தொடர்பதிவுக்கு அழைத்த தில்லையகத்துப் பதிவர் கீதாவுக்கு நன்றி.
பயணங்களுக்கான நோக்கம் பயணத்தின் உணர்வை முடிவு செய்கிறது. இன்பமான பயணம் என்றுதான் இருக்க வேண்டுமா என்ன? துன்பமான பயணமும் உண்டுதானே?
என் அம்மா மறைந்தபோது நான் மேற்கொண்ட பயணம் அந்த வகை.
அம்மா கொஞ்ச நாட்களாகவே ரொம்பவும் உடம்பு முடியாமல் இருந்த நாட்கள். ஏற்கெனவே இரண்டுமுறை அம்மாவுக்கு இறுதி நிமிடங்கள் என்றே அறிவிக்கப் பட்ட நிலையில் சென்னையிலிருந்து மதுரை இதற்காகவே சென்று வந்திருந்தேன். அலுவலகத்தில் நம் நிலை அறியாத இறுக்கமான சூழல். பதிலுக்கு ஆளில்லாத நிலையில் அலுவலகத்தைப் புறக்கணிக்க முடியாத, விடுப்பு (அதிகம்) எடுக்க முடியாத சூழல். ஆண்டிறுதியின் அத்தனைச் சங்கடங்களும்.
அந்த இரண்டு பயணம், சென்னை வந்து இறங்கிய அரை மணியில் தொலைபேசிச் செய்தி. அம்மா காலமாகி விட்டதாக. வேறு வழியின்றி உடனே மறுபடி மதுரை. அந்நேரம் அலுவலகத்தில் என்னைத் திட்டவும் முடியாமல், ஆறுதல் சொல்லவும் முடியாமல் விஷயத்தைக் கேட்டுக் கொண்டு பதிலுக்கு ஆள் வேறு இடத்திருந்து வாங்கப் போராடிய மேலதிகாரியின் மௌனம்..
அந்த இரண்டு மூன்று பயணங்களுமே என் கண்களைப் போலவே மனம் அம்மாவின் நினைவுகளால் நிறைந்திருந்தன. பயணம் முழுவதுமே வாழ்வின் அம்மோவோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்வும் கண்முன்னே காட்சிகளாய்.. இன்றைய - அல்லது நேற்றைய - அம்மாவோ வாயிருந்தும் பேச முடியாதவளாய், கண்ணிருந்தும் பார்க்க முடியாதவளாய், மனமிருந்தும் உணர முடியாதவளாய் நினைவிழந்த நிலையில் படுக்கையில்..
என் வாழ்வின் மிகப்பெரிய இழப்பாக இருந்தது அம்மாவின் மறைவு.
சந்தோஷமான தருணங்களை எல்லோரும் பதிவு செய்து கொண்டிருக்க நான் எழுதத் தொடங்கும்போது முன்னே வந்து விழுந்த அனுபவம் இதுதான். வாசகர்கள் மன்னிக்க..
பொதுவாக பயணங்கள் எனக்கு அதிகம் அமையாது. இந்த விஷயத்தில் வெங்கட்டைப் பார்த்துப் பொறாமை கொள்ளுவேன். அவர் 9/1/16 இல் இட்டிருக்கும் பயணம் சம்பந்தப் பட்டிருக்கும் பதிவும் அதே உணர்வைத்தான் தந்தது.
எனது
பணிக்காலத்தின் ஆரம்ப நாட்களில் மதுரையின் உள் பகுதியிலிருந்து மத்தியப்
பேருந்து நிலையத்துக்கு இரண்டு சக்கர வாகனத்திலோ, அல்லது கிடைக்கும் மாநகரப்
பேருந்திலோ வந்து, காலை ஐந்து மணிக்கு வெளியூர்ப் பிரயாணம் செய்த நாட்கள்
இ(ள)னிமையானவை, பசுமையானவை!
சில பேருந்துகளில் என்
மனதுக்குப் பிடித்த சில இனிமையான பாடல்களைக் கேட்டுக் கொண்டே பயணம்
இருந்திருக்கிறது. ஆனால் நடுநடுவே குத்துப் பாடல்களும், பிடிக்காத
பாடல்களும் கூட வரும். ஜெயவிலாஸ் போன்ற சில தனியார்ப் பேருந்துகளில் அற்புதமான ஸ்பீக்கர்ஸ் உண்டு.
