பின்னூட்டமிட முடியவில்லை. ரோபோ இல்லை என ப்ரூஃப் செய்தும் ஏதேதோ PASDA NOODLES என்ற படங்கள் குறுக்கே வருகின்றன. இது உங்கள் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 13. நன்றி ஜி எம் பி ஸார். பாவம் அவர். அந்த அனுபவத்துக்குப் பின் அவர் ஒரு சமூகப் போராளியாகியிருக்கக் கூடும்! :)))

  பதிலளிநீக்கு
 14. உண்மைதான் மதுரைத் தமிழன். அவர் பணத்தை எதிர்பார்க்கவில்லை என்பதால் உடனே விலக முடிந்தது.

  பதிலளிநீக்கு
 15. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பர் சம்பத் கல்யாண். பொழுது போக வேலை செய்வதை சேவை போலச் செய்யவும் ஒரு மனம் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 16. நன்றி 'தளிர்' சுரேஷ். உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறதா... :(

  பதிலளிநீக்கு
 17. பதவி இருக்கும் வரை தான் மரியாதை. எனவே நல்ல பதவியில் இருந்தவர்கள் மீண்டும் வேலைக்குப் போகவே கூடாது. பொழுது போக்க எத்தனையோ நல்ல வழிகள் இருக்கின்றன.பகிர்வுக்கு நன்றீ!

  பதிலளிநீக்கு
 18. ஓய்வுக்குப் பின தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மட்டுமே வேலைக்கு போக வேண்டும்

  பதிலளிநீக்கு
 19. ஆரோக்கியம் எடுத்த முடிவு நல்ல முடிவே! எல்லோருக்குமே பொருந்தும் என்றாலும் அனுபவம் உள்ள அவர் தன் சுய மரியாதையை இழந்து ஒரு அடிமை போல வேலை செய்வது என்பது ரொம்பக் கடினமான ஒன்று. பணம் அங்கு ஈனமாகிவிடுகின்றது. நல்ல முடிவு!

  பதிலளிநீக்கு
 20. மதிக்கத் தெரியாதவங்ககிட்ட இருக்கதைவிட இந்த முடிவு நல்ல முடிவுதான்....அருமை.

  பதிலளிநீக்கு
 21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 22. பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு மறுபடியும் வேலைக்கு செல்வது என்பது பற்றிய நல்ல விவாதம். தொடர் பதிவாகவே எழுதச் சொல்லலாம். (எழுத்துப் பிழை சரி செய்துள்ளேன்)

  பதிலளிநீக்கு
 23. ஓய்வு பெற்ற பின் பணி புரிவது - குறிப்பாக அதே அலுவலகத்தில் பணி புரிவது கொடுமை. இப்போது தலைநகரில் இப்படி நிறைய பேர் உண்டு.

  பதிலளிநீக்கு
 24. //"அதுவும் சரிதான்" என்றார் விஸ்வநாதன்.
  "யாருக்கு?" என்றார் சுந்தர்.
  "ரெண்டு பேருக்கும்தான்"
  என்று முடித்தார் விஸ்வநாதன்.//

  நல்லா இருக்கு இவர்களின் நகைச்சுவையான பேச்சு.:)

  பதிலளிநீக்கு
 25. சிந்திக்க வைக்கும் பதிவ
  சிறந்த முடிவு
  முதுமைக்கு மதிப்பளிக்காது
  உயர்ந்த பணியில் இருந்தென்ன பயன்!

  பதிலளிநீக்கு
 26. பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றிய என் தம்பி 2006 ஆம் ஆண்டிலேயே விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும் தற்சமயம் அதே வங்கிக்கிளைகளில் கணக்குச் சோதனை செய்பவராக ஒப்பந்த ஊதியத்தில் சென்று வருகிறார். ஒண்ணும் பிரச்னை இருப்பதாகச் சொல்வதில்லை. இப்போவும் அவரது நண்பர்கள் நாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் வேலை செய்தால் எங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அணுகச் சொல்வது உண்டு. அவர்களும் உதவுவார்கள். ஆகவே இது மனித மனத்தின் தன்மையைப் பொறுத்தது. எல்லோருமே அலட்சியம் செய்வதும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் என் கணவர் திரும்ப அதே அலுவலகத்தில் ஒப்பந்த ஊதியத்தில் வேலை செய்வது மரியாதைக் குறைச்சல் என்றே நினைப்பார்; நினைக்கிறார்.

  பதிலளிநீக்கு
 27. நன்றி கலையரசி மேடம். எல்லா இடத்திலும் இப்படி நடப்பதில்லை!

  பதிலளிநீக்கு
 28. நன்றி தமிழ் இளங்கோ ஸார். தொடர் பதிவெல்லாம் யார் எழுதப் போகிறார்கள்! தொடர்ந்தால் சந்தோஷம்தான்!

  பதிலளிநீக்கு
 29. நன்றி வெங்கட். எந்த அலுவலகமானாலும் எதற்கும் தயாராய் இருக்க வேண்டும்! :)))

  பதிலளிநீக்கு
 30. நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.

  பதிலளிநீக்கு
 31. நன்றி கீதா மேடம். இதே போல வங்கி வேலையிலேயே என் மாமா ஒருவரும் ஒய்வு பெற்ற பின்னும் தொடர்கிறார். அவர் யூனியன் சார்ந்தும் இருப்பதால் அவருக்கு அங்கே செம மரியாதை, வாய்ஸ்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!