மிகச் சில பயணங்களில் புத்தகங்கள் துணையாயிருக்கின்றன. சில பயணங்களில் பேச்சுகளே துணை.
பெரும்பாலும், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து (தூக்கம் வரும் வரை) இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே நினைவுகளில் ஆழப் பிடிக்கும்.
இனி கேள்விகளும் பதில்களும்...
1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
கரித்தூள்
கண்களில் விழ நடந்த சில ரயில் பயணங்கள் நினைவில். ஒரு பயணத்தில் கேஜிஜி
ரயில் படிக்கட்டில் அமர்ந்து, ரயில் செல்லும்போதே இருப்புப் பாதையில்
கிடக்கும் சரளைக் கற்களை பொருக்கி எடுத்து சாகசம் காட்டியது நினைவில்!
அவர் அப்போது திருமணமாகாத இளைஞர். அவர் அண்ணன் திருமணத்துக்குச்
செல்லும்போது நடந்ததுதான் இது!
2. மறக்க முடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
அப்படித் தனியாகச் சொல்ல எதுவுமில்லை!
3. எப்படிப் பயணிக்கப் பிடிக்கும்?
சுமைகள் இல்லாமல்!
4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?
இயற்கையின் ஓசை.
5. விருப்பமான பயண நேரம்?
அதிகாலை நேரம், அந்தி மாலை நேரம்.
6. விருப்பமான பயணத் துணை?
மனமொத்த நண்பர்.
7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?
பயணத்தில் புத்தகம் படிக்க முடிவதில்லை.
8. விருப்பமான ரைட் அல்லது ட்ரைவ்
முன்பு
மழை வருவது போல மேகம் திரண்டு வானம் இருளும் நேரம் டூ வீலரில் பயணம்
செய்யப் பிடிக்கும். இப்போது அப்படி எதுவும் இல்லை! அதுவும் குறிப்பாக
கடந்த டிசம்பர் 1 க்குப் பிறகு!
9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்
காதில்
விழும் பெயர்கள், வார்த்தைகள் எதுவாயினும் அந்த வரிகள் இடம் பெற்ற பாடல்
ஒன்று மனதில் உடனே தோன்றும். மனதுக்கிசைந்த பாடலாயிருந்தால் மனதில்
அடிக்கடி நினைவுக்கு வரும்!
10. கனவுப் பயணம் ஏதாவது?
கைலாஷ்.
=====================================================================
யாரைத் தொடர அழைப்பதென்பதில் தெளிவில்லை, யார் அழைக்கப் பட்டிருக்கிறார்கள், யார் இதுவரை அழைக்கப்படவில்லை என! நான் ஜீவி ஸார், 'தளிர்' சுரேஷ் மற்றும் பகவான்ஜி யை அழைக்கிறேன்.
யாரைத் தொடர அழைப்பதென்பதில் தெளிவில்லை, யார் அழைக்கப் பட்டிருக்கிறார்கள், யார் இதுவரை அழைக்கப்படவில்லை என! நான் ஜீவி ஸார், 'தளிர்' சுரேஷ் மற்றும் பகவான்ஜி யை அழைக்கிறேன்.
அருமை நண்பரே தொடக்கம் மனதை பிழிந்தது மற்றவை அனைத்தும் ரத்தினச் சுருக்கமாக அழகாக சொன்னீர்கள் மூன்றாவது பதில் ஸூப்பர் எனக்கும் இது பிடிக்கும் பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதமிழ் மணம் இணைய மறுக்கிறது பிறகு வருவேன்
பதிலளிநீக்குஅடடா! என்னை கோர்த்துவிட்டுட்டீங்களே சார்! பயணம் செய்ய ஆசையிருந்தும் நிறைய பயணிக்காமல் இருக்கும் ஓர் பயணி நான். அதனாலே விலகிக் கொள்கிறேன்! மன்னிச்சுக்கோங்க! உங்களின் பதில்கள் சிறப்பு! உங்கள் தாயின் மரணத்தருவாயில் உங்கள் பயணம் பெரிதும் வலியாக இருந்திருக்கும். அப்படி ஓர் பயணம் மிகவும் பாரமாகி நிற்கும்தான்!
பதிலளிநீக்குதாயின் பிரிவு மட்டும் மனதை கனக்க வைத்தது. மற்றபடி நல்ல பதிவு!
பதிலளிநீக்குதமிழ் மணம் வேலை செய்யவில்லை.
தாயின் நினைவுகளுடனான பயணம் கண் நிறைத்தது. கேஜி சகோ சாகசக்காரரா :-)
பதிலளிநீக்குமூன்றாவது பதில் அழகாகச் சொல்லிவிட்டீர்களே, நான் இதையே இழுத்திருந்தேன் ஹாஹா
ஐந்தாவது பதிலும் ரசித்தேன். மதுரை மதுரம் தான் :-)
அம்மா மறைவின் போது செய்த பயணம் பற்றிய முன்னுரை மனதைத் தொட்டது.பயணம் குறித்த பதில்களில் சில என்னுடையதை ஒத்திருந்தன. இயற்கையின் ஓசை என்ற பதிலை மிகவும் ரசித்தேன்.பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஇழப்புகள் மிகுந்ந ரணமானவை. மிக உருக்கமான முன்னுரை, சுருக்கமான பதில்கள் இரண்டுமே மனம் தொட்டன. பயணத்தில் இணைந்தமைக்கு மிகுந்த நன்றிகள் சகோ.
பதிலளிநீக்குஇழப்புகள் மிகுந்ந ரணமானவை. மிக உருக்கமான முன்னுரை, சுருக்கமான பதில்கள் இரண்டுமே மனம் தொட்டன. பயணத்தில் இணைந்தமைக்கு மிகுந்த நன்றிகள் சகோ.
பதிலளிநீக்குதொடக்கம் மனசைக் கனக்கச் செய்தது.
பதிலளிநீக்குஷார்ப்பான பதில்களை எவ்வளவு இயல்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டேன். 3, 4, 5, 6, 8 எல்லாமே மனசைக் கவர்ந்தன. 9 -- அட்டகாசம்.
அழைப்புக்கு நன்றி ஸ்ரீராம்! நான் இந்த மாதிரி 'விளையாட்டு'க்களுக்கெல்லாம் லாயக்கான ஆளா?-- நீங்களே சொல்லுங்கள். எழுத்து என்று வரும் பொழுது எதை எழுதினாலும் நின்று நிதானித்து யோசித்து எழுதுவது என் வழக்கமும் பழக்கமும்..அதனால் தாமதமாகும். இப்பொழுது இல்லை. இருந்தாலும் முயற்சிக்கிறேன். எழுதிவிட்டுச் சொல்கிறேன். தொடர் பயணாத்தில் எங்காவது ஒட்டிக் கொள்ள நீங்கள் தான் வழிபண்ண வேண்டும்.சரியா?
பதிலளிநீக்கு//பயணங்களுக்கான நோக்கம் பயணத்தின் உணர்வை முடிவு செய்கிறது. இன்பமான பயணம் என்றுதான் இருக்க வேண்டுமா என்ன? துன்பமான பயணமும் உண்டுதானே?
பதிலளிநீக்குஎன் அம்மா மறைந்தபோது நான் மேற்கொண்ட பயணம் அந்த வகை.//
இதில் எனக்கும் உங்களுக்கும் ஒரே அனுபவம் கிட்டியுள்ளது. 87 வயதான என் தாயார் ... என்னுடனேயே எப்போதும் இருந்துவந்த என் தாயார் ... காஞ்சீபுரத்தில் உள்ள என் தமக்கை ஒருத்தியின் திருச்சி வருகை + வற்புருத்தலால், என்னைப்பிரிய மனசே இல்லாமல் காரில் ஏறி காஞ்சீபுரம் சென்றார்கள். அங்கு என் தாயார் உயிருடன் இருந்தது அடுத்த மூன்றே மூன்று நாட்கள் மட்டுமே. உங்களைப்போலவே எனக்கும் அலுவலகப்பொறுப்புகளும் நெருக்கடிகளும் மிக அதிகமாகவே இருந்தது. அத்துடன் தகவல் வந்ததும் திருச்சி >>>>> காஞ்சீபுரம் பயணம் மேற்கொண்டேன்.
மற்றபடி தங்கள் பதில்களெல்லாம் மிகவும் இயல்பானதாகவே உள்ளன.
அம்மாவின் நினைவுகளில் ஆழ்ந்த பயணம் வருத்தம்.
பதிலளிநீக்குகேஜிஜி ரயிலிலிருந்து சாகசம் செய்தது பார்த்து புன்முறுவல் பூத்தது :)
அருமையான எண்ணங்கள்
பதிலளிநீக்குதங்கள் பயணப் பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
http://www.ypvnpubs.com/2016/01/01.html
ஆரம்பம் மனதைக் கனக்க வைத்தது. மற்றபடி சுருக்கமான பதில்கள். கேஜிஜியின் சாகசம் வியக்க வைத்தாலும் ஒரு நொடி தவறினால் என்னும் எண்ணம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. இது தான் மற்றவங்க சொல்றதுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடோ? யாரும் இதைச் சொல்லவில்லை! :( நான் மட்டும் சொல்லிட்டேன். முதலில் மனதில் பட்டது அதான். எவ்வளவு தீவிரமான ஆபத்து நிறைந்த ஒரு விஷயம்! வீட்டில் பெரியவங்க யாரும் பார்த்துக் கண்டிக்கவில்லையா என்றெல்லாம் தோன்றியது. :(
பதிலளிநீக்குதொடக்கம் மனதை வருத்தியது... சுருக்கமான பதில்கள் அருமை...
பதிலளிநீக்குமனம் கனத்தது.இயற்க்கையின் ஓசை ரம்யம். கைலாஷ் செல்ல ஆசை உண்டு...அழகான பதில்கள். சகோ
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅம்மாவின் மறைவு குறித்த பகிர்வு மனதை கனக்கச் செய்தது. கேள்விக்கான பதில்கள் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும்.. கேஜிஜிக்கு கண்டனங்கள். தவிர்க்க வேண்டிய சாகசம்.
பதிலளிநீக்குபதிவின் தொடக்கம் (நானும் அம்மா செல்லம்) என்னை இறுக்கியது. பிற்பகுதி வழக்கம் போல் உங்கள் பாணியில் சுவாரஸ்யமே. உங்கள் வாழ்க்கையில் கடந்த டிசம்பர்.1 இல் என்ன நிகழ்வு என்று சொல்ல முடிந்தால் சொல்லலாமே.
பதிலளிநீக்குஸ்ரீராம் மிக்க நன்றி. எனக்கும் என் அம்மாவின் மரணம் மனதை உலுக்கிய ஒன்று. அதன் பின் என் தந்தையின் மரணமும். அவர் நண்பர் போன்று எனக்கு....
பதிலளிநீக்கு(கீதா: எனக்கும் என் அம்மாவின் மரணம் மனதை மிகவும் வருத்திய அந்தப் பயணம். சோகம் என்பதால் சொல்லாமல் விட்டேன். (அதனால்தான் சோகப்பயணம் தவிர என்று அடைப்பிற்குள் கொடுத்திருந்தோம்...)ஏனென்றால் என் அம்மா தன் வாழ்நாளில் சுகித்தாள் என்று சொல்வதற்கில்லை. சரி எனக்கு ஒரு பதிவிற்கு ஆயிற்று...நன்றி ஸ்ரீராம்...இப்போதும் என் கண்களில் நீர்..)
சுவாரஸ்யமான பதிவு பதில்கள். கேஜிஜி சார் அப்படியெல்லாம் குறும்பா...ஹஹஹஹ
டிசம்பர் 1 ???? என்னாச்சு? சொல்லுங்களேன்.
(கீதா: இயற்கையின் ஓசை...ஆஹா......இந்தப் பதிலை மிகவும் ரசித்தேன். எனக்கும் ரொமபப் பிடித்தது இது. எல்லா நேரமும் அமைதியான சூழலில் ...அதுவும் இரவில் நிசப்தமான வேளையில்....)
எங்கள் அழைப்பை ஏற்று ரிலே டார்ச் பெற்றுக் கொண்டு ட்ராக்கில் இணைந்தமைக்கு மிக்க நன்றி..
வாக்குப் பெட்டி என்னாச்சு???
பதிலளிநீக்குஅம்மாவின் இழப்பு - சோகம் தான்.... மறக்க முடியாத சோகம்.
பதிலளிநீக்குஎன்னுடைய முதுகுச் சுமையோடு ஒரு பயணம் பதிவினையும் இங்கே சுட்டிக் காட்டியிருப்பதற்கு நன்றி. சில பயணங்கள் தானாகவே அமைந்து விடுகிறது.
உங்கள் கைலாஷ் பயண ஆசை நிறைவேறட்டும். நானும் உங்களோடு வரத் தயார்! :)
பயணங்கள் முடிவதில்லை - நல்ல பதில்கள்!
ராம் ஜி அழைப்புக்கு நன்றி ,சகோதரி மைதிலி அவர்கள் முதலிலேயே அழைப்பு விடுத்து இருந்தார் ,கடுமையான வேலைப் பளுவின் காரணமாய் எழத முடியவில்லை .என் தளத்திலேயே மறுமொழி கூற ஒரு நாள் தாமதம் ஆவது உங்களுக்கே தெரியுமென நினைக்கிறேன் !
பதிலளிநீக்குகைலாஷ் செல்லும் நாள் விரைவில் வரட்டும் ,காத்திருக்கிறேன் அந்த பயணப் பதிவை காண :)
அன்பு ஸ்ரீராம். வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு பயணமும் தனிதனி. மனம் தொட்டது. என் குழந்தைகள் அபவர்கள் அப்பாவைப் பார்க்க விரைந்த போது எடுத்துக்கொண்ட நீண்ட நேரம் இன்னும் அவர்களை வருத்துகிறது.
பதிலளிநீக்குகடப்போம். இனி இனிமையாக அமையட்டும் வாழ்க்கைப் பயணம்.
வாழ்க்கைப் பயனத்தில் காலமே மன ரணங்களுக்கு மருந்து
பதிலளிநீக்குகச்சிதமான பதிவு
மேலதிகாரியின் மௌனம் ...
பதிலளிநீக்குஎனக்கும் கேட்டது
இயற்கையின் இசை இனிதுதான்..
தொடர்வோம் தோழர்
தம +
பதிலளிநீக்கு***அந்த இரண்டு பயணம், சென்னை வந்து இறங்கிய அரை மணியில் தொலைபேசிச் செய்தி. அம்மா காலமாகி விட்டதாக. வேறு வழியின்றி உடனே மறுபடி மதுரை. அந்நேரம் அலுவலகத்தில் என்னைத் திட்டவும் முடியாமல், ஆறுதல் சொல்லவும் முடியாமல் விஷயத்தைக் கேட்டுக் கொண்டு பதிலுக்கு ஆள் வேறு இடத்திருந்து வாங்கப் போராடிய மேலதிகாரியின் மௌனம்..
பதிலளிநீக்குஅந்த இரண்டு மூன்று பயணங்களுமே என் கண்களைப் போலவே மனம் அம்மாவின் நினைவுகளால் நிறைந்திருந்தன. பயணம் முழுவதுமே வாழ்வின் அம்மோவோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிகழ்வும் கண்முன்னே காட்சிகளாய்.. இன்றைய - அல்லது நேற்றைய - அம்மாவோ வாயிருந்தும் பேச முடியாதவளாய், கண்ணிருந்தும் பார்க்க முடியாதவளாய், மனமிருந்தும் உணர முடியாதவளாய் நினைவிழந்த நிலையில் படுக்கையில்..
என் வாழ்வின் மிகப்பெரிய இழப்பாக இருந்தது அம்மாவின் மறைவு.***
Sometimes I feel folks who die (young?) before the demise of their mom are the luckiest ones! They dont have to go through this unbearable pain!
பயணத்தில் அம்மா குறித்து படித்தது நெகிழ்ச்சி அண்ணா...
பதிலளிநீக்குநச்சென்ற ஒருவரி கருத்து...
நன்றி கில்லர்ஜி.. தமிழ்மணம் அடிக்கடி மிகவும் படுத்துகிறதுதான்.
பதிலளிநீக்குநன்றி 'தளிர்' சுரேஷ்.
பதிலளிநீக்குநன்றி SP செந்தில் குமார்.
பதிலளிநீக்குநன்றி கிரேஸ். ஓ... நீங்களும் மதுரை அல்லவா... அதுதான்!
பதிலளிநீக்குநன்றி கலையரசி மேடம். நானும் உங்கள் பதிவில் இதையேதான் குறிப்பிட்டிருந்தேன்!
பதிலளிநீக்குநன்றி சகோதரி மைதிலி கஸ்தூரிரெங்கன்,, நான் உங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.. நீங்கள்தான் இந்தத் தொடரைத் தொடங்கியவர் அல்லவா!
பதிலளிநீக்குநன்றி ஜீவி ஸார். என் ராசி...! தொடர்பதிவுக்கு நான் அழைப்பவகள் (பெரும்பாலும்) எழுத மாட்டார்கள்! ஹிஹிஹி...
பதிலளிநீக்குவைகோ ஸார். உங்கள் பின்னூட்டம் மனதைத் தொட்டது. அதுவாய் கூடவே இருந்த அம்மா மறையும் தருவாயில் விலகிச் சென்று வேறு இடத்தில் காலமாவது மனதை மிகவும் வருத்தும் செயல்.
பதிலளிநீக்குஅதுவரை என்பது அதுவாய் என்று வந்துள்ளது. மன்னிக்கவும்!
பதிலளிநீக்குநன்றி தேனம்மை.
பதிலளிநீக்குநன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம். கே ஜி ஜி கல் எடுத்த சாகசம் வண்டி மிக மெதுவாகச் செல்லும்போது எடுத்தது. மேலும் அவர் கையில் ஏற்கெனவே கல்லை மறைத்து வைத்திருந்தாலும் வைத்திருந்திருப்பார். அப்போது பிரமிப்பு. இப்போது நினைக்கும்போது ஏதாவது கோல்மால் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்கு:)))
நன்றி தனபாலன்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி உமையாள் காயத்ரி.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி. கேஜிஜி இந்தச் சாகசம் செய்யும்போது அவருக்கு 23 வயது இருந்திருக்குமோ என்னவோ! மேலும் அவர் என்ன செய்திருக்கக் கூடும் என்று கீதா மேடத்துக்கு சொல்லி இருக்கிறேன் பாருங்கள். :)))
பதிலளிநீக்குநன்றி தமிழ் இளங்கோ ஸார். சுவாரஸ்யம் என்று சொன்னதற்கு நன்றிகள். டிசம்பர் ஒன்று என்ன விசேஷமா! மழை ஸார்! மாமழை. பெருவெள்ளம். இப்போ எல்லாம் மழை என்கிற வார்த்தையைக் கேட்டாலே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மொட்டை மாடிக்கு ஓடத் தோன்றுகிறது!!!!
பதிலளிநீக்குநன்றி துளசிஜி. அம்மாவின் இழப்பு மகன்களுக்கு பேரிழப்பாகத்தான் இருக்குமென்று தெரிகிறது.
பதிலளிநீக்குநன்றி கீதா. டிசம்பர் 1 என்னாச்சு ஞாபகமில்லை? அதற்குள்ளாகவா மறந்து விட்டீர்கள்!
நன்றி வெங்கட்! எனக்கிருக்கும் வீஸிங் தொந்தரவுக்கும் அதற்கும் கைலாஷ் வாய்ப்பு நிறைவேறுமா என்ன! :)))
பதிலளிநீக்குநன்றி பகவான் ஜி. உங்கள் வாக்கு பொன்னாகட்டும்.
பதிலளிநீக்குநன்றி வல்லிமா.
பதிலளிநீக்குமுதல்வ் அருகைக்கும், வாக்குக்கும் நன்றி Mathu. S
பதிலளிநீக்குநன்றி வருண். நீங்கள் சொல்லி இருப்பதைப் பார்க்கும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது. இறந்தவரை நினைத்து ரொம்பவே அழுது கொண்டிருந்தவர்களிடம் காரியம் செய்ய வந்திருந்த வாத்தியார் சொன்னாராம், "அவர் பிரிவைத் தாங்க முடியாமல் யாரிருக்கிறீர்களோ அவர்கள் வந்து இந்தச் சட்டியைத் தொடுங்கள். அவரிடம் சேர்ந்து விடலாம்" என்று. அழுகை சட்டென்று நின்று விட்டதாம்! :)))
பதிலளிநீக்குநன்றி பரிவை சே. குமார்.
பதிலளிநீக்கு